Wednesday, July 26, 2017

மலசட்டி அரசியல் தீராது போல...

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா என்றும், அது ஒரு சாதிய அடக்குமுறை என்றும் இன்னும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


இந்த கக்கூஸ் அரசியல் ஒரு மாதிரியான அரசியல், இது விடாபிடியாக பிடித்து சொல்லிகொண்டே இருப்பது பிடிவாதம்.


இந்த வெள்ளையன் வரும் முன் எப்படி இருந்தது நிலை? சரி இந்தியாவினை விடுங்கள், மலேசிய சிங்கப்பூர் நாடுகளில் எப்படி இருந்தது?




கிராமங்களில் சிக்கல் இல்லை, நகரங்களில் அதற்கென ஒரு மண்பாத்திரம் இருந்தது, தொழிலாளர்கள் அதனை சேகரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள்


பெரும்பாலும் சீன சமுகம்தான் அதனை அக்காலத்தில் செய்தது, தமிழர்கள் அவர்கள் அளவு மோசமில்லை, சீனாவிலிருந்து ஓடிவந்த அந்த இனம் எந்த வேலையினையும் செய்ய தயாராயிற்று


தமிழர்கள் செய்ய தயங்கிய வேலையினை கூட அது செய்தது


பின்னாளில் காலம் மாற, மாற கல்வியும், மற்ற வேலைவாய்புகளில் அது கவனம் செலுத்திற்று, படிப்பும் உழைப்பும் அவர்கள் வாழ்வினை மாற்றிற்று


இன்று மாறிவிட்ட காலங்களில் சீனர்கள் எல்லா தொழிலிலும் வெற்றிகொடி நாட்டிகொண்டிருக்கின்றார்கள், ஆனால் எந்நிலையிலும் எங்கள் முன்னோர்கள் மலசட்டி சுமந்தவர்கள் என சொல்ல அவர்கள் தயங்குவதில்லை


உழைப்பும், படிப்பும் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்திற்று, சிங்கப்பூர்,ஹாங்காங் என அவர்கள் பெரும் ஆளுமை செய்கின்றார்கள்


கழிவறை வசதி வரும் முன்னால் எல்லா நாட்டிலும் அப்படி ஒரு தொழிலாளர் முறை இருந்தது, மாறிவிட்ட காலத்தில் அவர்களும் கல்வி கற்று நவீன உலகிற்கு மாறிவிட்டார்கள்


நாமோ இன்னும் கக்கூஸ், கழிவறை,மனித கழிவை மனிதன் அள்ளுவதா, சாதிய வன்மம் என்றேல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றோம்


இன்னும் சொல்லிகொண்டே இருப்போம், கற்கவும் மாட்டோம், உழைக்கவும் மாட்டோம்


மற்றநாட்டு மலம் அள்ளிய தொழிலாளர்கள் முன்னேறிய கதை எல்லாம் அறியவும் மாட்டோம், இந்தியாவில் மட்டும்தான் மனிதர்களுக்கு கழிவறை தேவை இருந்தது, மற்ற எல்லா நாட்டுக்காரனும் வவ்வால் ஜாதி என்ற வகையிலே பேசிகொண்டிருப்பது


இன்னும் 100 ஆண்டு ஆனாலும் இந்த தேசத்தில் கழிவறை , மலசட்டி அரசியல் தீராது போல..



No comments:

Post a Comment