Wednesday, December 30, 2015

டிசம்பர் 16 - 31 , 2015 குறும்பதிவுகள்




இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

# இதனை பார்வதி தனியே வந்து கனவில் சொல்லியிருப்பார், இஸ்லாமியரை போல அனைத்து ஆண்களுக்கும் என்ன செய்யவேண்டும் என சிவன் விரைவில் இவருக்கு அறிவிக்கின்றாரோ (சும்மாவே சிவனுக்கு மன்மதனை பிடிக்காது :) ) அதனை இரு மடங்காக முதலில் இவரின் முன்னாள் நண்பரான நித்தியானந்தாவிற்கும் இன்னும் பல சாமியார்களுக்கும் முதலில் செய்ய வேண்டும்.

# அடிக்கடி செய்தியில் இவர் பெயர் அடிபடவேண்டும் என்பது எம்பெருமான் இவருக்கு இட்ட பணி, ஆனால் இம்முறை இவர் பெயர் மட்டும் அடிபடுவதோடு நின்றுவிடாது என்பது மட்டும் நிச்சயம்.

 






தேமுதிக தத்துவமற்ற மோசமானத் திராவிடக்கட்சி -சீமான் சாடல்.

# அப்படியானால் நாம் தமிழர் கட்சி அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை அடையாளமாக கொண்டிருப்பதால் அது தீவிரவாத கட்சி அல்லவா?

# என்னதான் புலிகொடி, ராஜராஜசோழன் என உறுமினாலும் பாண்டியருக்கு சோழன் குல எதிரிதானே, அதனைபோல‌ எல்லோரும் உங்களை போல தெலுங்கன்,திராவிடன் என பின்னோக்கி சிந்தித்தால் நாடு விளங்குமா?


# கொலைகார தீவிரவாதி பிரபாகரன் தலைவன், சந்தண கடத்தல் வீரப்பன் வழிகாட்டி என முழங்கும் இவரிடம் மட்டும் என்ன தத்துவமும் கொள்கையும் வாழ்கின்றதாம்?




எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்:வேல்முருகன்

# அது என்ன 7 தமிழர்கள்? பேரரரிவாளன் மட்டுமே இந்தியாவினை சேர்ந்தவர், இன்னும் இந்திய குடியுரிமை இருப்பதால் நளினியினையும் இந்தியர் என கருதலாம், மற்ற 5பேரும் இலங்கை குடிமக்கள் அல்லது ஈழ நாட்டு மக்கள்.

# இதில் மற்ற 2 வரை விடுவிக்க சொல்ல நமக்கு உரிமை உண்டு. மீதி 5 பேரினை விடுவிக்க இலங்கை அரசல்லவா? அவர்கள் அல்லவா சொல்லவேண்டும்? அப்படியே இந்தியா விடுவித்தாலும் அவர்களை இலங்கைக்கு அல்லவா அனுப்பமுடியும்? மாறாக இவர் வீட்டுக்கோ அல்லது அங்கிள் சைமன் வீட்டிற்கோவா அனுப்புவார்கள்?


# மும்பை குண்டுவெடிப்பிலும், எல்லை கடத்தலிலும் ஈடுபட்ட எத்தனையோ பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் உண்டு, அவர்களில் இந்திய மொழிகளை பேசுவோரும் உண்டு, அம்மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக அவர்களை எல்லாம் விடுதலை செய்யமுடியுமா?

# பெரும் கொலைதிட்டத்திற்காக அன்றி இவர்கள் தமிழகம் வந்தது எதற்காக? திருப்பதி முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ளவா?

# 2 இந்திய அப்பாவிகள் , 5 இலங்கை கொலையாளிகள் என்பதை எவ்வளவு லாவகமாக மறைத்து 7 தமிழர்கள் என மாற்றிவிட்டுவிட்டார்கள் பார்த்தீர்களா? இதுதான் புலிகளின் ஊடக பிரச்சாரம், ஒரு பொய்யினை தந்திரமாக மறைக்கும் சாதுரியம்.

# இப்படி தங்களை சமார்த்தியசாலிகளாக நினைத்துகொண்டு இல்லா பொய்களை பரப்பி இந்திய ராணுவத்தை விரட்டினர் (அல்லது இந்தியா ஒதுங்கியது). பின் தாங்கள் இந்திய ராணுவத்தை வென்றவர்கள் என அதே ஊடகம் மூலம் பலரை நம்ப செய்தது. உண்மை நிலை 2009ல் தெரியவர அவர்களின் பொய் பிரச்சாரம் பலனற்று போக முள்ளிவாய்க்காலில் முடிந்தும் போயினர்.




கலைஞரின் கூட்டணி அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: இளங்கோவன் பேட்டி

# கடந்தமுறை காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிபெற்று, மைனாரிட்டி அரசாக இருந்தபோதும் மிக சாமார்த்தியமாக காங்கிரசுக்கு அரசில் இடமளிக்காமல் அவர் 5 ஆண்டுகளாக தண்ணீர் காட்டினபோது, இதே இளங்கோவன் எப்படி எல்லாம் புலம்பினார், எவ்வளவு கடுமையாக விமர்சித்தார்.

# இன்று மறுபடியும் அதே நரி அழைக்குதென்று இவர் மகிழ்கின்றாராம். தேர்தல் வந்தால் எல்லா கட்சியினையும் அழைப்பார் கலைஞர், வென்றதும் விரட்டுவார். ஆனால் ஒரு காலமும் தனித்து நிற்கமாட்டார், அவர் பலம் அவ்வளவுதான்.


# ராஜிவ் உயிர்விட்டபொழுதே, அதிமுக கூட்டணியினை முறித்துவிட்டு தனித்து நின்றிருந்தால் காங்கிரஸ் எப்போதோ தமிழக்த்தில் மறுபடியும் அந்த அனுதாபத்தில் ஆட்சியினை பிடித்திருக்கும், தமிழகத்தில் அவர்களுக்கு கடைசி வாய்ப்பு அது, ஆனால் செய்யவில்லை, மாறாக அந்த துயரத்தை ஜெயலலிதா வோட்டாக்கினார்.

# தமிழக காங்கிரசாருக்கு அப்படிபட்ட சாணக்கிய அரசியல் செய்ய தெரியாது , தெரிந்த்தெல்லாம் கோஷ்டி பூசலும், வேஷ்டி கிழிப்பும், யாராவது கூட்டணிக்கு அழைக்கமாட்டார்களா என ஏக்கமும்தான். அதுவும் கலைஞர் 20 சீட் கொடுப்பார் அதனை பிரித்துகொள்வதற்குள் சத்தியமூர்த்திபவன், ஆனந்த பவன் கொத்துபரோட்டவாக சிதறி கிடக்கும். இவர்கள் இப்படித்தான்.




ஜெயலிதா ஸ்டிக்கரை விஜய்காந்த் கட்சியினர் கிழித்தார்களாம், பதிலுக்கு விஜய்காந்த கட்சி பேனர்களை அவர்கள் கிழித்தார்களாம், கடும் மோதல்.

கடந்த தேர்தலில் இவர்கள் அவர்களுக்காகவும், அவர்கள் இவர்களுக்காவும் வாக்கு கேட்டார்கள் என்பதுதான் மகா விசித்திரம்.

தேர்தல் என்றால் கூட்டணி வைப்பார்களாம், முடிந்தவுடன் அடித்துகொள்வார்களாம். இவர்களை நம்பி வாக்களித்த நாமெல்லாம் இதனை பார்த்துகொண்டிருக்க வேண்டுமாம்.


அன்று நாங்கள் கூட்டணியாக நல்லாட்சி தருவோம் என்றார்கள், இன்று பேனர் கிழித்து கிழித்து விளையாடுகின்றார்கள். மொத்தத்தில் மக்களுக்காக இவர்கள் கிழித்தது இந்த பேனர்களைத்தான்.

இம்மாதிரி அட்டகாசங்களை இத்தேசம் ஒழிக்கவேண்டுமானால் மாநிலங்களுக்கு சில சலுகைகளை அளித்துவிட்டு இந்த மாநில கட்சிகளை தடை செய்ய வேண்டும். அது அல்லாது இந்த திருநாட்டிற்கு விடிவு இல்லை, மாநில கட்சிகளின் அட்டகாசம் அப்படி.




பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றி: ராஜ்நாத்சிங்

# ஒப்புகொள்ளவேண்டிய விஷயம்தான், கொஞ்சநாளாக மாட்டுகறி, சிறுபான்மையினர் பாகிஸ்தான் செல்லுங்கள் போன்ற‌ மற்றமதத்தினர் மீதான கடும் வெறுப்பு பேச்சுக்களை காணவில்லை. அந்த பயங்கரவாதம் கட்டுபடுத்தபட்டிருப்பதை இப்படி பகிரங்கமாக ஒப்புகொண்ட ராஜ்நாத்சிங்கினை வாழ்த்தலாம்.





ஊழலுக்குத் தொடர்பானவர்கள் ஜெயலலிதா வீட்டிலேயே செல்வாக்கோடு வாழ்கிறார்கள் : கலைஞர் குற்றச்சாட்டு

# கோபாலபுரத்திலும், சிஐடி காலணியிலும் இருப்பவர்கள் என்ன சபர்மதி ஆசிரமத்தின் நிர்வாகிகளா? ஜெயலலிதாவோ அல்லது அவர்கள் வீட்டில் இருப்பவர்களாவது வழக்கு என்றால் நீதிமன்றம் சென்றார்கள், சிறைக்கும் சென்றார்கள். இனியும் செல்வார்களா? என்பது பற்றி நாம் பேசகூடாது.

# ஆனால் கைது செய்ய வந்தால் "அய்யோ கொலைபண்றாங்க" என கத்துவதும், பெரும் ஊழலில் சம்பந்தபட்ட தயாளுவிற்கு வாரண்ட் அனுப்பினால் அவருக்குமனநிலை சரியில்லை, மறதி, யாரை பார்த்தாலும் பிராண்டி வைக்கிறார் என பொய் சொல்லி ஓடிவிடுவதும் ஓளிந்துகொள்வதும் யார்?


# அண்ணா காலத்திலிருந்து இவர் அமைத்த எல்லா அரசுகளும் ஊழல் வழக்கிற்கு தப்பியதா? சென்னையில், வீராணத்தில்,பூச்சிமருந்தில், டெல்லியில், உரத்தில்,ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என இவர்கள் இருந்த எல்லா இடத்திலும் ஊழல் இருக்குமாம், ஆனால் கோபாலபுரத்தில், சிஐடி காலணியில் இருப்பவர்கள் மட்டும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாம்.

 




29 December 2015 ·
இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா?
சீமான் ஆவேசம்

# இப்படித்தான் விஜயகாந்த் என்றால் மட்டும் குதித்தோடி வரவேண்டும், அதுவும் அவர் நியூஸ்7 சேணலை சாடியபின் இப்படி கூட கேட்காவிட்டால் அது என்ன "வைகுண்டம் வாழ்" பரந்தாமன் விசுவாசம்?.


# பி.ஆர் பழனியப்பனுக்கு ஒரு நியாயம். ஆறுமுகசாமிக்கும், வைகுண்டராஜனுக்கும் ஒரு நியாயமா? என கேட்டிருந்தால் இவருக்கு தமிழ்நாட்டின் மீது உண்மையிலே அக்கறை இருக்கின்றது என்று பொருள். புலித்தோல் போர்த்திய போலியிடம் இதனை எல்லாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


 











கொஞ்சமும் பயிற்சி இல்லாமல் பத்திரிகை நிரூபராகிவிடுகின்றார்களோ என எண்ண தோன்றும் காலமிது, பொருத்தமான‌ கேள்விகளை யாரிடம் கேட்டால் அது பரபரப்பு செய்தியாகும் என்பதுபற்றி இவர்கள் யோசிப்பதில்லை, இளையராஜா, விஜயகாந்த் என சர்ச்சைக்கு இழுத்து ஏதோ செய்கின்றனர்.

# நியூஸ் 7 தொலைக்காட்சியிடம் தாதுமணல் பற்றியோ புதிய தலைமுறையிடம் ஏரி ஆக்கிரமிப்பு பற்றியோ அல்லது சீமானிடம் சிக்கலான கேள்விகள்,

# அதாவது "திராவிட கழகம் தமிழனை சீரழித்தது என்கின்றீர்களே, புலிகளின் ராஜிவ் கொலையினை தொடர்ந்து எழுத்த கடினமான நடிவடிக்கைகளால் புலிகளுக்காக பாதிக்கபட்டது, அந்த இயக்கத்தவர்கள்தானே? நீங்கள் அப்பொழுது பாரதிராஜாவிடம் கிளாப் அடித்துகொண்டிருந்தவர்தானே?" என ஏன் கேட்கவில்லை என தந்தி டிவியிடம் கேட்கவிட்டாலும் பரவாயில்லை சிக்கல் என விட்டுவிடலாம்.


# ஆனால் கலைஞர் விஜயகாந்திற்கு வழிமேல் விழிவைத்து காத்திருப்பது பற்றி வடிவேலிடமும், சிம்பு பீப் பாடல்பற்றி நயந்தாராவிடமோ அல்லது ஹன்சிகாவிடமோ கேட்டிருக்க வேண்டாமா? இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு இளையராஜாவிடம் கேட்டால் நிச்சயமாக அந்த நிரூபருக்கு ..... இருக்கின்றதா?












கூடங்குளம் அணுவுலை அருகே விதிமுறைகளை மீறி தாதுமணல் எடுக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது: ராமதாஸ் பேட்டி

# திடீரென தாதுமணல் கொள்ளை நினைவுக்கு வந்துவிட்டதா? அய்யாவுக்கு என்ன சிரமமோ? ஆனாலும் செயல்படும் அணுவுலைபக்கம் யாராவது செல்வார்களா? அணுவுலை அருகில் உள்ள பொருள் எதுவானாலும் வெள்ளையன் வாங்குவானா? இதனையும் மீறி அருகில் செல்கிறார்கள் என்றால் அந்த அணுவுலை செயல்படவில்லை என்றுதான் அர்த்தம்.

# ஆனாலும் பாதுகாக்கபடும் அபாய பகுதிக்குள் ஒரு தனியார் நிறுவணம் நுழையமுடியுமென்றால் இந்த நாடு எந்த லட்சணத்தில் இருக்கின்றது. இது தெரிந்துமா பிரதமர் 6ம் அணுவுலை வரை புட்டினுடன் பேசிகொண்டிருக்கின்றார்?








பாகிஸ்தான் பயணம்: மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது சிவசேனா!

# இதனையே வேறு கட்சி பிரதமர் செய்திருந்தால் பதவி விலக வேண்டும், தற்கொலை செய்யவேண்டும் என கொந்தளித்திருப்பார்கள். மோடி என்றவுடன் மன்னிப்பு மட்டும் கேட்கவேண்டுமாம். அதாவது மோடியினை விட்டால் இனி இவர்களுக்கு வேறு அடையாளமில்லை எனும் அளவிற்கு அவர்கள் நிலை வந்துவிட்டது.

# சிம்புவே மன்னிப்பு கேட்காதபொழுது பிரதமர் கேட்பாரா?

 







ஆப்கனில் இருந்து திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம், நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் குடும்ப திருமண விழாவிலும் கலந்துகொண்டார்

# முன்பெல்லாம் அறிவித்துவிட்டுத்தான் அடுத்தநாட்டிற்கு செல்வார், இப்பொழுதெல்லாம் சொல்லமால் கொள்ளாமல் திடீரென்று சென்று விடுகிறார், அரச சந்திப்பு சுற்று முடிந்து இப்பொழுது திடீரென சென்று வாழ்த்து சொல்லும் சுற்றினை தொடங்கி இருக்கின்றார்.

# மோடி இப்போது எந்த நாட்டில், யாருக்கு வாழ்த்து சொல்லிகொண்டிருப்பார் என இனி பெட்டிங் கட்டி சூதாட்டமே நடைபெற்றாலும் ஆச்சரியமில்லை, அவரின் விமானத்தில் ஒலிக்கும் பாடல் "இனிமை நிறைந்த உலகம் இருக்கு இனிமேல் உனக்கு கவலை எதற்கு ஜாலி பேர்ட்.." என்பதாக‌ இருக்கலாம்.





 

 








தமிழகத்தினை விட்டு செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை : உஷா ராஜேந்தர்

# தனியாக சென்றுவிடாதீர்கள், உங்கள் கணவரையும் மகனையும் மறக்காமல் அழைத்து செல்லுங்கள்.

# இனி சிம்புவின் தம்பி குறளரசன் மட்டும் பாக்கி, அவர் என்ன சொல்லபோகின்றாரோ அல்லது எப்படி அழபோகின்றாரோ தெரியவில்லை.



 





அருண் ஜெட்லி தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிப்பார் என்கிறார் மோடி!

# எப்படி? லேப்டாப்பிற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வாடகை கொடுத்தது ஏன்? என விளக்க குமாரசாமியிடம் செல்லும் திட்டம் இருக்கின்றதா?








எந்திரன் இரண்டாம் பாகத்தில் வசனகர்த்தா ஜெயமோகன்

# சுஜாதா எனும் புலி உயர்த்திவிட்ட ஷங்கரை, இன்னொரு சூடுபோட்ட பூனை தரைவரை கொண்டுபோகும் என விதி இருந்தால் அதனை மாற்றபோவது யா?

# பின் நவீனத்தும், காந்தி மரபு, இந்திய ஞான மரபு, பிரக்ஞை, புரிதல்,ஆத்மம் என உளறிகொண்டிருக்கும் ஒருவரை விஞ்ஞான கதைக்கு வசனம் எழுத சொன்னால் எப்படி இருக்கும்? மகாபாரத போரை டிஜிட்டல் திரையில் சொல்லபோகிறேன் என அன்னார் ரசிகர்களை ஓட ஓட விரட்டபோவது நிச்சயம்.

 







சிம்பு பீப் சொன்னதிற்கு இவ்வளவு ஆர்பாட்டமாம், ஒரு காலத்தில் உங்கள் கொள்கை என்ன‌ என்பதற்கு ஒரு பழுத்த அரசியல்வாதி ஒரு பெண்ணிடம் சொன்ன அருவெருப்பான விளக்கத்தையும் இன்னும் சில கட்சிகூட்டங்களில் வெற்றிகொண்டான் போல கேட்க சகிக்காத பேச்சுக்களை பேசிய கட்சிக்காரர்களையும் கண்ட தமிழகம் தான் இது.

# ஒருவேளை தமிழகம் திருந்திவிட்டதாக கருதினாலும், ஒருவர் ..தா என்றும், ஈன சாதி., ஈன புத்தி, ஈனத்தனம், மானமில்லாத சாதி தமிழ் அப்பனுக்கு பிறக்காதவன், ஒரு அப்பனுக்கு பிறக்காதவன் என்றெல்லாம் பேசிகொண்டிருக்கின்றாரே, அவருக்கு என்ன பதில் வைத்திருக்கின்றது தமிழக‌ சமூகம்?








