Monday, July 31, 2017

நடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் ...



Image may contain: 1 personநடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க காங்கிரசில் ஆலோசனை : செய்தி


மிஸ்டர் கமலஹாசன், அவர்களை நம்பாதீர்கள். குஷ்பூவிற்கே மேல்சபை எம்பி பதவி கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் அப்படித்தான்.


நீங்கள் காங்கிரஸில் இணைந்தால் என்னாகும்? ஒரு கோஷ்டி கூடுதலாக உருவாகுமே அன்றி வேறு ஒன்றும் ஆகாது. அடிக்கடி நடக்கும் கோஷ்டி மோதலில் உங்கள் வேஷ்டிக்கும் உத்திரவாதமில்லை


அது பிக்பாஸ் நடத்துவது போல சுலபமான நிகழ்ச்சியாக இருக்காது மாறாக பிக்பாஸில் கலந்துகொண்டது போல ஆகிவிடும்


அடிக்கடி உங்கள் பெயரை டெல்லியில் நாமினேட் செய்துகொண்டே இருப்பார்கள், நீங்களும் சிலரை நாமினேட் செய்துகொண்டே இருக்கவேண்டும்


இன்னும் கூட்டணி அது, இது என ஏகபட்ட இம்சைகள் உண்டு


அந்த ராகுல்காந்தி பேச்சை கேட்டால் உங்களுக்கு ராகு திசைதான், கவனியுங்கள் குஷ்பூவினை விட்டுவிட்டு யார் பேச்சையோ கேட்டு அந்த உளவாளி திருநாவுக்கரசருக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் ராகுலுக்கு 6ம் அறிவு என ஒன்று உண்டு என நம்புகின்றீர்களா?


இதற்கு மேல் உங்கள் விருப்பம் மிஸ்டர் கமலஹாசன், இதற்கு மேலும் காங்கிரஸில் சேருவேன் என்றால் போத்தீஸில் 100 வேட்டிகள் வாங்கி வைத்துவிட்டு சேரலாம்


ஒருவேளை நீங்கள் அப்படி சேர்ந்துவிட்டீர்கள் என்றால், இந்த தமிழிசை எல்லாம் கைகொட்டி சிரிக்கும் அல்லவா? அதனை எல்லாம் உங்கள் ரசிகர்கள் தாங்குவார்கள் என நினைக்கின்றீர்கள்?


தமிழிசையினை விடுங்கள், இந்த சீமான் எல்லாம் குதி குதி என குதிப்பார், அதனை கண்டுமா உங்கள் ரசிகர்கள் எல்லாம் உயிரோடு இருப்பார்கள்?


ஒருவேளை ரஜினியினை வீழ்த்த உங்களை யாரும் பயன்படுத்திகொள்ளும் திட்டமிருந்தால் தயவு செய்து விஜயகாந்தினை பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.


ரஜினி வந்துவிடுவார் என்றுதான் அவரும் முந்தினார், ரஜினி இன்றுவரை வரவில்லை, என்றும் வரமாட்டார். ஆனால் விஜயகாந்த் அதாள பாதாளத்தில் கிடக்கின்றார், அதனை கொஞ்சம் சிந்தியுங்கள்


பெரியார் வழியான‌ நீங்கள், அவரை போல் அரசியலுக்கு வராமல் ஆனால் சீறிகொண்டே இருங்கள். அது போதும்













 


 

கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு




20430013_10209837092019099_4781633466315513425_n.jpg


கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு, கமலஹாசனின் குரலுக்கு துணை நிற்பதாக செய்தி தெரிவித்துள்ளார்


மொத்த திரையுலகமும் திகைத்து நிற்க, காங்கிரஸ் கட்சி கூட கம்மென்று இருக்கும்பொழுது, கமல்ஹாசனுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் மோதலில் குஷ்பூ கமலஹாசனுக்கு துணிவாக தன் ஆதரவினை தெரிவித்திருக்கின்றார்,


உங்கள் பின்னால் தோழியாக நிற்பேன், உங்கள் நோக்கம் நிறைவேறட்டும் என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்





தமிழகத்தில் எந்த நடிகைக்கும் இல்லா தைரியம், எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத தைரியம் அவரிடம் இருக்கின்றது, அந்த தைரிய நாயகியினை வாழ்த்துகின்றோம்

தலைவி ஆதரித்தால் அது கமலஹாசனாக இருந்தாலும் சரி காயத்திரியாக இருந்தாலும் சரி, ஆதரிக்கவேண்டியது சங்கத்தின் கடமை என்பதால், கமலஹாசனுக்கு ஆதரவினை தெரிவித்துகொள்வோம்

இனி அதிமுக அமைச்சர்கள் குஷ்பூவினையும் தாக்கி அறிக்கைவிடுவார்கள், அதற்கு எல்லாம் தக்க பதில்கொடுத்து தலைவியினை ஆதரிக்கவேண்டும் என கோட்டான கோடி ரசிகர்களை கேட்டுகொள்கின்றோம்.

தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருப்பது, தமிழகத்தின்பால் அவர் கொண்டுள்ள அக்கறையினையும், தமிழகம் நன்றாக இருக்கவேண்டும் என்ற அவரின் அபிமானத்தையும் தெரிவிக்கின்றது, அவரை வாழ்த்துகின்றோம்

சிறிய ஓய்விற்கு பின் மறுபடியும் அதிரடிகளை தொடங்குகின்றார் குஷ்பூ

நீ கலக்கு ராசாத்தி













 


 

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது





மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது, சில மாநிலங்களில் இனி அது மூடபடலாம், பின் அது கோசாலைகளாக மாற்றபடலாம், ஊழியர்கள் பசுகாவலர்களாகலாம்


ஆனால் தமிழகம் 1967ல் இருந்தே இவ்விஷயத்தில் தனித்து நிற்கின்றது, மத்திய அரசின் உதவி குறைக்கபட்டாலும் அது இயங்கிகொண்டுதான் இருக்கும், தமிழக அமைச்சர் அதனைத்தான் சொல்கின்றார்.


இதனை வைத்தேதான் ஆட்சிக்கே வந்து, அதனை தொடர்ந்து அது சாதனை என சொல்லிகொள்ளும் அரசுகள் இவை, ரேஷன் கடைகளை மூடவே முடாது





நிச்சயம் தமிழக ரேஷன் கடைகள் தொடர்ந்து இயங்கும் சந்தேகமில்லை, மதுகடைகள் இருக்கும் வரை அது சாத்தியம்

கவனித்தால் ஒரு விஷயம் புரியும்

முன்பெல்லாம் மத்திய அரசின் நிதிகளை மறைத்து மொத்தமும் தாங்களே செய்வது போல தமிழக அரசு காட்டிகொள்ளும்,

இனி மத்திய அரசு உதவியினை நிறுத்தினாலும் அந்த சுமையினை சுமக்க மாநில அரசு தயாராக இருக்கவேண்டும், இல்லையென்றால் மாநிலம் மொத்தமாக சேர்ந்து மாநில அரசை குதறியே விடும்

இப்போதைக்கு தமிழக ரேஷன் கடைகளுக்கு ஆபத்தில்லை, ஆனால் செலவுகள் கூடும், கூடினால் என்னாகும்?

மதுகடைகள் அதிகரிக்கலாம்..




 

 



 

அணுவீச்சை கட்டுபடுத்த வீணை வாசிப்பா?




Image may contain: textஅணுகுண்டு தாக்குதல் அச்சத்தில் இருக்கும் தென்கொரிய, ஜப்பான், அமெரிக்க தலைவர்களும், உள்ளுக்குள் அதே பயத்தில் இருக்கும் வடகொரிய வெள்ளை தக்காளியும் மிக வேகமாக வீணை கற்றுவருவதாக தகவல்..


இந்த வித்தை ஈரானுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்கா ஈரான் மீது வீணை தடையினை செய்திருக்கின்றது இஸ்ரேல்


இந்தியாவிற்கு போலி வீணைகளை தயாரித்து அனுப்புங்கள், இசை வராமல் போகட்டும் என உத்தரவிட்டிருகின்றது சைனா





எங்களுக்கு வீணை வாசிக்க தெரியாதே என அழுகின்றது பாகிஸ்தான்

இனி துப்பாக்கி எதற்கு? ஏவுகனை எதற்கு? எல்லோரும் வீணை வாசித்தே எதிரியினை கொல்லலாம், நாட்டை காக்கலாம்

முதலில் இந்த பக்தர்களை புக்குஷிமாவில் இவர்களை வாசிக்கவிட்டால் நல்லது, அட புக்குஷிமா எதற்கு? கல்பாக்கம்,கூடன்குளம் பக்கம் வீணையோடு அனுப்பலாம்.

இனி இவர்கள் ஆராய்ச்சி தவில், மிருதங்கம், நாதஸ்வரம் என தொடரும்

அதிலும் சொல்வார்கள், தந்தையின் நாதஸ்வர இசை கேட்டு வளர்ந்துதான் கலைஞருக்கு அம்ம்புட்டு அறிவு...

(சரஸ்வதியும், நாரதரும் வீணையோடு அலைவது எதற்கு? வான்வெளியின் அணுவீச்சை கட்டுபடுத்த, சும்மா அல்ல‌)













 


 

நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்



Image may contain: 1 person, smiling, glasses and close-upபிரபாகரன் போலவே நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்


இவர் தாடியினை இழுத்து வைத்து கேட்கலாம், அந்த பிரபாகரன் இந்தியாவினை நேசித்திருந்தால் 1500 இந்திய வீரை கொன்றிருப்பானா? ராஜிவ் காந்தியினை கொன்று ஈழதமிழரை இந்தியாவில் இருந்து பிரித்திருப்பானா?


2009லும் இந்தியா கொடுத்த அமைதி ஒப்பந்தத்தை கிழித்து எறிந்திருப்பானா?


கடைசிவரை தான் செய்தது தவறு என சொன்னனா? மாறாக அவன் நேசகரம் நீட்டுவானாம் இந்தியா ஓடி சென்று அணைக்கவேண்டுமாம்


அன்னார் பாஜகவிடம் அணுக்கமாக இருப்பாராம், காங்கிரஸ் அரசு துரோகம் செய்ததால் அவர் அவர்களோடு பேசவில்லையாம், ஆனால் பிஜேபி நல்ல கட்சியாம்


சரி எங்கே அந்த நல்ல கட்சி தனி ஈழம் அமைத்து கொடுத்துவிடட்டும் பார்க்கலாம், அட அந்த 13ம் சட்டதிருத்ததை செய்யட்டும் பார்க்கலாம்,


அவ்வளவு ஏன் போர்குற்றத்தில் ராஜபக்சேவினை தண்டிக்கட்டும் பார்க்கலாம்?


குறைந்தபட்சம் ராஜிவ் கொலையாளிகளையாவது விடுவிகட்டும் பார்க்கலாம்? செய்யுமா? செய்யாது


இந்தியாவின் நிலைப்பாடு இப்படி இருக்க, அன்னார் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார்


இலங்கையினை சீனா விழுங்கிவிடுமாம்


அன்று அமெரிக்கா விழுங்கிவிடும் என சொல்லி உங்களை வளர்த்துவிட்டு பட்டபாடு போதாதா? இனி சீனாவினை சொல்லி பயமுறுத்துவீர்களா?


