Tuesday, October 18, 2016

வாழ்க லிபிய, ஈராக்கிய எண்ணெய் கொள்ளையர்!




கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கலங்கி நிற்கின்றன‌


தொடராத விலையேற்றம் அவர்களை அச்சப்பட வைக்கின்றன, வெனிசுலா பொருளாதாரம் படுத்தேவிட்டது. நாடு திவாலும் சூழலுக்கு செல்கிறது


அரபுநாடுகள் அச்சத்தோடு அமைதி காக்கின்றன, இந்நிலை நீடித்தால் அந்நிய செல்வாணி தீர்ந்தவுடன் அவைகளும் பெரும் சிக்கலுக்கு ஆளாகும்





ரஷ்யாவிற்கு பெருத்த பொருளாதார அடி என்றாலும், அது ஆயுதம், ராக்கெட் , அணுவுலை என விஞஞானத்தால் தாக்குபிடிக்கின்றது

ஆக எண்ணெய் வளநாடுகள் எல்லாம் கூட்டம் போட்டு மூக்கு சீந்தி அழுகின்றன, என்ன காரணம் என ஒப்பாரி வைக்கின்றன.

காரணம் என்ன? உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ளூர நிலவும் தொழில்மந்தம் முதல் காரணம், சீன பதுங்கல் இரண்டாம் காரணம்.

லிபியாவிலும், ஈராக்கிலும் கடத்தல் கும்பல்களால் விற்கபடும் மிக குறைந்தவிலை கச்சா எண்ணெய் மூன்றாம் காரணம்.

அவர்கள் தீவிரவாதிகளாயிற்றே, எப்படி வாங்குவது என்பதெல்லாம் வியாபார உலகில் சாத்தியமில்லை. திருட்டு தங்கத்தை சேட் குறைத்து வாங்குவான் என்பதுபோன்ற தந்திரம் இது.

ஆக எப்பொழுது எண்ணெய் விலை கூடும் என அந்நாடுகள் எதிர்பார்க்க்கின்றன, எப்படியாவது கூடிவிடட்டும் என தவமிருக்கின்றன‌

இந்திய நிலை எப்படி இருக்கின்றது, இவர்களும் பிரார்த்திக்கின்றார்கள்

"பகவானே,கச்சா எண்ணெய் விலை கூட‌ வேண்டாம் அய்யா, இந்த மோடி அரசு கச்சா எண்ணெய் கப்பல்காரன் சேவை விலையினை 10 அமெரிக்க சென், கூட்டினாலே, இவர்கள் பெட்ரோல் விலையினை 2 ரூபாய் உயர்த்துகின்றார்கள்

இதில் அது பேரலுக்கு 50 டாலர் அதிகரித்தால், இவர்கள் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு 500 ரூபாய் வரை அசாட்டாக கொண்டு செல்வார்கள், என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அதற்கு மேல் கேட்டால் தேசதுரோகம் என்பார்கள்.

கட்டுபடியாகவில்லை என்றால் என்ன சொல்வார்கள் தெரியுமா பகவானே?

பகவான் ராமன் நடந்தே இலங்கை சென்றான், கிருஷ்ணன் நடந்தே மதுரா டூ துவாரகா சென்றான். அந்த அவதாரங்களே நடக்கும்பொழுது அற்ப மானுடன் நீ நடந்து அலுவலகம் செல்ல மாட்டோயோ....

ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என ராமநாமம் சொல்லிகொண்டே நட, பிரதமரே அப்படித்தான் உச்சரித்துகொண்டிருக்கின்றார்..

ஆக பகவானே, இவர்கள் ஆட்சி முடியுமட்டும் கச்சா எண்ணெய் விலை கூடாமல் இருக்கட்டும்

கூடினால் பெட்ரோலை லிட்டருக்கு நிச்சயம் 500ரூபாய் ஆக்குவார்கள்

இந்தியரை காத்தருள்வாய் பகவானே, உன்னாலன்றி இனி காக்க முடியாது....."

இந்தியரின் பிரார்த்தன இப்படித்தான் இருக்கின்றது

ஆக லிபிய, சிரிய, ஈராக்கிய‌ தீவிரவாதிகள் எல்லாம் எண்ணெய் வள நாடுகளுக்கும், சில நாடுகளுக்கும் எதிரிகளாக இருக்கலாம்

பலர் அவர்களை பழிக்கலாம்

ஆனால் இந்திய பெட்ரொலிய விலையினை காத்து நிற்கும் தெய்வங்கள் இன்று சத்தியமாக அவர்கள்தான்.

ஆகவே இந்தியர்களே அந்த எண்ணெய் கொள்ளை தீவிரவாதிகளை பழிக்காதீர்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகளை மட்டும் தனியாக கண்டியுங்கள்.

அந்த எண்ணெய் கொள்ளையர்கள் துப்பாக்கியினை கீழே வைத்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை, ஒரு பைக்கின் விலையினை விட தாண்டும்.

பைக்கினினை விற்றுவிட்டா பெட்ரோல் வாங்க முடியும்?

ெய் ஸ்ரீராம்.. மோடி வாழ்க என்ற கோஷத்துடன், அல்லாஹ் வாழ்க என பெட்ரோல் கொள்ளையடிக்கும் அந்த அரபு தீவிரவாதிகளுக்கும் வாழ்க சொல்லுங்கள்

ஜெய் ஸ்ரீராம்......

வாழ்க லிபிய, ஈராக்கிய எண்ணெய் கொள்ளையர்!






No comments:

Post a Comment