புலிகள் இல்லாவிட்டால் ஈழமக்களை எல்லாம் சிங்களன் கொன்று குவித்திருப்பானாம், அங்கிளின் மங்கிகளில் ஒன்று சொரிந்து சொல்கின்றது

# இன்றும் 10 லட்சத்திற்கு குறையாத தமிழ் மக்கள் ஈழத்தில் உண்டு. எல்லோரும் என்ன சிங்களனால் அழிந்துவிட்டார்களா? இறுதி யுத்தத்தில் யாழ்பாணம்,மட்டகிளப்பில் ஒரு குண்டு விழுந்திருக்கும்?

# ஒரு மண்ணும் சிந்திக்க மாட்டார்கள், புலிகளின் ஊடகம் எது அழுகிறதோ அதனை மட்டும் நம்பிகொண்டு ஒப்பாரி வையுங்கள்.




சிம்புவிற்கு ஆதரவாக ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி

# இவர்களை காப்பாற்றிய நபர்களை முதலில் நாடுகடத்தவேண்டும். திராவிடன் தமிழனை கெடுத்தான் என சொல்லும் தமிழர்கள் எங்கே? உண்மையில் தமிழனை கெடுத்தது சினிமா. சினிமா மட்டுமே

# தமிழகம் செழிக்கவேண்டுமானால் வந்தேறி,திராவிடன் என இவர்களை சீண்டுவதை விட்டுவிட்டு சினிமாவினை அதன் போக்கிரிதனத்தை அடித்து நொறுக்குங்கள், தமிழன் வாழ்வான்.


# ஆனால் செய்யமாட்டார்கள், காரணம் அங்கிளின் மங்கிகளுக்கு திராவிட தமிழன், மத தமிழன், சாதி தமிழன், வந்தேறி தமிழன் தெரியும். ஆனால் ஆபத்தான சினிமா தமிழன் தெரியாது. கேட்டால் தமிழகத்தில் தமிழன் நடிக்கட்டும் என்பார்கள். புற்றுநோயில் என்ன தமிழன், தெலுங்கன் புற்றுநோய்? வெட்டி எறிய வேண்டாமா?

# நிச்சயம் இயக்குனர் சைமன் அங்கிள் அந்த சினிமாவினை எதிர்க்கமாட்டார் காரணம் அவர் அங்கிருந்துதான் வந்தார், பல ஈழமுதலாளிகளின் பெரும் முதலீடு தமிழக சினிமா, பின்னர் அங்கிள் எப்படி சீறுவார்? அதனால் மங்கிகளுக்கும் சாத்தியமில்லை.



மைனர் என்பதால் நிர்பாய குற்றவாளி விடுதலை : உலகம் கடும் அதிர்ச்சி

பேரணியில் கலந்துகொண்ட பதினைந்து வயது பையன் நாட்டிற்கு அபாயம் என தீர்ப்பிட்டு சவுதியில் தலை வெட்டபட்டான் : உலக நாடுகள் அதிர்ச்சி

# இந்த இரு நாடுகளும் எப்படி அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன பார்த்தீர்களா? இங்கு என்ன செய்தாலும் விடுதலை, அங்கு சும்மா சிக்கினாலும் வெட்டு.




பிரதமரின் வரும் ரஷ்ய பயணத்தில் தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகின்றது : செய்தி

# ஒரு உலையே இன்னும் உருப்படியாக வேலை செய்யவில்லை, அடிக்கடி மூடபடுகின்றது, உலகிலே வருடத்திற்கு 300 நாட்கள் பராமரிப்பும், 65 நாட்கள் சோதனையும் நடைபெறும் ஒரே உலை இதுதான். இதில் உற்பத்தி எங்கிருந்து வரும்? இரண்டாம் அணுவுலையும் உற்பத்தியினை கனவாகவே காண்கின்றது.

# இந்த கொடுமையில் 3,4ம் உலை என்றார்கள். அதுவே அபாயமானது, அதற்குள் 5 மற்றும் 6 என்கின்றார்கள். இந்திய மீதான தனது பிடியினை ரஷ்யா விடவே விடாது, ஈரான்,சிரியா வரிசையில் இனி இந்தியாவும் இருக்க்கும் இருந்து தொலையட்டும்.


# என்னவோ தெரியவில்லை புடினை இந்திய பிரதமர் சந்திக்கும் பொழுதெல்லாம் எண்ணிக்கை கூடுகின்றது, ரஷ்ய உலைகளை இவர் ஏலம் எடுப்பார் போலும், 1ல் தொடங்கியது 6ல் நிற்கின்றது, தென் தமிழகம் காப்பாற்ற படவேண்டுமென்றால் இனி இருவரும் சந்திக்காமல் இருப்பது தென் தமிழகத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் குறித்துகொள்ளுங்கள், அடுத்த சந்திப்பில் 7,8 என எண்ணிக்கை செல்லும்.

# பொருளாதாரத்தை பெருக்க சொன்னால், அணுவுலைகளை உயர்த்தும் மோடியின் சாதனை பாரீர்

 




19 December 2015 ·


ஜல்லிகட்டு போட்டி தடையினை நீக்க ஸ்டாலின் முதல் சீமான் வரை பலர் கடும் அறிக்கை போராட்டம், தடையினை மீறி நடத்தபோவதாக கடும் சீற்றம்

# எல்லாம் தேர்தல் கோளாறு, இன்னும் ஆர்வமாகி காளையினை அடக்க நான் தயார் என கிளம்பாதவரை சிக்கல் இல்லை. ஆனாலும் தலைவர்கள் மகா விவரமானவர்கள் அப்படி எல்லாம் அறிக்கைவிட்டு சிக்க மாட்டார்கள்





தி.மு.க.,விலிருந்து பிரிந்து ம.தி.மு.க., உருவானது எந்த வகை நாகரிகம் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்

# ஹிஹிஹிஹி தலைவரே, திக விருந்து நீங்கள் பிரியும் பொழுது அது எவ்வகை நாகரீகமோ, அவ்வகையான நாகரீகம்தான் மதிமுக பிரிந்ததும்.

# நீங்கள் எது செய்தாலும் அது சரி, மற்றவர்கள் செய்தால் தவறு. கட்சி கணக்கினை கேட்டார் என எம்.ஜி.ஆரை நீக்கினால் அது பெரும் நாகரீகம், அவர் வென்றதும் கட்சியினை இணைத்துவிடலாமா என கேட்டது உலகிற்கே வழிகாட்டிய நாகரீகம்.


# உங்களுக்கு அடையாளமிட்டு வளர்த்து உருகொடுத்த பெரியார் மீது சேறு பூசி வோட்டு அரசியலுக்காக வெளிவந்தது எப்படிபட்ட நன்றிமிகுந்த நாகரீகம்? அடடா.










தடையைமீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்...
-சீமான்.

# தடை விதிக்கபட்ட புலிகள் இயக்கத்திற்கு தடையினை மீறி முதலில் நன்கொடை பிரித்து அனுப்புங்கள், அப்புறம் ஜல்லிகட்டை நடத்தலாம்.


# மூடபடவில்லை என்றால் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கபடும் , என் தம்பிமார்கள் அதனை செய்வார்கள் என்றவர் சீமான், எத்தனை கடைகள் மூடபட்டன?











ஜல்லிகட்டு தடையினை நீக்க கோரி அலங்காநல்லூரில் எனது தலைமையில் போராட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

# டெல்லி நாடாளுமன்றமோ அல்லது உச்சநீதிமன்றத்தின் முன்னோ அதுவுமல்ல்லாது வனவிலங்கிற்கும் வளர்ப்புமாட்டுக்கும் வித்தியாசமில்லையா என அந்த அரச அலுவலகங்களுக்கு முன்னால் போராடுவார் என பார்த்தால் அலங்காநல்லூருக்கு வந்திருக்கின்றாராம், இனி கச்சத்தீவு பிரச்சினையில் அன்னார் பாம்பனுக்கும் செல்வார்.

# எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் பரிதாப நிலையில் அன்னார் இருக்கின்றார், விரைவில் விஷாலுடன் தெருநாய்க்காக கொடிபிடித்தாலும் அல்லது கடல் ஆமைக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சரியமில்லை, எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.









சென்னை மழைக்கு திருக்குறளில் தீர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் வைரமுத்து பேச்சு

# திருகுறளில் எல்லா அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கின்றது , வள்ளுவர் கோட்டம் கட்டி, குறளுக்கு உரை எழுதி, குறளோவியமும் படைத்து, வள்ளுவனுக்கு சிலை எழுப்பிய கலைஞரும் ஆண்ட தமிழ்நாடுதானே இது, அவர் குறள் அடிப்படையில் தீர்த்தாரா? அல்ல மாறாக பாதி பிரச்சினைக்கு அவரே காரணமானார்

# இதனை எல்லாம் இவர் கோபாலபுரத்தில் சொல்லமாட்டார், டெல்லியில் போய் முழங்குவார்







பிரதமர் நரேந்திர மோடியுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு; தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்

# மாநில முதலமைச்சருக்கே இன்னும் பதில் இல்லை, இவருக்கான பதில் விரைவில் காடுவெட்டி குருவிற்கு பிரதமரால் சொல்லபடும் என நம்புவோம்.

# இந்த 40,000 கோடி கோரிக்கை ஒருபக்கம் இருக்கட்டும், மருத்துவ கல்லூரி முறைகேடு அங்கீகாரத்தில் பல கோடிகள் சுருட்டபட்டதாக அன்னார் மீது நடக்கும் வழக்கு எப்படி போகின்றது என பிரதமரும் இவரிடம் கேட்டிருக்கமாட்டார்.








காற்றாலை மின் கொள்முதல் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை : ராமதாஸ்

# இந்த ஆட்சி மீது ஏகபட்ட முறைகேடுகளை அடுக்குவதில் முதலிடம் இவருக்குத்தான், ஆனால் ஒரு முறைகேட்டிற்காவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரா?

# அறிக்கையே விடாத டிராபிக் ராமசாமியின் வழக்கு கிரானைட் குவாரிகளை ஆட்டிவைத்திருக்கும் பொழுது, இவர் மட்டும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருக்கின்றார்.








உலகிலேயே அதிக அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதியாக இந்தியத் துணைக் கண்டம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

# நிலநடுக்கத்தால் பாதிக்கபட்டால் அணுவுலை கொலைஉலை ஆகும் என்றால் அப்படி அல்ல இந்தியா பாதிக்கபட்டாத பாதுகாப்பான பகுதி என சொல்வதும் இவர்கள்தான்.

# இன்று மிக அபாயகரமான பகுதி என ஒப்பாரி வைப்பதும் இவர்கள்தான், நிலநடுக்க ஆபத்து உள்ளபகுதியில் அணுவுலை ஏன்? என கேட்டால், உடனே அப்படி அல்ல அணுவுலையில் மட்டும் வராது என்பார்கள், நாமும் நம்பிதொலைய வேணடாம்.







இந்தியா -இலங்கை இடையே கடற்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

# பாதை போடுவது சரி, அதன் வழியே சிங்களன் தனுஷ்கோடியில் கால்வைத்தால் அங்கிள் சைமன் சும்மா இருப்பாரா? "எங்க அண்ணன என்னடா செஞ்சீங்க.." என கேட்டு ஓட ஓட அடிப்பார், அதனால் முதலில் அங்கிளிடம் அனுமதிவாங்கி கொள்ளுங்கள்







பாகிஸ்தானுடன் போர் நடத்துவது சரியானதல்ல, பேச்சு நடத்துவதே சிறந்தது : சுஷ்மா சுவராஜ்

# எதிர்கட்சியானால் நாங்கள் இரும்புகரம்,அலுமினிய கரம் கொண்டு அடக்குவோம் என காளியாத்தாவாக ஆட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் வளைகரம் கொண்டு வரவேற்று அமைதி பேச்சு, அஹிம்சை என புத்தராக மாற வேண்டும் , . அதாவது காங்கிரஸ் அரசு செய்தால் அது கோழைத்தனம், இவர்கள் செய்தால் சாணக்கியதனம்.

# பாகிஸ்தானுடன் பேசினாலே குதிக்கும் சிவசேனையினை இப்போது காணமுடியாது, ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிறது என சொல்லுங்கள் எந்த தூக்கத்திலிருந்தாலும் எழும்பி ஆடுவார்கள். அப்படி ஒரு விளையாட்டு கட்சி அது.



 









பெரும் காற்று மாசு சிக்கலில் தவிக்கும் சீனாவிற்கு, காற்றை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் கனடா நிறுவனம்

# இந்த காற்று ஒன்றுதான் விலை இல்லாமல் இருந்தது, அதனையும் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

# ஆனால் தமிழகத்தில் வீசுவதெல்லாம் அம்மா கொடுத்த காற்று என்பார்கள், அவர் ஆணையிட்டதால்தான் காற்றே வீசுமாம்.ஆனால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது :)








மம்மூட்டி, மோகன்லாலை விட மோடி தான் தலை சிறந்த நடிகர் : கேரளாவில் குஷ்பு பேச்சு

# பாம்பின் கால் பாம்பறியும், நல்ல‌ நடிப்பினை இன்னொரு நடிகை மட்டுமே விவரிக்கமுடியும்.

 








தமிழக இரு பெரும் கட்சிகளுமே, கடும் பிரயாசையில் மக்களிடம் நெருங்குகின்றன, இருவரிடமும் கொஞ்சம் அச்சம் மேலோங்கி இருப்பது உண்மை.

ஒருவர் ஊர் ஊராக நடந்தார், ஒருவர் வாட்ஸ அப்பில் வந்து உருகுகின்றார். இதெல்லாம் இவர்கள் எண்ணத்தில் உதிப்பவை அல்ல. யாரோ திட்டமிட்டு இயக்குகின்றார்கள், இயக்கட்டும்.

# இவர்கள் இப்படி தலைகீழாக நின்றாலும் ஒன்றும் ஆகபோவதில்லை, இந்த இரு கட்சிகளுக்கும் பிதாமகனான‌ அண்ணா சொன்னபடி சொல்வதென்றால்
"கறந்தபால் மடி புகாது"
"கருவாடு மீன் ஆகாது"
"இந்த கட்சிகள் இனி ஜெயிக்காது"












கோயில்களில் ஆகம விதிப்படியே அர்ச்சர்களை நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

# பெரியார் ஒரு நாயக்கன், அவர் தமிழர் துரோகி என்றெல்லாம் பேசுபவர்கள் எங்கே? அவர் தமிழருக்கு மட்டுமல்ல இந்த தேசத்தில் மதத்தால் ஒடுக்கபட்டவர்களின் குரல் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா? இந்த நவீன காலத்திலே இப்படி அட்டகாசம் செய்யும் கும்பல், அக்காலத்தில் எப்படி எல்லாம் ஆடி இருக்கும்?

# அந்த பெரியார் இப்பொழுது இருந்தால் இப்படி சொல்லுவார், "அர்ச்சகரை ஆகம விதிபடி நியமிக்கவேண்டுமென்றால், பொட்டுகட்டுதல்,குழந்தை திருமணம், தீண்டாமை , பெண் அடிமை போன்றவை எல்லாம் மதமும் ஆகமும் சொல்வதுதானே, அப்படி என்றால் இது எல்லாம் ஆகம விதிப்படி மறுபடி வரவேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றார்களா? இதுக்குத்தான் சொல்றேன் கோயிலும் வேண்டாம், அர்ச்சகரும் வேண்டாம், ஆகமும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம்"


‪#‎ பெரியாரின்‬ பேரன் திடீரென காணாமல் போய்விட்டார், அவரின் வாரிசுகள் அல்லது அவரால் வளர்க்கபட்டவர்கள் யாருக்காவது இப்படி சொல்லும் தைரியம் உண்டா? நிச்சயம் இல்லை, இங்குதான் பெரியார் காலத்திற்கும் நிலைத்து நிற்பார்.




பெண்களுக்கு அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி ஒதுக்க வேண்டும், விஜயதரணி

# சோனியா காந்தி முதல் குஷ்பூ வரை பெண்கள் ஆளும் கட்சிதான் அது, இதில் இவர் இன்னும் வேண்டும் என்பது இளங்கோவன் பதவியினை பிடுங்கும் குதர்க்கம் அன்றி வேறு என்னதாக இருக்க முடியும்?

# சட்டமன்ற தேர்தல் என்று பார்த்தாலும் 234 தொகுதியில் நிற்க கூட கட்சியில் யாருமில்லை, இதில் அதிக இடம் வேண்டும் என கோரிக்கை வேறா?













16 December 2015 ·


எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; உறவினர் கிடையாது:ஜெ., வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோ உரை

முப்பொழுதும் அருகிலிருப்பவருக்கு கூட வாட்சப்பில்தான் அவர் பதிலளித்திருக்கின்றார், நிச்சயமாக இது அவர்களுக்கானது. தமிழகத்திற்காக என நினைத்தால் அது அந்தோ பரிதாபம்.












 

வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெயலலிதா : மு.க ஸ்டாலின்

# 60 வருடமாக முரசொலியில் கலைஞர் சுட்டுகொண்டிருப்பது என்ன சமோசாவா?





 






























Monday, December 28, 2015

விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்!

அக்கால பத்திரிகைகள் உண்மைக்காக போராடின, வெள்ளையனை எதிர்த்து சுதேச மித்திரன் போன்ற பத்திரிகைகள் மிக தைரியமாக எழுதின.

சுதந்திர இந்தியாவிலும் நேரு மீதான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் உள்பட சகலமும் மிக கடுமையாக விமர்சித்தன, இந்திரா பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா பத்திரிகைகளும் மீடியாக்களும் ஆண்மையுடன் சீறின.

சமூக போராட்டத்தில் பெரியார், அண்ணா போன்றோரின் பத்திரிகைகள் மிக தீவிரமாக அதிகார உச்சங்களை சீண்டின, அவர்கள் கொஞ்சமும் அஞ்சவில்லை அதுவும் பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்தில் பெரியாரின் அந்த எழுத்துக்களுக்கு நிச்சயம் பெரும் தைரியம் வேண்டும்.


அவர்களுக்கெல்லாம் சமூக பொறுப்பு இருந்தது, நாட்டு நலன் சமூக நலனை காக்கும் பொறுப்பு இருந்தது, இன்று நடப்பது என்ன?

பத்திரிகைகளும், டீவிகளும் சினிமா குப்பைகளாலும், தேவையற்ற பொறுபற்ற செய்திகளாலும் நிறைந்து கிடக்கின்றன, போட்டிகள் பணங்களை குவித்தல் எனும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் சமூகத்திற்கு ஏதும் செய்யபோவதில்லை. மாறாக சீரழிக்கும் அபாயம் உண்டு.