வரட்டும் அடிக்கட்டும், ஏற்கனவே ஈழபுலிகளால் 1500 ராணுவத்தாரை இழந்த தேசம்தான் இது, அதனை விட சீனன் ஒன்றும் கிழித்துவிடமாட்டான், எம் கடற்படை சும்மா விடாது


ஆமாம், நான் காங்கிரசை எதிர்ப்பேன் , ஆனால் ஒன்றுமே செய்யாத பாஜகவினை இந்து எனும் பெயரில் ஆதரிப்பேன் என சொல்லிவிட்டு செல்லும் ஐயா


காங்கிரசாவது ஈழமக்களுக்காக சில சவால்களை எடுத்து கையினை சுட்டது, இந்த பிஜேபி செய்தது என்ன ஒன்றுமே இல்லை


இதனை சொன்னால், ஆம் பிஜேபி ஒன்றுமே செய்யவில்லை என்பதால்தான் கைகோர்க்கின்றேன் என்கின்றார் காசி ஆனந்தம்


ஏதாவது புரிகின்றதா? புரியாது. இதுதான் இவர் தொடங்கியிருக்கும் இந்திய ஈழ நட்புறவு மையத்தின் கொள்கை


அய்யா, இந்த மையத்தை பிரபாகரன் இருக்கும்பொழுது நீவீர் ஏனய்யா தொடங்கவில்லை?


உண்மையினை சொல்லுங்கள், அமைதிபடையினை விலக்கியது கலைஞர் என சொல்லுங்கள், பல இடங்களில் புலிகளுக்கு உதவியது கலைஞர் என்ற உண்மையினை சொல்லுங்கள், இறுதியில் பிரபாகரன் செய்தது தவறு என சொல்லுங்கள்


அப்படி உண்மையினை சொன்னால் நீர் திமுக மேடையில்தான் இருப்பீர், அந்த காசி ஆனந்தனை வரவேற்போம்


ஆனால் கலைஞர் செய்த உதவிகளை மறந்து, காங்கிரஸ் உங்களுக்கும் பிரபாகரனுக்கும் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, பிஜேபி மேடையில் இருப்பதை கூட பொறுப்போம், காரணம் நன்றி என்பது உங்கள் கும்பலுக்கு சுட்டுபோட்டாலும் வராது.


ஆனால் எங்காவது நான் பிராபகரன் போல இந்தியாவினை.... என நீர் தொடங்கினால் சும்மா விடுவதாக இல்லை


இவரை விமர்சிப்பவர்கள் சிங்கள அரசின் கைகூலிகள் என்கின்றார்


மிஸ்டர் காவி ஆனந்தம், உங்களை விமர்சிக்க சிங்களன் ஏன்? ஒவ்வொரு இந்தியனும் , அந்த உணர்வுள்ள ஒவ்வொருவனும் புலியினையும் உங்களையும் எதிர்ப்பான்


உங்களை ஆதரித்துதான் எங்கள் தமிழுணர்வை காட்டவேண்டிய அவசியமில்லை


இதுகாறும் இல்லாமல் இப்பொழுது திடீரென இந்திய அரசோடு நீங்கள் குலவுவதை பார்த்தால், புலி பத்மநாபன் சிங்கள அரசோடு இருப்பது போல, கருணா இருப்பது போல நீரும் ரகசிய சிங்கள ஏஜண்ட் எனும் சந்தேகம் இந்தியருக்குத்தான் ஏற்படுகின்றது


எமது நாட்டில் இருந்துகொண்டு, எங்கள் நாட்டு உணர்வினை பேசும்பொழுது நீ சிங்கள கைகூலி என இந்தியர்களை சொல்ல உமக்கு எவ்வளவு தைரியம் அய்யா?


இதனை நீர் லங்காபுரியில் இருந்து சொல்லவேண்டும், எம் நாட்டுக்குள் வந்து எம்மை நோக்கி சொல்லகூடாது புரிகின்றதா?


உணர்ச்சியுள்ளவர் என்றால் திமுக புலிகளுக்கு செய்த எல்லா உதவிகளும் நினைவிற்கு இருந்திருக்கவேண்டும், அதுதான் உணர்ச்சி


இப்படி பச்சை சந்தர்பவாதம் என்பது உணர்ச்சி அல்ல?


இதற்கு மேலும் பேசினால், நீர் உணர்ச்சி கவிஞர் அல்ல, உணர்ச்சியற்ற .......................


இவரது பேட்டியினை செய்தியாக்கிய அந்த ஆனந்த விகடன் ஒரு தேசதுரோக பத்திரிகை, நாளை பாகிஸ்தான் தீவிரவாதி , மாவோயிஸ்டுகளையும் இதே போல செய்தியாக்குவார்கள்


ஆனந்த விகடனின் தேசதுரோகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்


இந்த அரசு மாணவர்களை நக்சலைட்டுகள் என கைது செய்கின்றது, பேராசிரியரை நாட்டுக்கு ஆபத்தானவர் என கைது செய்கின்றது


ஆனால் இந்த அந்நியநாட்டு ஆபத்தான பிரிவினை கும்பலகளை மட்டும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றது


தமிழக அரசும், இந்திய அரசும் திருந்தினால் விகடன் தானாக திருந்தும்













 


 

புட்டீன் செய்திருக்கும் ராஜதந்திரம் என்ன தெரியுமா?




Image may contain: 1 person, sunglasses"ரஷ்யா உனக்கு உதவியதா சொல், சொல்." .


என டிரம்ப் சட்டையினை பிடித்து அமெரிக்க மன்றங்கள் கேட்டுகொண்டிருக்க, மிக அசால்ட்டாக 750 அமெரிக்க அதிகாரிகளை "வெளியே போ" என தள்ளி கதவினை பூட்டியிருகின்றார் புட்டின்


தூதரக அதிகாரிகள் என்னென்ன வேலை செய்வார்கள் என்பது முன்னாள் உளவாளியான புட்டினுக்கு தெரியாதா? விரைவில் நடைபெறவிருக்கும் ரஷ்ய தேர்தலில் ஏதோ இந்த அமெரிக்க தூதர்கள் தெளிக்க , கழுத்தை பிடித்துவிட்டார் புட்டின்





இது போக உக்ரைன் பிரச்சினை, எஸ்தோனியாவில் ரஷ்யாவினை சீண்டும் ஏவுகனை தடுப்பு சாதனம் அமைத்தல் என சில பிரச்சினைகளின் முடிவு இது

ராஜதந்திர மொழியில் புட்டீன் செய்திருக்கும் காரியத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

"எப்பொழுதும் சண்டைக்கு தயார்.." எனும் அறிவிப்பு..

எங்கோ, ஏதோ நடந்திருக்கின்றது, கடந்தவாரம் சோதனை வெற்றி என அறிவிக்கபட்ட அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் கொரியபகுதியில் நிறுவபட்டிருப்பது தான் புட்டீனின் கோபத்தை சீண்டியிருக்கலாம்

காரணம் அதில் ரஷ்ய எல்லையும் உண்டு, ஒரு நாடு தன் எல்லையில் இன்னொரு நாடு இப்படி செய்ய அனுமதிக்காது

எதனையோ மனதில் வைத்து தில்லாக அமெரிக்கர்களை வெளிதள்ளுகின்றார், கேட்டால் இது கூடுதல் பொருளாதார தடை கொண்டுவரும் அமெரிக்க முயற்சிக்கு பதிலடி என்கின்றார்

எங்கோ மேகம் கறுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது

இது இருக்கட்டும்

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யபடுவாராம், நமது பிரதமர் ஒரு மாதிரியானவர், கடந்த முறை திடீரென பாகிஸ்தானில் இறங்கி "ஹாய் நவாஸ், ஹவ் ஆர் யூ" என கட்டிபிடி வைத்தியம் கொடுத்தவர்

இனி புதியபிரதமர் அறிவிக்கபட்டால் வாழ்த்து தெரிவிக்க இப்படி சொல்லாமல் கொள்ளாமல் இந்திய பிரதமர் வந்துவிடுவாரோ என பாகிஸ்தானின் பாதுகாப்பு குழு யோசித்து  கொண்டிருகின்றது









ஜிஎஸ்டியினால் அத்தியாவாசிய விலைகள் குறைந்திருக்கின்றன : மோடி

விமான டிக்கெட் விலை குறைந்திருக்குமோ? அவருக்கு அத்தியவாசியாமன விஷயம் அதுதான்.





 


 

மாவீரன் சின்னமலைக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்....




Image may contain: one or more people and outdoorஅவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது


சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார்.


பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் படைதிரட்டி அவனை அச்சுறுத்தினார், அப்பக்கம் வெள்ளையன் காலூன்ற முடியவில்லை





Image may contain: sky, outdoor and natureபின் காலங்கள் மாறி திப்பு ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியபொழுது அவனுக்கு பக்கபலமாய் இருந்தார், திப்புவின் வெற்றிகளில் சின்னமலைக்கும் பங்கு உண்டு

திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியனுக்கும் நல்ல தொடர்பு இருந்தது, திப்புவின் பெருமையும் மதிநுட்பமும் அவனின் ஏவுகனைகளும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்தின, நான் பிரான்ஸ் திப்பு சுல்தான், திப்பு இந்தியாவின் நெப்போலியன் என சொல்லிகொண்டான்.

திப்புவிற்கு பல உதவிகளை செய்ய அவன் முன்வந்தான், அப்படி திப்புவின் பிரதிநிதிகள் மாவீரன் நெப்போலியனை காணசென்றபொழுது சின்னமலையினையும் அழைத்தார்கள் அவரோ தன் தளபதி கருப்பசேர்வை என்பவரை அனுப்பினார்

திப்புவுடன் சேர்ந்தும், திப்புவிற்கு பின்னரும் பெரும் யுத்தம் நடத்தினார் சின்னமலை, ஆங்கிலேயர் அவருக்கு அஞ்சினர்

திப்புவினை முதலி வீழ்த்திவிட்டு சின்னமலையினை குறிவைத்தனர், முந்திகொள்ள நினைத்த சின்னமலை போராளிகளை எல்லாம் திரட்டி, திப்புவின் எஞ்சிய படையினை திரட்டி கோவை முகாமினை தாக்க திட்டமிட்டார்

அதுமட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் ஆங்கிலேயபடைகளுக்கு அடியாக இருந்திருக்கும், ஆனால் சில தகவல் தொடர்பு சரியில்லா காரணத்தால் சிலர் முந்திகொள்ள அந்த முயற்சி தோற்றது

ஆயினும் அஞ்சவில்லை சின்னமலை, அவரின் கவனெம்ல்லாம் எப்படியாவது நெப்போலியன் உதவிபெற்று ஆங்கிலேயரை ஓட அடிப்பதில் இருந்தது, வெள்ளையர் அதனை முறியடிக்க தீவிரமாய் இறங்கினர்

வீரத்தில் வெல்லமுடியா சின்னமலையினை சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுத்து சாதித்தனர், மிக நுட்பமாக பிடிக்கபட்டார் சின்னமலை

கொஞ்சம் தாமதித்திருந்தால் அவருக்கு பிரெஞ்ச் படை உதவியிருக்கும், வரலாறு மாறியிருக்கும் ஆனால் விதி அதுவல்ல‌

இதே நாளில் அந்த மாவீரனை தூக்கிலிட்டார்கள். வெள்ளையனுக்கு கோவை பகுதியில் சிம்ம சொப்பணமாக விளாங்கிய அந்த மாவீரன் இந்த நாளில்தான் இறந்தான்

அவன் இறந்தாலும் அவரின் வீரமும், அவர் பெற்ற பல வெற்றியும், கொஞ்சமல்ல, மாவீரன் நெப்போலியனிடம் கவனம் பெற்ற வீர இந்தியர்களில் சின்னமலைக்கு நிச்சயம் இடம் உண்டு

வீரம் வீரத்தை விரும்பும் என்பது அதுதான்

நாட்டிற்காய் போராடிய அம்மாவீரன் இன்று ஒரு சாதி அடையாளமாக சுருங்கிவிட்டதுதான் பெரும் கொடுமை.

அவன் வேறுசாதி, அவன் தளபதி இன்னொரு சாதி, அவனின் படைகளில் நாயக்கன், மராட்டியன், கன்னடன் என எல்லா மக்களும் இருந்தார்கள் , அவன் படை எல்லா சாதிகளையும் கொண்டிருந்தது

அந்த மாவீரனைத்தான் இன்று சாதி அடையாளத்தில் வைத்திருக்கின்றார்கள், பெரும் கொடுமை

அந்த ஓடாநிலை கோட்டை, சங்ககிரி கோட்டை அவனின் மாவீரத்தை சுமந்தபடி இன்றும் நிலைபெற்று நிற்கின்றது

அந்த மாவீரனுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்.














