Saturday, July 22, 2017

சத்தியமாக இது பெண்ணுரிமை என நீங்கள் நம்புங்கள்...

பண்ருட்டியில் தன் காதலர்களை தோழி அபகரித்ததால் அவரை கொன்று புதைத்தார் சகதோழி


வார்த்தை சரியாயகத்தான் எழுதியிருக்கின்றேன், காதலரை அல்ல, காதலர்களை


அதாகபட்டது இரு நர்ஸ் தோழிகள் இருந்திருக்கின்றார்கள், பின் தொழில் நிமித்தமாக‌ பிரிந்திருக்கின்றார்கள், அதில் ஒரு தோழிக்கு இரு ஆண்களுடன் காதலுக்கு மேற்பட்ட தொடர்பு இருந்திருக்கின்றது




இந்நிலையில் தோழியினை வேலை விஷயமாக பார்க்க வந்த தோழிக்கு அந்த இருவரின் அறிமுகம் கிடைத்திருக்கின்றது,


அதன் பின் நீங்கள் இளமை எனும் பூங்காற்று எனும் பாடலை கேட்டுவிட்டு வரலாம், இருமுறை கேட்க வேண்டும்


இதன் பின் அந்த முதல் தோழிக்கு இந்த வரலாற்று சம்பவம் தெரிந்தபின் கொதிக்கின்றார், தன் காதலனிடம் சண்டையிடுகின்றார், உன்னை மயக்கிய அவளை கொன்றுவிடுவோம் என்கின்றார்


இளமை ஊஞ்சலாடுகின்றது படத்தில் இரு ஹீரோயின்களையும் லவட்டிகொண்டு ஓடிய கமலஹாசனை போல இருந்த அந்த காதலனும் திடீரென சிகப்பு ரோஜாக்கள் கமலாக மாறி குத்திவிடலாம் என்கின்றான், இதற்கு அந்த இன்னொரு கள்ளமாடும் துணை


அதன் பின் எல்லோரும் பலியாடை அழைக்கின்றார்கள், அதுவும் வருகின்றது, என்ன சொல்லி அழைக்கின்றார்கள்?


வா சரக்கடிக்கலாம். ஆம், அவர்களுக்கு அடிக்கடி மதுபழக்கமும் இருந்திருக்கின்றது.


மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று பின் அவளை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு புதைத்துவிட்டார்கள்.


தோழி காணாமல் போல விவகாரத்தை காவல்துறை விசாரிக்க இவ்வளவு விவகாரம் வெளிவந்திருகின்றது


ஒரு ஆண் ஒரு பெண்ணை கொன்றால்தான் அது பெண்கொடுமை, இரு பெண்கள் குடித்துவிட்டு ஒருத்தி ஒருவனை சக காதலன் துணையோடு கொன்றிருக்கின்றாள்


சத்தியமாக இது பெண்ணுரிமை என நீங்கள் நம்பிகொள்ளவேண்டும்.


ஆக பெண்களிடம் பெண்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அரிய தத்துவத்துடன் அந்த பெண் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றாள், இன்னொருவருக்கு பிரேத பரிசோதனை நடக்கின்றது


மலருக்கு மலர் தாவும் வண்டு சில நேரங்களில் அந்த மலராலே சாகும் என்ற தத்துவத்துடன் இருவர் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார்கள்


அவர்கள் வாழ்வு இனி கொடுஞ்சிறையில் முடிந்துவிடும், சிறையில் சகல வசதிகளுடன் வாழ அவர்கள் என்ன சசிகலாவா?



No comments:

Post a Comment