Saturday, July 22, 2017

யாரப்பா அந்த பிக்பாஸ் ?





போகிற போக்கினை பார்த்தால் எந்த மெரினாவில் ஜூலி "சின்னம்மா ஒழிக" என ஒலமிட்டாரோ, அதே மெரினாவில் "ஜூலி ஒழிக" எனும் குரல் கேட்கும் போலிருக்கின்றது.


இந்த தெருச்சண்டைகாரியா எங்கள் சின்னமாவினை திட்டியது என அதிமுகவினர் கேட்டால், அவர்களுக்கும் ஆச்சரியமாக ஆதரவு கிடைக்கலாம்


கடப்பாரையினை விழுங்கியது போல அலையும் சிநேகன்,





ஏதோ பரப்பன அகரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா போல கடும் அதிகாரம் செய்யும் இந்த காயத்திரி,

மணிமேகலை காவியத்தில் வரும் சதுக்கபூதம் போல அலையும் நமீதா ஆகியோரை பார்த்தாலே சகிக்கவில்லை

யாரப்பா அந்த பிக்பாஸ், இந்த சனியன்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நீயும் உன் ரசனையும், முதலில் வெளிதள்ள வேண்டியது இந்த ரசனை கெட்ட பிக்பாஸைத்தான்..

கழுத்தை பிடித்து குனிய வைத்து முதுகில் குத்தவேண்டியது அந்த பிக்பாஸைத்தான்




 

 



 

No comments:

Post a Comment