Tuesday, July 25, 2017

எல்லாம் பிக்பாஸ் செய்யும் மாயம்

இது ஆடிமாதம், இந்துக்களுக்கு பல வழிபாடுகள் நிறைந்த மாதம்


கவனித்தால் இது இந்துக்களுக்கு மட்டுமல்ல, சீனர்களுக்கும் மகா புனிதமான மாதம். சீனர்கள் என்றால் புத்தர்கள் மட்டுமல்ல அதிலும் பல பிரிவுகள் உண்டு


நமது ஊர் பிள்ளையார் போலவும், சிறு தெய்வங்கள் போலவும் மரத்தடி சீன சாமிகள் நிறைய உண்டு, சரியாக 10 மீட்டருக்கு ஒரு சீனதாடி சாமி சிலையினை காண முடியும், அதன் முன்னால் பழங்கள் பத்தி எல்லாம் படையலிட்டிருப்பார்கள்




இது அனுதினமும் காணும் காட்சி என்றாலும், ஆடி மாதம் அதிகம்


ஆடி அமாவாசை என நாம் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம் அல்லவா? அவர்களிலும் உண்டு நம்மை விட மோசம் அல்லது அதீத நம்பிக்கை


ஒரு வித காகிதத்தை எரிக்கின்றார்கள், அதுபணமாம் சொர்கததில் இருப்பவர்களுக்கு சென்று சேருமாம், அதில் கரன்சி தவிர சில்லறை காகிதமும் உண்டாம், அவ்வளவு கணக்காக எரிக்க்கின்றார்கள்


இப்படி பல காட்சிகள் ஆடிமாதத்தில் சீன சமூகத்திடமும் காண முடிகின்றது, சில இடங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன‌


இவ்வளவு நாளும் அந்த சாமிகளை எல்லாம் ராகுல் காந்தியினை அசால்ட்டாக கடந்து செல்லும் மோடி போல சென்றுகொண்டிருந்த நண்பர் Omm Prakashஇப்பொழுதெல்லாம் சசிகலா முன் அதிமுக எல்.எல்.ஏவாக குனிந்து நிற்கின்றார்


எல்லாம் பிக்பாஸ் செய்யும் மாயம்


ஆம் எல்லா சீனசாமி முன்னாலும் நின்று, சீனரை போலவே குனிந்து டிங் மங் சுங் தங் என ஜெபிக்கின்றார், யாருக்காக என்றால் ஓவியாவிற்காம்


சூ.. லி.. ஓ..வி. யா.... காய் தி ரி என சீனரோடு சீனராக நின்று அவரும் பிரார்த்திக்கின்றார்



No comments:

Post a Comment