Tuesday, October 18, 2016

விசாரணை படம் ஆஸ்கருக்கு சென்றிருக்கின்றதாம்!!!

https://youtu.be/jMls2rtDxPM


விசாரணை திரைப்படத்தை பார்க்கவும் 


விசாரணை படம் ஆஸ்கருக்கு சென்றிருக்கின்றதாம், தேர்வு பட்டியலில் வந்துவிட்டதாம், பலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி


ஆஸ்கர் அரசியல் புரியாதோர் மகிழலாம், ஆனால் அதன் இன்னொரு பக்கம் புரிந்தோர் அதற்கு மகிழமாட்டார்கள், மாறாக நாணத்தால் நாணி தலைகுனிந்து நிற்பார்கள்.


காரணம் ஆஸ்கரில் ஒரு அரசியல் உண்டு. விருதுக்கு தேர்ந்தெடுப்பதில் சில உள்விவகாரங்கள் உண்டு


அதாவது கதை ஐரோப்பியரை உயர்த்தி காண்பிப்பதாக இருக்கவேண்டும், அவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் உலகம் காக்க வந்தவர்கள் என்றேல்லாம் இருக்கவேண்டும்


ஒருவேளை அவர்களை கிண்டல் செய்வது போல கதை இருந்தால் அதனை ஒரு வெள்ளையன் செய்திருக்கவேண்டுமே தவிர ஆசியனோ கருப்பனோ அல்ல.


இன்னும் சில விஷயங்கள் உண்டு, அதாவது ஆசியநாடுகள் வாழ தகுதியற்றவை, அழுககடைந்தவை, வறுமையில் வாடுபவை, ஊழல் நிரம்பியவை, பணம் கொடுத்தால் அரசையே ஆட்டுவிக்கலாம் எனும் நிலையில் உள்ளவை என்பன போன்ற மோசமான காட்சிகள் நிறைய இடம்பெறவேண்டும்


இதற்கு ஸ்லம்டாக் மில்லியனர், மும்பையின் சேரிபகுதியினை மாறி மாறி காட்டியதால் மகிழ்ந்தார்கள்


அப்படி விசாரணை படத்தினையும் இன்று பட்டியலில் சேர்த்திருக்கின்றார்கள், அதற்கு என்ன காரணம்? பார்தீர்களா உலகத்தீரே, இந்திய போலிசின் யோக்கியதையினை என்பதில் அவர்களுக்கொரு மகிழ்ச்சி


அமெரிக்க போலிசின் இனவெறி முதல் அமெரிக்க்க வெள்ளையரின் இனவெறி கொலைவரை எத்தனையோ படங்கள் வரும், ஆஸ்கர் கிடைத்திருக்கின்றதா என்றால் இல்லை.


இவ்வகையில் பிரெஞ்ச் காரர்கள் பரவாயில்லை, கதையினை கவனிப்பார்கள், நடிப்பினை கவனிப்பார்கள், சினிமாவினை சினிமாவாக பார்ப்பார்கள் அவர்கள் ரசனை அப்படி


ஆஸ்கர் கமிட்டி அப்படி அல்ல, அது சினிமாவினை நிஜகதையாகவே காட்டும் ஒருவித விஷ அரசியல் கொண்டது, இல்லாவிட்டால் ஆஸ்கர் விருதுகள் ஈரானிய, சீன படங்களுக்குத்தான் கிடைத்துகொண்டே இருக்கவேண்டும்


கிடைத்திருக்கின்றதா? அங்கீகரித்திருக்கின்றார்களா? இல்லவே இல்லை.


வியட்நாமிலும், ஈராக்கிலும், ஆபகனிலும் அமெரிகக் படைகள் செய்த அட்டகாசம் பற்றி எத்தனை கதைகள் வந்தன, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்குலக அட்டகாசம் பற்றி எத்தனை நூறு படங்கள் வந்தன, ஒன்று ஆஸ்கருக்கு தேர்வாகி இருக்கும்?


ஆக இந்த விசாரணை படம் ஆஸ்கருக்கு சென்றிருக்கின்றது என யாராவது மகிழ்ந்தால் அது இந்திய காவல்துறையினை மகா கேவலமாக சித்தரித்ததற்கு நாமே துணைபோவது என்றே பொருள்


நமது காவல்துறையினை இழிவுபடுத்தும் அப்படத்தினை வெள்ளையன் கொண்டாடினால் யாருக்கு அசிங்கம், அவமானம் என கவலைபடாத ஜன்மங்கள் எல்லாம் இதோ கைதட்டி கொண்டிருக்கின்றன..


வரலாற்றில் இதற்கு பெரும் அடையாளமாக இருப்பது வீரபாண்டிய கட்டபொம்மன், அன்றைய ஆஸ்கருக்கு தேவையான நடிப்பினை சிவாஜி அழகாக கொடுத்திருந்தார், ஆனால் வெள்ளையனை எதிர்த்த கதை என அது நிராகரிக்கபட்டது


அன்று உலகில் ஒரு சிங்கம் இருந்தார், அவர் எகிப்து அதிபர் கர்ணல் நாசர். இங்கிலாந்தின் வல்லரசு பட்டத்தை அவமானபடுத்தி சூயஸில் பறித்தவரே அவர்தான்.


அவர் ஆசிய ஆப்ரிக்க படவிழா என ஒன்றை தொடங்கி அக்கதையினை வாழ்த்தி சிவாஜிக்கு பதக்கம் வழங்கி அங்கீகரித்தார், வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அ


இன்று அப்படிபட்ட தலைவர்களும் இல்லை, அம்மாதிரி முயற்சி எடுக்க நல்ல நாடுகளும் இல்லை


ஆஸ்கர் அரசியல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.