 


 

முருகன் - நளினி மகள் லண்டனில் டாக்டர்





லண்டனில் இருக்கும் தன் மகள் திருமணத்திற்கு செல்ல அனுமதி கோரி நளினி மனு


கவனியுங்கள், சாதரண அலுவலக ஊழியர் நளினி. தலைகீழாக நின்றாலும் தன் மகளை தமிழக அரசு கல்லூரி தவிர எங்கும் அவரால் படிக்க வைக்க முடிந்திருக்காது, உறவுகளும் பெரும் புள்ளி அல்ல‌


ஆனால் முருகன் நளினி மகள் லண்டனில் டாக்டராகியிருக்கின்றாள், அவளின் திருமணத்திற்கு செல்ல நளினி ஒற்றைக்காலில் நிற்கின்றார்





எப்படி லண்டனில் படிக்க வைக்க நளினியால் முடிந்தது?

சிவராசன் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் மிக முக்கிய வரி "நளினியின் ஒத்துழைப்பு மிக அபாரம்"..

எப்படிபட்ட கூலி கொடுக்கபட்டிருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்..

இந்த குற்றவாளியினை லண்டனுக்கு அனுப்பவேண்டுமாம், ஏன் விஜய்மல்லையா, லலித்மோடி வரிசையில் சேர்ந்துகொள்ளவா?

முருகன் சாமியாராகிவிட்டதால் மகள் பற்று அற்றுவிட்டதாம், அனேகமாக நித்தி சுவாமிகளை சந்திக்க அவர் பரோல் கேட்கலாம்

அதற்குள் சாமி உள்ளே சென்றுவிட்டால் முருகனுக்கு பரோலில் சிக்கல்தான்..




 

 



 

இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது




Image may contain: one or more people, people standing and outdoorஒரு சிலர் சொல்லிகொண்டிருந்தான், கிறிஸ்தவர் பணத்திற்காக மதம் மாறினர் என்றும், இஸ்லாமியர் அதிகாரத்திற்காகவும் மதம் மாறினர் என்றும் உளறிகொண்டிருந்தான்


அவனெல்லாம் உ.பி வீடியோவினை பார்த்தால் விஷயம் புரியும்


இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம் நடந்தது, புத்தனனும் மகாவீரனும் ஓரளவு மாற்றம் கொடுத்தாலும் அது மறுபடி அந்த பூதம் எழுந்து நின்றது





இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான், மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது என்பதால்தான் அபலைகள் அந்நிய மதம் தேடினர்.

புத்தம் அழிக்கபட்டபின், இஸ்லாமும் கிறிஸ்தவமும், ஜெராஸ்டிரியமும் அவர்களுக்கு அடைக்கலமாயின.

கிராமத்து சிறுவர்கள் ஓணான்களை வதைப்பது போல, சரச நடமனாடும் பாம்புகளை சுற்றி நின்று கல்வீசி ரசிப்பதை போல, இந்த சக மனிதர்களை இம்சிக்கும் கொடுமை காலம் காலமாக உண்டு, வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் சாகும்?

ஆனால் வாயுள்ள ஜீவன்கள், தன் காயத்தை துடைத்து மருந்திட்டு வாஞ்சையுடன் பாதுகாக்கும் ஒருவன் பின் செல்லாதா?

நாயே நன்றியோடு இருக்கும்பொழுது, நாயினும் கீழாய் நடத்தபட்ட மக்கள், தங்களுக்கு அங்கீகாரம் தந்தவர்கள் பின் செல்லமாட்டார்களா?

பின்னாளில் அம்பேத்கார் அதனையே செய்தார், சாதி முறை கடவுள் படைத்ததாக இருந்தால் கடவுளே பொய் என துணிந்து நின்றார் பெரியார்

என் மரியாதை எனக்கு முக்கியம், என் மானம் எனக்கு முக்கியம் , நாங்கள் உங்கள் மூட சட்டங்களுக்கு கட்டுபட மாட்டோம் என துணிந்து நின்றார் பெரியார்.

உறுதியாக சொல்லலாம், இந்துமதம் அற்புதமான மதம் ஆனால் அதன் பெரும் குறை இந்த சாதி அமைப்பு

அவர்கள் காசுக்கோ , உணவிற்கோ மதம் மாறியவர்கள் அல்ல, இப்படி உபியில் அடித்தது போலத்தான் , இந்தியா முழுக்க அடித்தார்கள், கன்னியாகுமரியிலும் அடித்தார்கள், சூத்திர நாயே உனக்கேன் மேலாடை என சொல்லி அடித்தார்கள்.

அவர்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளித்தவர்கள் பின்னால், ஆடை கொடுத்தவன் பின்னால், கல்வி கொடுத்தவன் பின்னால் அம்மக்கள் சென்றார்கள், அம்மதங்களை தழுவினார்கள்.

ஒரு காதலை பொறுக்காதவர்கள், அந்த சூத்திர சாதி சந்தோஷமாக இருக்க பொறுக்காதவர்களா கல்வி கொடுப்பார்கள்?

கல்வி கிடைத்த இடத்திற்கு அவர்கள் இதனால்தான் ஓடினார்கள்.

காசுக்கும், உணவிற்கும் மாறவில்லை அவர்கள், மாறாக மானத்திற்கும், சமத்துவதுவத்திற்கும் ஏங்கி அழுததால் மாறியவர்கள்

இப்படி அடித்து விரட்டுவார்களாம், கேவலபடுத்துவார்களாம் இதனை எல்லாம் சகித்துகொண்டு இருக்கவேண்டுமாம், அவர்கள்தான் இந்தியர்களாம், தேசபற்று மிக்கவர்களாம்

இதனை பொறுக்க சகிக்காமல் , அடுத்த மதம் ஓடியவர்கள் உணவிற்கும், காசுக்கும் ஓடியவர்களாம், துரோகிகளாம்

புரியாதோர் இனியாவது புரிந்துகொள்ளட்டும்...













 


 

மலேசிய தமிழ் வானொலியில் பிக் பாஸ்





மலேசிய தமிழ் வானொலியில் காலை நிகழ்ச்சிகள் அசத்தும் அவர்கள் தமிழ் அவ்வளவு அழகு, விஷயங்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கும்


அதற்கும் மேல் பல்துறை நிபுணர்கள், சாதனையாளர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை சொல்வார்கள்


குழந்தை நலம், சமூகம் நலம், மன‌ நலம், பண நலம் , உடல்நலம் என எல்லா விஷயங்களும் உண்டு





இன்று வாழ்வியல் பிரச்சினை என பேசினார்கள், நல்ல தகவலை எல்லாம் சொன்னார்கள். பிரச்சினை என்பது சூழ்நிலையே, அது எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் என்றேல்லாம் பேசிவிட்டு, கடைசியில் சொன்னார்கள்

"நேயர்களே நிகழ்ச்சியினை கேட்டீர்களா, ஆக பிரச்சினை என்றால் பரணி சுவர்தாண்டி ஓடியது போல ஓட கூடாது, மாறாக டார்லிங் ஓவியா போல நின்று சமாளிக்கவேண்டும்"

பிக்பாஸ் எங்கெல்லாம் பாதித்துவிட்டது..








நமீதா வெளியில் சென்றால் மும்தாஜை உள்ளே அனுப்புவதுதான் சரி, அப்பொழுதுதான் கணக்கு சரியாகும்


இந்த பிந்துமாதவி எப்படி உள்ளே வரலாம்?


நியாயமற்ற காரியங்களை செய்யும் பிக்பாஸினை வன்மையாக கண்டிக்கின்றது தமிழகம்.




அனுப்பு... அனுப்பு.. மும்தாஜை உள்ளே அனுப்பு








 பிந்து மாதவி வெந்து நொந்த மாதவியாக ஓடிவருவது விரைவில் நடக்கலாம்..

அங்கிருக்கும் தீ நாக்குகள் அப்படி, வார்த்தையிலே வெந்துவிடுவார் பிந்து, அதுவும் அந்த சினேகன் முகத்தை கொஞ்சநேரம் பார்த்தாலே சுவரில் அடித்த பந்தாக வந்துவிடுவார் பிந்து





 



 

Sunday, July 30, 2017

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது. பாகிஸ்தானில் நடந்த அந்த பஞ்சாயத்திற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை


ஏன் என்றால் அப்படித்தான், இன்று எல்லைகள் வகுத்துவிட்டாலும் ஆப்கன், பாகிஸ்தான் போன்ற சில காட்டுமிராண்டி கலாச்சாரம் வட இந்தியாவிலும் உண்டு, அவர்கள் பழக்கவழக்கம் அப்படி.


இதனால்தான் பெரியார் சொன்னார் , "இந்தியா பாகிஸ்தான் என பிரிப்பதை விட , வட இந்தியா தென் இந்தியா என பிரியுங்கள். அவர்கள் கலாச்சாரம் என்பதும், மண்வாசனை என்பதும் வேறுமாதிரியானது, தென்னவர்கள் கலாச்சாரம் வேறுமாதிரியானது




மதத்தின் அடிப்படையில் பிரித்தாலும் அந்த குணத்தை மாற்றமுடியாது, அதனால் கலாச்சார அடிப்படையில் பிரியுங்கள்"


அது உண்மை என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துகொண்டே இருக்கின்றன..


அந்த அசகசாய சூரர் யோகி என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்?



தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம்


தென்கிழக்கு ஆசியாவில் ஒருவித பதற்றம் தெரிகின்றது, அமெரிக்கா தன் படைகுவிப்பினை பெரும் அபாயகரமான ஆயுதங்களுடன் செய்கின்றது, ஏதோ முடிவெடுத்துவிட்டார்கள்


சீனா தன் ராணுவம் அமைக்கபட்ட 90ம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுகின்றது, அதில் சீன அதிபர் எந்த ராணுவத்தையும் வீழ்த்த தயார் என சவால் விடுகின்றார், 90 ஆண்டுகளில் அவர்கள் தோற்றதே இல்லை என சவுடால் வேறு


ஜப்பான் அவர்களை போட்டு அடித்தது கொஞ்சம் அல்ல, சோவியத் யூனியன் அடித்த அடியில் அவர்கள் அமெரிக்க அதிபரிடமே சரண்டைந்தார்கள், அப்பொழுதெல்லாம் இந்த ராணுவம் என்ன செய்தது என சீனர்களிடம் கேட்பது யார்?




அமெரிக்க படைகுவிப்பினை அடுத்து ரஷ்யாவும் தன் கடல்படை சாகத்தை செய்து அசத்தியிருக்கின்றது, புட்டீன் பார்த்து ரசித்திருக்கின்ன்றார்


இந்த ரஷ்யாவும் சீனாவும் வடகொரியாவுடன் எல்லையினை பகிரும் நாடுகள் என்பதால் பிரச்சினைவின் வீரியம் புரிகின்றது


பெரும் அபாயகரமான கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவிக்க தொடங்கியிருப்பதால் இனி எப்பொழுதும் எந்த செய்தியும் வரலாம் என்கின்றது தென்கிழக்கு ஆசிய பதற்றம்




அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார்




Image may contain: one or more people, people sitting and indoorபகவத் கீதை இந்துக்களுக்கான நூலாக இருக்கட்டும், ஆனால் எல்லோரும் படிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?