ஏரி கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும், அரசியல் கொள்ளையர்களும் பத்திரிகைகளும் டிவிகளும் நடத்தும் காலமிது, அதாவது தங்களை காப்பாற்றிகொள்ள பத்திரிகை தொழிலில் இறங்கி இருக்கும் இவர்கள் உண்மைக்கு வெகுதூரம். அரசினை விமர்சிக்க மாட்டார்கள் மாறாக ரோட்டில் வருவோர் போவோரை எல்லாம் சீண்டுவார்கள்.

# ஒரு பேட்டியில் இளங்கோவன் பாண்டேயிடம் சொன்னது நிச்சயம் நியாமனானது, ஒரு வகையில் அதுவும் "த்த்தூ." தான். "பாண்டே உங்களால் தமிழக முதலமைச்சரையோ அல்லது பெரும் அதிகார வர்க்கத்தையோ இப்படி அமர வைத்து கேட்கமுடியாது, ஒரு அமைச்சரை இங்கு அழைத்து வந்து கேளுங்கள் நான் காதை அறுத்துகொள்கிறேன்

உங்கள் எல்லை இவ்வளவுதான், கோயம்பேடு கோவித்தசாமி, சும்மா கத்தி கொண்டு இருப்பவனை அழைத்து அரசியல் விமர்சனம் செய்கின்றீர்கள், யாரிடம் கேட்கவேண்டுமோ அவர்களை விட்டுவிடுவீர்கள், இது ஊடக தர்மமா?"

# இதனைத்தான் விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்.

கலைஞர் தொலைக்காட்சி





கலைஞர் டிவி தொடங்குவதற்காக வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை, மிக குறுகிய காலத்தில் வட்டியோடு கட்டினார்களாம், அவ்வளவு வருமானம் வந்ததாக நீதிமன்றத்திலே சொல்லி இருக்கின்றார்கள் கலைஞர் குடும்பத்தார். டிவி இன்னும் ஓடிகொண்டிருக்கின்றது.

வேலை வெட்டிக்கே செல்லாத அவரது பேரன்கள் நயந்தாராவினையும், எமி ஜாக்சனையும் வைத்து கொடிகணக்கில் செலவழித்து படமெடுப்பார்கள்.

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கு வருடகணக்கில் நடத்துமளவிற்கு செலவழிக்கும் உறுப்பினர்களை கொண்டது அந்த கட்சி, இன்னும் சாராய சக்கரவர்த்திகளும் உண்டு. இன்னும் தொட்ட இடமெல்லாம் கொட்டும் வசதி கொண்டது கட்சி.


இவரின் மனசாட்சி (அல்லது டெப்பாசிட் வங்கி) மாறனின் குடும்பம் இன்று ஆசியாவின் குறிபிட்ட பணக்கார குடும்பங்களில் ஒன்று, ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு கோடிகளை ஆயிரகணக்கில் அள்ளிவீசும் குடும்பம் அது.

கலாநிதி மாறனின் மனைவியின் வருமானம் மட்டும் என்ன‌? அது போதாதா நூறு தேர்தல் நடத்த?

ஏதாவது எட்டாம் அதிசயம் நடந்து இனி திமுக ஜெயித்தால் மந்திரி பதவி யாருக்கு செல்லும்? அழகிரிக்கும், கனிமொழிக்கும் மாறன் குடும்பத்தாருக்கும். இவர்களிடம் எல்லாம் கேட்கமாட்டாராம்? அப்பாவி தொண்டர்கள் கொடுக்கவில்லை என இவருக்கு கோபமாம்.

# இவை எல்லாம் இருந்தும் தொண்டர்களின் 22 கோடி நிதி ஒரு மூலைக்கும் காணாதாம். அறிவாலய கருவூல அறை அவ்வளவு பெரிதா?

# உண்மையான திமுக தொண்டன் இருந்தால் அவரின் வசனத்திலே கேட்பான், "ஆள்வதற்கு நீங்களும், மாளுதவற்கு நாங்களுமா?"

# ஏதாவது நாம் சொன்னால் "நான் என்ன மறதிநோயினால் அல்லலுறும் தயாளுவை குணப்படுத்த நன்கொடை கேட்டேனா? திருக்குவளை வீட்டையும் கோபாலபுரம் வீட்டையும் பொதுமக்களுக்கு கொடுத்தவன் நான், தமிழன் வாழ......." என நீட்டி முழக்குவார். ஒரு மண்ணாங்கட்டி பொருளும் இருக்காது.

# அண்ணா காலத்தில் தன்னோடு தேநீர் அருந்த 10 ரூபாய், கொடியேற்ற 50 ரூபாய் (இவர் சொந்த கட்சியின் கொடி ஏற்ற அடுத்தவன் பணம் கொடுக்க வேண்டும்) வடை சாப்பிட 15 ரூபாய் என அக்காலத்தில் திரட்டி 11 லட்சம் கொடுத்த சாமார்த்தியசாலி கலைஞர், ஆனால் இப்பொழுது டீ கொடுக்க லட்சம் என அறிவித்தாலும் கட்சியினரே ஏதும் கலந்துவிடும் அபாயம் உண்டு.







Monday, December 21, 2015

தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும்....

தமிழகத்தை மீட்க வந்த, அங்கிள் சைமனின் அடிப்பொடிகள் ஒன்றாவது, அதாவது தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும் ஒருவராவது, சகாயம் முதலமைச்சர் ஆவதற்கு நாம் தமிழர் கட்சி பாடுபடும் என சொன்னால் நிச்சயம் வாழ்த்தலாம், உங்களின் தமிழக நலன் மீட்பு, திராவிட கட்சிகளை ஒழிப்பது உண்மை என நம்பலாம்.

ஆனால் அங்கிள் மூச் இல்லை. சீடர்களும் அப்படியே கமுக்கம். காரணம் சகாயம் இந்திய நிர்வாக பயிற்சி பெற்றவர். முதல்வரானால் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழக நலன் காப்பார். அவரால் வளமான தமிழகம்நிச்சயம் சாத்தியம் எனினும், பிரிந்த தமிழ்நாடு சாத்தியமில்லை.


# இங்குதான் அங்கிளின் மங்கிகள் அஞ்சுகின்றன, இவர்களுக்கு தேவை தமிழகம் தனிநாடாக ஆகவேண்டிய ஒரு செய்தி பரபரப்பு. பெரும் இந்திய ராணுவத்துடனான ரத்த களறி. ஒரு பெரும் அழிவில் இவர்கள் தமிழனை இந்தியன் கொல்கின்றான், என ஒப்பாரி வைக்கும் பெரும் அரசியல். அப்படி ஈழத்தில் சகலமும் அழிந்தது போல இங்கும் சுடுகாடாக மாறும் ஒரு வினோத மனநோய்.

# அப்படி ஒரு நிலை வருவதுதான் இவர்கள் ஆசை, "அப்பொழுதும் அங்கிளிடம் பதில் இருக்கும். இங்கு ஆடு மாடு மேய்க்கும் என் உறவுகளே வாருங்கள் ஆஸ்திரேலியாவிலும், டென்மார்க்கிலும் போய் மேய்ப்போம், ஈழத்து உறவுகள் எல்லாம் அப்படித்தான் செய்கின்றன என் இனமே",

‪#‎ஐரோப்பிய‬ நிரந்தர வாழ்கைக்காக அப்பாவி பிரபாகரனை பெரும் கொலைகாரனாக்கி, அந்த நாட்டை சுடுகாடாக்கி, அதனை காட்டி வெளிநாட்டில் செட்டில் ஆனவர்களுடன் "உறவாடினால்" புத்தி இப்படித்தான் போகும்.

# சொந்த நாடு அழியவேண்டும் அதனை காட்டி வெளிநாட்டில் வாழவேண்டும், இதன் பெயர் "மண்டியிடா மானம்"

Friday, December 18, 2015

பீப் சாங்க்....

முதிர்ந்த வயது, அவர் இருக்கும் நிலை ஒரு வித தனிமை ஒரு யோக நிலை,இனி சாதிக்கவேண்டியதோ அல்லது எட்டவேண்டிய இலக்கு என எதுவுமே இல்லாத எல்லாம் கடந்த ஒரு உயர் நிலை.

அந்நிலையிலும் சென்னை வெள்ளத்தின் பாதிப்பிற்கு ஓடி ஓடி உதவுகின்றார். உதவி என்றால் வெள்ளம் வடிந்ததும் படகிலை ரோட்டில் போட்டுவிட்டு வேலைக்கு செல்லும் உதவி அல்ல. மக்களுக்கு இன்றுவரை தன்னால் என்ன செய்யமுடியுமோ அதனை ஓடி ஓடி செய்கின்றார்.

# அந்த நிலையில் அவரிடம் அல்ல யாரிடம் வலிய சென்று, சிம்புவின் பீப் சாங் பற்றி கேட்டால் அதே ****** வார்த்தையால்தான் திட்டியிருப்பார்கள். இவர்களாக அவரை சென்று கடுப்பேற்றுவார்களாம், அவர் காட்டமாக பேசினால் அது தவறாம், போராடுவார்களாம்.


# ஒருவருக்கும் உதவாமல் சென்னையி மார்கழி பஜனை பாடும் கூட்டத்திடம் சென்று இதனை கேட்டிருக்கலாம், அல்லது பின் நவீனத்துவ‌ கவிஞர்களிடம் அந்த *** வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருக்கலாம் (அவர்கள் பல அர்த்தம் வைத்திருப்பார்கள்), அதனை எல்லாம் விட்டுவிட்டு அந்நிலையில் இவரிடம் கேட்டால், சீறத்தான் செய்வார்.

# உயர்தட்டு மக்களின் இசை ஆதிக்கத்தை தமிழக சினிமாதுறையில் நொறுக்கி எறிந்தவர் அவர். இன்று ஊடகங்கள் எனும் போர்வையில் ஒழிந்திருக்கும் அந்த வன்மம் இப்படித்தான் வெளிப்படும்.

# எஸ்.ஜே சூர்யா, திரிசா இல்ல நயந்தாரா இயக்குநர், உயிர்,சிந்துசமவெளி படமெடுத்தவர் , இன்னும் பெண்ணின் அங்கங்களை அப்பட்டமாக சொல்லி நவீனத்துவ கவிதை வடிக்கும் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் (பெண்களும் உண்டு) இவர்களை எல்லாம் அன்றே இப்படி கண்டித்திருந்தால் இன்று பீப்சாங் வந்திருக்கும்?

# சில பெண்கள், (கவிஞர் தாமரை போன்ற அபூர்வங்களை தவிர) அதாவது தன்னை பெரும் அறிவுஜீவி கவிஞர்கள் என சொல்லி கொள்பவர்களின் கவிதை எனும் கண்றாவிகளை படித்துபாருங்கள், சிம்பு மிக உன்னதமாக தெரிவார், அவைகளை எல்லாம் படித்தால் 1 மாமங்கம் சோறு வாய்க்குள் செல்லாது, அவ்வளவு அருவெருப்பானவை.

உதாரணத்திற்கு ஒரு பெண் கவிஞர் எழுதியது

" அதோ அந்த மாலை சிகப்பு
மாதத்திற்கொரு முறை
நான் தூக்கி எறியும் **** * போல இருக்கின்றதே"

# எப்படி உருவகபடுத்துகின்றார் பார்த்தீர்களா? அந்த கவிஞர் பிரபல பெண் கவிஞர்தான். இதற்கெல்லாம் எந்த மாதர் சங்கமாமது கொடிபிடித்ததா? வழக்கு தொடுத்ததா?. இப்படி எவ்வளவோ காண சகிக்காத கொடுமைகள் உண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் அல்லவா கண்டிக்க வேண்டும்.

Tuesday, December 15, 2015

டிசம்பர் 1 - 15, 2015 குறும்பதிவுகள்





தெலுங்கு தேசம் என்றொரு ஆந்திர கட்சி உண்டு அது பிரிவினை வாதமா? மலையாளி மலையாளத்தில் ஆள்வதும், கன்னடன் கன்னடத்தில் ஆள்வது போல தமிழன் தமிழனை ஆளவேண்டும், இது தவறா? தவறா?, இதனை சொன்னால் நான் பிரிவினைவாதியா? : அங்கிள் சைமன் சீற்றம்

# அங்கிள், அவர்களை போல இங்கும் தமிழன் முதல்வராக வருவதை எதிர்ப்பவர் யார்? ஆனால் இந்தியாவின் எதிரியான அன்னிய நாட்டு தீவிரவாதியின் படத்தை பிடித்துகொண்டு, அவர்புகழ் பாடிகொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழராட்சி, ஈழவிடுதலைக்கு பாடுபடுதல் சிங்களனை கொல்லுதல், தமிழ் இன விடுதலை, உலகார்ந்த தமிழர் விடுதலை, அண்ணன் காட்டிய வழி புலி, என சொல்லிகொண்டிருப்பதுதான் பிரிவினைவாதியாக காட்டுகின்றது.

# இது அங்கிளுக்கு புரியவில்லையா? அல்லது சமார்த்தியமாக மறைக்கின்றாரா, மற்ற மாநிலத்தவர் எல்லாம் எல்லாம் அந்நிய நாட்டு தீவிரவாதிகள் படத்தினை வைத்துதான அரசியல் செய்கின்றார்களா?








உலகிலேயே முதல் முறையாக பாரதம் தயாரித்த ஏவுகணைக்கு சீனா கண்டனம்..., உலகெல்லாம் இனி ஏற்றுமதி , இந்தியா வல்லரசு..மோடி சர்க்கார் அபாரம் : மோடி அடிமைகள்

# கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து தயாரிக்க தொடங்கியதுதான் இந்த ஏவுகனை, அதாவது 65% ரஷ்ய பங்களிப்பு. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆறும் கலந்த பிரம்மபுத்திரா-மாஸ்கோ இணைந்த பெயரான பிரம்+மாஸ் என சுருக்கபட்டது.

# ரஷ்யாவிற்கு இதில் பெரும் கட்டுபாடு உண்டு, அவர்களை மீறி நாம் விற்கமுடியாது, இரு நாடுகளும் பயன்படுத்திகொள்ளலாம், ஆனாலும் ஏகபட்ட கட்டுபாடுகள் உண்டு. இதற்குள் பாரதம் மோடி தலமையில் பிரம்மாஸ்திரம் தயாரித்து விட்டது என கடும் கூச்சல்.


# அடுத்த நாட்டு ஆயுதங்களில் அரசியல் செய்வது இந்த நாட்டில் புதிதா என்ன?











"வைகோவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர் தெருவில் இறங்கி போராடுவது எல்லாம் வெளிவேஷம். என் அனுபவத்தில் சொல்கிறேன்". # தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்

# 22 வருடமாக தெரியாத விஷயம் இவருக்கு 2 நாளில் தெரிந்துவிட்டதாம், வை.கோவிற்குத்தான் கொள்கை இல்லை, கலைஞரிடமும் அவரின் சீமந்தபுத்திரனிடம் மட்டும் என்ன கொள்கை குன்று குடியிருக்கின்றது?

# "அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்.." என்பதன் விளக்கமாக வை.கோவினை இப்பொழுது சொல்லலாம், ஈழ புலிகள் இருக்கும் வரை வைகோவோடு இருந்தவர்கள் புலிகள் சரிந்தபின் பறந்தோடுவதுதான் பெரும் மர்மத்திற்குரிய விஷயம்.


 








கடலூரில் சாப்பாடு வழங்க ரூ.40 கோடியா? "வெள்ள நிவாரண ஊழல்" பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

# முன்பெல்லாம் கட்டுமான பணிகளில்தான் ஊழல் நடக்கும், இப்பொழுதெல்லாம் முட்டை ஊழல், வெள்ள நிவாரண சாப்பாட்டிலும் ஊழல் என தமிழகம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

# மொத்த இந்தியா அள்ளிகொடுத்த வெள்ள நிவாரணத்திலும் ஊழலா? இன்னும் ஊழல் செய்ய எது பாக்கி இருக்கின்றது.





பாலசிங்கம்...

1980களில் லண்டனிலிருந்து அவர்அவர் இயக்கத்திற்குள் வந்தார், இயக்கம் புத்துயிர் பெற்றது, எத்தனையோ இக்கட்டுகளிலிருந்தும் பழிகளிலிருந்தும் இயக்கத்தை காத்தார், நடத்த வைத்தார்.

2002ல் அவர் அமைதியானார் சர்ச்சைகள் வலுத்தன, 2006 மாவிலாறு அணைகட்டு பிரச்சினையினை கூட புலிகளால் சமாளிக்கமுடியவில்லை. இறுதிபோர் இதில்தான் தொடங்கியது, பெரும் அழிவோடு புலிகளும் வீழ்ந்தனர், தொடக்கத்திலே சமாளித்திருக்கவேண்டிய பிரச்சினை இது, அன்னார் விலகி இருந்தார், போர் வெடித்தது.

பாலசிங்கம் இருக்கும் வரை பிரபாகரனின் நிழலை கூட தொடமுடியாதவர்கள், பாலசிங்கம் மறைந்ததும் ஓடிவந்து மண்டையில் போட்டனர்.


இதுதான் பாலசிங்கம், புலிகளின் ஒரே பெரும்பலம். அன்னார் இல்லை என்றால் புலிகள் இயக்கம் எப்போது காற்றோடு கலந்திருக்கும்.

# ஒரு பெரும் ராஜதந்திரி, புலிகளின் சாணக்கியன் அவர். புலிகளின் பெருந்தவறு எது என்றால் கே.பத்மநாபன்,கிட்டு,பிரபாகரன்,பாலசிங்கம் போன்றோரின் அடுத்த இடத்தினை இறுதிவரை நிரப்பாமல் இருந்தது, (காரணம் கோஷ்டிமோதல் என்பது ரகசியமல்ல) அதற்கான திறமையாளர்களை உருவாக்காமல் பிரபாகரனை மட்டும் உயர்த்தி பிடித்துகொண்டிருந்தது, அதுதான் புலிகள் வீழ்ச்சி.

# பாலசிங்கம் வாரிசாக, கே.பி வாரிசாக சிலரை உருவாக்கி இருந்தால் புலிகள் இயக்கத்தை தொட்டுபார்த்திருக்கமுடியும்? இருவரின் சர்வதேச தொடர்பும், ராஜதந்திரமும் அப்படியானது. பாலசிங்கத்தின் வீழ்ச்சியே புலிகளின் வீழ்ச்சி.

# இப்படி 30 வருடமாக உடன் இருந்த பெரும் பிம்பங்களுக்கு இவர்களுக்கு எல்லாம் உருப்படியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்காத பிரபாகரன், 3 நிமிடம் சந்ததித்த சீமானிடம் மட்டும் பெரும் போராட்ட பொறுப்பினை ஒப்படைத்தாராம்.

