Wednesday, August 31, 2016

புரியாத புதிர் இந்த தமிழ் திரையுலகம்...

அவளுக்கு தெரியாமல் திருட்டு தனமாக இணையம் வருவதுதான் திரில், என்னுடைய பாகம்பிரியாள் அவசர விடுப்பில் சென்றிருப்பதால் கண்டிக்க யாருமில்லை. அருணாசலம் படத்தில் ரஜினிக்கு சுருட்டு வெறுத்தது போல இணையம் சுற்றி சுற்றி வெறுத்துவிட்டது.


80ம் கால படங்களுக்குள் மூழ்கினேன், ஆரம்ப காலத்தில் கமலும் ரஜினியும் எப்படி எல்லாம் இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கின்றார்கள். துக்கடா வேடம், ஏமாளி வேடம், பெண் பித்தன் வேடம், வில்லன் வேடம், கோமாளி வேடம் என கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களை நிருபித்திருக்கின்றார்கள்.




காலம் மாற மாற இருவருமே மாறி இருக்கின்றார்கள், கமலஹாசன் பரிசோதனை முயற்சி, தொழில்நுட்ப முயற்சி இன்னும் பல முயற்சி என மாறிவிட்டார், தன் உயிரை தவிர எல்லாவற்றிலும் நடிப்பு முயற்சி செய்தாகிவிட்டது, இனி நடிக்க என்ன இருக்கிறது எனும் நிலைக்கு வந்தாயிற்று.


ரஜினி தனக்கென ஒரு பிரத்யோக வட்டத்தில் சிக்கிகொண்டார், முள்ளும் மலரில் மட்டும் வித்தியாசம் காணமுடிந்தது, அதன் பின் மனிதரின் வட்டம் விட்டு அவர் வரவே இல்லை, வரவும் மாட்டார்.


அன்று இளம் கன்றுகள் கிடைத்த வாய்ப்பில் அசத்தியிருக்கின்றார்கள், இன்று வளர்ந்துவிட்டவர்கள் தனி தனி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.


வளரும் காலத்தில் தடுக்காத இமேஜ், வளர்த்துவிட்ட காலத்தில் இணைய தடுக்கிறது.


இந்த இமேஜ் எனும் மாயபிம்பம்தான் எத்தனை நல்ல விஷயங்களை தடுத்துகொண்டே இருக்கின்றது, மற்ற மொழிகளில் இல்லா சாபம் தமிழக சினிமாவிற்கு மட்டும் நீங்கா சாபமாக தொடர்ந்து வருகின்றது, இப்போதைக்கு ஒழிவது போல தெரியவில்லை.


அன்று எத்தனை படங்களில் இணைந்திருக்கின்றனர், இப்பொழுது இணைந்தால் என்ன? 10 படம் நடித்தால்தான் என்ன? வானம் இடிந்து விழுமா?


முன்பின் தெரியாத புதுமுக நடிகைகளுடன் எல்லாம் நடிப்பவர்களுக்கு, திடீர் டைரக்டர்கள் கையில் விழுந்து நடிப்பவர்களுக்கு.


பலவருடம் பழகிய நண்பர்களாக‌ இணைந்து நடிக்க முடியவில்லை.


என்ன திரையுலகமோ என்ன வட்டமோ,


அவளுக்கு தெரியாமல் திருட்டு தனமாக இணையம் வருவதுதான் திரில், என்னுடைய பாகம்பிரியாள் அவசர விடுப்பில் சென்றிருப்பதால் கண்டிக்க யாருமில்லை. அருணாசலம் படத்தில் ரஜினிக்கு சுருட்டு வெறுத்தது போல இணையம் சுற்றி சுற்றி வெறுத்துவிட்டது.

80ம் கால படங்களுக்குள் மூழ்கினேன், ஆரம்ப காலத்தில் கமலும் ரஜினியும் எப்படி எல்லாம் இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கின்றார்கள். துக்கடா வேடம், ஏமாளி வேடம், பெண் பித்தன் வேடம், வில்லன் வேடம், கோமாளி வேடம் என கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களை நிருபித்திருக்கின்றார்கள்.


காலம் மாற மாற இருவருமே மாறி இருக்கின்றார்கள், கமலஹாசன் பரிசோதனை முயற்சி, தொழில்நுட்ப முயற்சி இன்னும் பல முயற்சி என மாறிவிட்டார், தன் உயிரை தவிர எல்லாவற்றிலும் நடிப்பு முயற்சி செய்தாகிவிட்டது, இனி நடிக்க என்ன இருக்கிறது எனும் நிலைக்கு வந்தாயிற்று.

ரஜினி தனக்கென ஒரு பிரத்யோக வட்டத்தில் சிக்கிகொண்டார், முள்ளும் மலரில் மட்டும் வித்தியாசம் காணமுடிந்தது, அதன் பின் மனிதரின் வட்டம் விட்டு அவர் வரவே இல்லை, வரவும் மாட்டார்.

அன்று இளம் கன்றுகள் கிடைத்த வாய்ப்பில் அசத்தியிருக்கின்றார்கள், இன்று வளர்ந்துவிட்டவர்கள் தனி தனி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.

வளரும் காலத்தில் தடுக்காத இமேஜ், வளர்த்துவிட்ட காலத்தில் இணைய தடுக்கிறது.

இந்த இமேஜ் எனும் மாயபிம்பம்தான் எத்தனை நல்ல விஷயங்களை தடுத்துகொண்டே இருக்கின்றது, மற்ற மொழிகளில் இல்லா சாபம் தமிழக சினிமாவிற்கு மட்டும் நீங்கா சாபமாக தொடர்ந்து வருகின்றது, இப்போதைக்கு ஒழிவது போல தெரியவில்லை.

அன்று எத்தனை படங்களில் இணைந்திருக்கின்றனர், இப்பொழுது இணைந்தால் என்ன? 10 படம் நடித்தால்தான் என்ன? வானம் இடிந்து விழுமா?

முன்பின் தெரியாத புதுமுக நடிகைகளுடன் எல்லாம் நடிப்பவர்களுக்கு, திடீர் டைரக்டர்கள் கையில் விழுந்து நடிப்பவர்களுக்கு.

பலவருடம் பழகிய நண்பர்களாக‌ இணைந்து நடிக்க முடியவில்லை.

என்ன திரையுலகமோ என்ன வட்டமோ, புரியாத புதிர் இந்த தமிழ் திரையுலகம்.


டி ஆர் : டி. ராஜேந்திரன்


titr


எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான்


அது டி.ராஜேந்தர்


தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் அசத்திவிடலாம்


அப்படித்தான் அவர் 80களில் அசத்திகொண்டிருந்தார், இன்று கேட்டாலும் அது கண்ணதாசனா, வாலியா அல்லது அல்லது இளவயது வைரமுத்துவா என யோசிக்க செய்து தேடினால், அட டி.ராஜேந்தர்.


எவ்வளவு அழகான கற்பனைகள், எவ்வளவு அழகான வர்ணனைகள், சோக பாடலோ, காதல் பாடலோ, பெண் நினைவில் உருகி பாடும் பாடலோ அவை எல்லாம் அற்புதமான படைப்புகள்.


அனைத்தும் பண்பட்ட வரிகள், அதில் ஆபாசமோ, காம நெடிகளோ, முகம் சுளிக்கும் வரிகளோ இருக்காது, கம்பனை படிப்பது போல அழகான சுகம். ஓரு சிலருக்கே வாய்க்கும் வரம்.


"பாவை புருவத்தை விரிப்பது அதிசயம்,
அதில் பரதமும் படிக்குது அபிநயம்" என அசத்தி செல்வதாகட்டு,


"பாவை இதழது சிவக்கின்ற போது, பாவம் பவளமும் சிவப்பது ஏது" என வர்ணிப்பதாகட்டும்


"சந்தண கிண்ணத்தில் குங்கும சங்கம‌
அரங்கேற அதுதானே உன் கண்ணம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில்
இரண்டு குடத்தை கொன்ட‌
புதிய தம்புராவை மீட்டி சென்றாள்"


என சொன்னதாகட்டும், டி.ராஜேந்தர் ஒரு பெரும் கவிஞர், கவிஞராக மட்டும் ஜொலித்திருக்கவேண்டியவர்.


இன்று திரையுலகில் அவர்போல் வர்ணிப்பவர் , தமிழ் இலக்கியத்தில் கரைந்த சாறு யாருமிலை, கண்ணதாசன், வாலி, நா.முத்துகுமாரின் இடத்தினை மிக எளிதாக நிரப்பும் பாடல் வலிமை அவருக்கு உண்டு.


ஆனால் அவரும் எம்.ஆர் ராதாவும் ஒரே ரகம்.


காட்டாறுகள், வித்தை கர்வம் மிகுந்தவர்கள். எளிதில் வேலை வாங்கிவிட முடியாது, நினைத்தவாறே செய்துகொண்டிருப்பவர்கள்


டி.ஆர் அப்படித்தான் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.


எம்ஜிஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும், ஸிர்தேவியும் பின்னி எடுத்த 80களில் வெறும் புதுமுகங்களை கொண்டு வெள்ளிவிழா கொடுத்து சவால் விட அவரால் முடிந்ததென்றால் அதற்கு காரணம் அவரின் பாடல்.


அதுதான் அவரின் தனித்திறமை, அவர் படங்களில் எல்லாம் தனித்து நிற்பது அதுதான். ஆனால் தன் ஆணிவேர் அது என தெரிந்தும் ஏன் சல்லிவேர்களை பலமாக நினைக்கின்றார் என தெரியவில்லை.


டைரக்ஷனுக்கு பல பேர் இருக்கின்றார்கள், நடிக்க ஏராளமானோர் உண்டு, இசைக்கு பஞ்சமே இல்லை. ஆனால் பாடலுக்கு? அற்புதமான வரிகளை எழுதுவதற்கு மிக சிலரே உண்டு, அதிலொன்று டி.ஆர்.


இன்றும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, பாடல் எழுத ரெடி என அவர் அறிவிக்கட்டும், அற்புதமான பாடல்களை எந்த மெட்டிற்கும் அவரால் கொடுக்க முடியும, எல்லா வித உணர்ச்சிகளாலும் கொடுக்க முடியும்.


ஆனால் அவரோ கதை, வசனம், சண்டை, இம்சை என எல்லா மண்ணாங்கட்டியும் நானெ செய்வேன் என அடம்பிடித்து தன் சுயதர்மத்தை இழந்துகொண்டிருக்கின்றார்


நிச்சயமாக அவர் கவிதை ராஜாளி, உயர பறக்கவேண்டியவர். ஆனால் அவரோ நான் கோழிகளோடு குப்பை மேட்டில் கிளறுவேன், சிட்டுகுருவிகளோடு தானியம் பொறுக்குவேன், தேன் சிட்டினை போல கூடுகட்டுவேன், வெறும் மைனாவினை போல தாழத்தான் பறப்பேன் என அடம்பிடிக்கின்றார்.


ராஜாளி அதற்குரிய இடத்தில் பறந்தால் அல்லவா அதற்குரிய மரியாதை, பிரமிப்பு எல்லாம் வரும்.


சரி பாடல்தான் வேண்டாம், அன்னார் 4 கவிதை தொகுப்பு வெளியிடட்டும், இந்த மனுஷ்யபுத்திரன் போன்ற இம்சைகள் எல்லாம் எங்கு சென்று ஒழிகின்றன என்பது தெரியும்.


ஒரு இசை ஆல்பம் வெளியிடட்டும் இந்த ஹிப்காப் தமிழா போன்ற அழிச்சாட்டியம் எல்லாம் காணாமலே போகும்.


ஆயிரம் ஆயிரம் அற்புதமான பாடல்களை அவரால் தரமுடியும், ஆனால் செய்வாரா?


"நடை மறந்த கால்களின் தடையத்தை பார்க்கின்றேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கின்றேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கின்றேன்


வெறும் நாரில் கரம்கொண்டு பூமாலை வடிக்கிறேன்
வெறும் காற்றில் உளிகொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கின்றேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கின்றேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவுநேர பூபாளம்..."


எப்படி அருமையான வரிகள்.


எங்களுக்கு தேவை எல்லாம் 30 வருடத்திற்கு முன்னதான டி.ராஜேந்தர் எனும் கவிதை சிங்கமே.


அது இல்லா காட்டில் நரிகள் எல்லாம் கவிஞர் வேடம் போட்டு ஆடும் இம்சைகள் தாங்கமுடியவில்லை.