அணுகுண்டை தயாரித்த ஓப்பன் ஹைமர் அதனை படித்திருக்கின்றார், தன் குறிப்புகளில் சொல்கின்றார்


அமெரிக்க அணுஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உண்டு, ஒரு தத்துவமாக அவர்கள் அதனை பார்க்கின்றார்கள், யாரும் இது கிறிஸ்தவநாடு அந்நிய தெய்வம் எதற்கு என சீறவில்லை, அவர்கள் அப்படித்தான்





அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார், தினமும் குரான் படித்தார், தொழுதார். குரானை தாண்டியும் நிரம்ப வாசித்தார், அது கீதையோ, திருக்குறளோ, புறநானூறோ எது கிடைத்தாலும் வாசித்தார்

இப்பொழுது அப்துல்கலாம் நினைவிடத்தில் அவர் வீணையோடு இருப்பது ஏன் என்ற சர்ச்சையும், அவர் கீதை படிப்பது ஏன்? என்ற சர்ச்சையும் வெடிக்கின்றது

ஐன்ஸ்டீன் பெரும் விஞ்ஞானி, ஆனால் வயலின் வாசிப்பார். அவர் வயலினோடு நிற்கும் போட்டோக்கள் ஏராளம், அவர் நினைவிடத்தில் கூட அது உண்டு

வீணை இந்திய அடையாளம், இன்னும் சொல்லபோனால் இந்திய கல்வி அடையாளமான கடவுள்
அதனோடுதான் வீற்றிருப்பார், இவர் இந்திய கல்வியின் அடையாளம் என அப்துல்கலாமின் சிலை வீணையோடு நிறுவபட்டதில் தவறேதும் இருக்கமுடியாது.

கலாமிற்கும் மிக மிக வீணையினை பிடிக்கும், அவர் அடிக்கடி வாசிக்கும் விஷயம் என்கின்றன குறிப்புகள்

ஆனால் கீதையினை வைத்தது ஏற்கமுடியாது என சர்சைகள் வெடிக்கின்றன‌ . அது ஞான நூல்தான் ஆனால் இந்துக்களின் அடையாளம் என குறிக்கபட்டுவிட்ட பின் சில சர்ச்சைகள் வெடிக்கின்றன.

அவர் எல்லா புத்தகமும் தான்படித்தார், விஞ்ஞான, ஞான நூல்கள் எல்லாமும் தான் வாசித்தார். ஆனால் கீதையினை மட்டும் வைத்தது ஏன் என கொதிக்கின்றார்கள், கொஞ்சம் பெருந்தன்மையாக விட்டுவிடவேண்டிய விஷயம்தான், பெரும்பான்மையான வெளிநாட்டு விஞ்ஞானிகள் படித்த கீதையினை அவரும் படித்திருக்கின்றார், இது இந்நாட்டு ஞான நூல் என சொல்லிவிட்டு சென்றுவிடலாம்

ஆனால் விடுவார்களா? விடவே மாட்டார்கள் சர்ச்சைக்காரர்கள்

என்ன செய்யலாம்? வைக்க வேண்டுமானால் அவர் நேசித்த‌ திருக்குறளை வைத்திருக்கலாம், அதற்கு மேல் மிக பொருத்தமான நூல் உண்டென்றால் அவர் எழுதிய "அக்னி சிறகுகளையே" வைத்திருக்கலாம்.

அதுதான் அவர் நினைவிடத்திற்கு மிக பொருத்தமானது.

(திருநீறு பூசி, பூனூல் போட்டு விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என உற்றுபார்க்கின்றாரோ மோடி :) )














Image may contain: 2 people, people standing"அய்யா, இந்த அஞ்சலிக்கு அப்புறம் அந்த ஜிஎஸ்டின்னா என்னண்ணு கொஞ்சம் விளக்கி சொல்லிட்டு போங்க, இந்த மாநிலத்து நிதிஅமைச்சர் நான், ஆனா யாராவது ஜிஎஸ்டி பற்றி கேட்டா 4 வரி சொல்ல தெரியலங்க, அவமானமா இருக்கு


புண்ணியமா போகும் , கொஞ்சம் புரியுர மாதிரி சொல்லிட்டு போங்க"










 





 


 

சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்





முத்து படத்தில் வரும் வயதான ரஜினிபோல ஆகிவிட்டார் நண்பர் Omm Prakash


"அண்ணே எல்லாம் நாடகம், எல்லாமே நாடகம், பிக்பாஸே நாடகம். ஏதோ பாவபட்ட புள்ளன்னு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு சப்போர்ட் பண்ணினோம், அங்க எல்லாம் நாடகம்ணே, இனி பிந்து மாதவி எல்லாம் வருமாம், ச்சே... நாடகம் எல்லாம் நாடகம் ஹ்ஹா ஹா ஹா ஹா" என சிரிப்பவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது


தாடியும் அழுக்கு போர்வையும் இல்லை, மற்றபடி அதே விரக்தி சிரிப்பு





விஷய என்னவென்றால், பிக்பாஸ் சுத்த நாடகமாம், இந்த சூலி, காயத்திரி , ஓவியா எல்லோர் ஆக்ரோஷமும் நடிப்பாம். அவருக்கு இது திடீரென அவருக்கு புரிந்துவிட்டதாம். இந்த நாடகத்தை இனி பார்க்கமாட்டாராம். இந்த பெரும் ஏமாற்றம் அவருக்கு பெரும் விரக்தியாம்

இனி ஷோரூமில் கூட டிவி பார்க்கமாட்டேன் எனும் அளவிற்கு ஞானமழை கொட்டினார்.

திடீரென ஆளவந்தான் கமலஹாசனாக மாறிவிட்டார், "சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்" என உறுமினார். அண்ணே நான் மனிதவெடிகுண்டா மாறப்போறேன், நீங்க ஒரு உதவி செய்யணும் என்றார்

ஏன் குண்டு கட்டிவிடவேண்டுமா?

இல்லண்ணேன் , நான் பிக்பாஸ் வீட்டில் மனிதவெடிகுண்டாக வெடிக்க போகின்றேன், அதற்கு நீங்கள் 2 பேட்டரி பில் போட்டு வாங்க வேண்டும், ஜிஎஸ்டி எல்லாம் போட்டு கவனமா வாங்குங்க,

ஓஓ சரி ஏன்?

பில்லை என்னிடம் கொடுங்கள், பத்திரமாக என் வீட்டில் வைத்துவிட்டு வெடிக்க போகின்றேன்

அது ஏன் உங்கள் வீட்டில் ரசீதை வைப்பீர்கள்????

அப்போதாண்ணே விசாரணையில் சிக்கி ஆயுசுக்கும் உள்ளே இருப்பீங்க, சும்மா உங்கள விட்டுட்டு போக முடியுமாண்ணேன்"




 





 



கமல்ஹாசன் - காயத்ரி ரகுராமுக்கு ரூ.100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்: கிருஷ்ணசாமி அனுப்பினார்இவரால் தாமிரபரணியில் செத்த 17 பேருக்கும் என்ன நஷ்ட ஈடு இவர் வாங்கி கொடுத்துவிட்டார்? ஒன்றுமேயில்லை

இதில் கமலுக்கும், காயத்திர்க்கும் "சேரி பிஹேவியர்" எனும் வார்த்தைக்கு நோட்டீஸ் அனுப்புகின்றாராம்.


பிராமணயிசம் உயர்ந்தது என சிலர் சொல்லும் எனும் ஆபத்தைவிட மகா ஆபத்தானவர்கள் இந்த கிருஷ்சாமி போன்ற தலித் தலைவர்கள்.

மிஸ்டர் கிருஷ்ணசாமி, சேரி மக்களின் மானம் வெறும் 100 கோடியில்தான் இருக்கின்றதா? அதனை செலுத்திவிட்டு ஆளாளுக்கு சேரி பிஹேவியர் என சொல்லட்டுமா என கமலஹாசன் தரப்பு திருப்பி கேட்டால் என்ன செய்வார் கி.சாமி?




 


பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை ...





images.jpgபாகிஸ்தானுக்கு ஒரு ராசி என்னவென்றால் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை, முடிக்கும்முன் ஒன்று ராணுவம் விரட்டிவிடும் அல்லது ஏதாவது வழக்கில் சிக்கி அவர்களே சென்றுவிடுவார்கள்


இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி அங்கு, அவர்கள் சாபம் அப்படி


இப்பொழுது அந்த சாபம் நவாஸ் ஷெரீப்பிற்கும் வந்துவிட்டது, மனிதருக்கு நமது பன்னீர்செல்வம் ராசி போல, முன்பு இருந்தபொழுது அங்குள்ள தினகரன் முஷாராப்பால் விரட்டபட்டார், பின் முஷாரப் என்னமோ ஆகி இப்பொழுதுதான் வந்திருக்கின்றார்





சிக்கல் என்னவென்றால் நாவசும் அவர் மகளும் பனாமா வங்கியில் ஊழல் பணம் சேர்த்திருப்பதாக செய்தி, அதில் நமது ஊர் அமிதாப், ஐஸ்வர்யா ராய் பெயரெல்லாம் உண்டு, அவர்கள் தேசபோராளிகள் என்பதால் இந்திய அரசு கண்டுகொளவில்லை

நவாசும் தான் நிரபராதி என மகள் மூலமாக சில ஆவணங்களை தாக்கல் செய்தார், அதில்தான் சிக்கினார்

அதாவது 2007ல் கணிணிக்கு அறிமுகமான சில எழுத்துருக்களை பயன்படுத்தி இது 2002ல் நான் தாயரித்த ஆணவம் என சமர்பித்திருந்தார்

எவனோ நல்ல வக்கீல் குறிவைத்து அடித்துவிட்டான், கனம் கோட்டார் அவர்களே இந்த எழுத்துருவே 2007ல்தான் வந்தது, வேண்டுமானால் பில்கேட்ஸை கேளுங்கள், இந்த குற்றவாளி நேற்று டைப் செய்துவிட்டு 2002 ஆவணம் என கதை விடுகின்றார், தட்ஸ் ஆல் மை லார்ட் என முடித்துவிட்டார்

ஆத்திரமடைந்த நீதிமன்றம் நவாஸை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டது

இப்படியுமா வழக்காடுவார்கள்? என அதிர்ந்து நிற்கின்றார் நவாஸ்

நவாஸ் இப்பொழுது இப்படி யோசிக்கலாம், "சே.. எத்தனை தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவவிட்டோம், ஒருவனையாவது பரப்பான அக்ரகார சிறையில் ஊடுருவ விட்டோமா??

அப்படி ஊடுருவ விட்டிருந்தால் இந்த வழக்கினை 18 வருடம் இழுத்து, 5 வருடம் பாகிஸ்தானை ஆண்ட முதல் பிரதமர் என்ற பட்டம் எனக்கு கிடைத்திருக்குமே?"

இனி என்ன ஆகபோகின்றது, பாகிஸ்தானும் ஊழல்நாடு நிச்சயம் ஊழல் நடக்கும், எந்நாளும் நடக்கும்

என்னதான் எதிரி நாடென்றாலும் இனி சிக்கிகொள்ளாமல் வழக்கு நடத்துவது எப்படி என இந்தியாவினை பார்த்துத்தான் அவர்கள் கற்றுகொள்ளவேண்டும்.




 

 



 

பிக்பாஸை மூடு...

உண்மையிலே போர்குணம் மிக்கவர்கள் திமுகவினர், பேச்சிலும் எழுத்திலும் , களத்திலும் அவர்களிடம் வீரம் தெறிக்கும். அது வரலாறு


மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உண்டு, எனினும் கலைஞர் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்டுபட்டு நின்றார்கள், அவர் கண்ணசைத்திருந்தால் இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் என்றோ தூக்கி கொண்டுபோய் கதற, கதற கலைஞர் வாழ்க என சொல்ல வைத்திருப்பார்கள்


ஆனால் தலமைக்கும், தலைவருக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பில்தான் தமிழகம் அமைதியாக இருக்கின்றது




இப்பொழுது ஏன் இதனை சொல்கின்றோம் என்றால் காரணம் உண்டு


அதாகபட்டது இந்த ஓவியாவிற்கு சில பேரவைகள் தொடங்கபட்டிருக்கின்றதாம், அதில் சிலர் ஓவராக பேசுகின்றார்கள்


எப்படியென்றால் நாங்கள் குஷ்பூவிற்கு கோவில் கட்டியது போலவோ, நயனுக்கு சிலை வைத்தது போல மொக்கை ரசிகர்கள் அல்ல என்ற அளவு பேசியிருக்கினார்


டேய் ரேஸ்கல்... ஓவியா உன் தலைவி என்றால் இருக்கட்டும், அவரை நீர் வணங்கட்டும், அது உன் விருப்பம்


ஆனால் குஷ்பூ ரசிகர்களை பற்றி உங்களுககெல்லாம் என்ன தெரியும், அதுவும் அந்த ஒட்டடை குச்சி ஓவியாவினை ரசிக்க ஆரம்பித்த பின் உங்களை என்ன சொல்ல? உங்கள் ரசனை அப்படித்தான்.