# இங்குதான் தனித்து நிற்கின்றார் வாய்ப்புலி அங்கிள் சீமான்.

# ஆனால் இதனை எல்லாம் பற்றி பேச கூடாது, கலைஞர் ஓழிக, சோனியா ஓழிக அவ்வளவுதான்.

Monday, November 30, 2015

நவம்பர் 1 - 30 , 2015 குறும்பதிவுகள்





பாதுகாப்பான சுற்றுலா மையங்கள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் :ரஷ்யா நடவடிக்கை

# நல்லது, இந்த பாதுகாப்பில்லாத நாட்டில்தான் உங்களது ஆபத்தான கூடங்குள அணுவுலையினை நிர்மானித்திருக்கின்றீர்கள், மனசாட்சியினை தொட்டு சொல்லுங்கள், இந்த பாதுகாப்பில்லாத நாட்டில் இது மட்டும் பாதுகாப்பானதா? அதையும் பூட்டிவிட்டு செல்லுங்கள், உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.






புலிகளை அழிக்க மொசாத் இலங்கைக்கு கொடுத்த உதவிகள் ஏராளம்: பரபரப்பான தகவல்கள்

# மொசாதாவது மண்ணாங்கட்டியாவது, புலிகளை ஒழித்தது சோனியா மற்றும் கலைஞர் அவ்வளவுதான், இதனை தாண்டி எவனாவது தமிழகத்தில் மொசாத் மற்றும் சி.ஐ.ஏ என கிளம்பினால் அண்ணனின் அடிப்பொடிகள் சும்மா விடமாட்டார்கள், பின்னர் எப்படித்தான் இங்கு அரசியல் செய்வது?









‘அரசியல்சாசனம் பற்றி பேச யாருக்கு தகுதி இருக்கிறது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர். இவர்களுக்கு அரசியல்சாசனம் பற்றி பேச தகுதி இல்லை. ஆனால் இதிகாசங்களிலேயே சான்றுகள் இருப்பதுடன், பாரம்பரியமும் இருப்பதால் அரசியல்சாசனம் பற்றி பேச பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே தகுதி உள்ளது’’ : இல.கணேசன்

# என்ன இதிகாச சான்று? ராமன் மனைவியினை தீயில் தள்ளியதும், பாஞ்சாலி சேலை உருவபட்டதுமா? இது போன்ற சட்டங்களை தருவதுதான் இவர்கள் ராமராட்சி அமைக்கும் லட்சணமா?

# இப்படியே சொல்லிகொண்டிருங்கள், இந்தியா இனி பாதுகாப்பில்லை என ரஷ்யா அறிவித்திருப்பது போல விரைவில் உலகமே அறிவித்துவிடும் அபாயம் உண்டு, இப்படி ரஷ்யா அறிவித்தபின்னும் அதனை மறுத்துபேசாமல் பிரான்சில் புடினை பார்த்து பிரதமர் கை கொடுக்கின்றார் அல்லவா?, இங்கு நிற்கின்றது இந்திய அரசின் மானம்.







காட்டுல இருந்த வீரப்பன் கூட ஒரு மனைவியைதான்டா கட்டுனான் ஆனா நாட்டுல இருந்த இந்த கருணாநிதி மூனு பொண்டாட்டி கட்டுனார் இதுல யார் தமிழன்?
எது தமிழனின் மாண்பு?

# அந்த கட்சியின் மாபெரும் தலைவர் திலகம், சமீபத்திய திலகம் வாழ்வில் நடந்தது என்ன? என்பது பற்றியெல்லாம் அண்ணன் பேசமாட்டார் என்பது நமக்கு தெரியும். பிரபாகரனை விட புலிகளின் பெரும் தளபதியான சதாசிவம் கிருஷ்ணகுமார் எனும் கிட்டு வாழ்வில் நடந்தது என்ன என்றெல்லாம் அண்ணன் சொல்வாரா? ம்ஹூம்.


# இவர்களை எல்லாம் விடுங்கள், பண்டைய தமிழ்மன்னர்கள் எல்லோரும் ஒரு மனைவியோடு வாழ்ந்தவர்களா?, அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகபெருமானுக்கே தாரம் 2 என்பது செந்தமிழருக்கு மறந்துவிட்டது.

# வீரப்பன் எனும் கொள்ளையனை கலைஞரோடு மனைவி விஷயத்தில் ஒப்பீடும் இந்த வாய்புலிக்கு, திருமணமே செய்யாமல் நாட்டிற்காய் வாழ்ந்த காமராஜரை மறந்துவிட்டது அல்லவா? இதுதான் தமிழ்தேசியம்.











திமுக, அதிமுகவை தண்டிக்க என்னை விட்டால் வேறு ஆள் இல்லை: ராமதாஸ்

# மாறி மாறி அவர்களோடு கூட்டணி வைத்து அவர்களை இவர் "தண்டித்த" வரலாறு உலகறிந்தது. ஆனாலும் இவரின் அட்டகாசத்தை தடுக்க அவர்கள் இருவரையும் விட்டாலும் யாருமில்லை :)





இந்திய ஜவான்களை கைது செய்த நேபாள போலீஸ்

# ராமேஸ்வர மீணவனை விட, எல்லையில் நிற்கும் இந்திய ராணுவ வீரரின் நிலை மகா பரிதாபமானது போல சாதாரண நேபாள போலீஸ் கைதுசெய்திருக்கின்றது.

# பிரதமரோ இந்தியபுகழ் பாரினில் ஓங்குகிறது என தனியாக சொல்லிகொண்டிருக்கின்றார், வங்கதேசமும் பூடானும் மாலத்தீவும் மட்டும்தான் இன்னும் அமைதி, சொல்லமுடியாது இந்திய அமைச்சர்களை கைதுசெய்யும் திட்டம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கலாம்.







சோனியாகாந்தி, மன்மோகன் சிங்குக்கு விருந்து அளித்த நரேந்திர மோடி

# அரசியலில் எதிர் துருவங்கள் என்றாலும், நாகரீகமாக சந்தித்து கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு இப்படி திட்டங்களை பரிமாறிகொள்வது எவ்வளவு நல்ல அறிகுறி. எதிர்கட்சியானாலும் மன்மோகன் சிங்கின் திறமையின் மீது மோடிக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு என்பதில் மோடி உயர்ந்து நிற்கின்றார்.

# தமிழகத்தில் இது சாத்தியம் என கருதுகின்றீர்கள்? ப.சிதம்பரம் போன்று மணி சங்கர் அய்யர் போன்று வெளிநாட்டில் படிப்பில் வெற்றிகொடி நாட்டிய பெரும் மூளைகள் உண்டு. ஆனால் பயன்படுத்திகொள்வார்களா? என்றால் இல்லை. இதுதான் தமிழ்நாடு இதன் சாபம் அப்படியானது, இதில் தனிதமிழ்நாடு முழக்கம் வேறு









பல அவமானங்களை கண்ட அம்பேத்கார் கூட இந்த நாட்டை விட்டு போவதாக சொல்லவில்லை : ராஜ்நாத்சிங்

# அதாவது அந்த மாமனிதனை சாதியின் பெயரால் அந்த மதவாதிகள் சித்திரவதை செய்திருக்கின்றார்கள் என ஒப்புகொள்கிறார், இன்னும் என்னவெல்லாம் ஒப்புகொள்ளபோகின்றாரோ?

# அந்நாளில் ஓரளவு நம்பிக்கையாக நேரு பிரதமராக இருந்தார் அதனால் அம்பேத்கார் மதம் மட்டும் மாறினார், சாவர்க்கர் பிரதமராக‌ இருந்திருந்தால் அவரிடம் சட்டம் எழுதும் பணியினை கொடுக்கபட்டிருக்குமா? இம்மாதிரி அரசு அன்று இருந்தால் தானாக கண்டம் விட்டு கண்டம் ஓடியிருப்பார் அம்பேத்கார்.








நிதிஷ்குமார் அரசின் சிறப்பு வாய்ந்த முடிவு; பிகார் வழியைத் ஜெயலலிதா பின்பற்றுவாரா? மு.க.ஸ்டாலின்

# எந்த சிறப்பான முடிவு? லாலு வழிவிட்டு தன் மகனை துணைமுதல்வர் ஆக்கியதா?, இதனை கேட்க வேண்டிய இடம் கோபாலபுரமா? அல்லது போயஸ் கார்டனா? , மனிதர் மிகவும் குழம்பித்தான் போயிருக்கின்றார்.




 











அரசியலுக்கு வந்தால் சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை உணர்ந்தவன் நான்: கலைஞர்

# இவரிடம் இருப்பது சகிப்புதன்மை அல்ல, இது அதையும் தாண்டி ஒரு வகையான அரசியல் கொள்கை நிலை, இத்தனை ஆயிரம் விமர்சனங்களில் ஒன்று கூட இவரின் மனதினை பாதித்ததா? என்றால் நிச்சயம் இல்லை, எப்படி என்றால் பராசக்தி காலத்திலிருந்தே அவர் கொண்ட கொள்கை அப்படி, அதில் உறுதியும் அப்படி.என்ன கொள்கை? இதேதான்

# "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே,
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே", இந்த கொள்கையில்தான் எல்லா சகிப்புதன்மையும் அவரிடம் நிரந்தரமாக குடிகொண்டிருக்கின்றது.










மாவீரர் நாள் என்றால், நினைவுக்கு வருவது அதுதான். 1990களுக்கு பின் 19 மாவீரர் உரைகளை வாசித்தார் அவர், கடைசி 9 உரைகளில் அவர் சொன்னது, "இந்தியாவிற்கு நாம் நேசகரம் நீட்டுகின்றோம், எமது மீதான தடையினை நீக்குங்கள்"

ஆனால் அவர்கள் மீது இந்தியாவில் தடை எதற்கு வந்ததோ, அந்த காரணத்தையோ அந்த சம்பவத்தையோ ஒரு மாவீரர் உரையில் கூட அவர் சொன்னதுமில்லை, அதனை கண்டுகொள்ளவுமில்லை.

ஆனால் அவர் நீட்டும் நேசகரத்தினை இந்தியா பற்றிகொள்ளவில்லையாம், இது என்ன மாதிரி கோரிக்கை என்பது கடைசிவரை புரியவில்லை.


# எமது மீதான தடை விரைவில் நீங்கும் அதற்குத்தான் நெடுமாறனும், வைகோவும் (சீமானை பற்றி அவர் எந்த இடத்திலும் சொன்னதுமில்லை, அவரை பற்றி பிரபாகரனுக்கு சிந்தனையே இல்லை) இந்தியாவில் போராடிகொண்டிருக்கின்றார்கள் என அவர் சீரியசாக சொன்னபொழுதே இவர்களின் முடிவு தெரிந்துவிட்டது.











ஆயுத போராட்டத்தை தொடங்கிய குட்டிமணி முதல், அராபத்திடம் பயிற்சி பெற்ற திறன்மிக்க போராளிகள், இந்தியா ஒருகாலமும் தனி ஈழத்திற்கு உதவாது என முதன்முதலில் அறுதியிட்டு கூறிய உமா மகேஸ்வரன், மலையக மக்களையும் தமிழபேசும் முஸ்லீம்களையும் தவிர்த்த தமிழர் தீர்வு சாத்தியமில்லை என்ற உண்மையினை சொன்ன பத்மநாபா, சமீபத்தில் அனாதையாக மரித்த பெரும் அனுபவசாலி டேவிட் ஐயா வரை என எத்தனையோ மாவீரர்கள் பங்கெடுத்த போராட்டம் அது.

அந்தோ பரிதாபம் அவர்களை எல்லாம் நினைத்துபார்க்க கூட யாருமில்லை, இவர்களை பொறுத்தவரை மாவீரர்கள் யார்?


பிரபாகரன் சொன்னபடி கேட்டு செத்தவர்கள் எல்லாம் மாவீரர்கள், அப்படி செய்யாதவர்கள் எல்லாம் துரோகிகள். இவர்கள் அஞ்சலி செலுத்துவது இப்படித்தான்.

# இப்படி செத்துகொண்டே இருந்தால் முடிவு வருமா? என கேள்வி கூட கேட்காமல் செத்த அந்த பரிதாபத்திற்குரியவர்களை நினைத்தாலே கண்களில் நீர் பொங்கும்.







ஜெயலலிதா, காந்திய மக்கள் இயக்கத்தின் பரிந்துரையை
ஏற்று நடப்பது நல்லது: தமிழருவி

# கலைஞர் மீது தொடுக்கபட்டிருக்கும் அவதூறு வழக்கினை தமிழருவி மணியன் மனதில் கொண்டால் இயக்கத்திற்கு நல்லது.








செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

# ஆனால் தாழ்த்தபட்ட சாதிக்காரன் கொல்லபட்டாலும் அன்னார் வாய் திறக்கமாட்டார், இப்படி யாராவது தாக்கபட்டால் ஓடிவந்து கண்டிப்பார்.



உலக நாடுகள் இந்தியாவை புகழ்வதற்கு நான் காரணமல்ல என சிங்கப்பூரில், இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.

# அப்படி யார் புகழ்ந்தார்கள்?, இலங்கையும் நேபாளமும் கூட இந்தியாவினை .... என சொல்லிவிட்டு ஆட்டம் போடும் நேரமிது, எப்படி எல்லாம் பொய்மூட்டை அவிழ்த்துவிடுகின்றார் பார்த்தீர்களா? இதில் புகழுக்கு நான் காரணமில்லை என தன்னடக்கம் வேறாம். அம்பானியும், அதானியும் இவரை புகழ்ந்தால் அது மொத்த இந்தியாவினையும் புகழ்ந்ததாக இவர் நினைத்துகொள்கின்றார்.

# ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை, ஒருவேளை வருங்காலத்தில் இந்தியபுகழ் பாரினில் ஓங்கினால் அதற்கு நிச்சயம் இவர் காரணமாக இருக்கமாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.







வெள்ளத்திற்கு மேல் வெள்ளம் தமிழகத்தை உலுக்கிகொண்டிருக்கின்றது, மாறி மாறி அரசியல்வாதிகள் குறைசொல்லிகொண்டிருக்கின்றார்கள், சிலர் ஒரு படி மேலே போய் ரமணனை வாரி இறைக்கின்றார்கள். இத்தனை அரசியல்வாதி கூட்டத்தில் வருங்கால‌ வெள்ளத்தை தடுக்கவோ அல்லது நாங்கள் இப்படி செய்து வெள்ளத்தை தடுப்போம் என்றோ, இந்த ஏற்பாடுகளை செய்வோம் என்றோ சொல்வதற்கு உருப்படியாக ஒரு தலைவனையும் காணவில்லை.

தமிழனை தமிழன் ஆண்டால் சிக்கல் தீருமாம், எப்படி? மழை வராமலே சென்றுவிடுமோ? இந்த களபேரத்திலும் தெலுங்கன் விஷாலின் படபிடிப்பினை தமிழர்கள் தடுத்து விரட்டிவிட்டார்களாம், அண்ணனின் அடிபொடிகளுக்கு ஆர்வம் தாளவில்லை.


# மூழ்கடித்திருப்பது வெள்ளம், நிவாரணமோ அல்லது மீட்புபணி செய்யவேண்டியது ஆட்சியாளர்கள். அவர்களில் ஒரு ஆட்சியாளனை, அமைச்சரை சுற்றி நின்று கேள்வி கேட்க இவர்கள் தயரா? அவர்களை எல்லாம் விட்டுவிட்டு விசாலை விரட்டினார்களாம், எவ்வளவு அறிவார்ந்த செயல்.

# டீக்கடையில் புலம்பும் கட்சிக்காரர்களை, அல்லது அர்த்தமே இல்லாமல் புலம்பும் சில கவிஞர்களை எல்லாம் நேரலை என வைத்து கருத்து வழங்கும் ஒரு டிவியாவது, சென்னை மேயரையோ அல்லது வெள்ள வடிகால் வாரிய அதிகாரினையோ அல்லது அமைச்சரையோ நேரலை பேட்டி எடுக்க தயரா?

# இவ்வளவு நடந்திருக்கின்றது, இன்னும் 6 மாதத்தில் தேர்தல் அறிக்கையில் இப்படி சொல்வார்கள் பாருங்கள். "தெருவிற்கொரு படகு நிறுத்தி வைப்போம், வெள்ளம் வந்தால் ஓடிவிடலாம். இன்னும் வீட்டிற்கொரு ரப்பர் படகு வழங்கும் திட்டமும் உண்டு", நிச்சயம் சொல்வார்கள். காரணம் இவர்களுக்கு தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.

# இதற்கு "படகு தந்த பரந்தாமனே / பரோபகாரியே", "வெள்ளத்தை வென்ற வெண்மனமே", "நீந்த வைத்த நீலாம்பரனே" என்றெல்லாம் பேனர்கள் வைக்கும் அடிப்பொடிகள் இருக்கும்வரை இந்த வெள்ளமென்ன? எந்த சக்தியாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது.




கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் மழை வெள்ளம் புகுந்தது : செய்தி

# சும்மாவே அந்த மிக சிறிய வீடு மட்டுமே எனது சொத்து, அதனையும் எனது காலத்திற்கு பின்னால் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துவிட்டேன் என புலம்பி தள்ளுவார், இனி பாருங்கள் "மக்கள் துயர் அனுபவத்த மகோன்னத தலைவர்" என பட்டத்தோடு மிக விரைவில் கிளம்புவார்.

# கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் அரசியலாக‌ மாற்றும் தன்மை அவருக்கு உண்டு, மிக விரைவில் அதிரடி உருக்கமான கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.







வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? மு.க.ஸ்டாலின் கேள்வி

# இது என்ன கேள்வி?, கடந்த காலத்தில் திமுக அரசில் ஒதுக்கபட்ட நிதிகள் எல்லாம் என்ன ஆனதோ அவ்வழியே இதுவும் ஏதோ ஆகி இருக்கும். இது கூட தெரியாமல் முதலமைச்சர் ஆசை வேறு, இதற்குத்தான் தலைவர் இவரை இப்படியே வைத்திருக்கின்றார், ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை.

# 1970களில் கூவம் நதி சீரமைக்க ஒதுக்கபட்ட நிதி என்னவாயிற்று, சென்னையினை சிங்கார சென்னை ஆக்கும் திட்டம் என்ன ஆயிற்று என எவ்வளவோ கேள்விகளுக்கு பதில்சொல்வோர் யார்?







"இலங்கை அரசாங்கத்திற்கு பல கடும் அழுத்தங்களை கொடுத்து, தமிழருக்கான உரிமைகளை பெறும் உரிய நடவடிக்கைகளை எடுக்கச் செய்வோம், ஒபாமா அதில் உறுதியாக இருக்கின்றார்" என , ஐ.நாவிற்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவார் யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்

# இலங்கை போர் குற்றம் புரியவில்லை என சொல்வதும் இவர்கள்தான், இன்று அழுத்தம் கொடுக்கபோகின்றோம் என கிளம்புவதும் இவர்கள்தான்.

