Saturday, July 29, 2017

புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள்

ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது?


இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை


ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்?




அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் இயங்கங்களோடு பேசியிருப்பார்களா? என்றாவது செய்தி பார்த்தீர்களா?


இவ்வளவிற்கும் சிரிய போராளிகளை அமெரிக்காதான் இயக்கி வருகின்றது என்பது ரகசியமல்ல, ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கமாட்டார்கள், அதுதான் அரசியல்


புலிகள் மட்டும் ஈழபோராட்டத்தில் அல்ல , அதை தாண்டி ஏராளமான் இயக்கங்கள் உண்டு, எல்லா இயக்கங்களையும் அழைத்து டெல்லியில் பேசித்தான் ராஜிவ் ஒப்பந்தம் செய்தார், பின்னாளில்தான் புலிகள் மாறினர்


புலிகளை ஈழபிரதியாக வைத்தவர்கள் யார்? அவர்களின் பிரதிநிதியாக புலிகள் எப்பொழுது தேர்ந்தெடுக்கபட்டார்கள்? ஒரு நாளும் இல்லை


ஆக புலிகள்தான் தாங்கள் ஈழ ஏகபோக உரிமையாளர் என அடம்பிடித்தார்கள், மோதினார்கள், அதன் பின் எல்லோரையும் கொன்று அந்த சர்வாதிகாரி நாற்காலியில் அமர்ந்தார்கள், பின் அதுவும் போயிற்று


சரி மக்களுக்காக துப்பாக்கி தூக்கியதாக சொன்ன புலிகள், கடைசியில் கிழித்ததென்ன? லட்சகணக்கான மக்களின் வாழ்வினை அழித்துவிட்டு சென்றாயிற்று


புலிகளை ஏன் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை என சொல்பவர்கள், சிரியா ஈராக் லிபியா நிலவரங்களை பார்த்துவிட்டு வருவது நல்லது


ஒரே ஒரு போராளி தலைவன் மக்களாலும் சர்வதேச அரசுகளாலும் ஐநாவாலும் ஏற்றுகொள்ளபட்டான் என்றால் அது அராபத் மட்டுமே, காரணம் அவரின் அணுகுமுறையும், 
தன்மையும் அப்படி


ஏய் அமெரிக்கா, ஏய் ஐரொப்பா எங்கள் பாலஸ்தின உரிமையில் குறுக்கிட நீயார்? என கிளிண்டனுக்கு, ஒபாமாவிற்கும் சில தற்கொலை குண்டுகளை அவர் அனுப்பியிருந்தால் இந்நாளைய சுயாட்சி பாலஸ்தீன் இருக்கும்?


புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள், நாடு அமைத்து அதை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் தான் ஆள்வோம் என ஒற்றைகாலில் அடம்பிடிக்கும் ஒரு கூட்டத்தை எப்படி சர்வதேச சமூகம் ஏற்கும்??


புலிகளை ராஜிவ் அழைக்கவில்லை என்பவர்கள், டெல்லியில் பிரபாகரனை அழைத்து பண்ருட்டி, எம்ஜிஆர் சகிதம் பேசி, தன் குண்டுதுளைக்காத சட்டையினை அணிவித்து அனுப்பியவர் என்பதை மட்டும் தந்திரமாக மறைப்பார்கள்


டெல்லியில் பிரபாகரனோடு பேசிவிட்டுத்தான் ஜெயவர்த்தேவுடனான ஒப்பந்தத்திற்கு ராஜிவ் சென்றார் என்பதையும் அழகாக மறைப்பார்கள்



No comments:

Post a Comment