நாங்கள் களமிறங்கினால் தமிழகம் தாங்காது. இந்தியா இயங்காது


ஒழுங்காக பிக்பாஸ் பார்தோமா, கை தட்டினோமா என இருந்தால் சிக்கல் இல்லை, மாறாக எங்களை சீண்டினால் நடப்பதே வேறு


ஒவியா அல்ல, அந்த பிக்பாஸையே நாமினேஷன் செய்தோ, செய்யாமலோ நாமினேட் செய்துவிடுவோம் ஜாக்கிரதை


4 படம் நடிக்கமுடியாத அவருக்கே நீங்கள் கிளம்பினால், 30 வருடம் வெற்றிகொடி நாட்டிய தங்க தாரகைக்கு எப்படி பட்ட படை இருக்கும்?


தலைவி அமைதியாக இருப்பதால் நாங்களும் அமைதியாக இருக்கின்றோம் , ஆனாலும் ஓரளவுக்குத்தான் அமைதி காக்க முடியும்.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வீணாக ரசிகர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி, ரத்த களறியியினை தூண்டும் அளவுக்கு செல்வதால் தமிழக அரசு மிக அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டியது நல்லது


பிக்பாஸை மூடு...



கைதியினை மீட்டு சென்ற சம்பவம் ...





நாங்குனேரி அருகே கிராமமே திரண்டு வந்து காவலர்களை உதைத்து , கைதியினை மீட்டு சென்ற சம்பவம் உறுதியாக நடந்திருக்கின்றது


நீர் இல்லா தமிழகத்தில் இப்பொழுது மண்ணுக்கு சண்டை, மண் தகறாறில் ஒருவரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றபொழுதுதான் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது


அந்த கிராம பெண்கள் வந்து அடித்து உதைத்து இழுத்து சென்றதுதான் ஹைலைட். கோவில்பட்டி வீரலட்சுமி தெரியும் இந்த வீரலட்சுமிகள் குறித்து இனிதான் வரலாறு பேசும்.





காவல்துறை பெரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, இதுவே கூடங்குளம், நெடுவாசல் போன்ற உரிமை போராட்டம் என்றால் பின்னி எடுத்துவிடுவார்கள், அது தேசிய பிரச்சினை அல்லவா? மத்திய அரசு மாநில அரசை டிஸ்மிஸ் செய்துவிடும் என்ற பயம்

ஆனால் இந்த மணல் தகறாறை மத்திய அரசு கண்டு கொள்ளாது, அதனால் வோட்டு முதல் உள்ளூர் கவுன்சிலரின் முகம் வரை அரசு கண்ணுக்கு வந்து போகும்

மற்றபடி டாஸ்மாக் கடையினை பெண்கள் உடைத்தால் அரசு பாயும் அது வருமான பிரச்சினை, இதற்கெல்லாம் அரசு அசையாது.

ஆனாலும் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது , மாநிலத்தின் பாதுகாவலையும் அமைதியினையும் உறுதிசெய்யும் கடப்பாடு கொண்ட , அர்பணிப்புமிக்க காவல்துறையினர் மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் குற்றம்

காவல்துறைக்கு ஒரு அமைச்சர் உண்டல்லவா? அது யார்? சாட்சாத் பழனிச்சாமிதான், நிச்சயமாக அவர் பதில் சொல்லவேண்டும், அக்காவலர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் ஆனால் சத்தமே இல்லை

ஆக, எடப்பாடி அரசை கண்டு தமிழக பெண்களுக்கே பயமில்லை, அசால்ட்டாக போட்டு காவலரையே அடிக்கின்றார்கள்

ஆனால் அதிமுகவினரிடம் கேளுங்கள், பள்ளிகுழந்தைகள் மனப்பாடம் ஒப்புவிப்பதுபோல சொல்வார்கள்

"புரட்சிதலைவியின் கனவினை நனவாக்கும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு அதீத தைரியம் வந்திருப்பது, எங்கள் ஆட்சியின் வெற்றி, மகளிருக்கு அவ்வளவு பாதுகாப்பும் உரிமையும் எங்கள் ஆட்சியில் இருக்கின்றது"

சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பவர் யார் தெரியுமா?

சமீபத்தில் வந்த ஆஸ்கரை தவறவிட்ட படமான "முத்துராமலிங்கம்" படத்தின் இயக்குனர்தான், முன்னமே இச்சமபவம் நடந்திருந்தால், அப்படத்தில் இப்படி சில காட்சிகளை சேர்த்து அசத்தியிருக்கமாட்டாரா?

"வடை போச்சே" எனும் நிலையில் இருக்கின்றார் அவர்.




 

 



 

Saturday, July 29, 2017

அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஒரு கிராமம் , காவலர்களை தாக்கி கைதியினை மீட்டுசென்றதாக சில செய்திகள் பரவுகின்றன‌


அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது


அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாகும்




கதிராமங்கலத்தில் களமிறங்கி அடிக்க இறங்கும் காவல்துறை, மெரீனாவில் ஒரு எல்கேஜி பையன் வந்தாலும் விரட்டும் காவல்துறை இங்கு மட்டும் அமைதி காப்பதன் மர்மம் என்ன என்ற கேள்விகள் எழும்


சில காவலர்கள் தாக்கபட்டு கைதிகள் மீட்கபட்டது உண்மையா? இல்லையா? வாட்சப் தகவல் எதனையும் முழுக்க நம்பமுடியாது என தேடினால் ஒரு ஊடகமும் இன்னும் செய்தி வெளியிடவில்லை


ஏதோ நடந்திருக்கின்றது, என்ன என்பதுதான் தெரியவில்லை.


உண்மையிலே காவலர்கள் தாக்கபட்டு கைதி மீட்கபட்டிருந்தால், வீரப்பன் மீது காட்டிய அதே வேகத்தை காவல்துறை காட்டவில்லையென்றால் இந்த அரசு "யாருக்காகவோ" ஆட்சி நடத்துகின்றது என்பது மட்டும் உண்மையாகிவிடும்



குஷ்புவே நமஹ ! : 4

குஷ்புவுக்குதான் கோவில்!



 




அவருக்கும் அமுதென்று பேர், அந்த அமுத தலைவி எங்கள் உயிருக்கு நேர்...





சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது.


மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை யாராலும் நடக்க முடியாது. குஷ்பூ ரோஜா பூ கூட்டம்போல‌ போல இருந்த படம் அது.


கமலஹாசனுக்கு போட்டியாக நடிப்பு, நடனம் , அழகு என மிக பெரும் சவாலை கொடுத்திருந்தார். சில இடங்களில் கமலஹாசன் திணறியதும் தெரிந்தது, சிங்காரவேலன் படம் அவரை சிங்கார தேவதையாக கொண்டாட வைத்தது. அடுத்தடுத்து சிக்ஸர்களாக விளாசும் பேட்ஸ்மேன் போல அடுத்து அட்டகாசமான படம் கொடுத்தார் குஷ்பூ, அது 1992 ஜூன் மாதம் ‘அண்ணாமலை’ படமாக வந்தது. எம்ஜிஆர் காலத்திற்கு பின் ரஜினி, அதுவும் 1990க்கு பின் வேகமாக வளர்ந்தார். அந்த வேகத்தினை குஷ்பூவின் புகழும் வேண்டியிருந்தது


‘அண்ணாமலை’ படத்தில் குஷ்பூ மிக சிறப்பான இடத்தினை பெற்றார், அந்த சுப்புலட்சுமியாக அவர் சிரித்த சிரிப்பிற்கே படம் ஹிட், படத்தின் கதை, ரஜினி எல்லாம் அடுத்த வகை.


படத்தில் குஷ்பூ ரஜினியின் இளவயதிற்கும் பொருந்தினார், பிற்பாதி முதிய வயதிற்கும் இளநரையுடன் அட்டகாசமாக பொருந்தினார். கடந்த வருடம் கபாலியில் ரஜினி முதியவராக வந்தபொழுது, எல்லோர் மனதிலும் இவருக்கு ஜோடியாக அண்ணாமலை குஷ்பூ அல்லவா வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக தோன்றியது அதனால்தான்.


அந்த அளவிற்கு ரசிகர் மனதில் இடம்பிடித்தார் குஷ்பூ, இன்றும் காலா படத்தின் போஸ்டரை கண்டால், அடடா இதில் குஷ்பூ நடித்தால் பொருத்தமாக இருக்குமே என ஏங்குவதுதான் தமிழன் உள்ளம், குஷ்பூவின் தாக்கம் அப்படி. பின்னாளில் மூப்பனாருக்காக ரஜினி சைக்கிள் சின்னத்தை ஆதரித்தபொழுது, அண்ணமலை சைக்கிளோடு போஸ் கொடுத்தபொழுது, இச்சின்னம் ரஜினிக்கு மட்டுமா? குஷ்பூவிற்கு பங்கு இல்லையா? என்றெல்லாம் குரல்கள் கேட்டன.


அண்ணாமலைக்கு பின் குஷ்பூ வந்த அனைத்து பாடல்களும் தமிழகத்து தேசிய கீதமாயின, எல்லா தியேட்டர், டிவி, அன்றைய கேபிள் டிவி, திருட்டு கேசட், ரேடியோ என எல்லா இடத்திலும் குஷ்பூ பாடல்தான் இருந்தது. அதுவும் வைரமுத்து எழுதிய கொண்டையில் தாழம்பூ பாடல், தமிழகத்து தேசிய பாடல் ஆயிற்று, “இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி” என்ற கவிஞரின் வரிகள் 100% அக்காலத்தில் உண்மையாய் இருந்தது


வருஷம் 16ல் அழகு நடிகை, சின்னதம்பியில் முழு தேவதையாக ஜொலித்த குஷ்பூ, அண்ணாமலைக்கு பின் ரசிகர்களால் இன்னமும் உயர்த்தபட்டார். ஆம், அவருக்கு அந்த காலத்தில்தான் கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, குஷ்பூ நமஹ, குஷ்பாம்பிகை போற்றி என்ற ஸ்லோகங்கள் அப்பொழுதுதான் கேட்டன. எத்தனையோ நடிகைகளை கொண்டாடிய தமிழகம் தான், எத்தனையோ நடிகைகள் கோலோச்சிய இடம்தான் , ஆனால் கோயில் எந்த நடிகைக்கும் இருந்ததுமில்லை, இருக்க போவதுமில்லை.


அந்த அளவிற்கு மிக அபிமான ரசிகர்கள் இருந்தார்கள், குஷ்பூ முகத்தில் கடவுளை காணும் அளவிற்கு குஷ்பூ அவர்களை ஆக்கிரமித்திருந்தார். திருச்சியில் அக்கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, சிலர் அதெல்லாம் சும்மா என்பார்கள், நெருப்பின்றி புகையாது, விஷயம் நடந்திருக்கின்றது. இப்படியாக தெய்வம் என கொண்டாடபட்டார் குஷ்பூ, எந்த நடிகையும் எட்டாத தெய்வம் எனும் உயரத்தை எட்டிய ஒரே நடிகை இன்றுவரை குஷ்பூதான்.


