Thursday, October 27, 2016

இளையராஜாவும் தமிழ் இசையும் வேறு அல்லவே அல்ல..

https://youtu.be/VlFS4RcDZIY


சிலருக்கு சில விஷயங்கள் உறுத்திகொண்டே இருக்கும், அதில் இன்றளவுக்கு சிலருக்கு கடந்த 50 வருடமாக இருக்கும் உறுத்தல் இளையராஜா


அகல விரிந்த அவர்களின் கண்களுக்குள் அவர் உறுத்திகொண்டே இருக்கின்றார், கண்களுக்குள் விழுந்த மணலாக அவர் உறுத்துகின்றார், அவர் பெயர் காதோரம் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல அவர்கள் காதில் வலிக்கின்றது


எப்படி எல்லாம் நயமாக வசைபாடியிருக்கின்றார், அதவாது இளையராஜா உலகதரம் வாய்ந்தவர் எல்லாம் இல்லையாம், ஜெயமோகனே இதுபற்றி எழுதியிருக்கின்றாராம்


மொசார்ட், பீத்தோவன் போன்ற பெரும் ஜாம்பவான்கள் போல இளையராஜா இல்லையாம், இன்னும் ராஸ்டிரியாபோச் எனும் கலைஞன் போல இளையராஜா மக்களை திரட்டவில்லையாம்


கள் குடித்த கொக்கெய்ன் குரங்கு போல மனிதர் உளறிகொண்டிருக்கின்றார்


மொசாத்தும், பீத்தோவானையும் நமக்கு சொன்னது யார்? வெள்ளையன். அவன் இனத்தினை அவன் தாங்கி பிடிப்பதில் என்ன இருக்கின்றது, சொல்லத்தான் செய்வான்


ஆனால் மொசாத், பீத்தோவன் வாழ்ந்த காலமென்ன? இளையராஜவின் காலமென்ன?


இஸ்ரேலின் 1960 புகழ்பெற்ற தளபதி மோசே தயானையும் மாவீரன் அலெக்ஸாண்டரையும் ஒப்பிடமுடியுமா? அது தகுமா?


மனிதர் எப்படியெல்லாம் புலம்புகின்றார், கனடாவில் அவன் இசைத்தானாம், லண்டனில் இவன் இசைத்தானாம் அதனை எல்லாம் விட ராஜா மட்டமாம்


அதாவது மனிதர் சொல்வதென்ன?


பிரெஞ்ச் சாப்பாடு அப்படி, பிரிட்டானிய சாப்பாடு இப்படி, ஜெர்மன் ஹாட் டோக் இப்படி ஆகா, ஓஹோ, நமது ஊர் இட்லி சீஈஈஈ..


ஆனால் தமிழகத்தில் பிரெஞ் பிரட் ஸ்லைசும், ஹோட் டோக்கும், இத்தாலிய பர்கரும் யாருக்கு வேண்டும்?


இங்கு தேவை அருமையான தமிழர் உணவு


அப்படி தமிழருக்கு என்ன ரசனையோ அதனை இளையராஜா அற்புதமாக கொடுத்தார், திராவிட மொழிகளுக்கு எல்லாம் அற்புதமான இசை வடிவம் கொடுத்தார்


மக்கள் கலைஞனான அவரின் இசை இன்றும் உலகெல்ல்லாம் ஆராய்ச்சி செய்யத்தான் படுகின்றது, கொண்டாடாபடுகின்றது


மொசாத் கையில் வயலினோடு பிறந்தவன், பீத்தோவான் பெரும் இசை குடும்பம், இன்னும் இவர் சொல்லும் வெளிநாட்டவர் எல்லாம் 3 வயதிலே கீபோர்டில் கை வைத்தவர்கள்


இளையராஜா வறுமையிலும், சாதி கொடுமகைகளையும், புறக்கணிப்பினையும் தாண்டி வந்து உச்சம் தொட்டிருப்பவர். சந்தேகமே இல்லை இப்படி சொல்லலாம்


யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை


தமிழர் இசையினை திருடி, திருவையாற்றிலே, காவேரி கரை நாடக இடையினை கர்நாடக இசை என மாற்றி புகழ்பெற்ற அம்மும்மூர்த்திகளின் ஒரே வடிவம் இளையராஜா


காலத்தால் உயர்சாதியால் கொள்ளையடிக்கபட்ட இசை, ஒரு பச்சை தமிழனால் மறுபடியும் கொண்டுவரபட்டு தமிழிசையாக அடையாளம் காட்டபட்டது


எவ்வளவு தந்திரமாக அந்த திருவையாறு மும்மூர்த்திகளை அது என்னது, ஆம் தியாகபிரம்மம் எனும் தியாகராஜரை அந்த பித்தோவன்,மெசார்ட் இன்ன பிற மேற்கத்தியர்களோடு ஒப்பிடலாம் அல்லவா?


செய்தால் உலகமே வாய்விட்டு சிரிக்கும், இந்த தியாகராஜரின் இசையினை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "கிரேஸி மேன்" என ஒதுங்கிகொள்ளும்


ஆக அவாளின் உயர்ந்த அடையாளமான தியாகராஜர், முத்துசாமி, சியாமா சாஸ்திரி எல்லாம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவாளாம்


ஆனால் இளையராஜாவினை மட்டும் உலக கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவாராம்


எப்படிபட்ட நியாயம் இது


கலைஞர் மொழியில் சொல்வதென்றால்


"எல்லாம் வயித்தெறிச்சல், ஒரு தாழ்த்தபட்டவன், சாக்கடை புழுவாக நசுக்கபட்டவன் ஒரு அரியணையில் அமருந்து கிரீடம் சூட்டபடுவதை தாங்கமுடியாத இயலாமை"


அதுதான் அது ஒன்றேதான் இருக்கமுடியும்


அன்னார் ஒரு தமிழராம், தமிழில்தான் எழுதியிருக்கின்றார். தமிழனை எப்படி எல்லாம் மட்டம் தட்டியிருக்கின்றார் என தமிழர்கள் காண்பது நல்லது


மேற்கத்திய இசை அவர்களுக்கானது, மனதினை தொட்டு இவர் சொல்லட்டும் அது காதுகொடுத்து கேட்கமுடியுமா? புரியுமா?


திருவையாறு ஒப்பாரியே அல்லது முணுமுணுப்பே நமக்கு புரியாது (இவருக்கு புரியும் போல.)


இதில் நமக்கு தேவை என்ன? அழகான தமிழிசையும் மனதை உருக்கும் அற்புதமான பாடல்களும்


இளையராஜா அதனைத்தான் கொடுத்தார், ஒவ்வொரு தமிழனின் மனதினையும் அவரால் தொட முடிந்தது


ஆனால் இந்த கிராமத்தானுக்கு இவ்வளவு பெருமையா என பொறுத்துகொள்ளாதவர் எப்படி எழுதுவார்?


இப்படித்தான் எழுதுவார், துணைக்கு ஜெயமோகனையும் அழைப்பார்


சரி இவர்கள் எல்லாம் இசையில் என்ன கிழித்தார்கள், ஒரு டோலக்கோ அல்லது டி.ஆர் ஸ்டைலில் கொட்டாங்கச்சியோ வாசிக்க தெரியுமா என்றால் தெரியாது


ஆனால் உச்சம் பெற்ற கிராமத்தானை மட்டம் தட்டியே தீரவேண்டும் என்ற வன்மம் தெரிகின்றது


நான் என் பங்கிற்கு சொல்லிவிட்டேன், உங்களுக்கு இளையராஜாவினை பிடிக்கும் என்றால் இம்மனிதரை சற்று கவனியுங்கள்


அது தமிழ் இசைக்கு (பாஜக தமிழிசை அல்ல) நாம் செய்யும் மகத்தான காரியம்


இளையராஜாவும், தமிழ் இசையும் வேறு அல்ல, அல்லவே அல்ல‌


http://contrarianworld.blogspot.my/




No comments:

Post a Comment