80களில் நீங்கள் கொடுத்த அற்புதமான வரிகளோடு கவிஞனாக வாருங்கள் டி.ஆர்.


உசேன் போல்ட் ஓட்டத்தில் கில்லாடி, ஆனால் அவர் எல்லா போட்டிகளிலும் பங்கெடுப்பேன் என ஜிம்னாஸ்டிக்கில் போய் நின்றால் என்ன ஆகும்?


பெல்ப்ஸ் சிறந்த நீச்சல்காரர் அவர், ஆனால் நான் உயரம் தாண்ட போகின்றேன் என்றால் என்ன ஆகும்?


செரினா வில்லியம்ஸோ, ரபேல் நடாலோ நான் குத்துசண்டைக்கும் தயார் என்றால் என்னாகும், மெஸ்ஸி கிரிககெட் மட்டை பிடித்து வாசிம் அக்ரம் பந்தினை எதிர்கொன்டால் என்னாகும்.


அதுதான் உங்கள் விஷயத்திலும் நடக்கின்றது


அவரவர் அவரவர்க்குள்ள உயரத்தில், அந்த இடத்தில் இருக்கவேண்டுமல்லவா?


கவிஞனாக அடுத்த இன்னிங்க்ஸில்
எங்கோ போய்விடுவீர்கள், ஒரு கவிஞனும் உங்களை தொட்டுவிடமுடியாது,


கண்ணதாசன், முத்துலிங்கம், புதுமை பித்தன், பஞ்சு அருணாசலம், காமராசன், வாலி காலத்திலே தனியாக நின்று சாதித்த உங்களுக்கு இப்பொழுது இருக்கும் காலம் தூசு அல்லவா?


அந்த அற்புத கவிஞனைத்தான் நாங்கள், எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம்


வீராசாமியினை அல்ல.


மிக மிக அற்புதமான பாடல்ளை உங்களால் கொடுக்க முடியும், எங்களுக்கு அபார நம்பிக்கை இருக்கின்றது, உங்கள் தன்னம்பிக்கை சொல்லி தெரியவேண்டியது அல்ல.


வாருங்கள், வந்து கம்பனை, பாரதியினை, கண்ணதாசனை, வைரமுத்துவினை, முத்துகுமாரினை பிழிந்து ஒரே கோப்பையில் கொடுங்கள்


இன்றைய தேதியில் அவ்வளவு அற்புதமான கவிஞன் எவனுமில்லை


தூங்கிகொண்டிருக்கும் தமிழ்பாடல் சிங்கமே, எழும்பி இனியாவது களத்திற்கு வாருங்கள்.


வருங்காலத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கின்றீர்கள் என யாரும் கேட்கபோவதில்லை, எவ்வளவு அழகான பாடல்களை கொடுத்திருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் வரலாறு அடங்கி இருக்கின்றது..


கண்ணதாசன், பட்டுகோட்டை, வாலி, முத்துகுமார் என மறைந்த கவிஞர்களின் சொத்து மதிப்போ, அவர்களின் குடும்பமோ லெகசி எனப்படும் அடையாளமாக இல்லை


அவர்களின் முத்தாய்ப்பான படைப்புகள்தான் அவர்களின் அடையாளங்கள்.


கலைஞரின் தமிழுக்கு கூடும் கூட்டம் போலவே, உங்கள் தமிழ்பாடலுக்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.


அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி.





நாட்டியத்திற்கு பத்மினி...

அழகான பழம் சினிமா பாடல்களை பார்த்துகொண்டிருந்தேன், பத்மினி பாடல்கள். சும்மா சொல்லகூடாது மனுஷி அந்த பரத முனிவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் அற்புதமான நடன கலைஞர்.

முகங்களில் அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டுவந்து, மிக நளினமாக ஆடியிருக்கின்றார், கேரளத்து ஒவியத்திற்கு ரவிவர்மன் அடையாளம் என்றால் நாட்டியத்திற்கு பத்மினி

வியட்நாம் வீடுபாடலும் வந்தது, சிவாஜி பத்மினி ஜொடி அற்புதமாக பொருந்துகின்றது, மிக சில ஜோடிகளே அப்படி பொருந்தும் கமல் ஜெயப்பிரதா போல‌

நிறைய பாடல் வந்தது, தில்லானா மோகனம்பாள் அதில் கிளாசிக். சிவாஜிகணேசன் அற்புதமாக கலக்கினார். அந்த முகத்தில்தான் நொடிக்கொரு நடிப்பு, கண்களே உணர்ச்சிகளை வெளிப்படுத்தின, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் இப்ப்டித்தான் இருந்திருப்பார்கள் என காண வைத்த தோற்றம் அது.

அடுத்த பாடல் வந்தது, பத்மினி அற்புதமாக ஆடிகொண்டிருந்தார், அருகே அந்த கொடுமை நடந்தது

ஆம், தலைவெட்டிய சேவல் போல ராமச்சந்திரன் எனும் நடிகன் குதித்துகொண்டிருந்தார். சுற்றுகிறார், தாவுகிறார் என்னென்னமொ செயகிறார், முகத்தில் மட்டும் வெற்றி புன்னகை

அப்படி என்ன ஆடிவிட்டார் என அந்த புன்னகை என தெரியவில்லை. ஆனால் அவருக்கு நகைச்சுவை காட்சி நன்றாக வரும் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது.

இன்றுவரை தமிழ் சினிமாவில் நம்பர் 1 நகைச்சுவை காட்சி அதுதான்.

முடிவில் சினிமா இலக்கணபடியே அவர் வென்றும் விட்டார், டைரக்டருக்கு கொஞ்சமேனும் மனசாட்சி என்பதே இல்லை போலிருக்கின்றது.

அதன் பின் வேறுபாடல்களுக்கு வந்துவிட்டேன்,

இப்பொழுது பவர்ஸ்டார் அழகாக ஆடிகொண்டிருக்கின்றார்.

அழகிய அதிசய முகம் தினசரி பல ரகம்

[gallery ids="2676,2677,2678,2679" type="slideshow"]

கண்ண்தாசன் எவ்வளவோ எழுதினான், ஆனால் அவர் மிக அட்டகாசமாக எழுதியது ஜெயபிரதாவிற்கு, அதுவும் நினைத்தாலே இனிக்கும் ஜெயபிரதாவிற்கு

"அழகிய அதிசய முகம்
தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா
தேன்மொழி சொல்லம்மா

நிலா காலங்களில் சோலை அது காட்டும் சுகம் கோடி
பாவை முகம் காட்டும் இன்பம் இன்னும் பலகோடி

அழகிய மலர் முகம்
தினசரி பலரகம்"

ரசிகனய்யா அவர், ரசித்து எழுதியிருக்கின்றார்.

நன்றாக பெயர் வைத்த பாலசந்தர் வாழ்க, நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது, அப்படி ஒரு அழகி அவர்

அழகிய முகம், தின்சரி பல ரகம்..எல்லாமே கிளாசிக், மாமல்லபுர சிற்பம் போல, சித்தன்ன வாசல் ஓவியம் போல, மைக்கேல் ஆஞ்சலோவின் சிலை போல, ரவிவர்மனின் ஓவியம் போல‌

அழியாத அழகு அது.

அதிசய‌ மலர் முகம், தினசரி பல ரகம்

காவேரி நதி இருக்கு ... நதி மேலே அணை இருக்கு...


காவேரி நீர் கேட்டு தமிழகத்தில் 10 ஆயிரம் விவசாயிகள் போராட்டம், தமிழகத்தில் இயல்பு வாழ்கை பாதிப்பு, கன்னடத்தில் பதற்றம்.


விவசாயிகள் போராடுவது இருக்கட்டும், தமிழகத்தின் சார்பில் டெல்லிக்கு 39 எம்பிக்கள் உண்டு, மேலவையிலும் உறுப்பினர்கள் உண்டு, என்ன கிழிக்கின்றார்களோ தெரியவில்லை.


இப்படிபட்ட பிரச்சினைகளை அங்கே எழுப்புங்கள், புகார் கொடுங்கள் என்றுதான் அனுப்பிவைத்திருக்கின்றோம், அங்கோ முதல்வர் என்னை அடித்தார், பாதுகாப்பு வேண்டும் என ஒருவர் புகார் கொடுக்கின்றார்.


இன்னொருவர் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மிர் என பாடுகின்றார், இனி காவேரி பிரச்சினை என்றால் "விவசாயி..கடவுள் எனும் முதலாளி" என தொடங்கிவிடுவார்.


ஒன்றாக குரலெழுப்ப வேண்டிய தமிழக‌ எம்பிக்கள், கன்னடனை எதிர்த்து பேசவேண்டிய எம்பிக்கள், டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்து தமக்குள் விளையாடிகொண்டிருக்கின்றார்கள்.





 








[caption id="" align="aligncenter" width="436"]Stanley Rajan's photo. நவீன காவேரி கொண்டான் விஸ்வேஸ்வரய்யா.[/caption]











Stanley Rajan's photo.









தமிழக சட்டசபையும் என்ன விவாதிக்கின்றது என தெரியவில்லை, இதே போயஸ்கார்டனுக்கு குடிதண்ணீர் இல்லை என்றால் சும்மா இருக்குமா கோட்டை? ஆளாளுக்கு கடல் சிப்பியிலாவது அள்ளிகொண்டு ஒடமாட்டார்களா?


டெல்லியில் முழங்கி கேட்க ஒரு திறமையான எம்பி இருப்பதாக கருத முடியுமா? எனக்கு தெரிந்த அத்தனை திறமையில் ஒருவரும் இல்லை


ஆக இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை, அதே நேரம் 15 வருடமாக டெல்லியில் மந்திரிசபையில் இருந்த அந்த கட்சியும் என்ன கிழித்தது என்றால் ஒன்றுமில்லை


ஜெயலலிதா வழக்கு என்றால், கனிமொழி வழக்கு என்றால் ராம்ஜெத்மலானி, பால் நரிமன் என ஓடிவந்து வழக்காடி வழக்கினை விரைவாக முடிக்க செய்யபடும் நாட்டில்தான், காவேரி வழக்கு 40 வருடமாக இழுத்துகொண்டிருக்கின்றது


கன்னடத்தில் காவேரி பிரச்சினை எழுப்பியவுடன் கை வைக்கபடுவது தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்தான், ஆனால் தமிழக நிலை அப்படியா? இன்னும் கன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொண்டாடுகின்றோம்


சரி ஒரு கன்னடன் அல்லது கன்னடத்தி இங்கே தமிழர் மனதில் வாழமுடிகின்றது, ஆளமுடிகின்றது ஆனால் தமிழருக்கு நீர்கொடுக்க மட்டும் கன்னடருக்கு ஏன் மனமில்லை? என கேட்டால் அங்கேயும் குரல்கள் கேட்கின்றன‌


எத்தனை லட்சம் தமிழர்கள் பெங்களூரிலும் மைசூரிலும் காவேரி நீர் குடிக்கின்றார்கள் தெரியுமா உனக்கு? கணக்கு சரியாவிட்டது சரியா? இப்படி பதில் வருகின்றது.


நதிகளை தேசியமயமாக்காவிட்டால் இதற்கு முடிவே கிடையாது, இன்னொன்றும் கவனிக்கதக்கது


தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை, அப்படி பெய்திருந்தால் அதனை கன்னடம் ஒளித்து வைக்க முடியாது, அது என்ன 570 கோடி ரூபாயா?, கண்டெய்னரில் கொண்டு செல்ல?


சில ஆண்டுகளாக அது சரியாக பெய்தது, சிக்கல் இல்லை. வந்த நீரை மேட்டூரை தாண்டி மீதமானதை கல்லணை திறந்து கடலுக்கு நாம்தான் விட்டுகொண்டிருந்தோம்


எல்லா ஆற்றுபடுகைகளும் மணல் இருக்கும் வரை, காய்ந்து கிடந்தாலும் ஊற்றெடுக்கும் தன்மை கொண்டவை, ஆனால் மணலையும் ஒட்ட அள்ளிய பின்பு நிலமை கடும் மோசமாகின்றது


காவேரியின் துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் நாம் அணைகட்டிவிட்டு, காவேரியின் கன்னட துணையாறுகளான கபினியிலும், ஹேமாவதியிலும் எப்படி கன்னடம் அணைகட்டலாம் என்றால் அது சரியான வாதம் அல்ல.