அண்ணாமலையினை தொடர்ந்து, ரஜினியின் பாண்டியன் படமும் வந்தது, அதில் ஜொலித்த குஷ்பூ, ஒரு பாடலில் அபூர்வ அழகாக தெரிந்தார், “அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ..” பாடலில் எல்லா உடையிலும் வருவார், எல்லாமே அழகு என்பதுதான் ஆச்சரியம்.


அதுவும் சுற்றிய புடவையில் தலையில் சூடிய மல்லிகையோடு அவர் வந்த காட்சியில் அட ஒரு கோயில் என்ன? உலகெல்லாம் கோயில் கட்டலாம் என தோன்றும், அப்படி ஒரு அழகு


இவருக்கு கோவில் கட்டாவிட்டால் பின் யாருக்கு கோவில் என்ற அளவிற்கு குஷ்பூ மின்னிகொண்டிருந்தார்


புகழின் உச்சியினை வெறும் 23 வயதில் எட்டிபிடித்தார் குஷ்பூ, எந்த நடிகைக்கும் அது இங்கு சாத்தியமே இல்லை, புகழின் சிகரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார், அதன் பின் அடைய எந்த உயரமுமில்லை.


தமிழகம் வந்தாயிற்று, சம்பாதித்தாயிற்று, வந்த வேலை முடிந்தது என திரும்பி செல்வதுதான் பெரும்பாலும் மும்பை நடிகைகள் வழக்கம் ஆனால் குஷ்பூவின் மனம் வேறுமாதிரியானது, எவ்வளவு உறுதியும் , நம்பிக்கையும் கொண்ட மனமோ அவ்வளவிற்கு நன்றியும் கொண்டது


தனக்கு கோயில் கட்டுமளவு சென்ற தமிழகத்தை பிரிய அவர் தயாரில்லை, இனி வாழ்வு இந்த தமிழகத்தில் தான் என முடிவே செய்தார். தமிழக ரசிகர்களும் அவர் அமெரிக்கா சென்றாலும் இழுத்து வந்து கேமரா முன் நிறுத்துவது என்பதில் கருத்தாய் இருந்தனர்


குஷ்பூ தமிழக பெண் ஆனார், தமிழக அடையாளமும் ஆனார், எங்கு சென்றாலும் தமிழ்பெண்ணாக தழைய முடிந்த சேலையில்தான் வருவார், இன்றும் அந்த பழக்கமே அவரிடம் உண்டு. தமிழகம் தனக்கான வீடு என கண்டுகொண்டார், தொழிலில் பெருவெற்றி பெற்ற அவர், அதுவும் உச்சத்தில் இருந்த அவர் வாழ்வின் அடுத்தகட்டம் செல்ல விரும்பினார். அது எல்லா பெண்களுக்கும் வரும் ஆசை, எல்லா நடிகைகளுக்கு வரும், அக்கால ஜானகி முதல் ஷோபா, ஷாலினி , ஜோதிகா வரை வந்த ஆசை புகழ் சிகரத்தின் உச்சியில் இருந்த குஷ்பூவிற்கும் வந்தது


தன் விருப்பபடி அவர் திருமணம் செய்ய அவர் தயாரான பொழுதுதான் பெரும் புயல் அவர் வாழ்வில் வீசியது. இன்னொரு நடிகை என்றால் அந்த புயலில் காணாமலே போயிருப்பார், அல்லது தற்கொலை அது இது என வாழ்வினை முடித்திருப்பார்


அதுவரை அழகு பெண்ணாக மட்டும் அறியபட்ட குஷ்பூ, மிக தைரியமான பெண்ணாக மாறியது அக்கால கட்டத்தில்தான். நிச்சயமாக அவருக்கு அது சோதனையான காலகட்டம், அடுத்த மாநிலம், அடுத்த மக்கள், ஆனால் அவருக்கு சோதனையினை கொடுத்தது மிக பெரிய இடம், அதில்தான் நம்பர் 1 நடிகையாக குஷ்பூவினால் நிலைக்க முடிகின்றது


ஆனால் குஷ்பூவின் விதி , அவரின் திருமணம் தொடர்பாக பெரிய இடத்தோடு மோத வைத்தது, அவர்கள் திரைதுறையின் மிக பெரிய அடையாளம்,


அவர்களிடம் கொஞ்சம் முறைத்தாலும் திரைவாழ்வே கேள்விகுறி, கோபுரத்தில் இருக்கும் குஷ்பூவினை நொடியில் தரைக்கு கொண்டுவரும் வல்லமை படைத்தவர்கள் அவர்கள், அங்குதான் தனிபட்ட வாழ்வின் பெரும் ஏமாற்றத்தை கண்டார்.


ஏமாற்றம்தான், வலிதான், பெரும் சோகம் தான் ஆனால் வெறும் 23 வயது பெண்ணாயினும் மிக நிதானமாக அச்சிக்கல்களை கடந்தார்


அந்த சலசலப்புகள் அவர் திரைவாழ்வினை பாதிக்காதவாறு பார்த்துகொண்டார், ஆனால் மனதிற்குள் அழுதிருக்கலாம், துடிக்க துடிக்க அழுதிருக்கலாம். மீன்கள் அழுவதும், விண்மீன்கள் தங்களுக்குள் எரிவதும் யாருக்கும் தெரியாது, அப்படி குஷ்பூ கண்ணீரை தனக்குள் புதைத்துகொண்டு திரைவாழ்வினை தொடர்ந்தார்


ஆனால் அவரின் கண்ணீர் நியாயமானதும் உண்மையானதுமாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரின் கன்ணீருக்கு காரணமானவர்கள் அப்படி பெரும் வீழ்ச்சி கண்டிருக்க மாட்டார்கள், அவ்வளவு பெரும் சிக்கலையும், அவமரியாதையினையும் கண்டிருக்கமாட்டார்கள்


குஷ்பூவினை அழவைத்தவர்கள் பின்னாளில் கதற கதற கண்ணீர் விட்டதையும், பெரும் இடத்தில் இருந்த அவர்கள் சாலையோரம் தனியாக அடிமை போல நடந்த்து சென்றதையும் தமிழகம் காணத்தான் செய்தது, குஷ்பூவின் கண்ணீரில் சில உண்மை இருக்கலாம் என உலகம் தனக்குள் முணுமுணுத்துகொண்டது.


தனிபட்ட உறவுகள் அவரை ஏமாற்றியதே தவிர, திரையுலகம் அவருக்கான சிகப்பு கம்பளத்தை அப்படியேதான் வைத்திருந்தது


அவரை அசைக்க யாராயினும் முடியவில்லை, சோகங்களை தன்னோடு புதைத்து கொண்டு நடித்துகொண்டே இருந்தார். அவருக்கான இடம் அப்படியே இருந்தது, நடிகர்கள் தான் மாறிகொண்டிருந்தார்கள். குஷ்பூ மனமும் அவர் அழகும் மாறவே இல்லை, அதுபோல தமிழகத்தை விட்டு போகவே மாட்டேன் எனும் அந்த வைராக்கியம் நாளுக்குநாள் அவர் மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது.


குஷ்பூ எனும் அழகு சூரியன் சினிமாவில் ஒளிவீசிகொண்டே இருந்தது


பூ பூக்கும்...




இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் கலாபவன் மணி...




Image may contain: 1 person, smiling, close-upமறுமலர்ச்சி படம் ஓடி கொண்டிருக்கின்றது


மம்முட்டி, தேவயாணி என எல்லோரும் நடித்திருக்கின்றார்கள், ஒரு முகம் , மிக அற்புதமாக நடிக்கின்றது. குரல்தான் ஒட்டவில்லையே தவிர முகம் மிக மிக பழகிய முகம், ரசித்த முகம்


அது கலாபவன் மணி, அவரேத்தான். அதனை தாண்டி செல்லமுடியவில்லை





எப்படிபட்ட நடிகன்? முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருக்கின்றான்

முன்பெல்லாம் இப்படத்தினை பார்த்தால் மம்முட்டியும், மனோரமாவும் தான் கண்முன் நிற்பார்கள், பலமுறை பார்த்திருக்கின்றேன்

இப்பொழுது பார்க்கும்பொழுது கலாபவன் மணியினை தவிர யாரும் கண்முன் நிற்கவில்லை, அவர் இறந்த காட்சிக்கு பின் படத்தை தொடர முடியவில்லை.

வேலுவாக இப்படத்தில் வந்த மணி, பின்னாளில் சூர்யாவின் வேலு படத்தில் வில்லனாக அமர்க்களம் செய்ததெல்லாம் காலம் கொடுத்த வாய்ப்பு.

மிக சிறந்த நடிகர்கள் எல்லாம் அல்பாயிசில் மறைவதும், சாக வேண்டியவர்கள் நீண்ட காலம் இருந்து சினிமாவினையும், அரசியலையும் கெடுப்பது இங்கு சாபக்கேடு

இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் மணி...





 


 

வெல்ல பிறந்தவன் : 04



Image may contain: 1 person


அரிஸ்டாட்டில் வரலாற்றின் பெரும் ஞானி, சாக்ரடீஸின் அறிவின் வாரிசாக வாழ்ந்துகொண்டிருந்தவர். மிக சிறந்த குடிமக்களை உருவாக்குவதே என் பணி என பள்ளி நடத்திகொண்டிருந்தார். கிரேக்கத்தில் பள்ளிகூடத்தின் பெயர் அகாடெமி


கிரேக்கத்தின் பெரும் மன்னன் அழைக்கின்றான் என்பதற்காக அவர் மாசிடோனியா வந்தார், ஆனால் அரண்மனை வாழ்வு அவருக்கு மகிழ்ச்சியாய் இல்லை, எனக்கு புறநகர் பக்கம் ஒரு தோட்டம் சூழ்ந்த அகாடெமி அமையுங்கள் என கேட்டுகொண்டு அப்பக்கம் சென்றுவிட்டார்


தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் அறிவாளி மாணவர்களை எல்லாம் கொண்டுவாருங்கள் அப்பொழுதுதான் சிறந்த அலெக்ஸாண்டரை உருவாக்க முடியும் என்றார் அரிஸ்டாட்டில், பலரும் வந்தனர்.


அதுவரை நல்ல குடிமகனையும், தத்துவ ஆசிரியர்களையும், சில மருத்துவர்களையும் (அரிஸ்டாட்டில் சிறந்த மருத்துவரும் கூட), பாடி பில்டர்களையும் உருவாக்கிய அரிஸ்டாட்டில் முதன் முதலாக மன்னனை உருவாக்க தொடங்கினார்


வீர விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், மதம், அரசியல், பூகோளம், வரலாறு என எல்லாவற்றையும் சொல்லிகொடுத்து கொண்டே இருந்தார், அலக்ஸாண்டர் கவனமாக உள்வாங்கிகொண்டே இருந்தான்


எந்த மாவீரன் ஆனாலும் அவனை உருவாக்க ஒரு ஆசான் வேன்டும், இல்லாவிட்டால் எந்த கொம்பனும் எழும்ப முடியாது. ஆசான் வெளிதெரியமாட்டார் ஆனால் அவரின் சீடர்கள் பெரும் வெற்றியில் எல்லாம் அவர் வாழ்ந்துகொண்டிருபார்


சாணக்கியன் சமுத்திர குப்தனை உருவாக்கியது போல, மிக கவனமாக அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரை உருவாக்கிகொண்டிருந்தார்


ஒருநாள் அவர் மணமிக்க புகை உருவாக்கி பூஜை செய்தார், 
அலெக்ஸாண்டர் அதில் அசந்துவிட்டான், இது இன்னும் போடுங்கள் என சொல்லும்பொழுது அரிஸ்டாட்டில் சொன்னார், "இது சாம்பிராணி, இந்தியாவில் இருந்து மட்டும்தான் கிடைக்கும், நீ இந்தியாவினை வெற்றி கொள்ளும் நாளில், அள்ளிகொள் இதனை விட்டுவிடு"


இந்தியர்கள் மதங்களிலும் உயர்ந்தவர்களா? என்றான் அலெக்ஸாண்டர்


ஆம், எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், பெரும் வீராதி வீரர்கள், உன்னால் முடிந்தால் அவர்களை வென்றுவிடு ஆனால் அது அத்துணை சுலபமில்லை, அவர்கள் கலாச்சாரமே வேறு, ராமனும் கிருஷ்ணனும் வாழ்ந்த பூமி, அதனை வெல்வது என்பதும், ஆள்வது என்பதும் சாதாரண விஷயமல்ல‌" என்றார் அரிஸ்டாட்டில்


ஒருநாளில் இந்தியாவினை வென்று காட்டுகின்றேன் என மனதிற்குள் சொல்லிகொண்டான் அலெக்ஸாண்டர்.