ஆக மானமுள்ள இந்தியர்களாக இருந்தால், எமது காவல்துறையினை சித்தரித்த இந்த படத்தினை ஆஸ்கருக்கு அனுப்பியதையே கண்டிக்கின்றோம் என எண்ணுங்கள்


இல்லையேல் நாளை இந்திய ராணுவத்தை பழித்தே கதை எடுப்பார்கள், அதுவும் ஆஸ்கருக்கு அனுப்பி பதக்கம் வென்றாலும் வெல்லலாம்


நமது காவல்துறையினை பழித்து ஒரு படம் எடுப்பார்களாம், அதனை வெள்ளையன் பரிசு வழங்கி உலகிற்கு சொல்வானாம், வெட்கமாக இல்லை


இப்படம் பரிசுவாங்கினால் உலகில் இந்திய காவல்துறையின் மதிப்பும் மாண்பும் என்னாகும்?


அப்படம் ஒன்றும் வாங்காமலே போகட்டும்


ஆஸ்கர் அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும், புரியாதவர்கள் எம்மை பழிப்பார்கள், பழிக்கட்டும்


ஆனால் அமைதியாக யோசித்து பாருங்கள், இந்த உள் அரசியலும், இத்தேசத்தின் நற்பெயரினை கெடுக்க எப்படியெல்லாம் தலைகீழாக நிற்கின்றார்கள் என்பதும் புரியும்


இந்திய ராணுவத்தின் பெருமையினை, இந்திய காவல்துறையின், உளவு துறையின் பெருமையினை பறைசாற்றி எத்தனை படங்கள் வந்தன?, எவ்வளவு அருமையான படங்கள் எல்லாம் வந்தன‌


இந்தியன், ரோஜா, லகான், சக்தே இந்தியா, பனா என எவ்வ்வளவு குவிந்தன‌


அவற்றில் ஒன்று ஆஸ்கருக்கு தேர்வாகியிருக்கும்?


ஆனால் கழிப்பறை இல்லா மும்பை சேரியினை சொன்ன ஸ்லம்டாக் மில்லியனரும், இந்திய காவல்துறையினை கொடூரமாக சித்தரித்த விசாரணை படமும் ஆஸ்கருக்கு செல்லுமாம்


புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்


இந்த தமிழகத்தில் சில சர்ச்சைகள் வந்தால் சாதி தலைவர்கள் படம் பார்த்துவிட்டுதான் வெளியிட சொல்வார்கள், வியாபாரிகள் படம், அரசியல் படம் என்றால் சம்ப்ந்தபட்டவர்கள் வந்து பார்த்து அனுமதிப்பார்கள்


அதிகாரம் கொடுத்தது யார் என தெரியாது, ஆனால் அதிகாரம் எங்களுக்கு என்பார்கள்


(இதில் கமலஹாசன் பட்டபாடு கொஞ்சமல்ல‌, இந்த அழிச்சாட்டியங்களுக்கு ஒதுங்கி மணிரத்னம் கூட பாதை மாறிவிட்டார்...)


ஆனால் காவல்துறை பற்றி மிக சர்ச்சையாக படமெடுப்பார்கள், ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி பார்க்க அனுமதிகபட்டிருக்க மாட்டார்


அரசியல்வாதி சாதி தலைவர்களுக்கு இருக்கும் கற்பனை உரிமை கூட, அதிகாரம் படைத்த காவல்துறை அதிகாரிக்கு இல்லை


அதனால் இஷ்டத்திற்கு எடுப்பார்கள், ஒரு கட்டுபாடும் கிடையாது, பரிதாபத்திற்குரிய காவல்துறை அந்த படம் ஓடும் தியேட்டருக்கு பரிதாபமாக காவல் கொடுத்துகொண்டிருக்கும்


எப்படிபட்ட்ட அநீதி? எப்படிபட்ட கொடுமை. அவ்வளவிற்கு சினிமாகாரர்களின் ஆட்டம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது, வெட்கமாக இல்லை?


நாட்டுபற்றுள்ள இந்தியர்கள் அதனை புறக்கணிக்கின்றோம். முற்றிலுமாக புறக்கணிக்கின்றோம்.


எமது காவல்துறையினை களங்கபடுத்தும் விதமாக எடுக்கபட்டு அதற்கு உலகளவில் விருது கொடுத்து எம்மை சர்வதேசத்தில் அவமானபடுத்தும் இந்த கொடுமைக்காக நாணி நிற்கின்றோம்


அது ஆஸ்கர் என்ன? எந்த விருது கொடுத்து கவுரவிக்கபட்டாலும் அது எமது காவலர்களில் கால்தூசு மண்ணுக்கு சமானம்.


மானமுள்ள இந்தியன், அதுவும் தமிழன் எவனும் இதனை கண்டிப்பான்.


சினிமா மோகத்தில் மூழ்கி, கொஞ்சமேனும் நாட்டுபற்றோ, சமூக பற்றோ இல்லா இம்சைகளும், சினிமாக்காரர்களின் காசுக்காக எழுதும் பத்திரிகைகள் அதனை எழுதட்டும்


நாம் நமது பெருமைமிகு காவல்துறைக்காக நமது கருத்துக்களை சொல்லிகொண்டே இருப்போம்


வாழ்க நமது பெருமை மிகு, கடமை மிகு காவல்துறை. அதன் பெருமையினை குறைக்கும் எல்லா விஷயமும் கண்டிப்பிற்குரியதே


சிந்தித்து பாருங்கள், உங்களுக்கே விளங்கும்.









Image may contain: 1 person , text






No comments:

Post a Comment