Thursday, October 27, 2016

அக்பர்

https://youtu.be/mBB96mj2X38


  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605








இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர்.


பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள்


அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் தூங்கா நிலையும் வேண்டும், அதனால்தான் விழிக்கும்பொழுதும் அவர் திமுக தலைவராகவே விழிகின்றார்.


அக்பர் அரசனானதும் நல்ல ஆட்சிதான் நடத்தி இருக்கின்றார், ஒரு விஷயம் அவருக்கு புலபட்டிருக்கின்றது, மனிதர் புத்திசாலி உணர்ந்துகொண்டார்.


இந்நாட்டில் ஆளலாம், ஆனால் மதரீதியான எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும், நம்க்கு முன்னாலும் பல இஸ்லாமியர் ஆண்டார்கள், ஆனால் ஏன் இந்நாட்டினை இஸ்லாமிய நாடாக மாற்றமுடியவில்லை


முடியாது, அது முடியவே முடியாது. இந்நாடு இந்துக்களின் நாடாகவே இருக்கும், நாம் இறங்கி போவோம் வேறுவழி இல்லை, இல்லாவிட்டால் ஆளமுடியாது.


அப்படி இந்நாட்டில் ஆட்சிபுரிய இந்துக்களின் ஆதரவு தேவை என முதலில் அவர்தான் சிந்தித்தார், சிந்தித்ததோடு மட்டுமன்றி ராஜபுத்திர இளவரசியினையும் மணம் புரிந்தார்.


ஒரு இஸ்லாமிய மன்னனுக்கு அது சவால், ஒரு வகையில் தோல்வியும் கூட‌


ஆனால் ராஜபுத்திரர்களின் மாப்பிள்ளையாகாமல் இனி அமைதியான ஆட்சி சாத்தியமில்லை என அவருக்கு வேறுவழி இல்லை.


அதன் பின் அவர் சிந்தனை மாறி இருக்கின்றது


இஸ்லாமை தவிர மற்ற மதங்களையும் நேசித்தார், ஒருங்கிணைந்த மத நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என அன்றே சிந்தித்திருக்கின்றார்.


அன்றைய சீக்கியம், இஸ்லாம், இந்து, அன்றே இங்கு அலைந்த இயேசு சபை குருக்களை எல்லாம் தன் அரண்மையில் அமரவைத்து தீன் இலாஹி என புதிய மத தத்துவத்தை அறிவித்திருக்கின்றார், அதாவது இந்து, இஸ்லாம், சீக்கியம் கலந்த அமைதி வழி


(இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு அல்ல, ஆனால் வளர்ந்த கலாச்சாரம் வேறு. இது அக்பருக்கு புரிந்திருக்கின்றது, இரண்டையும் அவர் ஒரே கொள்கையாக கண்டிருக்கின்றார்.


நிச்சயமாக அவர் மேதை, நம்மவர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரியாது)


அதில்தான் முகல் இந்தியா அமைதியாக இருந்திருக்கின்றது, செல்வம் கொட்டியிருக்கின்றது, தாஜ்மஹால் வரை எழும்பி இருக்கின்றது


பின்னாளில் இவரின் கொள்ளுபேரன் அவுரங்கசீப் மதத்தை பிரதானமாக்கி சில காரியங்களில் இறங்க, அது சிவசேனா எனும் வீரசிவாஜியின் எழுச்சிக்கு வித்திட்டது, அதன் பின் மொகல் வம்சம் வீழ்ச்சியினைத்தான் கண்டது


இந்திய யதார்த்தத்தை அதாவது சமய நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சியினை தீர்மானிக்கும் என முதலில் சிந்தித்த மன்னர் அவர்.


நல்ல புத்திசாலியாகவும் இருந்திருக்கின்றார், கலை ஆர்வமும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்ல ஒரு நகரம் வேண்டும் என அலெக்ஸாண்டர் பாணியில் ஒரு நகரத்தினையும் நிர்மானித்து, சில நூல்களையும் எழுதி வைத்திருக்கின்றார்


இன்று அவரின் நினைவு நாள்


இந்தியாவின் மிகசிறந்த மன்னரான அவரின் கதை ஜோதா அக்பர் என மிக அழகாக எடுக்கபட்டிருந்தது, இந்தியாவின் மிக சிறந்த 10 படமாக கொண்டாடியிருக்கவேண்டிய படம் அது


அரண்மனை, படை, உடை, உணவு, தர்பார் அமைப்பு என எல்லாமே மகா பெர்பெக்சனாக அமைந்த படம் அது, அக்பர் காலத்திற்கே அழைத்து சென்றது


ஆனால் வடக்கத்தியர் வழக்கம் போல கொதித்தனர், இது சரியல்ல என ஆயிரம் வசனங்கள் பேசினர், நாங்கள் சொல்வதுதான் வரலறு என குதித்தனர், அப்படம் பெறவேண்டிய வெற்றியினை பெறவில்ல.