4 ஆண்டுகள் பயிற்சி முடிந்தது, அரிஸ்டாட்டில் தன் கடைசி போதனையினை சொல்லி அனுப்பினார்


"நாட்டு மக்களுக்கு தேவை பாதுகாப்பும், பொருளாதார நலனும். அதனை கவனமாக பார்த்துகொள்,மக்களின் அபிமானத்தை ஒரு முறை இழந்துவிட்டால் அவ்வளவுதான், அந்த அரசு நிலைக்காது


மக்களுக்காக ஆட்சி நடத்து, அவர்களுக்காக யுத்தம் செய், அவர்கள் நலனை காத்து நில், அதுவே அரசனுக்கு அழகு"


பெரும் வெகுமதி கொடுத்தான் அலெக்ஸாண்டர், மறுத்து சொன்ன அரிஸ்டாட்டில் சொன்னார், "இது வேண்டாம், நீ வெற்றுபெறும் இடமெல்லாம் என் மாணவன் என சொல் , அதுதான் எனக்கு பெருமை"


வணங்கி விடைபெற்றான் அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டிலின் முத்திரை கடிதத்துடன் பிலிப்பினை அரசவையில் சந்தித்தான்


எல்லோர் முன்னும் அக்கடிதத்தை படித்தான் பிலிப், அலெக்ஸாண்டர் பற்றி பெரும் அபிப்பிராயம் அவர் கொண்டிருந்தது அந்த சபைக்கே அறிவிக்கபட்டது


மாமன்னர்தான் பிலிப், ஆனால் தன் மகன் என்பதற்காக அவனுக்கு எந்த பொறுப்பும் கொடுக்க அவன் துணியவில்லை, மாறாக சபை பொறுப்பில் விட்டிருந்தான்


சபை விவாதித்து முடிவெடுத்தது, அரிஸ்டாட்டில் சொன்னதற்காக அரச பிரதிநிதி மற்றும் முத்திரை காப்பாளன் எனும் பதவியினை கொடுக்கலாம்


பிலிப் மறுபடி சொன்னான், "என் மகன் என்பதற்காக அல்ல, மாறாக சபையின் முடிவினை மன்னன் ஏற்கின்றேன், மாசிடோனியாவே முக்கியம்"


17 வயதில் அரசுபொறுப்பிற்கு வந்தான் அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில் சொன்ன வரிகளை தினமும் நினைத்துகொண்டான், அதே நேரம் அக்கம்பக்கம் அரசுகளையும் கவனித்துகொண்டே இருந்தான்


பிலிப்பிற்கு எப்பொழுதும் போர்களம், ஏதாவது ஒரு தொலைதூரத்தில் சண்டையில் இருந்தார், மாசிடோனியா கோட்டையினை அலெக்ஸாண்டர் பார்த்துகொண்டிருந்தார்


அதாவது "செயல் தலைவர்" ஆகியிருந்தான் அலெக்ஸாண்டர்.


அப்பொழுது மேடி என்றொரு நாட்டு அரசனுக்கு புத்தி மாறியது, அதாவது அவன் பிலிப்பின் பிரதிநிதியாக அந்நாட்டை ஆண்டான், அது பல்கேரியா பக்கம் இருக்கலாம் என்கின்றது வரலாறு, அவனும் எத்தனை நாள் சிற்றரசனாக இருப்பது, சிறகு முளைக்க வேண்டாமா?


முளைத்தது, பிலிப் பைசாண்டியரோடு மல்லுகட்டி கொண்டிருந்த பொழுது, மாசிடோனியா கோட்டைக்குள் புகுந்து கலகம் செய்வது அவன் திட்டம்


மன்னன் இல்லை, பார்மீனியோ எனும் கட்டப்பா இல்லை, அங்கு இருப்பது 17 வயது சிறுவன், முறைத்தாலே அழுதுவிடுவான், இதுதான் வாய்ப்பு மாசிடோனியாவினை பிடிப்போம் , பிலிப் அவமானபடுவான், நானே பெரும் வீரன் என உலகம் ஒப்புகொள்ளும், மாபெரும் வெற்றி என கிளம்பினான்


மாசிடோனியாவில் கலகம் ஆரம்பமாயிற்று


பிலிப்போ வெகுதூரம், ராணுவமோ குறைவு , தளபதிகளும் இல்லை என்ற நிலையில் எல்லோரும் கலங்கி நின்றபொழுதுதான் தயக்கமில்லாமல் கவசம் அணிந்து போர்கோலத்தில் வந்து நின்றான் அலெக்ஸாண்டர்


அனைவருக்கும் அதிர்ச்சி, அனுபவமில்லா பாலகன் கலவரத்தை அடக்குவதா? முடியுமா?. போர்களத்தை விட கடுமையானது கலவரபூமி. கலவரக்காரர், மக்கள் என பிரித்துபார்த்து அடிக்க எவ்வளவு நுட்பம் வேண்டும், மொட்டை மாடியில் இருந்து எவனும் ஈட்டி எறிந்தாலே முடிந்தது விஷயம் என அலறி நின்றார்கள்


அலெக்ஸாண்டர் கொஞ்சமும் அஞ்சவில்லை, குதிரைபடையினை தயார் செய்யுங்கள், கலவரக்காரருக்கு அதுதான் சரி என சொல்லிவிட்டு தன் புக்கிலேஸ் மீது ஏறி அமர்ந்தான்


மிக துல்லிய தாக்குதல், மிக அழகான திட்டமிட்ட வியூகம் கொஞ்ச நேரத்தில் கலவரத்தை கட்டுபடுத்தினான், அதோடு விடவில்லை, தீயினை கட்டுபடுத்தினாலும் அதன் அடியாள வரை புகையும் கரிகட்டை வரை அணைத்துவிடவேண்டும் என்ற பாலபாடத்தை அவன் கற்றிருந்தான்


தொடர்ந்த்து அடித்த அடியில் மேடிநாடு அலறிற்று, அந்த சிறிய மன்னனை பிடித்து கட்டி வைத்துவிட்டு தந்தை வந்து உன்னை கொல்வார் என சொல்லிவிட்டு மாசிடோனியாவிற்கு வந்தான்


மாசிடோனியா அசந்து நின்றது, 17 வயதில் இவ்வளவு வீரமா?


வாய்ப்பு அடுத்தாலும் வந்தது, இன்னொரு கும்பல் கலகம் செய்தது, மிக சுலபமாக அடக்கினான்


கலவரங்களை அடக்கி அனுபவம் பெற்று பின்னாளில் உலகினை மிரட்டியவர்கள் அலெக்ஸாண்டர் அவனுக்கு பின்னால் மாவீரன் நெப்போலியன்


தூரத்தில் இருந்த பிலிப்பிற்கு செய்தி சென்றது, பெரும் காரியத்தை அலெக்ஸாண்டர் செய்திருக்கின்றான், நாடு பாதுகாப்பாக இருக்கின்றது, நீங்கள் பைசாண்டியரை நொறுக்கிவிட்டு வாருங்கள் என்ற தகவல் அது.


பெருமையும் மகிழ்வும் கொண்டு போரிட்டான் பிலிப், மகன் சாதித்துவிட்டான் என்பதை விட தந்தைக்கு என்ன பெருமை வேண்டும்?


எல்லாம் ஒழுங்காக நடந்தது, பிலிப் அடிக்கடி போரிட செல்ல அலெக்ஸாண்டர் நாட்டை பார்த்துகொண்டிருந்தான்


கொஞ்சநாளாக பிலிப் போருக்கு செல்லவில்லை, அமைதியாக மாசிடோனியாவில் இருந்தான்


அலெக்ஸாண்டருக்கு தந்தையின் மவுனம் பிடிபடவில்லை, ஆனால் ஏதோ நடக்கின்றது என்பது மட்டும் புரிந்தது


தாயிடம் கேட்டால் தெரியும் என காண சென்றான், அவனுக்கு தாய்பாசம் அதிகம், அம்மா என்றால் உருகிவிடும் மகன் அவன்


அவள் அலெக்ஸாண்டரை பார்த்து வருத்ததுடன் சொன்னாள்


"உன் தந்தை கிளியோபாட்ரா என்பவளை திருமணம் செய்து கொள்ளபோகின்றாராம்"


அலெக்ஸாண்டருக்கு மகா வருத்தமும் கோபமும் கலந்து வந்தது, தாய்க்கும் தந்தைக்கும் ஆகாது என அவனுக்கு தெரியும், ஆனால் தாய் கலங்குவதை கண்டு மனம் உடைந்தான், என்ன செய்ய? மன்னனை எதிர்க்க முடியாதே


ஒலிம்பியஸ் அடுத்து சொன்னதில்தான் அதிர்ந்தான் அலெக்ஸாண்டர்


இது இத்தோடு முடியாது, உன் தந்தை கொண்டிருக்கும் மயக்கத்தை பார்த்தால் , அவள் வாரிசை அரசனாக்கலாம் , அந்த குடும்பம் அப்படியானது (மன்னார்குடி குடும்பம் போல இருந்திருக்குமோ) அதனால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம், எச்சரிக்கையாயிரு


தலை சுற்றியது அலெக்ஸாண்டருக்கு. அரச குடும்பம் என்றால் என்ன என்பதும், அது விஷ கிரீடம் என்பதும் அவனுக்கு புரிந்தது.


தாயே தந்தை உன்னை கொல்ல வருவார் என சொன்னபின் என்ன வாழ்க்கை இது என வெறுத்தான், உறவுகளை அவன் வெறுக்க ஆரம்பித்ததும், நண்பர்களை நம்ப தொடங்கியதும் இந்த கணத்தில்தான்


ஒலிம்பியசின் கணக்கு தப்பவில்லை, அந்த விழா நடந்தது அது மணவிழா அல்ல , கிளியோபாட்ரா எனும் "சின்னம்மாவிற்கு" நடந்த வரவேற்பு விழா.


அலெக்ஸாண்டரின் சகோதரி திருமணத்திற்காக அந்த வருங்கால "சின்னம்மாவினை" அழைத்திருந்தான் பிலிப்


அலெக்ஸாண்டர் வாழ்வில் நடந்த அவமானமும், அவன் வாழ்வில் அவன் மறக்கவே முடியாததும், வரலாற்றில் ஒரே ஒரு இடத்தில் அவன் அடங்கிபோனதும் அங்குதான் நடந்தது


கிளிய்ப்பாட்ராவிற்காக மாசிடோனிய அரண்மனை கதவு திறந்தது, அலெக்ஸாண்டரின் விதி அழுதது


தொடரும்...













 


 

மெரீனாவின் அந்த இரட்டை கல்லறை வாசலில் பதிக்க வேண்டிய வரிகள்..



Image may contain: 3 people, people smiling, textஅந்த காலத்திலே அந்த ராமசந்திரனுக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கின்றது, சிவாஜிகணேசன் பராசக்தியில் பைத்தியகாரனாக நடித்தது போல தானும் நடித்தாலென்ன எனும் அபாய ஆசை 1960களில் இவருக்கும் வந்திருக்கின்றது, "கொடுத்து வைத்தவள்" படத்தில் நடித்தும் விட்டார்


அதற்கு எதற்கு அய்யா நடிக்க வேண்டும், நடிக்காமல் கேமரா முன் நின்றால் முடிந்தது விஷயம் என யாராவது சொல்லியிருக்கலாம்


சகிக்கவில்லை, ரவீந்திர ஜடஜா லாராவின் ஆட்டத்திற்கு ஆசைபட்டது போலவும், அஸ்வின் மாலகம் மார்ஷல் இடத்திற்கு ஆசைபட்டு விளையாடியது போலவும் இருக்கின்றது.