நம்முடைய காவேரியின் துணையாற்றிலும் அணைகள் உண்டு.


ஆனால் காவேரியில் நமக்கு நிச்சயம் உரிமை உண்டு, அதனை மீட்டெடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்கும், டெல்லியில் குரலெழுப்பும் பொறுப்பு எம்பிக்களுக்கும், நியாயத்தை செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் நிச்சயம் உண்டு.


நிலமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் இருபக்கமும் இழப்புகள் வந்தே தீரும், பாதிப்பு வராமல் முடியாது. அவர்கள் பாசன பரப்பு அப்படி பெருகிவிட்டது, நமக்கும் அதே அளவு பாசனம் உண்டு, கொஞ்சம் சிக்கலான பிரச்சினையே.


என்ன செய்ய? அவன் சுதாரித்த காலத்தில் நாம் எம்ஜிஆர் படங்களில் லயித்து கிடந்தோம், அவன் இன்னும் திட்டமிட்ட காலத்தில் நாம் டாஸ்மாக் கடை வாசலில் நின்றோம். பொய்களில் ஏமாந்துகொண்டிருந்தோம்


தஞ்சாவூர் குறுவை விளைச்சல் சுருங்கி கன்னட பொன்னி, மைசூர் பொன்னி, பெங்களூர் தக்காளி என அவர்கள் விளைச்சலை பெருக்கும் பொழுதெல்லாம் நாம் கண்டுகொள்ளவே இல்லை, கலைஞர், புர்ச்சிகள் வாழ்க என கோஷம் எழுப்பிகொண்டே இருந்தோம்


நமது விழிப்புணர்வினை பொறுத்தே நன்மை அமையும், ஜெயலலிதாவினை ஆதரித்து பாஜவிடம் டெல்லியில் கோரிக்கை வைப்பதை விட, கலைஞரை ஆதரித்து அவர் மூலம் டெல்லியில் ராகுலிடம் ஆதரிப்பதை விட நேரடியாக பாஜகவையொ அல்லது காங்கிரசையோ இம்மாநிலம் ஆதரித்தால் முடிந்தது விஷயம்.


இவர்கள் இருவரால் ஒருநாளும் இம்மாதிரி தேசிய பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவரவே முடியாது, நிச்சயமாக முடியாது.


தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரும்பொழுது இதற்கொரு முடிவு வரலாம், ஆயினும் மேட்டுர் தாண்டி தமிழகம் காவேரியினை தேக்கவேண்டிய அவசியமும் உண்டு.


ஒரு காலம் இருந்தது, அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை, ஆடிமாத காவேரி அப்படியே கிரிஸ் கெயில் போல பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும்


உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம், மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடுகொடுக்கவேண்டுமாம், இது திப்பு சுல்தான் காலத்தில் ஆங்கிலேயர்களால் கடுமையாக தூண்டிவிடவும் பட்டது.


திப்புவின் சில நடவடிக்கைகளுக்கு அதுவே காரணம் ஆயிற்று, மழை பெய்கிறது வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம்


பின்னாளில் மைசூர் திவானாக விஸ்வேஸ்வரைய்யா வருமளவும் அது தொடர்ந்திருக்கின்றது, பெரும் கட்டட பொறியாளரான அய்யர்தான் அணைகட்டினால் இந்த நஷ்ட ஈட்டை தடுக்கலாம் என ஐடியா கொடுத்தவன், அதன் பின்னே கிருஷ்ணராஜ சாகர் கட்டபட்டது, மேட்டுரும் கட்டபட்டது.


அந்த விஸ்வெஸ்ரய்யா தான் கன்னடத்து லி குவான் யூ, அம்மாநிலத்தின் இன்றைய எழுச்சிக்கு அவர்தான் அடிக்கல், சிற்பி எல்லாம்.


அதன் பின் அவர்கள் விவசாய நிலங்களை பெருக்கிகொண்டார்கள், துணை ஆறுகளில் எல்லாம் அணைகட்டிகொன்டார்கள். விவசாயத்தை பெருக்கி கொண்டே வந்தார்கள்.


நாமோ சினிமா பின்னால் சென்று, மாநிலத்தை சீரழித்து விவசாயத்தை கைவிட்டு விட்டே வந்தோம், அது வறண்ட பகுதிகளில் கதறி கைவிடபட்டபோது தெரியவில்லை, காவேரி கரை என்றவுன் முழுதாக தெரிகின்றது


அதாவது உடை களையும் வரை தெரியவில்லை, உள்ளாடையுடன் நிற்கும்போது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அதுவும் களையபடும் நேரம் இது,


எந்த முப்பாட்டன் தஞ்சாவூரில் காவேரி வெள்ளத்தால் நஷ்டம் என கொடிபிடித்ததோ, அதே வாரிசுகள் இன்று நீரை கொடு என கொடிபிடித்து போராடுகின்றன, கால விசித்திரம்.


ஒரு அறிவாளியினை கொண்ட சமூகம் எப்படி செழிக்கும் என்பதற்கு விஸ்வேஸ்ரய்யரின் கன்னடமும், சினிமா பின்னால் சென்ற சமூகம் எப்படி சீரழியும் என்பதற்கு தமிழகமும் சாட்சி.


கல்லணை கட்டி தமிழன் சாதிக்க ஒரு காலம் இருந்தது, பின் அய்யர் அணைகட்டி சாதிக்கவும் ஒரு காலம் வந்தது, மறுபடியும் ஒரு தமிழன் அந்த வரலாற்றினை திருப்ப வராமலா போய்விடுவான்


நிச்சயம் வருவான், அதற்கு முன்பு இந்த சினிமா அழிச்சாட்டியங்களை விரட்டி தமிழகத்தை தயாராக வைத்திருப்பது நமது பொறுப்பு.


திரும்பிகொண்டே இருப்பதுதான் வரலாறு, ஒருவன் நிச்சயம் வருவான்


அடேய்...அது சீமான் என எவனாவது சொன்னால் அப்படியே தூக்கி கிருஷ்ண ராஜசாகர் அணையில் கொண்டு........






சிதறல்கள்

மோனோ ரயிலுக்கு பதில் அதிவிரைவுப் பேருந்து! - அன்புமணியின் அட்வைஸ்


சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக‌ பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,


இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்


அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?


இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்


அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.


மோனோ ரயிலுக்கு பதில் அதிவிரைவுப் பேருந்து! - அன்புமணியின் அட்வைஸ்


சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக‌ பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,


இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்


அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?


இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்


அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.


சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக‌ பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,


இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்


அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?


இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்


அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.






குஜராத் அணைதிறப்பு நிகழ்வில் வெள்ளத்தில் சிக்க இருந்த கேமரா மேன்களை கவனமாக எச்சரித்து காப்பாற்றினார் மோடி


எங்கு சென்றாலும் பிரதமரின் கவனம் கேமரா மேன்களின் மீதே இருக்கின்றது, ஒரு கணமும் அவர்களை விட்டு அவர் பார்வையினை திருப்புவதே இல்லை, இதோ இங்கு கூட அவர்தான் முதலில் ஆபத்தினை எச்சரித்திருக்கின்றார், நல்லது.


அதே கவனம் எல்லோர் மீதும் இருந்தால் இன்னும் நல்லது


 

Tuesday, August 30, 2016

பனம்பழம் பால் தயிர் கலந்த புதிய பனம் யோகர்ட்




பனம்பழம் பால் தயிர் கலந்த புதிய பனம் யோகர்ட் எனும் பானம் வட இலங்கையில் அறிமுகம், மிக சுவையாக இருப்பதாக மக்கள் கருத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டம்.


மிஸ்டர் குமரி ஆனந்தன், உங்களுக்கொரு வேலை கிடைத்துவிட்டது, இதனை தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகபடுத்துங்கள், பனம் பொருளுக்கான உங்கள் போராட்டம் குறிப்பிடதக்கது.


இல்லை என்றால் பனைபொருள் தொடர்பான முதல் போராளி நானே என அந்த சைமன் அழிச்சாட்டியம் தொடங்கிவிடும், நாளையே பனம்பழமும் தயிருமாக கிளம்புவார் பாருங்கள்.





சொல்லமுடியாது அதற்கு மேலும் சென்று பனையேறும் கோலத்தில் முறுக்கு தண்டு, அருவாபெட்டி, பாளை அருவாள் சகிதம் போஸ் கொடுப்பார்,

அதனை சகிக்கமுடியாது, எங்கிருந்தாலும் வந்து எங்களை காப்பாற்றுங்கள்.







என் எஸ் கிருஷ்னன் : தமிழகத்து சார்லி சாப்ளின்


nsk


நெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள்.


அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.


நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்.


வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்


தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் அவரும் வந்தார். எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதிதான் என்.எஸ்.கேவிற்கும் முதல்படம்.


அதுவரை தமிழ்சினிமா சீரியஸ் பாடலாக செல்லும், சிரிப்பு என்று பெரிதாக இருக்காது, அந்த சிரிப்பு காட்சிகளை சிந்திக்கும் விதத்தில் சொல்லும் நுட்பத்தை முதன் முதலில் தொடங்கியவர்தான் என்.எஸ் கிருஷ்ணன்


இன்று காமெடிகள் என்பது குடிப்பது, இரட்டை அர்த்தம் , மகன் தாயினை மிரட்டுவது, புனிதமான ஆசிரியர்களை கேவலபடுத்துவது, கடவுளை கலாய்ப்பது என தலைகீழாக திரும்பிவிட்ட காலம், அப்படி ஆகியிருக்கும் காலத்தில் கலைவாணரின் சிந்தனைகள் சுகமான நினைவுகளை கிளறுகின்றன‌


அவரது காமெடி சிந்திக்க வைத்தது, யார் மனதினையும் புண்படுத்தாமல் அது சிரிக்க வைத்தது. எது மூடபழக்கம், எது சிந்தனைக்குரியது என்பதை மிக அழகாக எதார்த்த காட்சிகளில் கொண்டுவந்தவர் அவர்.


அவரது புன்னகைகான முகமும், துடுக்கான பேச்சும், கலகலப்ப்பான சுபாவமும் அவருக்கு தனி இடத்தை பெற்று கொடுத்தது, குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தார்.


இரண்டாம் மனைவியாக கட்டிகொண்ட மதுரம் வந்தபின் இன்னும் அவரது படங்களுக்கு தனி மவுசு இருந்தது, அவரது பாடல்களும், அவரின் குரலும் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியா அடையாளமாயிற்று, புகழின் உச்சிக்கு சென்றார்


அது தகுதியானதும் கூட, பலமுறை பார்த்தாலும் இன்றும் பொருந்தகூடிய அட்டகாசமான நடிப்பு நுட்பம் அது, கலகலப்பான முகத்துடன் அனாசயாமக கடந்தார் அவர்.


சில படங்களை இயக்கவும் செய்தார், ஏராளமான பாடல்களை சொந்தமாகவும் எழுதினார். அக்காலத்திலே சம்பாதித்து குவித்தவர் அவர். ஆனால் அள்ளிகொடுப்பதில் நிறைய அவருக்கு நிகர் அவரே


அன்றைய காலத்தில் அவரிடம் உதவிபெறாதவர்கள் குறைவு, அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றார். அது ஒரு கட்டத்தில் அவரை திவாலாக்கும் நிலைக்கும் சென்றபின்னும் அவர் மாறவில்லை, பின் சம்பாதித்துகொண்டார்.


திருட வந்தவனுக்கு சோறுபோட்டு அவர் வேலை கொடுத்த கதைதான் பின்னாளில் ஆனந்தம் படத்தில் வந்தது, அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அது.


அவர் தருமம் எனும் பெயரில் வருமான வரியினை மறைக்கின்றார் என சந்தேகபட்ட அதிகாரி, மாறுவேடத்தில் பொய் மகள் திருமணம் என கைஏந்தி நின்றதும், அப்போது அள்ளிகொடுத்த என்.எஸ்.கேவிடம் கண்கலங்கி, நீர் கர்ணன் அய்யா என கண்ணீர்விட்டு, இனியாவது ஒரு கணக்கு வையுங்கள் என சொன்னதும் அவரின் இளகிய மனதிற்கு எடுத்துகாட்டுகள், நடந்த உண்மை இது


இறுதிகாலத்தில் தன்னிடம் மருந்துவமனையில் பணகட்டுடன் சந்தித்த எம்ஜிஆரிடம் சில்லரையாக கொடு ராமச்சந்திரா, நிறைய பேருக்கு கொடுக்கலாம் என சொன்ன மனம் அவருடையது.


