Wednesday, October 19, 2016

மருத்துவர்கள் உருவாகி மானுடம் காக்கட்டும்..

நாளொரு டாக்டர்கள் வெவ்வேறு நாட்டிலிருந்து அப்பல்லோவிற்கு வருகின்றார்கள், அவர் அப்படி, இவர் இப்படி, இவர் கை பட்டால் நோய் ஓடும், அவர் பார்த்தாலோ நுரையீரல் துடிக்கும் என ஏகபட்ட அடைமொழிகளோடு அந்த டாக்டர்கள் அப்பல்லோவில் நுழைகின்றார்கள்


அப்பல்லோவின் வருமானமோ, அந்த டாக்டர்களுக்கான பண விவரங்களோ நமக்கு தேவையில்லை


ஆனால் சிந்திக்க சில விஷயங்கள் உண்டு.




இப்படிபட்ட டாக்டர்களை அவ்வப்போது வரவழைத்து தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழிகாட்ட சொல்லியிருந்தால் இதனைபோல எத்தனை டாக்டர்களை நாம் உருவாக்கி இருக்கலாம்.


இன்று அவர்களை சொடுக்குபோடும் நேரத்தில் வர வைப்பவர்களுக்கு, மாணவர்களுக்காகவும் வரவைத்திருக்க முடியும் அல்லவா? ஆனால் செய்யவில்லை.


இந்த தமிழகத்து அம்மா போல எத்தனை பேருக்கு அம்மாதிரி மருத்துவம் தேவைபடுகின்றது? எல்லோராலும் முடியுமா?


அப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கி வைத்திருந்தால் முதல்வர் உட்பட எத்தனைபேருக்கு உபயோகமாக இருந்திருக்கும்?


முதல்வருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் வந்தாக.., சிங்கப்பூர் டாக்டர் வந்தாக.. என செய்திகளாக வருகின்றன‌


இந்த தமிழக மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் என ஒருவரும் இல்லையா?


அல்லது எல்லோரும் பெயில் ஆகி தொலைத்துவிட்டார்களா?


இவர்களுக்கு அரசு கொட்டி கொடுத்த பணம் எல்லாம் வீணா?


ஒரு முதல்வருக்கு சிகிச்சை அளிக்க கூட தரமில்லா மருத்துவர்களையா நம் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கிகொண்டிருக்கின்றன.


இதில் இந்த படிப்பிற்கு போட்டி வேறு, பண வசூல் என ஏராளமான இம்சைகள் வேறு. தங்கள் பெரும் அறிவாளிகள் என அவர்கள் காட்டிகொள்ளும் இம்சைகள் வேறு.


விளைவு நல்ல டாக்டர்களை உலகெங்கும் தேடிகொண்டிருக்கின்றோம்.


400 ஏக்கரில் மாளிகை கட்டியிருப்பதை விட இப்படி 40 டாக்டர்களை தமிழகத்தில் உருவாக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும்?


குணம்பெற்று பணிக்கு திரும்பிய பின், முதல்வர் அப்படி பல நடவடிக்கைகளை எடுக்கட்டும், பல மருத்துவர்கள் உருவாகட்டும்.


நமது நாட்டிலும் அப்படியனான புகழ்மிக்க மருத்துவர்கள் உருவாகி மானுடம் காக்கட்டும், இனியாவது காக்கட்டும்



No comments:

Post a Comment