Friday, July 21, 2017

தமிழகத்தில் தனிகொடியா....

ஒரு விஷயம் விவகாரமாகின்றது, அதாகபட்டது இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உண்டு, அவற்றிற்கொரு அரசு, சின்னம் இன்னபிற அடையாளம் எல்லாம் உண்டு


ஆனால் தனிகொடி கிடையாது, அது காஷ்மீருக்கு மட்டுமே உண்டு.


மாநில அரசுக்கு தனி முத்திரை இருக்கும்பொழுது ஏன் தனிக்கொடி இருக்க கூடாது எனும் சிந்தனை கன்னடா முதல்வர் சித்தராமையாவிற்கு வந்துவிட்டது




என்ன இது? பரப்பான அக்ரஹாரா சிறையில் அரசுகொடி பறக்கும்பொழுது , சசிகலா கொடியும் பறக்கவில்லையா? அப்படி கன்னட கொடியும் பறந்தால் என சிந்துவிட்டார், கொடி உருவாக போகின்றதாம்


இதனை கண்ட நாட்டுபற்று மிக்க இயக்கமான சிவசேனைக்கு கோபம் கமலஹாசனை கண்ட அதிமுக அமைச்சர்கள் போல வந்துவிட்டது. மராட்டியத்தில் மராட்டியராகவும் மற்றபடி இந்தியராகவும் இருப்பவர்கள அவர்கள் சும்மா விடுவார்களா?


இது இந்திய ஒருமைபாட்டுக்கு ஆபத்து, கொடி கொடுத்தால் இனி தனி சட்டம் கேட்பார்கள், நாடு உடையும் என பொங்கி தள்ளுகின்றது, அத்தோடு சித்தராமையா அரசினை டிஸ்மிஸ் செய் என்றும் ஒரே சத்தம்.


ஆனால் மாநிலம் தனி கொடி அமைக்க சட்டத்தில் தடை இல்லை என்பதும் கவனிக்கதக்கது


எப்படியோ கன்னடம் விரைவில் மாநில கொடி அறிவிக்கலாம், மாநிலத்திற்கொரு சின்னமும் அடையாளமும் இருக்கும்பொழுது கொடி வருவதை தடுப்பது சுலபம் அல்ல‌


இனி இதனை கண்டுவிட்டால் என்னாகும்?


தமிழகத்தில் தனிகொடி உருவாக்குவார்கள், கலைஞர் இருந்திருந்தால் மனிதர் பின்னி எடுப்பார். இம்மாதிரி விஷயங்களில் அம்மனிதர் அபார ஞானம் கொண்டவர்


ஆனால் இருப்பது பழனிச்சாமி அல்லவா?


தமிழ்மாநில கொடி என எம்ஜிஆர் ஜெயா இருக்கும் கொடி அல்லது சசிகலா ஜெயா இருக்கும் கொடி என எதனையாவது தமிழக மானத்தை கொடியில் காயபோடாமல் இருக்கட்டும்



No comments:

Post a Comment