இப்படி ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு, மதுரம் அவரிடம் மயங்கியதே அறிமுகம் இல்லா மதுரத்திற்கு அவர் அவசரத்தில் உதவியதால்தான், அந்த நன்றி காதலாயிற்று.


சீர்திருத்த கருத்துக்களை சொன்னாலும் காந்தி மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, நாகர்கோவிலில் அன்றே காந்தி நினைவுதூண் நிறுவியது அவரே


ஒரு மனிதனுக்கு வாழ்வு வரும்பொழுது கூடவே சோதனைகளையும் அனுப்புவது இறைவனுக்கு பிடித்தமான ஒன்று, அதுவும் கலைஞர்கள் ஜாதகம் அப்படியானது.


அவருக்கு விதி லட்சுமிகாந்தன் உருவில் வந்தது, ல்ட்சுமி காந்தன் சினிமா பத்திரிகை நடத்தினார், அதாவது இன்றைய கிசுகிசு கசமுசா பத்திரிகை செய்திக்கெல்லாம் அவர்தான் முப்பாட்டன்.


பத்திரிகை செய்தி எனும்பெயரில் பலரை மிரட்டிகொண்டிருந்தார், பணம் வசூலித்துகொண்டிருந்தார் என அவர் மீது ஒரு சலசலப்பு இருந்தது


அக்காலத்தில் உள்ளவர்கள் கிசுகிசுவிற்கு அஞ்சியிருக்கின்றனர், சில சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன, அவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள்.


சர்ச்சை நடக்குபொழுது அந்த லட்சுமிகாந்தன் கொல்லபட்டார், பழி தியாகராஜ பாகவதர் மீதும் திட்டத்திற்கு உதவியதாக என்.எஸ் கே மீதும் விழுந்தது, அது பிரிட்டிசார் ஆண்ட காலம், யாரும் தப்பமுடியாது.


இன்று இருப்பது போல நடிகன் கார் ஏற்றி கொன்றுவிட்டு அசால்ட்டாக வெளிவருவது, பணத்தினை கொடுத்து காரியம் முடிப்பது எல்லாம் பிரிட்டிசார் காலத்தில் இல்லை.


வழக்கு நடக்கும்பொழுது சிறைவைக்கபட்டார் கிட்டதட்ட 3 ஆண்டு கால சிறைவாசம், திறமையான அக்காலத்து ராம்ஜெத்மலானியான வழக்கறிஞர் எத்திராஜின் வாதத்தில் குற்றமற்றவர் என விடுதலையானார் என்.எஸ் கிருஷ்ணன்


அந்த இடைவெளிக்கு பின் தியாகராஜபாகவதர் சரிந்தார், ஆனால் என் எஸ்கே பழைய இடத்தினை பிடித்தார், கலைவாணர் பட்டமும் அதன் பின்புதான் வழங்கபட்டது,நல்ல தம்பி போன்ற படங்களை அதன் பின்புதான் கொடுத்தார்.


திடீரென நோயில் விழுந்தார், அது கன்னத்து புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள், பல் பிடுங்கிய இடத்தில் நிற்காமல் வந்த ரத்தம் அவர் உயிரை பிடுங்கிற்று


சாகும் பொழுது அவருக்கு வயது 49.


தமிழ் சினிமா உலகம் கோஷ்டி சண்டைக்கு பெயர்பெற்றது, அவ்வுலகத்தில் எல்லோருக்கும் பிடித்தமான, எல்லோரும் பழககூடிய ஒரு நடிகன் இருந்திருக்கின்றான் என்றால் அது நிச்சயம் என்.எஸ்.கே ஒருவர்தான்


சென்னையில் அவருக்கு சிலையும் உண்டு, அவர் பெயரில் அரங்கமும் உண்டு


மதுரத்துடன் அவர் செய்த காமெடிகள் காலத்தை கடந்தவை, அவரின் பாடல்கள் இன்றளவும் நினைவுக்கு வருபவை காரணம் எதார்த்த வாழ்வின் பாடல் அது


"எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்"
"கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல" போன்ற பாடல்கள் மாத சம்பளம் வாங்குவோரின் நிரந்தர கானம்.


எத்தனையோ விஷயங்களை ரசிக்கதக்க விஷயத்தில் சொன்னவர், சிரிப்பாக சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்.


இயல்பாக வரும் பிறவி ஞானம் என ஒன்று உண்டு, அது அவருக்கு, எம் ஆர் ராதா, பாலையா , நாகேஷ் போன்ற நடிகர்களுக்கு வாய்த்திருந்தது, அதுதான் அவர்களை உயர்த்தி காட்டியது.


தமிழ் சினிமாவில் சிரிப்பு காட்சிகள் இருக்கும் வரை, சிந்தனை கருத்துக்கள் வரும்வரை என்.எஸ் கிருஷ்ணனும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.


நாகர்கோவில் செல்லும்பொழுதெல்லாம் அந்த தெரு, அந்த டென்னிஸ் கோர்ட், அந்த வடசேரி சந்தை என அந்த இடங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அவர் நினைவே வரும்.


வடசேரி சந்தையில் அக்கால மாட்டுவண்டி வியாபாரிகளிடம் துண்டு கருப்பெட்டி வாங்க வந்து சிரிக்க வைப்பார் என்பது அக்காலத்தவர்கள் சொல்ல கேட்டது, அப்பொழுதே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள்.


இன்று அவரின் நினைவுநாள், அந்த தமிழகத்து சார்லி சாப்ளின் நினைவுக்கு வருகின்றார்


மறக்கமுடியா நினைவுகள் உண்டு


அண்ணாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்.எஸ்.கே, எதிர் வேட்பாளர் ஒரு காங்கிரஸ்காரர் மருத்துவர். பிரச்சாரத்தில் கடுமையாக டாக்டரை புகழ்கின்றார், அவர் படிப்பென்ன, அவர் கைராசி என்ன? அவர் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை என பெரும் பாராட்டு


சொல்லிவிட்டு கேட்கின்றார், "சொல்லுங்க டாக்டர் எப்படி?" எல்லோரும் சொல்கின்றார்கள், "சொக்க தங்கம், எங்களுக்கு கிடைத்த வரம்"


"புரிகிறதல்லவா, அவரை சட்டசபைக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்து கொள்ளுங்கள், உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அண்ணாவிற்கு மருத்துவம் தெரியாது அவரை சட்டசபைக்கு அனுப்பி விடுங்கள்.."


இதுதான் என்.எஸ.கே, யார் மனதனையும் புண்படுத்தாமல், புன்னகை பூத்த முகமாய் வாழ்வினை கடந்து சென்ற, எல்லோரையும் சிரிக்க வைத்த பெரும் கலைஞன்,


மறக்கமுடியாத கலைஞன். அந்த தமிழகத்து சார்லி சாப்ளின்





கபாலி : பாகம் 2 ?

சந்தணத்தை பலமுறை பூசுவார்கள், சிலவற்றை இரண்டாம் முறை பூச அசாத்திய தைரியம் வேண்டும், அதிலொன்று கபாலி


கபாலி இரண்டாம் கதை எப்படியும் இருக்கட்டும், இரண்டாம் பாகம் எடுக்கபடுவதாக வரும் அறிவிப்பு சுவாரஸ்யமானது.


ரஜினி இளைய மகள் சவுந்தர்யா மூலம் எடுக்கப்ட்ட படம் கபாலி, அதனடுத்து ரஜினியின் வாழ்க்கை வரலாறை வேறு எடுப்பதாக சொல்லிகொண்டிருந்தார்,




இளையமகள் ஒரு படம் எடுத்தால் மூத்த மகளும் ஒன்று எடுக்கவேண்டும் அல்லவா?


இல்லை என்றால் என்ன மகள்கள் தந்தைக்கு ஆற்றிய உதவி?


மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனுஷ் இருக்கும்போது அவரை மீறி எப்படி? மகள் எடுத்தால் என்ன? மருமகன் எடுததால் என்ன?, இதோ கபாலி இரண்டாம் பாகம் என தனுஷ் கிளம்பிவிட்டார்.


இவ்வளவு நாளும் ரஜினியினை அனுதினமும் பார்த்தவர்தான் தனுஷ், இபொழுது மட்டும் அவரை வைத்து தயாரிக்கும் ஆசை எங்கிருந்து வந்ததோ கபாலீஸ்வரனுக்கே வெளிச்சம்.


அதுவும் கபாலியினைத்தான் எடுக்கவேண்டும், அதுவும் ரஞ்சித் தான் இயக்கவேண்டும் என அடம்பிடிப்பது ஏன் என எனக்கு புரியவில்லை, உங்களுக்கு புரிந்தால் நல்லது.


ஒருவேளை முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பெரும் வெற்றியாக்கி பழிதுடைப்போம் என கிளம்பிவிட்டார்களோ தெரியாது, பொதுவாக ரஜினி படம் இரண்டாம் பாகம் வராது, அவர் விரும்புவதில்லை. இல்லையென்றால் எத்தனையோ படங்கள் முன்பே வந்திருக்கும்,


பாபாவிற்கு கூட வரவில்லை


ஆனால் பாபா கபாலி அளவு இம்சை இல்லை என்பதால் களங்கம் துடைக்க அவசியம் இல்லாமல் இருக்கலாம்.


சரி இவர்கள் ஏதும் செய்யட்டும், ஆனால் மலேசிய நிலை அவ்வளவு சுமூகமாக இல்லை, மலாய்மொழியில் ஓடவிடபட்ட கபாலி மொத்தமே 30 நிமிடங்கள்தான் ஓடுகின்றதாம், வன்முறை, குரோதம் என பலத்த ஆட்சேபனை. மலேசியாவில் கபாலி2 என்பது கொஞ்சம் சிரமத்திற்குரியது


ஆனால் சினிமாதானே மறுபடி ரஜினி சிறையிலிருந்து வெளிவந்து, ரவுடிசம் விட்டு தாய்லாந்து புத்தர் கோயிலில் சாமியாரா இருப்பது போல கதையினை அமைக்கலாம். ராதிகா ஆப்தே பற்றி வரும் செய்திகள் ரஜினி இமேஜூக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் மாலைபோட்டுவிடலாம்.


சாமியார் வேடத்தில் ரஜினி "விவேகானந்தர் காவி உடுத்தியதும் அரசியல், சில சாமியார்கள் காவி கழற்றியதும் அரசியல்.." என வசனங்களை எதிர்பார்க்கலாம்.


நிச்சயமாக புத்தர் பக்கம் அம்பேத்கர் படம் பல இடங்களில் வரும்,


சில இடங்களில் சாமியார் ரஜினி சுருட்டு குடிக்கலாம், ஏதும் யாரும் சொன்னால், "நான் சுருட்டு குடிக்கிறது உனக்கு பொறுகலண்ண்ணா குடிப்பேண்டா..., பார்க்க முடியலண்ணா சாவுடா..." என வசனம் வரலாம்.


எப்படியும் எடுக்கலாம் ஏதுவும் செய்யலாம். எது செய்தாலும் பார்க்க 4 பேர் ரெடி. காரணம் ரஜினி


மகள்களுக்காக இருமுறை ரஞ்சித்திடம் தன்னை பலிகொடுக்கும் ஒரு வகையான நிலை அவருக்கு


ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால், ரஜினிக்கு இரு மகள்கள் மட்டுமே, லதா ரஜினிகாந்திற்கு இப்படிபட்ட ஆசை வராமல் இருக்க அந்த இமயமலை பாபாவோ அல்லது ராகவேந்திரரோ அருள்புரியட்டும்.



மலேசிய சுதந்திர தினம் : 31 ஆகஸ்ட்



Image may contain: sky, skyscraper and outdoor


நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு விட்டது.


ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்


மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.


இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.


அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை.


மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள்.


வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.


ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.


இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.


சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.


விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது


அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.


தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள்.


எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.


அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.


உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும்.


அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.


ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.


இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.


அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை


மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது.


எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.


மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே


உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.


எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.


நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ


அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள். எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.


ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.


அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் மலேசியர்கள் கொஞ்சநாளில் தாயகம் திரும்புகின்றனர், காரணம் பணமதிப்பு பெரும் வித்தியாசமில்லை, ஒரே வித்தியாசம் குளிர்ம்ட்டுமே.


நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர். ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.


அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.


மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.


வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும். குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?


பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்


எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.


அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.


நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.


இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.


எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.


அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.


நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.


எனக்கு தெரிந்த ஒரு பெரிய மனிதர் உண்டு, அவரது வாழ்வு பெரும் வரலாறு, அசாத்தியமான ஆச்சரியங்களை கொணடது, அவர் ஒரு சுயசரிதை எழுதினாலே அது பெரும் வரவேற்பினை பெரும்.


90 ஆண்டுகளுக்கு முன்பு 1 வய்து குழந்தையாக மலேயாவிற்கு கொண்டுவரபட்ட குழந்தை அவர், இங்கு தோட்ட தொழிலாளியாக வளர்ந்து பிரிட்டிசாரிடம் கல்வி பயின்றார். 1940 களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரட்டிய படையில் அவர்தான் வயதில் சிறியவர், அப்படையில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக‌ போராடியவர்.


நேதாஜியோடு பழகி இன்றுவரை வாழும் வெகுசிலரில் அவரும் ஒருவர்.


பின்னர் ஜப்பான் படை தோற்கவும், பிரிட்டிசாரின் விசாரணைக்கு சென்ற இடத்தில் போலிசாக பணி அமர்த்தபட்டவர்.


அவரது திறமை அவரை உச்சம் கொண்டு சென்றது. கம்யூனிச போராளிகள் காலத்தில் உயிரை பணயம் வைத்து போராடியவர். பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.


காமராஜர் மலேசியா வந்தபொழுது 1 வாரம் அவருக்கு பாதுகாவலராக இருந்தவர்.மலேசிய தமிழர்களில் காவல்துறையில் பெரும் உச்சமான பதவி வகித்தவர், உலக அளவில் பெயர் பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்.


இவ்வளவு இருந்தும் துளியும் கவுரவம் கிடையாது, யாழ்பாண தமிழர்களுடன் பழகியதால் ஆங்கில கலப்பின்று மகா சுத்தமான தமிழில்தான் பேசுவார்.


கபாலி படமெடுத்த ரஞ்சித் மட்டும் அவர் கையில் சிக்கினால் அவ்வளவுதான், காரணம் கபாலியில் வரும் வீரசேகரன், டோனி லீ, கபாலி போன்ற ரவுடிகளை நிஜவாழ்வில் ஓட விரட்டிய கமிஷணர் அவர். டைரக்டர் ரஞ்சித் எல்லாம் அவர் முன்னால் பேசினால் பெரும் அவமானம் நிச்சயம்.


இந்திய பெண்ணை திருமணம் செய்ததால் இன்று தமிழ்நாட்டு கிராமம் ஒன்றில் முதியோர் இல்லம் நடத்தி தன் காலங்களை அமைதியாக கழித்துகொண்டிருக்ககின்றார்


அவரிடம் பேசும்பொழுது அங்கு வாழ்ந்துவிட்டு இங்கு வாழ சிரமாக இல்லையா? இங்கிருந்து வெளிநாடு சென்றவர்கள் இங்குவர விரும்புவதிலையே உங்களால் எப்படி என கேட்டால் சொல்வார், "அது வேறு நாடு அதன் அமைப்பு, யதார்த்தம் அப்படி. இது வேறுமாதிரியான நாடு இதன் தன்மை வேறுமாதிரி, இரண்டையும் குழப்ப கூடாது.


இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்.


இரு நாடுகளை ஒப்பிட்டு பார்க்காதே அது சரியல்ல, சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌.


ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்?


அவர் சொல்லிகொண்டிரும் போதே அவர் வீட்டு அலமாரியில் உள்ள மலேசிய கொடி கம்பீரமாக தெரியும்.


உண்மைதான் பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது.


பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.


ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று நாடுகளை விட முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்.


அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்," நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை" என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்


சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.


தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்.


மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.


அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.


எனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, காரணம் ஜெயபிரதா அப்பாடலில் நடித்திருக்கின்றார.















தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்...




தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : செய்தி


இது என்ன அதிரடி மாற்றம்?, வழக்கமான செய்தி, ஏதும் அந்த கட்சிக்காரர்களிடம் கேளுங்கள், ஆளுநர் சும்மா இருந்தால் எப்படி?, அவருக்கு வேலை கொடுக்கவேண்டாமா என்பார் ஒருவர்


இன்னொருவர் "ஆளுநருக்கே வேலை கொடுத்து ஆளபிறந்த நாயகி..." என தொடங்கிவிடுவார்கள்.





சரி முடிவெடுப்பது முதல்வர் , அமர்த்துவதும் அடித்து விரட்டுவதும் முதல்வர், இதில் ஆளுநர் எதற்கு? எல்லாம் வீண் சம்பிரதாயம்.

என்றாவது ஆளுநர் இவரை ஏன் மாற்றுகின்றீர்கள்? என்ன குற்றம் கண்டீர்கள்? தவறான ஆளை ஏன் பரிந்துரைத்தீர்கள் என கேட்டாரா? இனி கேட்பாரா? அல்லது கேட்கத்தான் முடியுமா?

ஒரு ரப்பர் ஸ்டாம்பு செய்யும் வேலை இது, சட்டத்தில் இடமிருந்தால் இதனை சபாநாயகர் தனபாலே செய்துவிடுவார்.

சட்டமன்ற கூட்டதொடரில் ஆளுநர் உரை வாசிக்கின்றார், எதற்கு சம்பிரதாயத்திற்கு ஒரு உரை. இதனை பன்னீர் செல்வமே வாசிக்கலாம். "யார் தருவார் இந்த அரியாசனம்...." என ஒரு பாடலாவது வரும்.

தமிழக பல்கலைகழகங்களுக்கு எல்லாம் ஆளுநர்தான் வேந்தர். எந்த பல்கலைகழக ஊழலை, கொள்ளையினை கண்டித்திருக்கின்றாரா? பல்கலை கழக தரம், கல்லூரி செயல்பாடு, கல்விதரம் பற்றி ஒரு அறிக்கை படிக்கின்றாரா? ஒன்றுமே இல்லை

பட்டம் வழங்கும் விழா என்றால் மட்டும் வருவார், ஏன் அவ்வளவு கொட்டிபடிக்கும் மாணவர்கள் பட்டம் வாங்கமலா ஓடிவிடுவார்கள். அந்த வேந்தர் பதவியால் தமிழ பல்கலைகழகங்களுக்கு அவர் செய்ததென்ன?

எத்தனை பல்கலைகழகங்கள் சிக்கலில் மாட்டும், அன்னார் வேந்தராக என்ன செய்தார்?

தமிழக பிரச்சினைகள் பற்றி என்றாவது அவர் பேசியிருகின்றாரா? ஏதும் ஒரு வார்த்தை அல்லது மத்திய அரசுக்கு அறிக்கை? ம்ஹூம்.

பின்னர் ஏன் ஒரு பதவி?, அவருக்கொரு மாளிகை?, அவருக்கொரு பெரும் செலவு?, ஓய்வுபெற்ற அரசியல்வாதிகள் சொகுசுவாழ்க்கை வாழும் பதவியா அது? அதற்கொரு முதியோர் இல்லம் போதாதா?

அண்ணா அன்றே சொன்னார், "ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா தம்பி?"







ஏமாற்று விளம்பரங்களில் நடித்தால் தண்டனை...

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா : பாராளுமன்ற குழு இன்று ஆய்வு


அதேதான், அப்படித்தான் நடிகர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பிடித்து உள்ளே போடுங்கள், இந்த நாட்டில் பெப்சி முதல் அப்பளம் வரை பிரபலமானது இப்படித்தான், பள்ளி முதல் கல்லூரிவரை அப்படித்தான். எதுவும் சொந்த சரக்கில் அல்ல.


அப்படியே நல்லாட்சி தருவதாக தேர்தல் நேரத்தில் நடித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி தவறி நிஜமுகம் காட்டும் நடிப்பு அரசியல்வாதி பிரபலங்களையும் அந்த பட்டியலில் இணைத்துகொள்ளுங்கள், இது நப்பாசைதான் ஆனால் தப்பான ஆசை அல்ல.




அந்த பிரபலங்கள் விளம்பரத்தில் 5 நிமிடம் நடிக்கின்றார்கள், ஆனால் இந்த அரசியல் பிரபலங்கள் சாகும் வரை மக்கள் முன் நடித்து ஏமாற்றிகொண்டே இருக்கின்றனர், இவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லையா?


ஏமாற்றில் என்ன வியாபார விளம்பரம் அரசியல் விளம்பரம்? எல்லாம் ஒன்றே.


வியாபார விளம்பர நடிப்பு பிரமுகர்களை விட . இந்த அரசியல் நடிக பிரமுகர்கள் மகா ஆபத்தானவர்கள்.
அப்படியே இயேசு பெயரில் விளம்பரம் செய்பவன், சிவலிங்க விளம்பரம் செய்து தியானம் பெயரில் ஏமாற்றுபவன் இப்படி எல்லா மத சாமியார் போதகர் நடிகர்களையும் பிடியுங்கள்


எனினும் நடிப்பவர்களுக்கு மட்டும்தான் தண்டனையா? அதனை பொறுப்பில்லாமல் உண்மை தன்மை தெரியாமல் ஒளிபரப்பும் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு தண்டனையும் இல்லையா?


ஆக விளம்பர கம்பெனிகளுக்கும், ஊடகங்களுக்கும் சேர்த்து செக் வையுங்கள், நடிகனை பிடிப்பேன் டைரக்டரையும் தயாரிப்பாளனையும் தியேட்டர்காரனை பிடிப்பேன் என்றால் அது எப்படி ஸ்ரீமான்களே, ஸ்ரீமதிகளே?



Monday, August 29, 2016

குட்டைப் பாவாடை அணியாதீர்......

இந்தயாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

ஆம், அவர்கள் எல்லோரும் நேர்ச்சை கட்டி, விரதம் இருந்தல்லவா இந்தியாவினை தரிசிக்க வருகின்றார்கள்?

இப்படிபட்ட அறிவிப்புகள் எல்லாம் மகா அவசியம்.

அவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சொல்கிறாராம்.

இன்னும் அதிகமாக வெளிநாட்டு பெண்கள் முழுக்க மூடிவரவேண்டும் அல்லது மொட்டை அடித்து மகா பயங்கரமான கோலத்தில் வரவேண்டும் .

அப்பொழுதுதான் இனி இந்தியாவில் பாதுகாப்பு என சொன்னாலும் சொல்வார்.

பிரதமரோ இரண்டு இன்னிங்ஸாக‌ உலகெல்லாம் சென்று எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என காலில் விழுந்து அழைக்கின்றார்.

இவரோ, அப்படி அணிய கூடாது, இப்படி அணிந்தால் எங்கள் நாட்டில் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு நாட்டு பெயரினை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சும்மாவே இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடில்லை என சர்ச்சை உண்டு.

இவரோ அதனை ஒப்புகொண்டபடி அறிக்கைவிட்டு கொண்டிருக்கின்றார்.

மோடிக்கு சனி நிச்சயமாக சாதக கட்டத்தில் வலுவாக இல்லை. அது நாடாளுமன்றத்தில் அவர் அருகிலே சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றது.

ராதிகா மகள் திருமணம் ....

ராதிகா மகள் திருமணம் என இந்த பத்திரிகைகள் எல்லாம் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை, பயங்கர இம்சைகள்.


இதில் சில பத்திரிகைகள் ராதிகா-சரத்குமார் மகள் திருமணம் எனும் அளவில் பிய்த்து எழுதிகொண்டிருக்கின்றன, பிரபலங்கள் எல்லாம் வாழ்த்தினார்களாம். அதில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும், இந்நாள் நடிகர் சங்க தலைவரும் வந்ததாக தெரியவில்லை,


ஒருவேளை அவர்கள் பிரபலம் இல்லாதவர்களாக இருக்கலாம்.





என்ன பிரபலங்களோ தெரியவில்லை, விஜயகுமார் மகன் போதையில் கார் ஓட்டி போலிசாரிடமே மோதியிருக்கின்றார். அவரை பற்றியும் அடுத்த தகவல் இல்லை, வரவும் வராது. அவர் பிரபலம் அல்லவா? இந்திய சட்டம் எல்லாம் செல்லாது.

