Wednesday, October 26, 2016

திருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை



அவரின் ஜாதகம் எப்படி என்பதை திருமாவளவன் கொஞ்சம் பார்த்துகொள்வது நல்லது.


வைகோ என்பவர் ராசி வித்தியாசமானது, அவர் அருகில் அமர்ந்தவர்களோ அல்லது அவரின் பேச்சினை கேட்டவர்களோ உருப்படவே முடியாது என்பது வரலாறு


முதலில் அதனை உணர்ந்தவர் கலைஞர், பத்மநாபா கொலை கலைஞர் ஆட்சிக்கே கேடாக முடிந்தது. திமுக உறுப்பினராக வைகோ கள்ளதோணி ஏறியதும் நிச்சயம் கட்சிக்கு சிக்கலே


கலைஞர் யோசிப்பதற்குள் ராஜிவ் கொலை


ஆனால் வைகோ புலிவாலை பிடித்துகொண்டே நின்றார். இதற்கு மேலும் இனி யோசிக்க ஒன்றுமில்லை என வைகோவினை உதறினார் கலைஞர், அது செய்யவேண்டியது.


அதன்பின் கலைஞருக்கு அரசியல் நெருக்கடிகள் குறைந்தன‌


கொஞ்சம் கொஞ்சமாக வைகோ சாயம் வெளுக்க ஆரம்பித்தது


அதாவது புலிகள் நரிக்கு சாயம் அடித்திருந்தனர் அல்லவா? அது வெளுத்தவுடன் ஒவ்வொருவரும் பிரிந்து கலைஞருடன் இணைய ஆரம்பித்தனர்


முதலில் கொஞ்சபேர்தான், பின்னர் ஈழயுத்தம் தொடங்கியதும் பலர் வெளியேறினர், அது பயமா? இல்லை பங்கு வைத்த பிரச்சினையா என இறுதிவரை தெரியவில்லை


வைகோவினை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் ஓரளவு நிலைக்க ஆரம்பித்தனர், சிலருக்கு இன்னோவா கார்களாவது கிடைத்தது. சிலரால் சினிம படமவது எடுக்க முடிந்தது.


முதலில் சர்வதேச அளவில் வைகோ பெரும் குழப்பவாதி என கண்டுகொண்டவர்கள் நார்வேக்காரர்கள், ஈழபேச்சுவார்த்தையில் பேசி பார்த்துவிட்டு கழற்றியே விட்டனர்


அவர் இருக்கும் இடத்தில் குழப்பமே மிஞ்சும் என்பது அவர்கள் கணிப்பு, உண்மையும் கூட‌


வைகோ எப்படியானவர் என்றால், ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்கிறது என்றால், அதனை அழிக்க வைகோவோடு உறவாடினால் போதும், சுத்தமாக அழிந்தே விடும்


எதனை செய்யவே கூடாதோ, அதனை மிக கச்சிதமாக செய்து மொத்தத்தையும் கெடுப்பது அவர் ஸ்டைல்


உதாரணம் புலிகள்


"அய்யா பிரபாகரனே நீங்கள் எவ்வளவு கோடிகளை கொட்டி கொடுத்தாலும், தமிழ்நாட்டில் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுத்தாலும் நான் முதல்வராக முடியாது, நீனும் ராஜிவ் கொலை எனும் குற்றத்தினை தாண்டமுடியாது.." என அவன் காதுபட சொல்லி இருந்தால் நிலமை இவ்வளவு மோசமாகி இருக்காது


பிரபாகரனும் முடிவிற்கு வந்திருப்பான்


ஆனால் தமிழர் எல்லாம் காங்கிரஸ் எதிரிகள், இது திராவிட பூமி அதனால் உன்னையும் என்னையும் ஏற்றுகொள்வர் என சொல்லி அவர்களை தொடர்ந்து தவறுகளை செய்ய வைத்த்தது சாட்சாத் இவர்தான்


கடைசிகட்டத்தில் புலிகள் தப்பியோ அல்லது இந்திய ஆலோசனையினை கேட்டு முடிவிற்கு வர இருந்தபொழுதோ குறுக்கே படுத்து அடுத்த பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பொறுங்கள் என சொன்னதும் இவர்தான் என்கிறது செய்திகள்


அதன் பின் நடந்ததுதான் முள்ளிவாய்க்கால் கொடூரம், பழி விழுந்தது கலைஞர் மேல்


அப்படியாக புலிகளை முடித்துவிட்டு என்ன செய்யலாம் என இவர் யோசித்தபொழுது கிடைத்தவர் விஜயகாந்த்.


அவரையும் மூலையில் அமரவைத்தாகிற்று, தமிழருவி மணியனை ஓடவே விட்டாயிற்று


இப்பொழுது சிக்கி இருப்பவர் திருமா.


கொஞ்சமேனும் வைகோவின் பழைய ராசிகளை திருமா திரும்பி பார்ப்பது நல்லது. அல்லது இப்பொழுதே சந்நியாசத்திற்கு தயாராவதும் மிக நல்லது


கிட்டதட்ட திருமாவினையும் வைகோ சடாமுடி கோலத்திற்கு தயாராக்கி கொண்டிருக்கின்றார்.


இப்படி பட்ட வைகோவின் ராசியினை தாமதமாகத்தான் கண்டார் கலைஞர், வைகோ திமுகவில் இருந்த காலமட்டும் அது பதவிக்கு வருவது மகா சிக்கல், வந்தாலும் நிலைப்பதில்லை


எப்படியோ பின்னாளில் கண்டுகொண்டார் கலைஞர், சுதாரித்தார்.ஜெயலலிதா பொடோவில் போட்டு பழிவாங்கினார்.
விஜயகாந்த் பட்டு திருந்தினார்


ஆனால் முதலிலே கண்டு கொண்டு ஒதுங்கியவர் யார் தெரியுமா?


ஆச்சரியமாக அங்கிள் சைமன்


அவர் அன்றே இவரை விட்டு விலகிநிற்பதால் ஏதோ குட்டிகரணம் போட்டுகொண்டிருக்கின்றார், வைகோவோடு இணைந்திருந்தால் சைமன் எப்பொழுதோ மண்வெட்டி எடுத்துகொண்டு வயலினை நோக்கி நடந்திருப்பார்


எப்படியோ, இப்பொழுது சிக்கி இருப்பவர் திருமா


மீள்வது எப்படி என அவர் யோசிக்கலாம், அல்லது ஜடாமுடி, தண்டம் சகிதம் சாமியார் ஆவது எப்படி என சிந்திக்கலாம்


இரண்டையும் தவிர வேறு வாய்ப்பு திருமாவிற்கு இல்லை


வைகோ மனதில் அடுத்து யார்? என யோசித்துகொண்டிருப்பார், இப்போதைக்கு அதிமுக நிலவரம் எப்படி என யோசித்துகொண்டிருக்கலாம்


அதாவது கலைஞர் எதிர்ப்பு என்பதை தவிர ஒன்றுமறியாத அரசியல்வாதி அவர்,


வடகிழக்கு பருவமழை ஏன் தாமதமாகின்றது என கேளுங்கள் உடனே கலைஞர் என்பார், சரி துபாய் விமானம் இன்று ஏன் ரத்து என கேட்டாலும் உடனே கலைஞரால்தான் என்பார்.


இவரின் அரசியல் அப்படி.


ஒருவேளை அதிமுக அணியில் இவர் ஐக்கியமானால்....


கலைஞருக்கு படு ஜாலி, காரணம் வைகோவின் ராசி அங்கு மட்டும் வேலை செய்யாமலா போய்விடும்???






No comments:

Post a Comment