சீமான் ஜிஎஸ்டியினை விளக்கியதை விட பெரும் கொடுமையாய் இருக்கின்றது, சிவாஜி கணேசன் எவ்வளவு பெரும் நடிகன் என்பதை இந்த ராமசந்திரன் படம் நன்றாகவே விளக்குகின்றது.


ராமசந்திரனின் இந்த நடிப்பை விட சிம்புவின் அ..அ..அ எவ்வளவோ பரவாயில்லை


அந்த நடிகை, ஈ.வி சரோஜாவினை பாராட்டியே தீரவேண்டும், 1 நிமிடம் பார்ப்பதற்கும் நம்மால் தாங்க முடியாமல் ரிமோட் எங்கே? பரவாயில்லை டிவியினை உடை என கத்த தோன்றும்பொழுது அந்த அம்மணி எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கின்றார்.


"சகிப்புதன்மைக்கான‌ காந்தி விருது" அவருக்கு வழங்கபடாமல் போனது இந்நாட்டின் நடந்த‌ பெரும் அநீதிகளில் ஒன்று


ஆனாலும் ஒரு பாடல்வரி ஆறுதல், அற்புதமான வரி. அந்த பைத்தியகார ராமசந்திரனை கண்டு நாயகி பாடுகின்றாள்


"அழகாய் உன்னை படைத்த இறைவன்
அறிவில் மட்டும் குறை வைத்துவிட்டான்"


மெரீனாவின் அந்த இரட்டை கல்லறை வாசலில் பதிக்க வேண்டிய வரிகள்..













 


 

புத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா !





download.jpgபுத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா : கமல் வாழ்த்து


கடவுளே இல்லை என சொல்லிகொண்டிருந்த குடும்பத்திலிருந்து, ஒரு மதத்திற்கு மகள் மாறியிருப்பதை கமலஹாசன் வரவேற்கின்றார் என்றால் அவரிடம் ஏதும் மாற்றம் இருக்குமோ?


மிக ஆச்சாரமான மதத்தை பின்பற்றும் குடும்பத்திலிருந்து ஒருபெண் புத்தமதம் சென்றால் ஆச்சரியபடலாம், எந்த வரைமுறைக்கும் அடங்கா குடும்பத்து பெண் ஒன்று புத்தமதம் சென்றதில் என்ன வியப்பு?





உலகில் இருக்கும் மதங்களிலே மிக மிக சுதந்திரமான மதம் அதுதான், ஒரு கட்டுபாடோ ஒரு இறுக்கமோ கிடையாது

ஏதோ அக்சரா மொட்டை அடித்து மணிமேகலை ஸ்டைலில் புத்த மதத்திற்கு சென்றது போலவும், இனி இந்தியாவில் புத்தமதம் மறுபடியும் தழைத்தோங்கும் என்பது போலவும் பத்திரிகைகள் எழுதுகின்றன‌









மிக அமைதியாகிவிட்டார் Omm Prakash , அவரது சிவந்த கண்களும் இப்பொழுது வெள்ளையாகிவிட்டது, கேட்டால் " அண்ணே போர் வந்தால் களத்தில் சந்திப்போம்" என சொல்லிவிடுகின்றார்.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் வந்த விளைவு இது என அவர் சொல்லாமலே தெரிந்தது




 

 



 

புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள்

ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது?


இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை


ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்?




அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் இயங்கங்களோடு பேசியிருப்பார்களா? என்றாவது செய்தி பார்த்தீர்களா?


இவ்வளவிற்கும் சிரிய போராளிகளை அமெரிக்காதான் இயக்கி வருகின்றது என்பது ரகசியமல்ல, ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கமாட்டார்கள், அதுதான் அரசியல்


புலிகள் மட்டும் ஈழபோராட்டத்தில் அல்ல , அதை தாண்டி ஏராளமான் இயக்கங்கள் உண்டு, எல்லா இயக்கங்களையும் அழைத்து டெல்லியில் பேசித்தான் ராஜிவ் ஒப்பந்தம் செய்தார், பின்னாளில்தான் புலிகள் மாறினர்


புலிகளை ஈழபிரதியாக வைத்தவர்கள் யார்? அவர்களின் பிரதிநிதியாக புலிகள் எப்பொழுது தேர்ந்தெடுக்கபட்டார்கள்? ஒரு நாளும் இல்லை


ஆக புலிகள்தான் தாங்கள் ஈழ ஏகபோக உரிமையாளர் என அடம்பிடித்தார்கள், மோதினார்கள், அதன் பின் எல்லோரையும் கொன்று அந்த சர்வாதிகாரி நாற்காலியில் அமர்ந்தார்கள், பின் அதுவும் போயிற்று


சரி மக்களுக்காக துப்பாக்கி தூக்கியதாக சொன்ன புலிகள், கடைசியில் கிழித்ததென்ன? லட்சகணக்கான மக்களின் வாழ்வினை அழித்துவிட்டு சென்றாயிற்று


புலிகளை ஏன் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை என சொல்பவர்கள், சிரியா ஈராக் லிபியா நிலவரங்களை பார்த்துவிட்டு வருவது நல்லது


ஒரே ஒரு போராளி தலைவன் மக்களாலும் சர்வதேச அரசுகளாலும் ஐநாவாலும் ஏற்றுகொள்ளபட்டான் என்றால் அது அராபத் மட்டுமே, காரணம் அவரின் அணுகுமுறையும், 
தன்மையும் அப்படி


ஏய் அமெரிக்கா, ஏய் ஐரொப்பா எங்கள் பாலஸ்தின உரிமையில் குறுக்கிட நீயார்? என கிளிண்டனுக்கு, ஒபாமாவிற்கும் சில தற்கொலை குண்டுகளை அவர் அனுப்பியிருந்தால் இந்நாளைய சுயாட்சி பாலஸ்தீன் இருக்கும்?


புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள், நாடு அமைத்து அதை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் தான் ஆள்வோம் என ஒற்றைகாலில் அடம்பிடிக்கும் ஒரு கூட்டத்தை எப்படி சர்வதேச சமூகம் ஏற்கும்??


புலிகளை ராஜிவ் அழைக்கவில்லை என்பவர்கள், டெல்லியில் பிரபாகரனை அழைத்து பண்ருட்டி, எம்ஜிஆர் சகிதம் பேசி, தன் குண்டுதுளைக்காத சட்டையினை அணிவித்து அனுப்பியவர் என்பதை மட்டும் தந்திரமாக மறைப்பார்கள்


டெல்லியில் பிரபாகரனோடு பேசிவிட்டுத்தான் ஜெயவர்த்தேவுடனான ஒப்பந்தத்திற்கு ராஜிவ் சென்றார் என்பதையும் அழகாக மறைப்பார்கள்



Friday, July 28, 2017

நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??

மத்திய அரசு வழங்கும் 500 படகுகள் மீணவர்களுக்கு உதவியாக இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்


தமிழகத்தில் எப்பொழுதுமே மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உண்டு , 1967 வரை அது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது


பின்பு வந்த அரசுகள் அதனை மறைத்தன, மத்திய அரசின் நலதிட்டம் ஒன்றுகூட வெளிதெரியாமல் மறைத்து, மாநில அரசே முழுக்க இம்மாநிலத்தை இயக்குவதாக விளம்பரபடுத்தபட்டது




இதற்கு திமுக, அதிமுக இரண்டுமே விதிவிலக்கு அல்ல,


மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் தெரியவிடுங்கள் என சொன்ன ஒரே அரசியல்வாதி, ஈவிகேஸ் இளங்கோவன் மட்டும்தான்,


அவரை தவிர அப்படி துணிச்சலாக சொன்ன காங்கிரஸ்காரன் இன்றுவரை யாருமில்லை


முதல் முறையாக 1967க்கு பின் தமிழக அமைச்சர் ஒருவர், மத்திய அரசின் நல திட்டங்களை தன் வாயினாலே சொல்கின்றார் என்றால், அடி அப்படி விழுந்திருக்கின்றது என பொருள்


தமிழக அமைச்சரவை அப்ரூவராகிகொண்டிருக்கின்றது, அவர்கள் நிலை அப்படி


இப்படி எல்லா மத்திய அரசு திட்டங்களையும் அமைச்சர்கள் சொல்ல, சொல்ல மக்கள் சிந்தித்தால் கேள்வி எப்படி எழும்?


நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??


இந்த கேள்வியினை நோக்கி செல்லும் கோட்டினை தமிழகத்தில் வரைய தொடங்கிவிட்டார்கள்.


அதிமுகவினரை வைத்தே தேசிய கட்சியினை வளர்க்கும் வித்தையின் தொடக்க புள்ளி இது, நல்ல அட்டகாசமான திட்டம்தான், ஆனால் தொடர்ந்து செயல்படுத்துவதில் இருக்கின்றது விஷயம்






மூன்றாம்பிறை பட க்ளைமாக்ஸ் போல் ஆகிவிடுவார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார்


இந்த அரசு மூன்றாம்பிறை "சில்க் ஸ்மிதா" கணவர் போல் ஆகிவிட்டது என கமல் ரசிகர்கள் திருப்பி கேட்டால் நாடு தாங்குமா?








இலங்கை : விந்தியா கொலை வழக்கு








37.gifஇலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம்


அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம்


ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது





அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம்

அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ இடைஞ்சல் கொடுத்தாலும் அரசு விடாபடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்திற்று

இப்பொழுது விசாரிக்கும் ஒரு நீதிபதி தமிழர், பெயர் நெடுஞ்செழியன், இவரின் பாதுகாவலர் பெயர் சந்திரசேகரா சிங்களர்

இந்நிலையில் பல மிரட்டல்களுக்கு பின்னும் நீதியாக விசாரிக்கும் அந்த தமிழ் நீதிபதியினை சுட்டிருக்கின்றார்கள், அதில் நீதிபதியினை காப்பாற்றிவிட்டு அந்த சிங்கள காவலர் உயிரிழந்திருக்கின்றார்

கவனியுங்கள்

கொல்லபட்டது தமிழ்ப்பெண், கொன்றது தமிழர்கள், விசாரிப்பதும் தமிழன், அந்த நீதிபதியினை சுட்டவன் தமிழன், அந்த நீதிபதிக்காய் செத்தவன் ஒரு சிங்களன்

இதுதான் இன்றைய இலங்கையின் நிலை

இங்கு இந்த பத்திரிகைகள் இதனை எழுதுமா என்றால் எழுதாது, இந்த ஈழ விவகார வியாபாரிகளான சீமான், வைகோ, வேல்முருகன் , திருமா எல்லாம் இதனை பற்றி பேசுவார்களா என்றால் இல்லை

எல்லாம் கடப்பாரை விழுங்கியது போல மகா அமைதி

இந்த ஈழ விவகாரம் எல்லாம் இவர்களிடம் ஒரு சிணுங்கலையும் கொடுக்காது, இதுவே தமிழ்பெண்ணை சிங்களன் கொன்றிருந்தால், தமிழ் நீதிபதியினை சிங்களன் சுட்டிருந்தால், "ஐயகோ புலிகள் இல்லாமல் பாதுகாப்பு இல்லை, என் இனம் அழிகின்றது, ஏய் மோடி , ஏய் கலைஞர், ஏய் காங்கிரஸ்.." என குட்டிகரணம் அடிப்பார்கள்.

சீமான் எல்லாம் நாதியற்ற இனமா நாம் என பல பல்டி அடிப்பார்

ஆனால் தமிழன் தமிழனால் அங்கு கொல்லபட்டால், தமிழனுக்காக சிங்களன் உயிர்விட்டால் இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.