அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடித்து அலையும் சீமானை விட்டுவிட்ட தமிழக அரசு, வீரலட்சுமி, வைகோ, நெடுமாறனை எல்லாம் விட்டுவிட்ட தமிழக அரசு...
அப்பட்டமாக பிரிவினை பேசும், குதர்க்கம் விளைவிக்கும் பலரை விட்டுகொண்டிருக்கும் இந்த அரசு...
சொந்தமாநில பிரச்சினைக்காக குரலெழுப்பிய வளர்மதியினை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது?
அந்த புலி தொண்டர்கள் அல்லவா குண்டர்கள்? அவர்களை முதலில் பிடித்த்து போட்டிருக்கவேண்டாமா? வளர்மதி அவர்களை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவரா?
மாணவர்கள் மீது எந்த அரசும் கைவைக்காது, இந்த அரசுக்கு எது பற்றிய அறிவோ கவலையோ இல்லை
ஆப்பினை அசைத்த கதையில் வருவது போல கால், வால் என எல்லாம் உள்ளே விட்டு ஆப்பினை புடுங்குகின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது
ஏன் வைகோவும், சீமானும் கூடத்தான் கதிராமங்கலம் சென்றனர், கண்ட பேச்சுக்களை பேசினர், அவர்கள் மேல் எல்லாம் ஏன் சட்டம் பாயவில்லை?
வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும், அதன் பின் சிறையில் போடட்டும்
ஆனால் அதற்கு முன்பு நான் பிரபாகரனின் அண்ணன் என சொல்லும் வைகோவினையும், நான் பிரபாகரனின் தம்பி என சொல்லும் சீமானையும் இந்த அரசு என்ன செய்தது?
நக்சலைட்டுகள் இந்த தேசத்திற்கு எவ்வளவு ஆபத்தோ, புலிகளும் அதே வகை என்பதை மறுக்க முடியுமா?.
குண்டர் சட்டத்தில் மாணவி வளர்மதியை கைது செய்ததில் தவறு இல்லை –சி.வி.சண்முகம்
முன்பு ஜெயா சிறைபட்டபோது மட்டும் ஏன் தமிழகத்தை கலவரக்காடு ஆக்கினீர்கள்? அப்பொழுதும் இப்படி சொல்லியிருக்கலாமே அய்யா..
No comments:
Post a Comment