இதே இன்னொரு ஏழை இப்படி போதையில் சிக்கி இருந்தால் கொலைமுயற்சி என சொல்லி காவல்துறை கடமையினை நிலை நாட்டி இருக்கும்.

இந்த திருமணத்தின் மகா முக்கிய பிரபலமான, மணப்பெண்ணின் தந்தை ரிச்சர்டு கலந்துகொண்டாரா இல்லையா? வாழ்த்து அனுப்பினாரா இல்லையா?, தந்தை சார்பில் யாருமில்லா திருமணமா இது?

மணப்பெண் தந்தையினை ஆசிவாங்க தேடினாரா இல்லையா? என்பது பற்றி எல்லாம் ஊடகத்தார் பேசமாட்டார்கள், நாமும் பேசகூடாது.





கொசுறு :


"பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கள்ங்கப்படுத்தாதீர்கள், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.


சூரியன் தானாக இயங்குகிறது.


பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் " : சசிகலா புஷ்பா மதுரையில் சீற்றம்




ஆக என் பின்னால் ஒருவரும் இல்லை, இல்லை என இவராக சொல்வதுதான் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றது , இவர் பின்னால் ஒரு "மண்ணும்" இல்லை என நம்பி தொலைப்போம்


அது சரி புஷ்பாக்கா ஐம்பெரும் பூதம் எல்லாம் இருக்க, "சூரியன் தானாக இயங்குகின்றது" என ஏன் குறிப்பிட்டு சொல்லவேண்டும், தமிழகத்தில் சூரியன் என்றால் என்ன, யாரை குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும் :)


சரி ஏதோ நடக்கபோகின்றது, அங்கே ஒரு சகோதரன் பேட்டி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல,


எப்படியோ தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் ம்ம்ம்ம்.. ஸ்டர்ட் மியூசிக்



சிறுவாணி தண்ணி எடுத்து.....



Image may contain: mountain, sky, outdoor, nature and water


காவேரியினை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது, இனி தானாக வந்து நானே காவேரி என ஒரு மழைக்காலத்தில் அது சொல்லாமல் அடுத்த சந்ததிக்கு அது தெரியபோவதில்லை, அதுவரை ஒரு கரண்டி மணலை கூட விடாமல் அள்ளும் தீவிரத்தில் தமிழகம் இருக்கின்றது இருக்கட்டும்


தமிழகத்தின் ஒவ்வொரு மாவடடத்திற்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு, கன்னியாகுமரி மாவட்ட மட்டி வாழை, செந்தொழுவன்,வேர்ப்பலா என அதன் சிறப்புகள் அப்படி. நெல்லை மாவட்ட நுங்கு, பனங்கிழங்கு சுவை அலாதியானது பின்னாளில் அது அல்வா ஊர் என அடையாளம் மாற்றிகொண்டது கால கோலம்.


அற்ப அல்வாவினை விட ஆயிரம் அற்புதமான சுவைகள் நெல்லைக்கு உண்டு, அம் மண்ணில் வளரும் அருகம்புல் சாறுக்கே சுவை அதிகம்.


அம்மண்ணில் விளைந்த அரிசியின் நீராகாரம் முன் கூட அந்த அல்வா நிற்க முடியாது.


தஞ்சாவூர் குறுவை அரிசியும், மதுரை மல்லியும், வைகை அயிரை மீனும் காலத்தில் தன் பெயரினை பதித்துகொண்டவை, சேலத்து மாம்பழம் தனிருசி என்பார்கள்


அப்படி கோவை எனும் கோயமுத்தூரின் தனிபெரும் அடையாளம் சிறுவாணி அற்றின் மிக சுவையான நீர் என்பதும் இடம்பெற்றுகொண்டது. அதன் வரலாறு வித்தியசமானது


உலகின் மிக சுவையான குடிநீர்ல் அதற்கு இரண்டாமிடம், முதலிடத்தை வழக்கம் போல ஐரோப்பியன் வைத்திருப்பதாக சொல்லிகொள்வான், இல்லாவிட்டால் அவமானத்தில் தண்ணீர் குடிக்காமல் செத்துவிடுவான், அவன் அப்படித்தான் பெருமை அப்படி.


ஆனால் சிறுவாணி தண்ணீரின் சுவையே முதல்தரமான சுவை என அடித்து சொல்கிறது உலகம்.


காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலை நெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆராய்சி முடிவெனினும், இன்றுவரை முழு தீர்வு கிட்டவில்லை. அது ஒரு வரம், இயற்கை கொடை என்றே முடிவாகிவிட்டது.


சிறுவாணி கோவைக்கு மேற்கே 30 கிமீட்டருக்கு அப்பால் ஓடும் நதி, அந்நீரின் சுவை தெரியுமே தவிர கொண்டுவருவது சிரமம், அதுவும் அது பவானியின் துணையாறு, ஆனாலும் பவானியில் கலந்தபின் அதன் சுவை காணாமல் போய்விடும்.


அன்று கோவையில் ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் பெயர் நரசிம்மலு நாயுடு, அவர்தான் சிறுவாணியில் அணைகட்டி மலையினை குடைந்து கோவைக்கு கொண்டுவரலாம் எனும் திட்டத்தினை முன்மொழிந்தார், முல்லை பெரியாறு அணையின் நுட்பம் அவருக்கு உந்துதல் என்பார்கள். எப்படியோ கோவை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் திட்டமிட்டவர் அந்த நாயுடுதான்.


ஆனாலும் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் வெள்ளையன் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக கொடுத்தான் அதுவரை 25 மைல் தேடிசென்று குடித்தவர்கள், அதன் பின் வீட்டிலே அமர்ந்து காலாட்டிகொண்டு குடித்தனர், பின்னாளில் சூலூர் ராணுவமுகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு.


அந்ந் சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சிதான் கோவை குற்றாலம் என்பது.


1960களில் அணை விரிவாக்கம் செய்யும்பொழுது கூட தமிழகத்தோடு ஒத்துழையினை நல்கியது கேரளம், ஆனால் வஞ்சகமாக முல்லை பெரியாறு கொள்ளவளவினை குறைக்க தமிழகத்தை வற்புறுத்தி வெற்றி கண்டது, அதன் பின் எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.


ஆனால் மக்களாட்சி அல்லவா, ஏதும் செய்து கொண்டிருப்பதாக மக்களிடம் காட்டாவிட்டால் என்ன ஆட்சி?,


அதுவும் மாநில நலன் என மொத்த மக்களையும் ஒரே புள்ளியில் ஏமாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மறுபடியும் முல்லை பெரியாரில் தொடங்கி ஆடிபார்த்தார்கள்.


அதில் தமிழகம் பக்கமே பலம் அதிகரிக்க கொஞ்சநாளாக அவர்கள் தூக்கம் தொலைந்தது, பரம்பிகுளம் ஆழியாற்றில் சர்ச்சை துவக்கினார்கள், அதிலும் வெற்றி இல்லை..


என்ன செய்ய? ஏய் தமிழகமே அன்று சிறுவாணி தண்ணீருக்காக முல்லை பெரியாற்றின் நீர் அளவினை குறைத்த நீ மறுபடியும் வென்றுவிட்டயா, வா அதிலே கை வைக்கின்றேன் என கிளம்பிவிட்டார்கள்.


அடப்பாடி வழியாக சிறுவாணி வரும் இடத்தில் அணை கட்டி விவசாயம் செய்யபோவதாக அறிவித்திருக்கின்றார்கள், கேரளா பற்றி எல்லோருக்கும் தெரியும்? எத்தனை நதிகள் அங்கு வீணாக கடலில் கலக்கின்றன, அவற்றில் எல்லாம் படகு வீடு கட்டி நீந்துவார்கள், அல்லது படகுபோட்டி நடத்துவார்கள். நீரிலே அமைந்த மாநிலம் அது


அவர்கள் சிறுவாணி நீரை எடுத்துத்தான் விவசாயம் செய்கிறோம் என்றால் மொத்த இந்தியாவே வாய்விட்டு சிரிக்கும்.


தமிழக தேர்தலில் தோற்று ஆங்காங்கு முக்காடு போட்டு துண்டுபீடி குடித்துகொண்டிருந்த கட்சிகள் எல்லாம், வேலை வந்திருச்சி என களம் இறங்கிவிட்டன.


தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என்பது இனி தெரியும், பார்க்கலாம். சுலபத்தில் கேரளம் வெற்றிகொள்ளமுடியாது, அது காய்கறி முதல் அரிசி வரை தமிழகத்தை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றது. வடகொரியா போல அதிரடி காட்டிவிட்டு , தேவையானதை வாங்கிவிட்டு அமைதியாகும் வாய்ப்பும் உண்டு, அரசியல் அப்படித்தான்.


கோவையிலும் சலசலப்பு கூடுகின்றது, காரணம் அவர்கள் அச்சுவையான நீரிலே வளர்ந்தவர்கள், எங்கு பயணம் சென்றாலும் அதனை கையில் கொண்டுசென்றே பழகியவர்கள். சிறுவாணி இல்லாத வாழ்வினை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.


மலையாளிகளுக்கு நாம் சொல்லவிரும்புவதெல்லாம அதுதான், உங்களுக்கு இல்லா நதிகளா? நீரா? செழுமையா?. அடிக்கொரு ஓடையும் எட்டுக்கொரு ஆறும் பாயும் வளம் உங்களது.


சிறுவாணியின்றி அமையாது கோவை , அதனை விட்டுவிடுங்கள், முன்னோர்கள் குடித்து சுவைத்த நீரை அவர்கள் சந்ததியும் குடித்து மகிழ விட்டுவிடுங்கள், அது அவர்கள் கலாச்சாரம், பெருமைக்குரிய பாரம்பரியம்.


அவர்கள் உணர்வில் கலந்துவிட்ட நதி அது, அதன் பெயரினை கேட்டாலே அவர்கள் முகத்தில் ஒரு பரவசமும், நன்றி உணர்வும் வரும். அப்படி அவர்கள் உதிரத்தில் கலந்துவிட்ட பெயர் அது.


இந்த கோவைக்காரர்களின் உரிமையும், அவர்களின் பெருமையுமான அருமைக்குரிய சிறுவாணியினை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள், அது நதி அல்ல, அவர்களை அங்கே வாழ வைக்கும் தாய்.















Sunday, August 28, 2016

தர்மதுரை : திரை விமர்சனம்

தர்மதுரை என்றொரு படம் வந்திருக்கின்றது, எத்தனாயிரம் மருத்துவர்கள் தேவைபடும் தேசத்தில்தான், எப்படியாவது எங்களை மருத்துவர் ஆக்குங்கள் என பச்சைமுத்து போன்றவர்களிடம் இம்மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள், என்பதை செவிட்டில் அறைந்து சொன்ன படம்,


இச்சமூகம் அப்படித்தான் நல்ல கல்விக்கு துடித்துகொண்டிருக்கின்றது, படம் பரவாயில்லை, பார்க்கலாம்.


ஆனால் படம் பார்த்தபொழுது எம் ஆர் ராதா நினைவுக்கு வருகின்றார்


மனிதர் தனக்கு பின் அற்புதமான நடிப்பினை வழங்க இரு வாரிசுகளை விட்டுத்தான் சென்றிருக்கின்றார், ஒருவர் ராதா ரவி, இன்னொன்று ராதிகா


கலையரசி எனும் பட்டத்திற்கு மிக பொருத்தமான நடிப்பு அவரது, அப்படி ஒரு உருக்கமான நடிப்பினை கொட்டி தீர்த்திருக்கின்றார், அவருக்கொரு விருது கொடுத்தே இத்தமிழகம் தீரவேண்டும், நிச்சயமாக சொல்லலாம் பெண் சிவாஜி


யாரோ சொன்னார்கள், முதல் மரியாதையில் ராதிகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? சந்தேகமே இல்லை சிவாஜியினை தூக்கி விழுங்கி இருப்பார்.


படத்தில் "உன்ன ஏதாவது செஞ்சிருவாங்கப்பா..எங்கயாவது போய் பொழைச்சிக்க.." என சொல்லும்பொழுது, சாப்பாட்டு தட்டில் ரம்பத்தை வைத்து கொடுக்கும்பொழுது மனதில் அந்த பாட்டியினை கொண்டுவருகிறார்.


