Monday, December 28, 2015

விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்!

அக்கால பத்திரிகைகள் உண்மைக்காக போராடின, வெள்ளையனை எதிர்த்து சுதேச மித்திரன் போன்ற பத்திரிகைகள் மிக தைரியமாக எழுதின.

சுதந்திர இந்தியாவிலும் நேரு மீதான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் உள்பட சகலமும் மிக கடுமையாக விமர்சித்தன, இந்திரா பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா பத்திரிகைகளும் மீடியாக்களும் ஆண்மையுடன் சீறின.

சமூக போராட்டத்தில் பெரியார், அண்ணா போன்றோரின் பத்திரிகைகள் மிக தீவிரமாக அதிகார உச்சங்களை சீண்டின, அவர்கள் கொஞ்சமும் அஞ்சவில்லை அதுவும் பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்தில் பெரியாரின் அந்த எழுத்துக்களுக்கு நிச்சயம் பெரும் தைரியம் வேண்டும்.


அவர்களுக்கெல்லாம் சமூக பொறுப்பு இருந்தது, நாட்டு நலன் சமூக நலனை காக்கும் பொறுப்பு இருந்தது, இன்று நடப்பது என்ன?

பத்திரிகைகளும், டீவிகளும் சினிமா குப்பைகளாலும், தேவையற்ற பொறுபற்ற செய்திகளாலும் நிறைந்து கிடக்கின்றன, போட்டிகள் பணங்களை குவித்தல் எனும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் சமூகத்திற்கு ஏதும் செய்யபோவதில்லை. மாறாக சீரழிக்கும் அபாயம் உண்டு.

ஏரி கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும், அரசியல் கொள்ளையர்களும் பத்திரிகைகளும் டிவிகளும் நடத்தும் காலமிது, அதாவது தங்களை காப்பாற்றிகொள்ள பத்திரிகை தொழிலில் இறங்கி இருக்கும் இவர்கள் உண்மைக்கு வெகுதூரம். அரசினை விமர்சிக்க மாட்டார்கள் மாறாக ரோட்டில் வருவோர் போவோரை எல்லாம் சீண்டுவார்கள்.

# ஒரு பேட்டியில் இளங்கோவன் பாண்டேயிடம் சொன்னது நிச்சயம் நியாமனானது, ஒரு வகையில் அதுவும் "த்த்தூ." தான். "பாண்டே உங்களால் தமிழக முதலமைச்சரையோ அல்லது பெரும் அதிகார வர்க்கத்தையோ இப்படி அமர வைத்து கேட்கமுடியாது, ஒரு அமைச்சரை இங்கு அழைத்து வந்து கேளுங்கள் நான் காதை அறுத்துகொள்கிறேன்

உங்கள் எல்லை இவ்வளவுதான், கோயம்பேடு கோவித்தசாமி, சும்மா கத்தி கொண்டு இருப்பவனை அழைத்து அரசியல் விமர்சனம் செய்கின்றீர்கள், யாரிடம் கேட்கவேண்டுமோ அவர்களை விட்டுவிடுவீர்கள், இது ஊடக தர்மமா?"

# இதனைத்தான் விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்.

No comments:

Post a Comment