# ஆனால் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழர்களை திரட்டி விரைவில் ஈழம் மீட்கபோகும் இந்த நேரத்தில் அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவது தமிழ்பிள்ளைகளின் விடுதலையினை தடுக்கும் சர்வதேச சதிவேலை, எனினும் அண்ணனின் பேச்சிலே அமெரிக்கா ஆசியாவினை விட்டே ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை.


 








விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு இலங்கையில் தடை நீக்கம்!

# இனி எந்த தமிழ் உணர்வு அமைப்புக்களின் உணர்வாளர்களும் இலங்கை செல்லலாம், தமிழக முட்டு சந்தில் முழங்குபவர்கள் யாராவது கொழும்பு, கண்டி, காலி சென்று "டேய் ராஜபக்சே, ஏய் கோத்தபாயா , ஏய் புத்த பிக்கு" என முழங்க தயரா? செய்யமாட்டார்கள்.

# அவ்வளவு ஏன்? வன்னிபக்கம் சென்று அம்மக்களின் அவல வாழ்வில் அரைநாள் பங்கெடுக்க தயரா?


# இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காங்கிரஸ்,கலைஞர் என பழகிவிட்டார்கள், மாறவும் மாட்டார்கள். காரணம் இவர்களின் அரசியல் ஈழமக்களின் துயரை துடைப்பதே அல்ல மாறாக இப்படி இவர்களை தூற்றி தமிழகத்தில் அரசியல் செய்வது, அவ்வளவுதான், பின்னர் எப்படி இலங்கை செல்வார்கள்.













கர்நாடக கவர்னரின் 'மசாஜ்' செலவு ரூ.1.72 லட்சம்

"ஆட்டுக்கு தாடியும்
நாட்டுக்கு கவர்ணரும்
தேவையா தம்பி..."


என அண்ணா சொன்னதுதான் இந்திய மாகாண கவர்ணர்களுக்கு காலத்திற்கும் பொருந்தும், இந்தியாவில் உள்ள தண்ட சம்பளங்களில் முதன்மையானது ஆளுநர் பதவியும் அதன் சம்பளமும்.













மலேசிய மக்கள் நேதாஜி காலத்தில் ஆற்றிய இந்திய சுதந்திரபோரட்ட உதவிகளுக்கு மோடி மலேசியாவில் நன்றி தெரிவித்தார், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி மலேசிய இந்தியர்களை மகிழ்வித்தார்.

# தமிழக தமிழர்கள் எல்லாம் சுதந்திரபோராட்ட காலத்தில் தூங்கிகொண்டிருந்தார்கள் என்றும், திருக்குறள் உலகிலே கோலாலம்பூரில் மட்டும்தான் படிக்கபடுகின்றது என நம்பி தொலைவோம்.

# சென்னை வரும்பொழுது ஒரு வார்த்தை தமிழரை பற்றி பேசுவதில்லை, அடுத்தநாட்டிற்கு சென்றால் மட்டும் பக்கம் பக்கமாக தமிழர் பெருமை பேசுவது என்பது மோடி பாணி. ஆனால் இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது. உச்சமாக சொன்னார் பாருங்கள், மதமும் அரசியலும் கலக்க கூடாதாம், சொல்வது யார் என தெரிவதால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


# ஆர்எஸ்எஸ், பரிவார அமைப்புக்களை பார்த்து இதனை சொல்ல பிரதமர் தயாரா?











உத்தரகாண்டில் கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்ததுடன் அக்கிராமத்தினர் அந்த பெண்ணின் கணவன், மாமனார் என மூவருக்கும் தலா ரூ.501 அபராதமும் விதித்துள்ளனர்.

# சாதியினை ஒழிக்காமல் இந்து மதத்தில் ஒரு சீர்திருத்தமும் செய்ய முடியாது என்று பெரியாரும், அம்பேத்காரும் தலையில் அடித்துகொண்ட நாடு இது, மதவெறி வளர்ந்தால் கூடவே சாதிவெறியும் வளரும் அபாயம் இந்த நாட்டை தவிர எங்கும் சாத்தியமில்லை.








ரஜினி, மோடி, வைகோ என மூவரும் ஒரே நேரத்தில் தரிசனமாகிகொண்டிருக்கும் நாடு மலேசியா , ஆனால் ஓமாமாவின் திடீர் வருகையால் மோடி மீது வெளிச்சமில்லை.

வடக்கே பினாங்கில் வழக்கம்போல தமிழனுக்காக பொங்கி கொண்டிருக்கின்றார் வைகோ, ஐ.நா, ஈழக்கொடி என கடும் முழக்கம், ஆனால் மக்கள் ஓ அவரா? என்றபடி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஏர்போர்ட், அரண்மனை என சகலத்தையும் கடந்து, ரோட்டோர ஷூட்டிங் செய்துகொண்டிருக்கின்றார் ரஜினி, நிச்சயம் மோடியின் "எதிர்பாரா பார்வையில்" படுவது உறுதி எனினும், தாய்லாந்திற்கு ரஜினி சென்றுவிட்டதாகவும் ஒரு செய்தி.


# இன்று மலேசியா வாழ் இந்திய தமிழர்களிடம் மோடி பேசுகின்றாராம், ஆனால் கட்டணம் உண்டு(பேச்சை கேட்கவுமா?), நேற்று ஆசியான் மாநாட்டில் அவர் பேச்சினை கேட்டுவிட்டு பொதுவான மலேசியாவின் கண்ணோட்டம் இது, " மிக உயர்தரமான ஆங்கிலம் என சொல்லவேமுடியாத பேச்சு இது, ஒரு மாணவனின் ஆங்கிலம்போலவே உள்ளது".









இந்திய நாட்டுப் பற்றுள்ளவர்கள் எவனும் மோடியை குறைகூற‌மாட்டான் அப்படி கூறுபவன் தன்தகப்பனுக்குத்தன் பிறந்தான் என்பதில் சந்தேகமே என்றெல்லாம் பிளந்து கட்டிய மோடி வெறியனே வா, வந்து இதையும் பார்த்துகொள்.

மோடி வெறியனே, இந்தியன் எவனுக்கும் பிரதமரை விமர்சிக்கும் தகுதி உண்டு புரிகின்றதா?,










Ramiah Narayanan's photo.







அசோக் சிங்காலின் மறைவு, தனக்கு பேரிழப்பு, நாட்டின் வளர்ச்சி்க்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் : மோடி

# இந்த அசோக் சிங்கால் அப்படி என்ன நாட்டிற்காக உழைத்துவிட்டார்? அப்துல் கலாம் வரிசையா? அல்லது சீக்கிய ராணுவ வீரர் வரிசையா? நாட்டிற்காய் சென்ன செய்தார்? ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையினை தொடங்கியதுதான் நாட்டிற்கான பெரும் உழைப்பா? , எப்படி எல்லாம் நாட்டுபற்றிற்கு இலக்கணம் எழுத தொடங்கிவிட்டார்கள் பார்த்தீர்களா?




5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து மோடி இந்தியா புறப்பட்டார்.. அடுத்த வாரம் மலேசியா வருகின்றார்

# "காலை ஜப்பானில் காப்பி, இரவில் நியூ யார்க்கில் பார்ட்டி" என்ற கண்ணதாசனின் வரிகள் மிக பொருந்தும் பிரதமர் நமது பிரதமர்.

# ஆனாலும் லண்டனின் ஐ.எஸ் இயக்கத்தை கண்டித்து சொன்னார் பாருங்கள் "மதவாதம் எல்லா ஆபத்தையும் விட பெரும் மானிட குல ஆபத்து", இதனை கட்சி கூட்டத்திலோ அல்லது அயோத்திக்கோ, மதுராவிற்கோ சென்று முழங்கினால் நாமெல்லாம் அப்படியே காலில் விழுந்துவிடமாட்டோமா? ஆனால் செய்யமாட்டார் அல்லது முடியாது. பின் என்னதான் செய்வார்? அதே தான்


# "இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே எனக்கு கவலை எதற்கு ஜாலி பேர்ட்..."















சென்னையிலும் கடலூரிலும் கிட்டதட்ட 50 லட்சம் மக்கள் தேங்கிய மழை நீரில் சிக்கி தவிக்க, இனி ஒரு சொட்டு மழை பெய்தாலும் வாழமுடியாது என மக்கள் பயந்து தவிக்க, பெரும் சிக்கலில் சிக்கி இருக்கின்றது தமிழகம்.

இனி எந்த ஆட்சியும் அவ்வளவு எளிதில் சீரமைத்துவிட முடியா சிக்கல் இது, பெரும் மாற்றம் நிகழ்ந்து மக்களே நீர் நிலைகளையும், வடிகாலையினையிம் சீரமைக்காமல் அது சாத்தியமே இல்லை.

இரண்டு நாள் மழையினை தாங்க முடியா மாநிலமா இது என வெட்கி தலைகுனிந்து கொண்டிருக்கும் பொழுது, சில இளைஞர்கள் வீசும் நம்பிக்கை ஒளிதான் குனிந்த தலையினை நிமிராமல் அப்படியே ஓட சொல்கின்றது, அப்படி என்ன நம்பிக்கை?


# நயன் தாராவிற்கு இன்று பிறந்தநாளாம், மழையால் அவரின் அந்த பெரு அவதார திருவிழாவினை கொண்டாடும் பாக்கியம் சென்னைக்கு இல்லையாம், அவர்களுக்கு கடும் வருத்தம்.

# இந்த சினிமா தியேட்டர்களையும், ஸ்டூடியோக்களையும் முதலில் இடித்து, பள்ளமான பகுதிகளை முதலில் நிரப்ப வேண்டும்.











நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழ் உணர்வாளர்கள் ஒருவர் கூட, நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரபத்மனுக்கு வீரவணக்கம் செலுத்தாததனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

# "முப்பாட்டன் முருகன் தமிழ் இறையோனின் பங்காளி தகறாறில் கொல்லபட்ட தமிழ் மன்னன் சூரபத்மன்" என்றொரு பகீர் வார்த்தையுமா கிடைக்கவில்லை?

 














இப்பொழுது அரசு அறிவிக்கும் சீரமைப்பு பணிகளை முன்பே செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது --செந்தமிழர் சீமான்

# இதே கலைஞர் ஆட்சி என்றால் அண்ணன் எப்படி குதியோ குதி என குதித்திருப்பார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, அம்மா ஆட்சியினை மயிலிறகினால் அடித்து கண்டிக்கின்றாராம். சகல கட்சிகளும் சென்னையில் ஏதோ செய்ய முயற்சிக்க அன்னாரை காணவில்லை.

# அன்னார் வருவதாக இருந்தால் சிங்களன், தெலுங்கன் போன்றவர்களை திருப்பி அடிக்க மட்டுமே வருவார், மற்றபடி இம்மாதிரி பொதுபிரச்சினைகளுக்கு எல்லாம் மயிலறகு ஆலோசனைதான்,


# வாழ்க தமிழ் தேசியம்.




முதல்வர் ஜெயலலிதாவுடன் நாசர், விஷால் சந்திப்பு

# நிச்சயம் வெள்ள நிலவரம் குறித்து விவாதித்திருபார்கள், நாசர் பேரிடர் மீட்புகுழு தலைவர் என்பதும், விஷால் வெள்ள வடிகால் துறை தலமை அதிகாரி என்பதும் குறிப்பிடதக்கது.








வானிலை மையம் எச்சரித்தும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

# எம்ஜிஆர் இறந்தபின் கலைஞர் ஆட்சிக்கு வந்தபின் புலிகளின் அடாவடி பற்றி உளவுதுறை கடுமையாக எச்சரித்தது, அதுவும் பத்மநாபா படுகொலை காலத்தில் எச்சரிக்கை (சிவராசன் தப்பிசென்றது) எல்லை மீறி போக ஆட்சியினை இழந்து, பின் புலிகளின் அட்டகாசம் ராஜிவ் கொலைவரை சென்றது. (ஆனாலும் கலைஞர்தான் ஈழ எதிரி, புலிகள் எதிரி :) )

# அந்த முன் எச்சரிக்கையினை கலைஞர் கண்டுகொண்டாரா? அப்படித்தான் எச்சரிக்கைகளை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை, பட்டு தெரிந்தால் தான் உண்டு.



 





கால்வாய்களை அழித்து அதன் மீது பள்ளி, மருத்துவமனை, கடைகள் என கட்டடம் கட்ட வேண்டும், ஏரிகளையும் குளங்களையும் பிளாட் போட்டு விற்க வேண்டும், வயல்களை அழித்து வீடு கட்ட வேண்டும், இதற்கு லஞ்ச அதிகாரிகள்,ரியல் எஸ்டேட் மாபியா என எல்லோரும் துணை செல்ல வேண்டும்.

பல இடங்களில் முழு குளத்தையும், மூடி உயர்த்தாமலயே பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும்.

ஆனால் மழைக்கு என்ன தெரியும், வெள்ளத்திற்கு தெரிந்ததெல்லாம் பள்ளமான இடம் நோக்கி பாய்வதுதான், அதன் இயல்பு அது, எப்படி மாறும்?


வருடா வருடம் தான் வெள்ளம் வருகின்றது, ஆனால் வடிகால் நிச்சய்ம் உண்டல்லவா? தேடி பிடித்து தோண்டி வைத்தால் எந்த வெள்ளம் குடியிருப்பிற்குள் வரும்? .

மழையும் வருடாவருடம் வந்து இவ்வழியே ஒரு கால்வாய் உண்டு, இவ்வழியே ஒரு குளமோ ஏரியோ உண்டு என சொல்லாமல் சொல்லத்தான் செய்கிறது, அது நம்மவர்க்கும் தெரியும் ஆனால் செய்யமாட்டார்கள்.

காரணம் நீர் நிலைகளில் நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்பு அப்படி. இதனை எல்லாம் பற்றி யாரும் பேசுவார்கள்? ம்ஹூம், தெரிந்ததெல்லாம் வெளள நிவாரண நிதி, அவர் அப்படி அள்ளி கொடுத்தார், தமிழனை தமிழனே ஆண்டால் வெள்ளம் வராது என ஏகபட்ட அரசியல்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்." என்பதும் தமிழறிஞரின் குறள்.




சீமானை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி?

சீமானுக்கும் எனக்கும் என்ன தகறாறு? ஒன்றுமில்லை. ஆனால் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களை பற்றி பொதுமக்கள் சொல்வதில் என்ன இருக்கின்றது?

புலிகள் இருக்கும் வரை பெரியாரின் பேரன் என்றவர், 2009க்கு பின் பிரபாகரனின் தம்பி ஆனது எப்படி? 1998ல் ஆனையிறவு வெற்றியில் அல்லவா தமிழகத்தில் பிரபாகரன் கொடி பறந்திருக்க வேண்டும்? அப்பொழுது அன்னார் செயதது என்ன?


கூடங்குள அணுவுலை போராட்டத்தில் முழங்கியவர், திடீரென அணுவுலையினை விட்டுவிட்டு நாயக்கர் மஹாலை இடிக்க சொல்லும் மர்மம் என்ன? மூட‌ வேண்டியது அணுவுலையா அல்லது மஹாலா?

அந்த தலைவர் எப்படிப்பட்ட அரசியல் செய்கிறார் என்பது காமெடியானது, ஆனால் தூத்துகுடியில் சில தென்னக இயற்கை கொள்ளைக்கு எதிராக பேசியவுடன், தமிழகத்தில் வந்தேறி தெலுங்கனை ஒழிப்போம் என சீமான் கோஷம் எழுகின்றதே எப்படி?

சர்சைகுரிய தொழிலதிபர் இல்ல திருமணங்களில் சீமான் கலந்து கொள்வதும், அவர்கள் இவரை வாழ்த்துவதும். தந்தி குழுமம் இவரை வளர்த்துவிடும் மர்மம் என்ன?

எத்தனை சாதி கலவரங்கள் நடக்கும் மாநிலம் இது? சீமான் ஏதாவது சொன்னாரா? ஆனால் சரத்குமாருக்கு ஆதரவாக சங்கத்தில் குரலெழுப்பியது எந்த இன பாசம்.

இவர் ஒரு குறிப்பிட்ட சக்திகளால் வளர்த்துவிடபடுகின்றார், அந்த சக்திக்கு தமிழ் வளரவேண்டும் என்றோ, அல்லது தமிழர் வளரவேண்டும் என்றோ அல்ல. மாறாக தனக்கு வேண்டிய ஒரு ஆட்சி அமையவேண்டும் அல்லது தன்னை எதிர்த்து கேட்பவர்கள் அரசியலில் வளர்ந்துவிட கூடாது எனும் பயமே அன்றி வேறல்ல.

தமிழன் தமிழகத்தை கொள்ளையடிக்கலாம் (பிரபாகரன் கூத்துப்படி தமிழனை தமிழன் கொல்லலாம், சிங்களந்தான் கொல்ல கூடாது), என்பதுதான் இவர்களின் கொள்கை அன்றி வேறல்ல.

# இது தமிழ் தேசியமாக அமையாது, மாறாக தறுதலை தேசியமாகத்தான் அமையும்.



இங்கிலாந்து வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு இருப்பது பெருமிதம் அளிக்கிறது: நரேந்திர மோடி பேச்சு

# இந்தியாவிற்கு சாலை, அணை முதல் கல்லூரிகள் வரை கட்டி இந்தியாவின் வளர்ச்சிக்க்கு அடித்தளமிட்டானே அந்த வெள்ளையனுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கும்? அதனை பற்றி சொன்னால் என்ன? இருவரும் பெருமித பட்டுகொண்டு திரும்பி விடலாம்,

# இரு மாதத்திற்கு முன்னால் பிரிட்டிசார் இந்தியாவில் இருந்து சுரண்டி சென்ற செல்வத்தை பட்டியல் போட்டு, 200ஆண்டுகள் இந்தியாவை அடிமை யாக்கியதற்கு நட்டஈடு கொடு்க்க வேண்டும் என ஐ.நாவில் முழங்கிய சசிதரூரின் பேச்சு நிச்சயம் பிரதமரின் பேச்சினை விட உயர்வானது.




நேர் வழியில் பயணிப்போம் : மோடி

# நாட்டை நாசமாக்குவது, வெளிநாட்டுகாரனுக்கு விற்பது எனும் இலக்கினை நோக்கி எந்த வழியில் பயணித்தால் என்ன?






அசாம் உல்பா இயக்க தலைவர் வங்கதேசத்தால் கைது செய்யபட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டார், ஒரு வாரத்திற்கு முன்பு பிரபல தாதா சோட்டா ராஜன் கைது செய்யபட்டதும் குறிப்பிடதக்கது : பாதுகாப்பு செயல்பாட்டில் மோடி சாதுர்யம்

# ஆனாலும் மனுஷருக்கு அதிர்ஷ்டம் உச்சியில் இருக்கின்றது, ராஜிவ் கொலைகுற்றவாளிகளை முன்பே அழித்தாகிவிட்டது, இல்லை என்றால் இந்நேரம் மோடியிடம் பிரபாகரன் கைது எப்போது என துளைத்திருப்பார்கள்.