ஆனால் மிக அழகாக அமைக்கபட்ட வரலாற்று படம் அது, மிக ரசித்து பார்த்தபடம், ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் மிக அழகான தேர்வுகள்


அப்படம் பார்க்கும் பொழுது மருதநாயகம் படத்திற்கு மிக பொருத்தமான நடிகராக கமலஹாசன் வருவாரா? என்றே சிந்திக்க தோன்றியது, கமல் மிக திறமையானவர், சந்தேகமே இல்லை மகா அழகானவர், இன்றளவும் தோழி Uma Magi போல பெரும் ரசிக பட்டாளமே கொண்டவர்


ஆனால் ஆஜானுபாகுவான கேரக்டருக்கு தமிழில் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள்தான் செட்டாவர்கள், தனுஷினை எல்லாம் மருதநாயகமாக கற்பனை செய்யுங்கள், சிரிப்பு தானாக வரும்.


இந்த பேராசிரியர் வேல,ராமமூர்த்தி இளமையாக இருந்தால் சந்தேகமே இல்லை, மனிதர் மருதநாயகத்திற்கு அழகாக பொருந்துவார்,


கம்பீரம் அவருக்கு அமைந்திருகின்றது,


அவரின் அந்த கம்பீர நடிப்பிற்காகவே கிடாரி படத்தினை பார்க்கமுடிந்தது, சசிகுமார் எல்லாம் அப்படத்தில் சும்மா, வேல.ராமமூர்த்திதான் ஹீரோ, அது அவர் படம்தான்.


அட நம்ம சத்தியராஜ் கூட அட்டகாசமாக பொருந்துவார்.


ஆனால் கமல் படம், எல்லா வேடங்களிலும் கமலே வரும் சாத்தியம் உண்டு , சரி அது மருதநாயகம் பாடு விட்டுவிடலாம்


அக்பரை நினைக்கும் பொழுதெல்லாம், அம்மனிதர் இந்தியாவிற்கு விட்டு சென்ற அடையாளம் நினைவுக்கு வருகின்றது, மிக அழகான கட்டடம், கலைபொருட்கள், யுத்த நுட்பம் என பல உண்டு.


தான்ஸேன் எனும் இசைகலைஞனை அவர் ஆதரித்த விதமே அவரின் கலை மனதிற்கு எடுத்துகாட்டு


கோட்டை கட்ட தோதான இடங்களை தேர்ந்தெடுத்ததில் மனிதர் நிற்கின்றார், ஆக்ரா கோட்டை அவரால் உருவாக்கபட்டு பின் தாஜ்மகால் அங்கே அமைய அடித்தளமானது


மிக முக்கியமாக நல்ல மந்திரி சபையினை வைத்திருந்தார், நவரத்தினங்கள் எனபபடும் 9 அறிவு ஜீவிகளை தன்னோடு வைத்திருந்தார்.


இன்று அதே இந்திய அரசு, மோடி அரசவை ஆனால் அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ளும் அமைச்சர்கள் இல்லை, ஆனால் இதுபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, பேசினால் தேசதுரோகம் ஆகிவிடும்,


ஒரு மோடி 100 அக்பருக்கு சமம், ஜெட்லி அக்பரின் புகழ்மிக்க நிதியமைச்சர் தோடாமால் போல 1000 பேருக்கு சமம் என சொல்லிவிட வேண்டும், சொல்லியாயிற்று


மன்மோகன் பரவாயில்லை, சிதம்பரம், சசிதரூர் என பல திறமையான அடையாளங்கள் அவர் ஆட்சியில் இருந்தன,


அந்த நல்ல அமைச்சரவைக்கு கண் திருஷ்டி பரிகாரமாக அழகிரி போன்றவர்களும் இருந்தனர்.


அக்பர் போற்றபட முதல் காரணம், இந்நாடு அமைதியில் செழிக்க முதலில் பேணபடவேண்டிது மத நல்லிணக்கமே என சிந்தித்தது


இந்தியாவில் ஆளவரும், நல்ல ஆட்சி தர விரும்பும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னோடி அந்த அக்பரே


அவரின் இந்த நினைவுநாளில் அதுதான் நினைவுக்கு வருகின்றது, அவர் பெயர் ஜெலாலுதீன், அக்பர் எனும் சொல்லுக்கு பெரியவர் என பொருள்


அவர் மனமும் பெரியதாகவே இருந்திருக்கின்றது


இன்னொரு முறை ஜோதா அக்பர் படத்தினை பார்த்துவிட வேண்டியதுதான், ஐஸ்வர்யா ராயின் இயல்பான சோகம் கவ்விய ஆனால் அழகான அந்த முகம் ராணி ஜோத்பாயின் கதைக்கு மிக அழகாக பொருந்துகின்றது


நிச்சயம் வேறு நடிகை பொருந்தியிருக்க மாட்டார், காரணம் இந்துமத அரசி ஒரு இஸ்லாமிய மன்னனோடு நடக்கும் திருமணத்தில் எவ்வளவு தயக்கமும் கலக்கமும் இருக்கும், அதனை அம்முகம் அப்படியே பிரதிபலித்தது


ஆனால் வட இந்தியர்கள் படத்தினை ஓடவிடவில்லை, அவர்கள் ரசனை அவ்வளவுதான் இருந்திருக்கின்றது.


( இப்பொழுது வந்து உனக்கு தெரியுமா, அக்பர் இஸ்லாமிய வெறியன் என குதிப்பார்கள், கதகளி மோகினி குச்சுபுடி எல்லாம் இப்பொழுது தொடங்கும்...)


Stanley Rajan's photo.                Stanley Rajan's photo.






No comments:

Post a Comment