அது எனக்கு தெரிந்த பாட்டி


இப்படித்தான் அவள் மகனும் விரும்பிய பெண்ணை மணந்து வந்தான், அவள் குடும்பத்தை பிரிக்கவந்தவள் என உடன்பிறந்தோர் விரட்ட, அவனும் குடிகாரனான். காரணம் அவர்களுக்கு சொத்து இருந்தது என அவர்கள் நினைத்துகொண்டார்கள்


அவனுக்கோர் மகனும் இருந்தான், அவன் கண் முன்னாலேதான் இப்படி விஜய்சேதுபதியினை அடிப்பது போல அடிப்பார்கள், அவர்கள் களைத்து ஓய்ந்தது அந்த தாய் இறுதியில் இப்படித்தான் சொல்லி அவனுக்கு தண்ணீர் ஊற்றுவாள்


"உனக்கு ஒண்ணும் தரமாட்டானுப்பா..நீ எங்கயாவது போய் பொழச்சிக்க..இவனுக உன்ன கொன்னுருவானுகப்பா...கண்ணுமுன்னால சாகத.."


அவன் அழுவான் "எனக்கு யார தெரியும்? நான் எங்கே போவேன், அப்பா இருந்தவரைக்கும் இப்படியா" என கதறி அழுவான்


அந்த வயதான தாயும் அழுவாள், அந்த சிறுவனும் அழுவான். "ஒரு நாள் உனக்கு விடியுமய்யா..." என அழுதுகொண்டே கஞ்சி ஊற்றுவாள் அந்த தாய், அவனோ அந்த கஞ்சியினை தன் அருகே இருக்கும் மகனுக்கு ஊட்டிகொண்டிருப்பான்.


"ராசா நீ படிச்சிட்டு எங்காவது போயிரு, இவனுகட்ட வாழமுடியாது.." என அவன் தன் மகனுக்கு சொல்லும்பொழுது பிஞ்சி வயதில் கண்ணீரை துடைத்துகொண்டு சரிப்பா என சொல்லும் அக்குழந்தை.


அதனை கேட்டு உடைந்து அழுவாள் அந்த பாட்டி


நான் நேரிலே கண்ட அந்த கிராமத்து பாட்டியினை தத்ரூபமாக கொண்டுவந்தார் ராதிகா


எல்லா கிராமங்களிலும் ஒரு வெளிதெரியாத சோககதை உறங்கி கொண்டிருக்கின்றது என்பார் பாரதிராஜா. அது மகா உண்மையும் கூட‌


இந்தபடமும் சில சோகமான உண்மைகளின் பாதிப்பாக இருக்கலாம்


கிராமங்கள் அப்படித்தான், சுத்தமான பாசமும் கிடைக்கும், உயிரெடுக்கும் வன்மமும் அங்கே தான் உருவாகும்,


அது உறவினர்களுக்குள்ளே உருவாகும் என்பதுதான் பெரும் விசித்திரம்.


ராதிகா முகம் காணும்பொழுதெல்லாம் அந்த பாட்டியே மனதில் வந்து போகின்றார், இந்த படத்தினை பார்க்காமலே இருந்து தொலைத்திருக்கலாம்

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி


வரலாற்றில் இருந்து பல பாடங்களை படிக்க முடியும், ஒருவனை வீழ்த்தவேண்டுமானால் அவன் உறவுகள் மூலம் அவனை அடிக்கவேண்டும், காரணம் அந்த உறவுகள் கொடுக்கும் மனரீதியான வலி அவனை தடுமாற செய்யும், குழம்பும் மனம் வலிமை இழக்கும், அவனை வீழ்த்துவது எளிது.


இன்று இஸ்ரேலிய மொசாத் செய்யும் பெரும் நுட்பமான வித்தை அது, பலமானவர்கள் குடும்பத்தில் குழப்பம் செய்து அவர்கள் சாதிக்கும் காரியங்கள் உண்டு.




இந்த ஞானத்தை அப்படியே பின்பற்றிவன் மாவீரன் அலெக்ஸாண்டர், உறவுகள் யாரையும் அவன் அண்டவிட்டத்தில்லை, எந்த உறவினையும் அவன் நம்பவில்லை


காரணம் அரசியல் அப்படியானது, நம்பினோர் செய்யும் துரோகம் மனதால் வலிக்கும், மனம் போனால் உடல் வீழும்


அதனால்தான் தான் சாகும்போதும் தன் அரசை 4 நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தானே அன்றி, தன் குடும்பத்திற்கு அல்ல, அவன் காட்டிய அந்த அரசியல் ஞானம் ஆச்சரியமானது.


தம்பியினை வைத்து அண்ணனை விழ்த்துவது, மகனை வைத்து தந்தையினை வீழ்த்துவது என வரலாறு எங்கும் இப்படியான துரோகங்கள் கொட்டி கிடக்கின்றன.


பதவி ஆசையோ இல்லை வேறு ஆசைகளோ அதற்கு துணைபோகின்றன, உலகெல்லாம் வென்று வந்த ராவணனை வரவேற்ற தம்பிதான், ராவணனை விட சிறந்த வீரன் வரும்பொழுது அவன்பின் சென்றான்


முடிவில் அண்ணனை அழித்து ஆட்சியும் பெற்றான்.


ராவணன் காலம் முதல் சட்டமன்றத்தில் கண்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி வரை வரலாறு பலரை காட்டுகின்றது.


இன்று வைகுண்டராஜனுக்கும் அதே போன்றதொரு அடி விழதொடங்கி இருக்கின்றது, அன்னார் எப்படி எதிர்கொண்டு வருகின்றார் என்பது காலத்தின் கையில்


ஒருவிஷயம் புரிகின்றது, யாரெல்லாம் சர்ச்சைகள் வரும் தொழில்களை செய்யும் மீடியா அதிபர்களோ அவர்களை குறிவைத்து கனைகள் வீசபடுகின்றன,


மீடியா இல்லா கொள்ளையர்கள் பி.ஆர் பழனியப்பன், ஆறுமுகச்சாமி போன்றோர் மீதெல்லாம் இப்பொழுது சர்ச்சையே இல்லை,


சகாயம் அறிக்கை என்ன ஆனது தெரியவில்லை, ஆறுமுகச்சாமி இருக்காரா இல்லையா தெரியவில்லை, ஆனால் அவரது மணல் லாரிகள் ஓடிகொண்டே இருக்கின்றன‌


புதிதாக ஒரு கட்சி வளரத்தான் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள், இப்பொழுதெல்லாம் புதிதாக டிவிசேனல் வந்தாலும் விரும்புவதில்லை.


பொதுவாக அரசியல்வாதிகள் சில வட்டங்களை போட்டு சிலரை வளரவிடுகின்றனர், அந்த வட்டத்தினை விட்டு அவர்கள் வெளிவர நினைக்கும்பொழுது அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றனர்.


ஆனால் அப்படி ஆண்டவனும் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் போட்டிருக்கின்றான், எல்லா மனிதனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உச்சகட்ட எல்லை என ஒன்று உண்டு, அதனை தாண்டினால் என்றும் சிக்கல்தான்


அவரவர் எல்லைக்குள் அவரவர்கள் நின்றால் ஒரு சிக்கலுமில்லை என்பதுதான் வாழ்க்கை தத்துவம்.


எப்படியோ கேப்டன் விஜயகாந்த் தெம்பாகும் நேரம் இது, அவர்தான் வைகுண்டராஜனை நேரடியாக கண்டித்த முதல் மற்றும் ஒரே அரசியல்வாதி, இன்றுவரை அவரே தான்


ஆனால் இன்னும் ஒன்றும் இதனைபற்றி சொல்லவில்லை, சொன்னால் இதுதான் சாக்கு என யாரும் சர்ச்சை ஆக்குவார்கள் என யோசிக்கின்றாரோ என்னமோ?



தமிழக அணைகள்.....

 

கபினி அணை கட்டபட்டது 1974, ஹேமாவதி அணை கட்டபட்டது 1979 இன்னும் சிறிதும் பெரிதுமாக கன்னடம் அணை கட்டியிருப்பது 1970க்கு பின்புதான்


அதுவும் கபினியும், ஹேமாவதியும் காவேரியின் துணையாறுகள், தமிழகத்து பவானியும், நொய்யலும் போல, காவேரி அல்ல. காவேரி மீது கட்டவில்லை துணையாறுகள் மீதே என அது தந்திரமாக கிளம்பியதும், தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றபின்பே


அதாவது தமிழகத்தில் கழக ஆட்சிகள் அழிச்சாட்டியம் ஆரம்பித்த பின்னர்தான். அந்த தொடக்ககாலத்தில் கலைஞர் என்ன கிழித்தார் என சொன்னால், கொஞ்சமேனும் சிந்தனை இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்கள்





இதனை கூட தெரியாத சில பதர்கள்தான் காங்கிரஸ் காலத்தில் கன்னடன் அணை கட்டினான், கலைஞர் காலத்தில் அல்ல என பல்லவியினை மாற்றி பாடுகின்றன‌

இதில் கலைஞருக்கு குறையாத பங்கு எம்ஜிஆருக்கும் உண்டு, அவர் செய்த தவறை இவர் சரி செய்யவில்லை, இவரின் தவறை அவர் தொடவில்லை, அப்படியே தொடர்ந்தாகள்.

வரலாற்றினை மாற்றமுடியாது செம்பூத்து பறவை கூட்டமே, கொஞ்சமாவது படித்துவிட்டு பேசுங்கள், அல்லது சும்மா இருங்கள்,

அவரே இதுபற்றி கனத்த மவுனம் காக்கும்பொது, அவரை மென்மேலும் சிக்கலில் இழுத்துவிடுவது நீங்களே, அவரை காப்பாற்றுவதாக சொல்லி அவரையே அடித்துகொன்டிருக்கின்றீர்கள்.

அப்படி கலைஞர் பக்தி காட்டவேண்டுமானால், அறிவாலய கழிவறை சுவற்றில் வெள்ளை அடியுங்கள், வண்ணம் தீட்டுங்கள்

இந்த சுவரில் அல்ல.





தமிழக அணைகளை பற்றி சொன்னால், ஏய் திராவிட துரோகி, இலை பொறுக்கி, தமிழ்நாட்டில் கலைஞர் கட்டாத அணையா, அவர் இல்லை என்றால் ஒரு அணையுமில்லை என ஒப்பாரி வைக்க ஒரு கூட்டம் கிளம்பி இருக்கின்றது


மேட்டூர் அணை, முல்லை பெரியாறு அணை என சுதந்திரத்திற்கு முற்பட்ட அணைகள் குறிப்பிடதக்கவை. அதன் பின் கட்டபட்ட பரம்பிகுளம் ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை அணைகளும் குறிப்பிடதக்கவை.


அதன் பாசன பரப்பும், அது தேக்கி வைக்கும் நீரும் அப்படியானவை.


அதன் பின் திமுக கட்டியதெல்லாம் சுத்தமாக திட்டமிடாத, ஏதோ காண்டிராக்டருக்கு வேலைகொடுக்கவே ஆரம்பிக்கபட்ட அணைகள்


உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட கொடுமுடியாறு அணையினை சொல்லலாம், அணை கட்டுவதற்கு முன்பு அப்பகுதி குளங்கள் நிரம்பிகொண்டுதான் இருந்தன, அணை கட்டியபின் என்னாயிற்று?


வந்து கொண்டிருக்கும் நீரை, அணை நிரம்பும் வரை குளங்களுக்கு நீர் இல்லை என அடைத்து கொள்வார்கள், எல்லா குளங்களும் காய்ந்து கிடக்கும், சரி இருக்கும் நீரை அனுப்புங்கள் என்றால் நோ..மழை வந்தால் மட்டும் திறப்போம் என்பார்கள்


மழை கொட்டினால் அணை திறக்காமலே குளங்களுக்கு நீர் ஓடி வந்து நிரம்பும், நீரை மறைக்கவா முடியும்? மழை கொட்டினால் அவ்வணையினை திறப்பார்கள், அது கடலுக்கு செல்லும்


சரி தேக்கி வைத்து கோடையில் தாருங்கள் என்றால் அணையின் நீர்மட்டம் பல்லை காட்டும், 10 லாரி தண்ணீர்தான் சேமிக்கமுடியும், அது குடிதண்ணீருக்கே போதாது


ஆக மழை வந்தால் திறந்துவிடவும், கோடைக்கு தேக்கி வைக்கமுடியாத அளவூ கொள்ளளவும் கொண்ட அணைகள் எதற்கு? மழை வந்தால் நிரம்பும் குளங்கள் பல நூறு வருட பாரம்பரியம் பொல தானாக நிரம்பிகொள்ளட்டம், இதற்கு ஏன் அணைகள்?