# இந்திராவும் இப்படி பிரபாகரனை ஒப்படைத்திருந்தால் இப்படி ஈழ அழிவு நிகழ்ந்திருக்காது , இப்படி அண்ணனின் விழுதுகள் அட்டகாசம் செய்யமாட்டார்கள், நாயக்கர் மஹாலுக்கெல்லாம் மிரட்டல் வந்திருக்காது.



பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை!

# உலகின் மிக பரிதாபமான நிலையில் இருப்பது தமிழக காவல்துறை, டாஸ்மாக்கிற்கும் அவர்கள்தான் பாதுகாப்பு, சினிமா காட்சிக்கும் இவர்கள்தான் பாதுகாப்பு, இந்த இரண்டாலும் தமிழ்கூறும் நல்லுலகம் அடையும் முன்னேற்றம் என்ன?

# மதுகடைகளுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் நாட்டை கெடுக்கும் போதைகள்.

 







உண்மையான நாட்டுபற்றாளர்கள் என்றால் இந்திய சுதந்திரபோராட்டத்தினை பற்றி தெரிந்திருக்கும், திப்புசுல்தானின் தியாகமும் பெருமையும் புரிந்திருக்கும். மொத்த இந்தியாவே சுதந்திரத்திற்கு பாடுபட்டபொழுது, இந்த பாஜகவின் முப்பாட்டன்னான ஜன சங்கமும், இவர்கள் கொண்டாடும் ஹோவல்கேர், சாவர்க்கர் போன்றோர் சுதந்திரத்திற்கு செய்தது என்ன? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.

காந்தியும் நேருவும் சிறையில் இருக்க, நேதாஜி துப்பாக்கி தூக்க, இவர்களோ நாட்டில் மதவெறி ஊட்டிகொண்டிருந்தார்கள். பின்னர் இவர்களுக்கு என்ன தெரியும்? இப்படித்தான் இந்துமதம் தவிர ஒன்றும் தெரியாது, ஜின்னா நாடு கேட்டால் அதற்காக‌ மொத்த இஸ்லாமியரும் பிரிவினைவாதியா?

# இந்திய சுதந்திரபோராட்டத்தில் இவர்கள் பங்குபெற்றிருந்தால் அல்லவா? திப்புவின் தியாகம் புரியும். இவர்களுக்கு மதம் தவிர ஒன்றும் தெரியாது, இன்னும் என்னென்ன அட்டகாசங்கள் செய்து நாட்டை நாசமாக்க போகின்றார்களோ?







மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர் , நாகர்கோவில் லிங்கம், அயோத்தி குப்பம் வீரமணி,பொட்டு சுரேஷ், மணல் மேடு சங்கர் இவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்?, அவர்களுக்கும் வீரவணக்கம் செய்து தமிழ் உணர்வினை வெளிப்படுத்துங்கள், ஏன் இந்த பாரபட்சம்?

# வீரவணக்கம் எனும் வார்த்தை இந்தபாடா படவேண்டும்? இன்னும் மகிசா சூரன், ரத்த பீஜன், நரகன், எருமை தலை அசூரன், பஸ்மாசூரன், சிங்கமுகன் என எத்தனை முப்பாட்டன்கள் தமிழகத்திற்கு வர இருக்கின்றார்கள்?. மொத்தத்தில் வீர வணக்கம் செலுத்துவதிலே விழுதுகளுக்கு வருடம் முடிந்துவிடும்.

# பொங்கல் பண்டிகையினை மீட்டெடுப்பார்களாம்? இங்கு பொங்கல் கொண்டாட தடைபோட்டது யார்? நாமெல்லாம் என வெலிக்கட சிறையிலா இருக்கின்றோம்?









இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், ரயில்வே துறை அறிவிப்பு

# அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றால் எதற்கு? பயணிகள் நேரடியாக ரயில்நிலையத்திற்கே வந்துவிடுவார்களே? யார் ஆண்லைனில் அமர்ந்திருப்பார்கள்? நேரடியாக ரயில்நிலையத்திலே டிக்கெட் வழங்கலாம் அல்லவா?. இதனை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.

# ஆனால் ரயிலில் அமர்ந்தபின் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் வந்தாலும் வரலாம்.










சி பா ஆதித்தனார் பெரும் இன உணர்வு தமிழர், தமிழரின் மான உணர்ச்சிக்கு உயிர்கொடுத்தவர், நாம் தமிழர் எனும் இயக்கத்தை நடத்தி காங்கிரசுக்கும், திராவிட கழகங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அவரே வழிகாட்டி என்றெல்லாம் அண்ணனின் விழுதுகளில் ஒன்று முழங்கிகொண்டிருக்கின்றது

# அப்படி பெரும் கழக எதிர்ப்பளர் என்றால், எப்படி அவரால் திமுக அரசில் சபாநாயகராக இருக்க முடிந்தது? பின் அமைச்சராகவும் ஆகமுடிந்தது?. திமுக ஆதரித்து நாம் தமிழர் ஆட்சிநடந்ததாக வரலாறு இல்லை அய்யா என கேட்டால்.

# வரலாற்றை மாற்றாதே, அவர் அப்படிபட்டவர் அல்ல, சாகும்வரை நாம் தமிழராக வாழ்ந்தவர் என சொல்லிவிட்டு ஓடிவிட்டார் அந்த விழுது, எமது சந்தேகமெல்லாம் இரண்டு ஆதித்தனார் வாழ்ந்திருப்பார்களோ? என்பதுதான், ஒருவர் நாம் தமிழர் கட்சி நடத்தி தமிழரை விழித்தெழ செய்து தனிநாடு காண போராடி கொண்டிருக்கும் பொழுதே, இன்னொருவர் திமுகவில் சபாநாயகராக இருந்திருக்கின்றார்.


# திமுகவினர் இப்படி எல்லாம் கூட, டூப் போட்டு தமிழகத்தை ஏமாற்றி இருக்கின்றார்கள், எவ்வளவு பெரிய தமிழ் மோசடி இது.












சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன் விசால்

# உலகம் ஒரு நாடகமேடை என நாடகக்காரன் ஷேக்ஸ்பியர் சொன்னதிற்கு நாடக உடலில் இப்படியும் அர்த்தம் உண்டு.

# ஆனாலும் இவரை கொல்ட்டி,ரெட்டி, தெலுங்கன் என திட்டிய புரட்சி திலகத்தின் விழுதுகளுக்காக அண்ணன் இவருடன் நடிக்கமாட்டார் என விழுதுகள் முழங்கிகொண்டிருக்கின்றன. அண்ணனுக்கு அவ்வளவு மான உணர்ச்சியாம்.









"அனைத்து மதத்தினரையும், கடவுள் நம்பிக்கை இல்லாதவரையும் மதிப்பதே மதசார்பற்ற தன்மை" என, சென்னையில் தலாய்லாமா கூறினார்.

# இந்த ஆட்சியில் இந்தியாவில் இப்படி சொல்லகூடிய தைரியம், அதுவும் இந்திய, தமிழக‌ "தொழில்" போதகர்கள் (மடங்கள், கல்லூரி அதிபர்கள்) கூட சொல்லா இந்த தத்துவத்தை ஒரு திபெத்தியர் சொல்லியிருப்பது வாழ்த்துகுரியது.

# அன்னாருக்கு இங்கு அறக்கட்டளை இல்லை, டிவி இல்லை, இஞசினியரிங் காலேஜ் இல்லை, அவரால் சொல்லமுடிகின்றது. மற்றவர்களுக்கு மடியில் கணம் வாயில் அமைதி.







நடிகர் அஜித்தின் வேதாளம் படத்திற்கு யாழ்பாணத்தில் கட் அவுட், பெரும் கூட்டம்.

# இதுதான் யாழ்ப்பாணம், இனபடுகொலை, கச்சதீவு விவகாரம், ராஜிவ் கொலையாளி தூக்கு, என ஏதாவது பாதிப்பு தெரிகின்றதா? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. ஆனால் தமிழகத்தில் இவர்களை வைத்து அரசியல் நடக்கின்றது, நடக்கட்டும்

# அவர்கள் செந்தமிழனின் படையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என எவனாவது மேடையில் பேசினால் நாம் வாய்விட்டு சிரிப்பது இதற்காகத்தான், அவர்கள் இவர்களை நம்பினால் அங்கி சீமான் கட் அவுட் அல்லவா வைக்கபட்டிருக்கவேண்டும்.


# 1995ல் யாழ்பாணத்தை விட்டு புலிகள் விரட்டியடிக்கபட்ட பின் புலிகளுக்கு யாழ்பாணத்தில் ஒரு ஆதரவுமில்லை என்பது குறிப்பிடதக்கது

# கொழும்பில் படத்திற்கு கடும் வரவேற்பாம், நடிகர்கள் இலங்கை சென்றால் கொதிப்பவர்கள், நடிகர்களின் படங்கள் சென்றால் கண்களை கருப்புதுணியால் கட்டிகொள்கின்றார்கள். இது என்ன வகை இன உணர்வோ தெரியவில்லை.

# திராவிட கட்சிகளுக்கு மாற்று கண்டிப்பாக வேண்டும்தான், அதற்காக பிரபாகரன் தம்பி, வீரப்பன் சித்தப்பா பையன் என கிளம்பினால் ஒன்றும் நடக்காது. யாழ்பாணத்தார் முன்பே கைவிட்டதால் அண்ணன் நாயக்கர்களை சீண்டினார், இப்பொழுது சத்தமில்லை

# ஒருவேளை ராஜபாளையம் நாய்களை, அதாவது நாயக்கர்கள் அறிமுகபடுத்திய அந்த ரக நாய்களை "வந்தேறி இனமே" என சொல்லி பிடித்துகொண்டிருக்கின்றார்களா? என தெரியவில்லை, செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.




மானிட வரலாற்றிலே, ஐம்புலன்களையும் கட்டுபடுத்தும் ஒரு மாமனிதர் இருந்தாரென்றால் அது எம்ஜிஆர் பத்மினி போட்டி நடனத்தை மன்னாதி மன்னனில் படமாக்கிய அந்த ஒளிப்பதிவாளராகத்தான் இருக்க முடியும்.

# எப்படி அந்த மனிதரால் மட்டும் முடிந்தது? அவரது இதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை கூட வெளிபடுத்தாமல் அவர் படமாக்கியிருக்கிறார் என்றால் ஒன்று அவர் மாபெரும் சித்தராக இருக்கலாம் அல்லது அவருக்கு விதிக்கபட்ட பெரும் தண்டனையாக கூட கருதியிருக்கலாம்,

# நம்மால் எல்லாம் அப்படி முடியவே முடியாது, அந்த நடன காட்சி அப்படியானது.

 





வெற்றிபெற்றால் மோடியின் தனிப்பெரும் வெற்றி, தோற்றால் பாஜகவின் தோல்வி, என சில மீடியாக்களின் அட்டகாசம் தாங்க‌முடியவில்லை, கெஜ்ரிவாலுக்கு அடுத்து நிதிஷ்குமார்

# 80% சதவீத இந்துக்கள் வாழும் நாடுதான் இது, ஆனாலும் ஒருகாலமும் மதரீதியான போக்கினை கடைபிடித்த நாடு அல்ல. காங்கிரஸ் அரசுக்கு மாற்றாக ஒரு வாய்ப்பினை பாரதம் கொடுத்ததே தவிர, இந்தியாவினை இந்து ஆண்டு பரிபூரண இந்து தேச வெறி எல்லாம் இம்மக்களுக்கு இல்லை.

# இதனைத்தான் டெல்லி,பீகார் தேர்தல் அறுதியிட்டு சொல்கின்றது. எமக்கு தேவை நல்லாட்சியே தவிர மதவெறி ஆட்சி அல்ல என்பது விருப்பம், இந்த தேசத்தின் அனுபவம் அப்படி. சுதந்திர காலத்தில் திலகர்,காந்தி,முஸ்லீம் லீக்,நேரு, நேதாஜி என போராடிகொண்டிருக்க பாஜகவின் ஜனசங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? நாட்டிற்காய் என்ன செய்தது?


# அவர்கள் வழிவந்த பாஜக மட்டும் கிழித்துவிடுமா என்ன? கொடுத்த வாய்ப்பனிலாவது நாட்டுபற்றை நீருபித்திருக்க வேண்டும், என்ன செய்தீர்கள்? மதவெறி ஒரு வருடத்திலே காட்டுதீயாய் எழும்பி நிற்கின்றது, அடிதட்டு மக்கள் விலைவாசியினால் வெறியேறிபோய் நிற்கின்றார்கள்.

# டெல்லி, பீகார் வரிசைகள் இன்னும் தொடரும்.

 











மிக சரியாக தீபாவளி காலத்திலா இந்த தேர்தல் முடிவு வரவேண்டும்? இனி பாகிஸ்தான் உண்மையிலே பட்டாசு வெடித்தாலும் தீபாவளியினை சிறப்பிக்கின்றார்கள் அவ்வளவுதான் என சீரியஸாக சொல்வார்கள் பாஜ கட்சியினர்.

# என்னதான் வறுமை என்றாலும், நாளந்த்தா பல்கலைகழகம் இருந்த பூமியல்லவா? முன்னோடிதான்.









தமிழகத்து மோசஸ் :) செந்தமிழர்.

ராவணன் தமிழ் மன்னன், நரகாசூரன் தமிழன், கூடவே சூரனும் தமிழ் மன்னன். வடக்கே இருந்து வந்த ஆரியர்கள் இவர்களை கொன்றார்கள் எனவே தமிழர்கள் ராமநவமி மற்றும் தீபாவளி கொண்டாட கூடாது என இன உணர்வாளர்கள் அறிவுறுத்திகொண்டிருக்கின்றார்கள்.

வால்மிகி,கம்பன் சொன்னபடி ராவணன் ஒரு பிராமண அரசன், ராமன் தான் சத்திரிய வம்சம். அப்படினாயானால் பிராமண எதிப்பு இருக்க கூடாது அல்லவா? அப்படியானால் பிராமணனும் தமிழனா? பின் எப்படி பிராமணர் தமிழர் எதிரி ஆனார்கள்????


சூரமத்மன் தமிழ் மன்னன் என கொண்டாடும் இவர்கள்தான், அவரை அழித்த முருகபெருமானை தமிழ்கடவுள் எனவும் கொண்டாடுகின்றனர்.அதாவது சூரமத்மன் நல்லவன், முருகனும் மகா நல்லவர்.

# இப்படி ஏதாவது ஒன்றாவது புரிகின்றதா? ஒரு மண்ணும் புரியாது இதுதான் தமிழ்தேசியம், எந்த மேதையும் இதற்கு பொருள் சொல்ல முடியுமா? , அது இருந்துவிட்டு போகட்டும்.

# சென்னையில் இருந்துகொண்டு தெலுங்கர்களை வெளியேற்றுவோம் என்றால் எப்படி இருக்கின்றது? சென்னையின் பூர்வகுடிகள் யார்? தெற்ற்கிலிருந்து சென்றவர்கள் எல்லாம் வந்தேறிகள் பட்டியலில் வரமாட்டார்களா? சென்னப்ப நாயக்கன் என்பவர் பெயரைத்தான் சென்னை என சுருக்கியது மறந்துவிட்டதா?

# தனிதமிழ் இயக்கம் கண்டு தமிழ் வளர்த்த மறைமலை அடிகள், எல்லையினை மீட்ட ம.பொ.சி, இன்னும் தமிழ்தாத்தா உ.வே.சா (இவரும் பிராமணர்) என எத்தனையோ வழிகாட்டிகள் இருக்க, இன அடையாளம் பிரபாகரன், எல்லை காத்தவன் வீரப்பன் என்றால் எப்படி? ஆட்டோ சங்கரை ஏன் விட்டுவிட்டார்களோ தெரியவில்லை.

# செந்தமிழன் முதல்வராவது எட்டாம் அதிசயம், அப்படியும் அவர் ஈழம் அடைந்தால் அது ஒன்பதாம் அதிசயம், அதனையும் மீறி அடிப்பொடிகள் சொல்கிறது பாருங்கள், நடந்துவிட்டால் அது உலகமாக அதிசயம், அதாவது அண்ணன் முழு இலங்கையினையும் பிடித்து சிங்களனை அகதி ஆக்குவாராம், நடக்குமா?

# இன்னொருவர் சொன்னதுதான் மகா ஆச்சரியம், அடிமை பட்ட யூத இனத்தை செங்கடலை பிளந்து மோசஸ் மீட்டது போல, வங்க கடலை பிளந்து அண்ணன் ஈழத்தை மீட்பாராம், அன்னார் தமிழகத்து மோசஸாம், அதற்கு முதலில் என்ன செய்யவேண்டும், அன்னார் ஈழம் சென்று போராட வேண்டும் அல்லவா? இதனை பற்றி எல்லாம் நாம் கேட்ககூடாது.





பொது மக்களிடம் குவிந்திருக்கும் தங்க நகையின் மூலம் பணபெருக்கத்தை பெருக்க அரசு திட்டம்.

# பொதுமக்களிடம் இருக்கும் அரை சவரனை குறிவையுங்கள், நகை கடைகாரர்களிடம் கறாராக வரி எல்லாம் வசூலிக்காமல் விட்டுவிடுங்கள், அதனை வசூலித்தாலே நாடு நிறைவு பெரும்.

சொந்த வீடு,சொந்த வாகனம் வைத்திருந்தால் இனி சிலிண்டர் மானியம் இல்லை அரசு அறிவிப்பு


# எப்படி திட்டம்? வீட்டுலோன், வாகன கடன் போக அவனுக்கு மிஞ்சுவதே கொஞ்சம்தான், அதனையும் சிலிண்டருக்கு வசூலித்துகொள்ளுங்கள்.

இப்படி வியாபாரிகள்,தொழிலதிபர்கள் என அந்த வர்க்கத்தை எல்லாம் விட்டுவிட்டு அடித்தட்டு மக்களை சுரண்டுவதற்கு ஒரு ஆட்சி, அதற்கு அமைச்சர்கள் வேறு.

# பரம்பரை வீட்டில் வசிக்கும் ஏழையும் இவர்கள் கணக்கெடுப்பில் பணக்காரர்கள்? இனி இந்தியாவில் முன்னோர்களின் சொந்த கல்லறை வைத்திருப்பதும் மகா ஆபத்தானது உடனே பணக்கார லிஸ்டில் சேர்த்துவிட ஓரு கூட்டம் அலைகின்றது.













நான் கருப்பாக இருப்பதால் நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம் தேவ்

# அமித்ஷா வெள்ளையாக இருக்கிறார் அவருக்கு விரைவில் கிடைக்கும், இருந்தாலும் உங்களுக்கு விரைவில் பாரத ரத்னா வழங்கினாலும் வழங்குவார்கள், நோ வொர்ரி.

# நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு எல்லாம் வழங்கபடவில்லையா? அவர் என்ன வெள்ளைக்காரரா? ஆனாலும் மோடி ஆட்சியில் யாருக்கெல்லாமோ நோபல் பரிசு ஆசை வந்திருக்கின்றது.


# உள்ளூர் பிரபலங்களே பரிசுகளை எறிந்து எதிர்ப்பினை தெரிவிக்கும் நாட்டில் அன்னாருக்கு நோபல் ஆசை. நடிகர் குமரி முத்துவிற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் காலம் வரும்பொழுது இவருக்கும் நிச்சயம் நோபல் கிடைக்கலாம்.











கடும் சட்டதிட்டங்கள் கொண்ட நாடு சீனா, ஊழல், போதைபொருள் போன்ற குற்றசாட்டுக்களில் சிக்கினால் தண்டனையாக சுட்டுகொன்றுவிட்டு தொட்டா செலவினை வீட்டில் வசூலிக்கும் இரக்கமற்ற சட்டமும் உண்டு.

அப்படிபட்ட நாட்டின் கம்பெனி ஒன்று உடன்குடி மின்நிலையம் அமைக்கவந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பேச்சுவார்த்தையில் அரண்டுபோய் கள்ளத்தோணியில் தப்பினாலும் தவறு இல்லை, விட்டால் போதும் என ஓடிற்று, இந்திய யதார்த்தம் அப்படி.

# ஆனால் சீனாவில் இந்தியாவினை விட ஊழல் மகா அதிகமாம்(?) வெள்ளையன் அப்படி சீனாவினை சீண்டாவிட்டால்தான் ஆச்சரியம். ஆனால் இதனை முக்கிய செய்தியாக சொல்லி சந்தோஷமடைகின்றன, தமிழக பத்திரிகைகள்.




முன்னாள் அப்பாவு எம்.எல்.ஏ முதலில் கவனிக்கபட்டவர், அதுவும் மூப்பனாரால் அடையாளம் காட்டபட்டவர், தொடக்கத்தில் அவரின் நடவடிக்கைகள் பாராட்டதக்கவை, மக்கள் நேசித்தார்கள்

அப்படித்தான் சுயேட்சையாக அவரை ஜெயிக்க வைத்து ராதாபுரம் தொகுதியினை தமிழகம் திரும்பிபார்க்க வைத்தார்கள் மக்கள். அந்த நம்பிக்கையினை அதன்பின் அவர் காப்பாற்றினாரா?

திமுகவில் அவர் இணைந்தது அவர் விருப்பம், ஆனால் பழைய கட்சிகொடுக்கவில்லை என்பதற்காக தனித்துநின்ற அவர், அந்த அளவு தொகுதியினை நேசித்த அவர், 2011ல் கலைஞர் மறுத்தபொழுதும் சுயேட்சையாக நின்றிருக்க வேண்டாமா? தொகுதி கைவிட்டிருக்குமா?


அப்படி நின்று வென்று, அண்வுலை, வள்ளியூர் நீர் உறிஞ்சும் கம்பெனி, இன்னும் பல மணல் பிரச்சினைகளில் முன்னின்றால் அவர் எவ்வளவு உயர்ந்திருப்பார் மக்கள் மனதில்?

அப்படியாக நல்ல தொடக்கமாக தொடங்கி, பின்னாளில் கலைஞரின் விசுவாசியாக மாறி, முத்துவேலர் சிலையினை ராதாபுரத்தில் திறக்கும் அளவிற்கு சென்றது அவரின் அரசியல் விளையாட்டு என்றாலும், முத்துவேலர் சிலைக்கு அவசியம் என்ன? காஞ்சிபுரம் நடராஜனுக்கு (அண்ணாவின் தந்தை) அடுத்து வள்ளியூரில் சிலையா?

ஒன்றின் தொடக்கம் அல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது யூதமொழி.



வரும் சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திரு : அப்பாவு அவர்கள் தான் அடுத்த சட்டமன்ற உறுப்பினர்,தொகுதி முழுதும் பரவலான பேச்சு.

# எதுக்கு? எல்லா ஊர் பஸ்நிலையத்திலும் முத்துவேலர் சிலை திறப்பதற்கா?




தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு இன மக்கள் சார்பாக சீமானுக்கு, (அவரையும் மதித்து :) ) அம்மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள், ஒரு முடிவிற்கு வாருங்கள், வீணாக எம்மை திட்டவேண்டாம் என அமைதியாகத்தான் கோருகின்றார்கள்.

ஆனால் அண்ணனின் அடிப்பொடிகள் அமைதி எல்லாம் ஆகமாட்டோம், அடங்கி தெலுங்கான, ஆந்திரா,கன்னடா ஓடுங்கள் என ஆர்ப்பரிக்கின்றானர்.

அட பதர்களா? இவர்களை விரட்டிவிட்டால் ஐதராபாத்,பெங்களூர் இங்கெல்லாம் தமிழர்கள் இல்லையா? சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷணா கால்வாய் என்னாகும்? என்றேல்லாம் யோசிக்க மாட்டீர்களா? அப்படியே சொளராஷ்ட்ர இனத்தையும் மராட்டிய பக்கம் அனுப்பிவிட்டு அங்கிருக்கும் தமிழரை எல்லாம் இங்கு அழைத்துகொள்வீர்களா?


சகலரையும் அரவணைத்து தமிழகத்தில் தமிழை வளர்க்கமுடியாதா? தமிழக நலன் காட்டமுடியாதா? நாயக்கர்களை அடித்துத்தான் தமிழக ஒற்றுமை வளர்ப்பீர்களா?

இது ஜனநாயக நாடு, அவர்களுக்கும் வாக்கு உண்டு அல்லவா? தமிழகம் வளம்பெற அவர்களும் பங்கெடுப்பதில் என்ன வந்துவிட்டது?

ஒன்றுமட்டும் புரிகின்றது, அக்கால ஈழபோராட்டத்தில் போராடவரும் இளைஞர்களை இணைத்துகொள்வதில் மோதல்கள் தோன்றின, நீ இணைக்க கூடாது, நான் தான் இணைப்பேன் என்பதுதான் ஈழபோராளிகள் யுத்ததின் முதல்படி.

அப்படி ஏதோ ஒன்றை பங்கிடுவதில் யாருக்கெல்லாமோ நடந்த மோதலின் தொடர்ச்சிதான் இந்த நாயக்கர்களின் மீதான கடுப்பே அல்லாமல் வேறு ஒன்றுமல்ல.

ஈழத்தில் தமிழ்பேசும் இஸ்லாமியரை புறக்கணித்து அடித்துவிரட்டியபின்புதான் புலிகளின் வீழ்ச்சி தொடங்கிற்று, தமிழராய் இணைத்திருந்தால் வரலாறு மாறி இருக்கும்.இதெல்லாம் சிந்திக்கும் நிலையில் இவர்கள் இல்லை.




ஷாரூக்கானுக்கு இந்திய நிலை சரியில்லை என்றால் பாகிஸ்தானுக்கு தாரளமாக வரலாம், பாக் பிரிவினைவாத தலைவர் அழைப்பு

# அவரை விட்டுவிட்டு இந்த தமிழக நடிகர்களை கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும், சொர்க்கத்தின் உச்ச கதவு கூட உங்களுக்காக திறக்கபடும்.








பாகிஸ்தானில்தான் ராமர் பிறந்தாராம்...கிளம்பியது புது சர்ச்சை

# வால்மீகி,துளசிதாசர் என பலர் ராமாயணம் எழுதினர், அதில் ஆளுக்கொரு பிறந்த இடத்தினை சொன்னார்கள், ஆனாலும் அழுத்தமாக அயோத்தி என்றவர் துளசிதாசர், 1700 வரை இப்பிரச்சினை இல்லை. ஆனால் மசூதிதான் அந்த இடம் என சொல்லி விதையினை தூவியது பிரிட்டிசார், அறுவடை செய்தது அத்வானி.

# எதற்கெடுத்தாலும் "பாகிஸ்தானுக்கு போ.." என சொல்பவர்கள், இம்முறை நாங்கள் போகின்றோம் என கிளம்புவார்களா? ம்ம்ஹூம்.




நீ என்ன கிழித்துவிட்டாய்? நீ தமிழுக்கு என்ன செய்தாய்? ஊழலை ஒழிக்க நீ ஏன் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஆகவில்லை, உன் பெயரின் அர்த்தம் என்ன? டேய் மோசக்காரா, நாசக்காரா, நயவஞ்சகா, மலேசியாவில் இருந்துகொண்டு தமிழகத்தை பற்றி பேச என்ன இருக்கின்றது? என்றெல்லாம் ஒருவர் நீட்டி முழங்குகின்றார்.

அன்பரே, நான் ஒன்றும் நாட்டை திருத்த கிளம்பியன் அல்ல, காந்தியினையும் நேருவினையும், காமராஜரையும் நடுத்தெருவில் விட்ட நாட்டில் நான் மட்டும் என்ன செய்துவிடமுடியும்? இன்னொன்று உமக்கு என் பெயர் பிடிக்கவில்லை என்றால் நான் மாற்றவேண்டுமா? நாளை இன்னொருவர் என் முகம் பிடிக்கவில்லை என்றால் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டுமா?


சூரியநாராயணன் சாஸ்திரி எனும் தன் சொந்த பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிகொண்டு தமிழுக்காய் வாழ்ந்தவரின் பெயரினை இந்த தமிழகமேடைகளில் நீர் கேட்டதுண்டா? நானும் அப்படி அலைய வேண்டுமா?

மிஸ்டர் மார்க் இந்த முகநூலில் எனக்கொரு பக்கம் தந்திருக்கின்றார், நிச்சயம் நீங்கள் தந்தது அல்ல, அல்லது எனது இணையத்திற்கு நீர் பணம் செலுத்துபவரும் அல்ல. உம்மிடம் பணம் வாங்கிகொண்டு நான் பத்திரிகையும் நடத்தவில்லை. பிறகு ஏன் உமது அனுமதி வேண்டும்.

போலி அரசியல் அபத்தங்கள், மறைக்கபடும் வரலாறுகள், சில மனிததன்மையற்ற தந்திரோபாயங்களை, வருங்கால ஆபத்துக்களை பார்க்கும் பொழுது, எனது மனதில் வருவதனை எழுத உமது அனுமதி தேவையில்லை.

இந்த பூமிபந்தின் உலக நாடுகளை, மற்ற இனங்களை அவர்களின் அமைதியான, அழகான வாழ்வினை பார்க்கின்றேன். இந்த நாடும் அப்படி அமைதியாக வாழகூடாதா? என ஒரு அங்கலாய்பில் ஏதோ கிறுக்குகின்றேன்.

இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் சென்றுவிடலாம். நீ அதற்கு பதில்சொல், இதற்கு சொல் என்று ஆணையிட நீர் நீதிபதியும் அல்ல நான் குற்றவாளியும் அல்ல.




தங்கபாலு சொத்து விவரங்களை வெளியிட தயாரா? இளங்கோவன் கேள்வி, என்னிடமுள்ள சொத்துக்கள் எல்லாம் எனது உழைப்பில் வந்தது(அப்படியும் சொத்துகணக்கை தலைவர் சொல்லவில்லை :) , என்ன தொழில் என்றும் சொல்லவில்லை என்பது வேறுவிஷயம் )தங்கபாலு பதிலடி,

# இந்த உலகிலே தன் சொந்த கட்சிக்காரனை கணக்கு கேட்ட ஒரே கட்சிக்காரன் தமிழக காங்கிரஸ்காரன் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்துகொண்டது :),

# இந்த கேள்வி கேட்டபின்பு மற்ற கோஷ்டி தலைவர்கள் ஒருவரும் சத்தியமூர்த்திபவன் பக்கம் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.




மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு, காமராஜர் பெயரை சூட்டுவதற்கான தீவிரத்தில், பிரதமர் மோடி இருப்பதாக செய்தி : நாடார் சங்கங்கள் பாராட்டு

# அப்துல் கலாமினை வைக்கும் இடத்தில் காமராஜரையும் வைக்க வேண்டும் அதனைத்தான் மோடி செய்தார், இது மொத்த தமிழகமும் பாராட்டவேண்டிய விஷயம் (தமிழக அரசு செய்யுமா? என்றால் ஹிஹிஹீஹ்) , இதில் நாடார் சங்கம் பாராட்ட என்ன இருக்கின்றது?

# பெற்ற‌ தாய்க்கும் உடன்பிறந்த சகோதரிக்குமே ஒன்றும் செய்யாத காமராஜர், நாடாருக்கு அப்படி என்ன செய்தார்? ஆனால் இதனை பற்றி எல்லாம் நாம் பேசினால் தொலைத்துவிடுவார்கள்.


 







பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமியின் " டெரரிசம் இன் இந்தியா" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் மத வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

# இந்த பாஜகாவின் இந்திய அரசிற்கே "மத வெறுப்பு" கோபம் வருமளவிற்கு சுவாமி அப்படி என்ன எழுதியிருப்பார் என்பதை யூகிக்கமுடிகின்றது. புத்தகத்தோடு இந்த சுவாமிக்கும் இந்தியாவில் தடைபோட்டால் இந்த அரசு யூ டர்ன் அடித்து வேறுபாதைக்கு திரும்புகிறது என வாழ்த்தலாம்.








"எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம், சகிப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளின் பின்னணியில், சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள், இல்லையெனில், இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும்'" என‌ : ச‌ர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியாவினை எச்சரித்துள்ளது.

# இது போன்ற எச்சரிக்கைகள் எல்லாம் மிக சிறிய சம்பவம் என நமது ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள், ஆனால் உலகம் அப்படி ஒரு காலமும் எடுத்துகொள்ளாது, அதன் விளைவுதான் இது.

# பாகிஸ்தான் பூரண முஸ்லிம் நாடு அதனால் இது பூரண இந்துநாடு என சொல்லிகொண்டால், உலகம் என்ன இந்த இரு நாடு மட்டுமா? மதத்தால் அவர்கள் அழிந்தால் நாமும் அழிந்துதான் போக வேண்டுமா?,


# அந்த நாட்டை மட்டும் பார்ப்பவர்களுக்கு மலேசியா, சிங்கப்பூர் கனடா, நியூசிலாந்து, சுவிஸ் என பல இன மக்கள் அமைதியாக வாழ்வெதெல்லாம் தெரியாதா?, தெரியும் ஆனால் இதனை விட்டால் அரசியல் செய்ய தெரியாது.

# நேற்று கன்னடத்தில் முதலமைச்சருக்கு பன்றிதலை அனுப்பி இருக்கின்றார்களாம், இனி மூடிஸ் நிறுவணம் வாயினை மூடிகொள்ளும், அதாவது இந்தியா மதிப்பினை இழந்துவிட்டது என பொருள்.




கருப்பாக இருக்கிறவன் தான் தமிழன் - சீமான்.

# இனி திருப்பூரில், கோயம்புத்தூரில் விசா இல்லாமல் சுற்றிகொண்டிருக்கும் ஆப்ரிக்கர்கள் எல்லாம் தமிழர்கள்,அண்ணன் சொல்லிவிட்டார், (ஆனால் ரஜினி தமிழரில்லை என்பார் :) )

# கமலஹாசன், ப.சிதம்பரம்,சரத்குமார் எல்லாம் இனி தமிழர்கள் அல்ல...., . வரவர அண்ணனின் காமெடி கல்பனா அக்காவினையும் மிஞ்சுகின்றது.

 





காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்பொழுது ராஜிவ் கொலைவழக்கின் 7 தமிழர்களை (இலங்கை + இந்திய) விடுதலை செய் கடுமையாக முழங்கி, போராட்டம் நடத்தியவர்கள் ஒருவரும் இப்பொழுது சத்தமிட காணவில்லை.

ஆச்சரியமாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சிலரை விடுவிக்க சொல்கிறார், அது ஈழத்தவரான முருகனையோ, ஈழமருகளான நளினியயோ அல்லது சாந்தனையோ அல்ல மாறாக பிரேமாணந்தா வழக்கில் சிக்கியிருக்கும் சில இலங்கை பெண்களை.

# இவர்களை எல்லாம் நம்பிய முருகன் பின் என்ன செய்வார்? துறவறம்தான்.


# இப்படி இவர்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில், கணவனை இழந்தாலும் நளினிக்கு பரிந்துரைத்த சோனியா எவ்வளவோ பரவாயில்லை.

# இப்படியாக தமிழகமும் ஈழமும் மறந்து, அறவே மறந்துவிட்ட பிரச்சினை இது, இதனை பற்றி பேச மாட்டார்கள், காரணம் அரசியல்.

# முதலில் பிராமணன், அடுத்து சிங்களன், இவை இரண்டும் காலாவதியாயிற்று, இப்பொழுது தெலுங்கன் சீசன், இனி அடுத்தால் எந்த இனமோ? இப்படி அடுத்த இனத்தை சாடி அரசியல் செய்தே தானாக அழிந்துகொண்டிருக்கும் இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான்.

 











"நீங்கள் முன்பு இருந்த கட்சியில் இதுபோல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை விமர்சித்து போல இங்கும் விமர்சித்தால் நல்லதல்ல, காங்கிரசின் வரலாற்றினை தெரிந்து நாவடக்கத்தோடு பேசவேண்டும்" : - குஷ்பூ பற்றி காங்கிரசின் ஹசீனா சையத்.

# இந்த ஹசீனா அம்மையாருக்கு என்ன தமிழக காங்கிரஸ் வரலாறு தெரிந்துவிட்டது?, இளங்கோவனின் தந்தையாரே தான் நிறுவிய திமுகவிலிருந்து விரட்டபட்டு காங்கிரசில் இணைந்தவர், காமராஜர் அனுமதித்திருந்தால் எம்ஜிஆரும் அன்றே இணைந்திருபார்.

# தமிழக காங்கிரஸ் என்ன நிலையில் இருக்கின்றது என்பது இவர்களுக்கு தெரியாததல்ல, தமிழனை ஒழிப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி செயல்பட்டுகொண்டிருப்பதாக நம்பவைக்கபட்டாகிவிட்டது (இப்பொழுது பாஜ ஆட்சியில் யாழ்பாணம் வரை ராமேஸ்வர மீணவர்கள் செல்வதும், ஈழத்தில் பாலும் தேனும் ஓடுவதும் வேறுவிஷயம்).


# இந்த கட்சியின் தமிழக ஒரே குரல் இளங்கோவனிடமிருந்தான் வருகின்றது, அதிமுக, திமுக,பாஜக என எல்லா கட்சியிலும் நடிகர்கள் இருந்து தொலைக்கவேண்டியது தமிழக நிலை, இந்த அம்மா கூட இன்று குஷ்பூவினை கண்டித்ததால் தமிழகத்தில் தெரிகிறார், இல்லை என்றால் யாரிடம் கேட்டாலும் அந்த மசூதிக்கு பக்கத்து வீடாக இருக்கலாம் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அப்படி ஒரு சினிமா புள்ளியின்றி தமிழக கட்சி இல்லை.

