Friday, July 28, 2017

நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??

மத்திய அரசு வழங்கும் 500 படகுகள் மீணவர்களுக்கு உதவியாக இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்


தமிழகத்தில் எப்பொழுதுமே மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உண்டு , 1967 வரை அது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது


பின்பு வந்த அரசுகள் அதனை மறைத்தன, மத்திய அரசின் நலதிட்டம் ஒன்றுகூட வெளிதெரியாமல் மறைத்து, மாநில அரசே முழுக்க இம்மாநிலத்தை இயக்குவதாக விளம்பரபடுத்தபட்டது




இதற்கு திமுக, அதிமுக இரண்டுமே விதிவிலக்கு அல்ல,


மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் தெரியவிடுங்கள் என சொன்ன ஒரே அரசியல்வாதி, ஈவிகேஸ் இளங்கோவன் மட்டும்தான்,


அவரை தவிர அப்படி துணிச்சலாக சொன்ன காங்கிரஸ்காரன் இன்றுவரை யாருமில்லை


முதல் முறையாக 1967க்கு பின் தமிழக அமைச்சர் ஒருவர், மத்திய அரசின் நல திட்டங்களை தன் வாயினாலே சொல்கின்றார் என்றால், அடி அப்படி விழுந்திருக்கின்றது என பொருள்


தமிழக அமைச்சரவை அப்ரூவராகிகொண்டிருக்கின்றது, அவர்கள் நிலை அப்படி


இப்படி எல்லா மத்திய அரசு திட்டங்களையும் அமைச்சர்கள் சொல்ல, சொல்ல மக்கள் சிந்தித்தால் கேள்வி எப்படி எழும்?


நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??


இந்த கேள்வியினை நோக்கி செல்லும் கோட்டினை தமிழகத்தில் வரைய தொடங்கிவிட்டார்கள்.


அதிமுகவினரை வைத்தே தேசிய கட்சியினை வளர்க்கும் வித்தையின் தொடக்க புள்ளி இது, நல்ல அட்டகாசமான திட்டம்தான், ஆனால் தொடர்ந்து செயல்படுத்துவதில் இருக்கின்றது விஷயம்






மூன்றாம்பிறை பட க்ளைமாக்ஸ் போல் ஆகிவிடுவார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார்


இந்த அரசு மூன்றாம்பிறை "சில்க் ஸ்மிதா" கணவர் போல் ஆகிவிட்டது என கமல் ரசிகர்கள் திருப்பி கேட்டால் நாடு தாங்குமா?








No comments:

Post a Comment