# தமிழகததில் காங்கிரசை அழிக்க வேறு யாரும் வேண்டாம், அவர்களே போதும். அப்படி ஏராளமான கோஷ்டிகள். திமுகவில் குடும்ப கோஷ்டிகளை மீற முடியாது, அதிமுகவில் எந்த கோஷ்டிக்கும் வாய்ப்பில்லை, ஒரு கும்பல் சிரித்து பேசினாலே கட்டம் கட்டிவிடுவார்கள், அந்த கட்சிகள் அப்படி.

# சம உரிமை, வேட்டி கிழிப்பு சாகசம், உட்கட்சி கூட்டணி, காலை வாரிவிடுதல், தள்ளிவிட்டு நாற்காலி பறித்தல் என ஒரு ஜனநாயக கட்சிக்கு உள்ள அனைத்து தகுதிகளும் உள்ள கட்சி இது மட்டுமே, காரணம் தலமைக்கும் தலைவர்களுக்கும் உள்ள உறவு அப்படி.

# காங்கிரசில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம், தலைவர்களை விட சர்ச்சைகள் அதிகம். இப்பொழுது கூட சர்ச்சை வந்தவுடன் சத்தியமூர்த்திபவன் பக்கம் அவசரமாக வேட்டி கடைகள், செருப்பு கடைகள் திறக்கின்றார்களாம்.

# இப்படி எந்த வரலாறு குஷ்பூவிற்கு தெரியவில்லை என ஹசீனா அம்மையார் சொன்னாரோ தெரியவில்லை, ஆனாலும் தமிழக காங்கிரஸிற்கு தேவை அதிரடி குரல்கள், அது இளங்கோவன் அணி தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

# "நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை" என்பது கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு, "யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை" என்பது குஷ்பூவின் பதிலடி. ஆனால் "தமிழகத்தில் காங்கிரசே இல்லை" என்பதை இவர்களுக்கு சொல்வது யார்?

# ஒன்றுமட்டும் தெரிகின்றது காங்கிரஸில் கோஷ்டிகள் அதிகம், இளங்கோவன் இல்லாவிட்டாலும் குஷ்பூ கோஷ்டி உருவாகிவிடும், அவரை ஒரு குறிப்பிட்ட தமிழக தலைவராக உருவாக்கும் பெரும் பணியினைத்தான் இந்த கோஷ்டி சண்டையில் இவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள்,

# அவருக்காக உழைத்துகொண்டிருக்கின்றார்கள். குஷ்பூவிற்கு கட்சிக்குள் இலவச பிரச்சாரம்.




தியேட்டரில் படம்பார்த்து விமர்சனம் எழுதும் பத்திரிகைகள், இந்த தியேட்டர் சமாச்சாரத்தை விமர்சித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லை. திமுகவின் ஊழல்கள் பிரசித்தி பெற்றவை எனினும் அதனை பெரும் பிம்பங்களாக மாற்றியது ஊடகங்கள் என்பதை மறுக்கமுடியாது.

ஆனால் இப்பொழுது மட்டும் மவுனித்து, நாயக்கர் சங்கங்களை பேட்டி எடுத்து பிரபலமாக்கும் மர்மம் என்ன?, இப்பொழுதுதான் விகடன் களத்தில் இறங்கி இருக்கின்றது.

# அது என்னவோ சினிமா,தியேட்டர் என்றாலே தமிழன் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டு வசியநிலைக்கு சென்றுவிடுகின்றான், போகட்டும். தியேட்டர் கதை எப்படி என்பது என்றைக்காவது ஒருநாள் யாராவது கதை வசனம் எழுதும்பொழுது தெரியவரும். பல கதைகள் வரும், மூலக்கதையினை நாமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டு.


# கதை வசனம் எழுதுவது சில நேரங்களில் நீதிபதிகளாக கூட இருக்கலாம்.








சீமானை குறி வைக்கின்றது இந்திய உளவுதுறை, நாயக்கர் அமைப்புக்களை தூண்டிவிட்டு அவரை சிக்கவைக்க சதி :- செந்தமிழரின் தம்பிகள் குமுறல்

# உளவுதுறை அளவுக்கு எல்லாம் அண்ணன் வொர்த் இல்ல பாஸ். ஒரு இனத்தையும் நண்பராக்கி கொள்ளாமல் சகட்டுமேனிக்கு திட்டவேண்டும், குலசேகரபாண்டியன் வரலாறு கூட தெரியாமல் புரட்ட வேண்டும், வாயில் வந்ததை எல்லாம் உளறிகொட்ட வேண்டும், பின் நாயக்கர் என்ன? அடுத்த தெரு ... கூட கடிக்கவரும்.

# இன உணர்வு அரசியல் வேறு, இன வெறி அரசியல் வேறு, அன்னார் என்ன ரகம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


# புலிகளின் போராட்ட தொடக்கத்தில் மேடை பேச்சு, மார்க்ஸிசம் என ஆண்டன் பாலசிங்கம் புத்தகங்களை காட்டி பேசியபொழுது, புத்தகங்களை எல்லாம் மூடிவிட்டு, கூடவே வாயினையும் மூடிவிட்டு ஆயுதங்களை கழட்டி மாட்ட பழகுங்கள் என சீறியவர் பிரபாகரன். பேச்சு அவருக்கு பிடிக்காத ஒன்று.

# இன்றுமட்டும் அவர் உயிரோடு இருந்திருந்தால், ஒன்று அவர் படத்தின் முன்நின்று தொண்டை கிழிய கத்துவதை கண்டு மண்டையிலே போட்டிருப்பார், அல்லது சுட்டுகொண்டு செத்திருப்பார். இந்த லட்சணத்தில் இவரை முடக்க இந்திய உளவுதுறை சதியாம்.



தாவூத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் சோட்டா ராஜன்

# அன்னார் மும்பை குண்டுவெடிப்பினை தடுக்கும்பொழுது கையினை இழந்தவர், காஷ்மீர் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தவர், அந்த அளவிற்கு கடும் அர்ப்பணிப்புமிக்க, சீருடை அணியா ராணுவ வீரர் என்று நம்பிகொள்ளுவோம்.

# செய்ததெல்லாம் கொலை, இத்தனை கால உழைப்பெல்லாம் கடத்தலில், ஆனால் அன்னார் இப்போது தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவாராம், எப்படி ஜெயிலில் இருந்தா?




"நான் மாட்டிறைச்சி உண்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது!" : கர்நாடக முதல்வர் சித்தராமையா

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.என். சென்னபசவப்பா , '' சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் மாட்டிறைச்சி சாப்பிடட்டும். இங்கு வந்து பசுவை வெட்டி பார்க்கட்டும். அவரது தலையை உடலில் இருந்து எடுத்து நாங்கள் கால்பந்து விளையாடுவோம்''

# கால்பந்தை ஒரு மாநில முதல்வரின் தலையிலே பழகி, இந்தியாவில் பிரபலபடுத்தும் திட்டம் இது, யாரும் பெரிதுபடுத்தவேண்டாம்.


# நாகரீகமில்லா காலங்களில் தோற்ற அரசனின் தலையினை வென்ற அரசன் காலால் உருட்டிவிளையாடியதுதான் கால்பந்தின் தொடக்கம் என்பார்கள். இந்தியா அந்த காட்டுமிராண்டி காலத்திற்குத்தான் திரும்பி கொண்டிருக்கின்றது.

# காடுமிராண்டி கால மனிதன் மிக குறைந்த வார்த்தைகளை விலங்குகள் போல பேசினானம், தமிழகம் அப்படித்தான் "..த்தா".."கொம்மா" என்ற காலத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றது.

 




1960களில் திமுகவில் நடிகர்களின் அட்டாகசம் எல்லை மீறி செல்வதாக, கட்சியினை விட்டே வேளியேறியவர் (அல்லது வெளியேற்றபட்டவர்), அண்ணாவின் இளமைக்கால நண்பர் , திமுக தொடக்ககால தலைவர் ஈவிகே சம்பத்.

2015ல் நடிகைகளை கட்சியில் இணைத்ததற்காகவே இன்று காங்கிரசில் விமர்சிக்கபட்டுகொண்டிருப்பவர் அந்த சம்பத்தின் மகன் இளங்கோவன்.

# தமிழ் சினிமா எப்படியெல்லாம் அரசியலை ஆட்டிபடைக்கின்றது என்பது அவர் அறியாததல்ல, முள்ளை முள்ளால் எடுக்கும் வழியினை இளங்கோவன் பின்பற்றி இருப்பாரோ? :)









தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினே தகுதியானவர் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

# தனது சொந்த பத்திரிகையான முரசொலியினை, அது இல்லாமல் கட்சி இல்லை எனும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டு, பின் (நல்ல தொகை வாங்கிவிட்டு) அதனை கட்சி பத்திரிகையாக மாற்றி இன்றுவரை நடத்திவரும் தந்திரத்தின் தொடர்ச்சி சொந்த மகனை கட்சிக்கு தலைவராக்கும் இந்த நேரம்.




சகிப்புத் தன்மை குறித்துப் பேச காங்கிரசாருக்கு உரிமை கிடையாது என்றும், அவர்கள் இந்த விசயத்தில் நாடகம் ஆடுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார்

# பாபர் மசூதி இடிக்கபடும் பொழுதும் சகித்து கொண்டிருந்ததை விட என்ன பெரும் சகிப்புதன்மை இருக்கபோகின்றது? , அதனை தடுக்காத காங்கிரஸ் எப்படி சகிப்புதன்மை பற்றி பேசலாம்??

# மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், மிருககாட்சி சாலை புலிக்கு கூட மாட்டுகறி கிடையாது, இந்துக்கள் அல்லாதோர் பாகிஸ்தான் செல்லவேண்டும், இந்துக்கள் அல்லோதாருக்கு வோட்டுரிமை இல்லை என்றல்லவா சகிபுதன்மை வளர்க்கவேண்டும்?









வாலஜா ஏரி சீரமைக்கபட்டது, ககன்தீப் சிங்கிற்கு பெரும் பாராட்டு (இது அரசியல்வாதிகளின் சாதனை அல்ல :) ), இந்த ஏரி நவாப் வாலஜா காலத்தில் உருவாக்கபட்டிருக்கலாம் என்பது வரலாற்று செய்தி.

# இன உணர்வு சிங்கங்களே இல்லை புலிகளே, தமிழகம் இப்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களாலும் ஆளபட்டிருக்கின்றது, திருமலை நாயக்கரை போல இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் விமர்சிப்பீர்களா? இந்த வந்தேறி நவாப் தோண்டிய ஏரி நமக்கு எதற்கு? என்றெல்லாம் கிளம்புவீர்களா?

# செய்யமாட்டீர்கள், ஆனால் உங்கள் அண்ணன் பிரபாகரன் எவ்வளவு தைரியமாக ஈழத்திலிருந்து வந்தேறி இஸ்லாமியரை அடித்துவிரட்டினார்?? அவர் தம்பிகள் சும்மா இருக்கலாமா? ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் அன்று சிங்களன் இன்று தெலுங்கன்.


# மாலிக்காபூரை அனுப்பி மதுரையினை சூறையாடிய அலாவுதீன் கில்ஜியினை விட்டுவிடுவார்களாம், ஆனால் மதுரையை காத்து நின்ற திருமலை நாயக்கனை சாடுவார்களாம் :)

# வாழ்க தமிழ் தேசியம்.




 








சமாதான திட்டத்தினை பிரபாகரன் ஏற்காததால் இறுதிபோரினை தடுக்க முடியவில்லை, 2002ல் கிடைத்த வாய்ப்பினை அவர் தவறவிட்டதும் ஒரு காரணம் : - எரிக் சோல்ஹீம் நார்வே சமாதான தூதர்

# அட நாசமத்து போகிற நார்வே காரா, புலிகளை அழித்தது சோனியா,கலைஞர் என இங்கு அரசியல் செய்துகொண்டிருகின்றார்கள், அவர்கள் பிழைப்பினை கெடுப்பதில் உமக்கு அப்படி என்ன சந்தோஷம்??

# உலக நிலையாவது, சமாதானமாவது? தீவிரவாத போராவது? அப்படிஎல்லாம் இல்லை, கலைஞர் கொல்ல சொன்னார், பாவி சோனியா கொன்று தொலைத்தார், இனி இப்படி சொல்லவில்லை என்றால் சிங்களர்,தெலுங்கர் வரிசையில் நார்வேகாரர்களையும் சேர்த்துவிடுவார்கள் ஜாக்கிரதை.








தமிழர்களை வாசிக்க பழக்குகின்றேன், தமிழை வளர்க்கின்றேன் என "அந்த" பத்திரிகையில் படார். டமார், சதக் ,சர்ர்ர்ர், படீர், அழகி,உல்லாசம் என சில வார்த்தைகளை பயன்படுத்தியதின் விளைவு இது. உல்லாசம் என்றால் அது வில்லங்கமான பெயராக இன்று விவாதிக்கபட்டுகொண்டிருக்கின்றது.

அதுவும் கோவனின் சர்ச்சையில் அந்த வார்த்தைக்கு உலக தமிழினம் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கின்றது, ஆனால் அது தமிழ்வார்த்தையாக இருக்க வாய்ப்பில்லை என்பது வேறு விஷயம்.

# இப்படித்தான் கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழ் வ‌ளர்ந்திருக்கின்றது. கேட்டால் தெலுங்கன் கெடுத்தான், மலையாளி மண் போட்டான், கன்னடன் காலை வாரினான் என வசனம் பேசுவது.








நாகரீக அரசியல் தமிழகத்தில் அடியோடு விடைபெற்றுகொண்டிருக்கின்றது, சமீபத்திய ஆடியோக்களின் தொலைபேசி உரையாடலை இணையத்தில் கேட்கும்பொழுது, தமிழகத்தில் ஏற்படபோகும் பெரும் ரத்தகளறியினை தடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்றே தோன்றுகின்றது.

இதுவரை நாம் கேட்டறியாத புது புது வார்த்தைகளை பயன்படுத்தி இவர்கள் உரையாடுவதை கேட்டால், தமிழ் நமக்கு புரியாமல் போயிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்???, அவ்வளவு கொடூர வார்த்தைகள், இவர்கள் தான் நாங்கள் தமிழகத்தை ரட்சிக்கபோகின்றோம் என்பதில் நமக்கு குளிர்காய்ச்சலே வருகின்றது.


" கனியிருப்ப காய்கவர் தற்று" "நயம் பட உரை", யாகாவராயினும் நா காக்க"என தமிழன் சொன்னதெல்லாம் இவர்களுக்கு மறந்துவிட்டது,

இப்பொழுது "..த்தா" , "ங்கொம்மா" என்பதுதான் இனமான, செந்தமிழ் முழக்கம்.

# நாம் சொல்லி இவர்கள் கேட்கமாட்டார்கள், வேண்டுமானால் "புலவர்களே சண்டை வேண்டாம், சாந்தமாக உரையாடுங்கள்" என சொல்லி பார்க்கலாம்





சாதரண பருவமழைக்கு விடுமுறை அளிக்கும் மாநிலம் உலகிலே தமிழகமாக மட்டும்தான் இருக்கமுடியும்.

புயல்மழை என்றால் ஏற்றுகொள்ளலாம், சாதரண மழையினையே எதிர்கொள்ளமுடியாத தமிழகமாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கின்றார்கள், இதில் சாதனை ஆட்சி என முழக்கம் வேறு. இப்படியே பழக்கிவிட்டார்கள்.

இப்பொழுது கடும் வெள்ளம் என புலம்புவது, பின் 3ம் மாதத்திலே காலிகுடங்களுடன் அலைய வேண்டியது, பின் கன்னடன் முதல் மலையாளி வரை திட்டி தீர்க்க வேண்டியது, இதுதான் தமிழக தண்ணீர் அரசியல்.


# ஒரு மழைக்கே முடங்கிபோகும் மாநிலத்தில்தான் ஆண்ட சாதி,வந்தேறி, மத வெறி, இனமானம், சினிமா என எத்தனையோ முழக்கங்கள்.














இன உணர்வில் பொங்குபவர்களுக்கு எல்லாம் நாயக்க மன்னர்களும் மதுரை நாயக்கர் மஹாலும்தான் கண்ணுக்கு தெரியுமா? கன்ன்டர்களோ அல்லது மலையாளிகளின் அரண்மனைகள், கல்லறை எனும் நினைவு சின்னங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாதா? அட மலையாளிகளின் கல்லறையினை விடுங்கள் அந்த தெலுங்கு நடிகரின் சிலையினை தொட்டுபார்க்கும் தைரியம் இருக்கின்றதா?

சென்னை கோட்டை என்ன முப்பாட்டன் கட்டிவைத்தானா?

ராஜிவ் காந்தியினை சிதறடித்த அந்த மாவீரன், சிங்கள வெறியன் ஜெயவர்த்தனவேவினை உரசிபார்த்தாரா? அல்லது சிங்களரின் ராஜ குருக்களான புத்த பிக்குகளை தொட்டு பார்த்தாரா? இப்படித்தான் இருக்கும் இவர்களின் செயல்பாடும்.


இனம் எனும் பெயரில் கலவரம் செய்தோ, ரத்தத்தை ஓடவிட்டே தான் தன் இருப்பை காட்டிகொண்ட தலைவனை வழிகாட்டி என்றால் இப்படித்தான், யாரையாவது கொன்றுகொன்டே அல்லது எதனையாவது அழித்துகொண்டே அரசியல் செய்வதை தவிர என்ன தெரியும் இவர்களுக்கு?





கோவன் கைது விவகாரம் : ஜெ., - கலைஞர் மீது சீமான் ஆவேசம்

# கடையினை நடத்துவது தமிழக அரசு, கோவனை கைது செய்திருப்பதும் தமிழக அரசு, இதில் இப்பொழுது கலைஞரை கண்டிக்க என்ன இருக்கின்றது? இதுதான் சீமான் கையாளும் அரசியல் அதாவது கலைஞர் வெறுப்பு அரசியல்.

# கேட்டால் மதுகடைகளை தொடங்கியவர் கலைஞர் என்பார், அப்படியானால் சிங்களனுக்காக வழக்காடி உறவாடி அன்று வெள்ளையனிடம் ஈழம் வாங்கா ஜிஜி பொன்னம்பலம் செய்தது வரலாற்று தவறு இல்லையா? அவரை எல்லாம் ஏன் திட்டவில்லை இவர்.


# அரேபியாவில் எந்த விமானம் தானாக நொறுங்கி விழுந்தாலும் ஐ.எஸ் இயக்கம் தான் தான் வீழ்த்தியதாக மார்தட்டி அரசியல் செய்யும், இங்கே எது நடந்தாலும் கலைஞரை காட்டி இவர் சாடுவார், அந்த நடிகர் கட்சி ஆண்ட 26 வருடம் பற்றி கேட்டால் மூச்ச்ச்ச்.....