வைகையோ, காவிரி செழிக்கும் பட்சத்தில் மேட்டுரோ அதன் கொள்ளளவு அப்படி, அப்படி தேக்கலாம், அதன் தொலைநோக்கு பார்வை அப்படி.


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் அப்படியே


அறவே திட்டமிடமால் அவசரமாக 4 காண்டிராக்டர் பிழைத்துகொள்ள அனுமதிக்கபட்ட அணைகள்தான் கலைஞர் அரசு கிழித்தது


ஆளாளுக்கு வந்து விளக்குகின்றார்களாம்


இவர்கள் ஒரு மாதிரியானவர்கள், யாராவது அதோ தெரிகிறது பார் கல்லணை, அதனை கட்டியது கலைஞர் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல், காவேரியினை தடுத்த கலைஞரின் ஆற்றல் பாரீர் என கொஞ்சமும் வெட்கபடாமல் சொல்லிகொள்வார்கள்


கலைஞரோ, புரட்சி தலைவனோ, தலைவியோ அல்லது பன்னீர் செல்வமோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமல்ல, குட்டைக்கும் அணை கட்டி பிரச்சாரம் செய்யும் ஒரு மாதிரியான "தமாஷ்" பார்ட்டிகள்.

Saturday, August 27, 2016

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாகவும், தடுத்து நிறுத்தவேண்டு என்றும்கு திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.


காமராஜர் இருக்கும் வரை காவேரி சிக்கல் இல்லை, கலைஞர் முதல்வரான காலத்தில் கன்னடம் அணைகட்டும்பொழுது இப்படித்தான் அவரிடம் புகர் கொடுத்தார்கள், அவர் என்ன சொன்னார்?


"கன்னடம் எத்தனை அணையும் கட்டட்டும், நமக்கு வரவேண்டிய நீர் வந்தால் போதாதா"




அடேய் அவன் அவ்வளவு அணைகட்டியபின் இங்கு ...னியா வரும் என யாரும் இவரிடம் கேட்கவும் இல்லை, அதன் பலன் இன்று தெரிகின்றது, காவேரி காய்ந்து கிடக்கின்றது.


அவர் ஆட்சி என்றால் ஒரு சமாளிப்பு, எதிர்கட்சி என்றால் ஓ என ஒப்பாரி, இதுதான் அவரின் அரசியல்


காவேரியினை வாழவைத்தவர் அல்லவா? இனி சிறுவாணியினை கக்க கிளம்பிவிட்டார்.


அன்றே முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க ஒப்புகொண்டவர் எம்ஜிஆர், ஏன் என்றால் புரட்சி என்பார்கள்


ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை இவர்களால் இம்மாநிலம் படும்பாடு கொஞ்சமல்ல...



கிரிக்கெட்.. சீமான் சீற்றம், கராத்தே .. நக்கீரன் குமுறல்

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் சக மல்யுத்த வீரரை திருமணம் செய்கிறார்

உயிருக்கு துணிந்தவர்கள்தான் மல்யுத்த வீரர்களாக முடியும், அப்படி துணிந்து மல்யுத்த வீராங்கனையினை திருமணம் செய்ய இன்னொரு மல்யுத்தவீரர்தான் முன்வருவார்,

கண்ணாடி போட்டு அலுவலகத்தில் ஒடுங்கிய தேகத்துடன் கம்பியூட்டர் தட்டுபவனுக்கா
அந்த தைரியம் வரும்?



ஒலிம்பிக்கில் அவர் எதிரியினை புரட்டிய காட்சி கண்ணிலே நிற்கும் அல்லவா? எவனாவது ரிஸ்க் எடுப்பான்?

ஒரு மல்யுத்ததிற்கு இன்னொரு மல்யுத்தம்தான் எதிர்கொண்டு நிற்கமுடியும், வாழமுடியும் :)





கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள்தான் உலகில் சாதிக்கின்றன, ஜமைக்காவின் உசேன் போல்ட் அப்படித்தான் சாதித்தார் : சீமான் சீற்றம்


# இரன்டாம் இடம் பிடித்திருக்கும் பிரிட்டந்தான் கிரிக்கெட்டின் தாயகம் என்பது இவருக்கு தெரியாதா? ஜமைக்கா என்பது வெஸ்ட் இண்டீசின் ஒரு பகுதி என்பதுமா தெரியாது? இங்கிலாந்து கிரிக்கெட் அணி பற்றி கூட கேள்விபடாத தற்குரியா இவர்?


ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவும் கவனிக்கபட்ட நாடு, அவர்கள் என்ன கிரிக்கெட்டை விட்டுவிட்டார்களா?




இல்லை கிரிக்கெட்டில் இல்லா ஈரானும், இஸ்ரேலும் முதலிடத்தில் வந்ததா?


இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்கவில்லையா


எவ்வளவு பாரம்பரியம் மிக்கது விகடன் குழுமம், கொஞ்சம் கூட யோசிக்காமல் இவர் சொல்வதை எல்லாம் வெளியிடுமா? கொஞ்சமும் யோசிக்காதா?


விகடன் குழுமமே, இவரிடம் விழிப்பாய் இருங்கள், இல்லை என்றால் ஒருநாள் உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் நிலை வரும், இவர் அள்ளிவிடும் அலப்ப ரைகள் அப்படி.


கேட்க செவி இருந்தால் விகடன் கேட்கட்டும்


சரி, உங்களுக்குத்தான் இந்தியா பிடிக்காதே, ஈழதமிழனுக்க் எதிரியான இந்தியா எனக்கும் எதிரி என சொன்னவர்தானே நீங்கள், அப்படித்தானே காஷ்மீர் தீவிரவாதிகளுக்காக குரல் கொடுத்திர்கள்


அப்படி இருக்கும் பொழுது இந்தியா தங்கம் வென்றால் என்ன? அலுமினியம் வென்றால் உங்களுக்கு என்ன?


இப்படி எல்லாம் சொல்லி நீங்கள் இந்தியர் என நிரூபிக்க பார்க்கின்றீர்ககளா? ம்ஹூம் முடியாது


நீங்கள் பிரபாகரனின் தம்பி, ஈழ விடுதலையினை எதிர்க்கும் இந்திய தேசியம் உங்களுக்கும் எதிரி, அதனை நீங்கள் வழக்கம் போல மறக்கலாம், நாங்கள் மறக்கவே மாட்டோம்.


நீங்கள் பிரபாகரனின் தம்பி, இங்கு இருக்கும் அகதி நீங்கள் அவ்வளவுதான் என்பது எங்கள் முடிவு.











கராத்தே என தெரியாதவர்களிடம் கராத்தே சங்கம் இருக்கும் அவல நிலை : நக்கீரன் பத்திரிகை குமுறல்

விடுங்கள், மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத அரசியல்வாதிகளிடம் பதவிகள் சிக்கவில்லையா?


ஊடக நேர்மை என்னவென்று தெரியாத பத்திரிகைகளிடம் தமிழக செய்திபிரிவு சிக்கவில்லையா

ஒலிம்பிக் என்றால் என்ன என தெரியாதவர்களிடம் இந்திய ஓலிம்பிக் சங்கம் சிக்கவில்லையா?

அப்படித்தான் கராத்தேவும் தெரியாமல் சங்கத்திடம் சிக்கிவிட்டது அவ்வளவுதான்








வேந்தர் மூவிஸ் வழங்கும் 'பாரி பச்சைமுத்து'




Image may contain: 1 person , people smiling


ரோபோ படம் வரும்பொழுது கலாபவன் மணியின் கேரக்டருக்கு பச்சைமுத்து என பெயர் வந்த பொழுதே பிரச்சினை தொடங்கியது


நண்பர் படத்தில் ஹீரோவின் பெயர் "பாரி" என வைத்து அதனை ஹீரொயினும் இன்னும் பலரும் கிண்டலாக அழைக்கும்பொழுதே சர்ச்சை வெடித்தது, ஹீரோயின் "பாரிவேந்தரவாது பூரிவேந்தராவது" என்பார், அதற்கே அழுதார்கள்.


இன்னும் சத்யன் "பாரி பூரி கக்கூஸ் லாரி" என சொல்லும்பொழுது அவர்கள் கண்கள் சிவந்தன, பஞ்சவன் பாரிவேந்தன் எனும் பெயர் அச்சினிமாவில் வந்தபொழுது அவர்கள் பொங்கி எழுந்தார்கள்





காரணம் இன்று சிக்கியிருக்கும் பச்சைமுத்துவின் உண்மை பெயர் பாரிவேந்தன்

பச்சைமுத்து பாரிவேந்தன்.

இது போதாதா, நாட்டை காத்து கூடவே தன்னையும் தன் சொத்துக்களையும் காக்க அவர் நடத்தும் கட்சியினர் பொங்கிவிட்டார்கள்

,நாங்கள் பாரி மன்னன் பரம்பரை, எங்கள் வம்சத்தின் குலக்கொழுந்து அல்லது ஆணிவேரான பச்சைமுத்துவினை சினிமாவில் கேவலபடுத்துகின்றார்களா.. என பல குரல்கள் எழும்பின, சிலர் வழக்கு வரை சென்றனர்.

சும்மா சிவனாகவோ, பாரியாகவொ இருந்தால் சினிமா சர்ச்சைகள் வராது, அன்றே சினிமா தொழில் தொடர்பாக பச்சைமுத்து இறங்கி இருக்கின்றார், ஏதோ புகைந்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

பின் பச்சைமுத்துவின் கரம் சினிமாவில் தன் அவமானத்தை துடைக்க நீண்டது, சில விஷயங்கள் நடந்தன.

அது பின்னாளில் வேந்தர் மூவிஸ் என லேபிள் மாட்டும்போது வெளிப்படையாக தெரிந்தது, அதுவரை சிக்கல் இல்லை

இவர் கட்டப்பா என நினைத்து பழகிய மதன், புலிப்பார்வை எனும் படம் எடுத்ததில் தொடங்கியது சறுக்கல், நாம் முன்பே சொன்னதுபோல பிரபாகரனுடன் படமெடுத்தவர்களே நாசமாய் போவார்கள் என்பது சென்டிமென்ட்.

நெடுமாறன் தனிமாறனாய் அலைவதும், வைகோ அரசியல் அனாதை ஆனதும், இதோ சைமன் சட்டையினை கிழித்து அலைவதே சாட்சிக‌ள்.

அந்நிலையில் பிரபாகரன் வேடமேற்று நடித்தவன் என்ன பாடு படுவான், தஞ்சை கோயில் போலவே பிரபாரன் சென்டிமெண்டும் போட்டு தாக்கியது,

காசிக்கு சென்ற மதனை காணவில்லை. மருத்துவ கல்லூரிக்கு வசூலித்த பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன் என அவர் வாட்ஸ் அப்பில் அப்பிவிட்டு காணாமல் போனார், ஒருவேளை மாறுவேடத்தில் சாமியாராகி இருக்கலாம்

இனி பாலா ஏதும் அகோரி படமெடுக்கும்போது ரகசியமாக நடிக்காமல் உண்மை வராது

ஆக கல்வி,கட்சி,ஊடகம், போக்குவரத்து என எல்லா வியாபாரத்திலும் கொடிகட்டு பறந்த பச்சைமுத்து, சினிமாவில் கால்வைத்ததும் சிக்கி இருக்கின்றார்.

சினிமா அப்படித்தான், அந்த குதிரையில் எல்லோரும் சவாரி செய்ய முடியாது, மாய குதிரை அது. இதோ அதில் இறங்கிய நஷ்ட கணக்கில் கட்டப்பா மதன் முதுகுல் குத்தி, பச்சை முத்து பச்சை ஆடை கட்டியாகிவிட்டது.

இதனில் தென்னகத்தார் குறிப்பிடதக்கவர்கள் சட்டை போடதவன் எல்லாம் காந்தி என நம்ப சொன்ன முன்னாள் கல்விதந்தையும் ஒருவர்

தென்னகத்து அம்பானியும் மிகவும் குறிப்பிடதக்கவர், மண்ணோ பொன்னோ தனக்கு தெரிந்த தொழிலில் மட்டும் இருப்பாரே அன்றி மாய வேலைகளான சினிமாவில் எல்லாம் அன்னார் இறங்குவதே இல்லை

அண்ணாச்சின்னா சும்மாவா................















வட , தென் கொரியா....

இன்றைய உலகில் அழிச்சாட்டிய சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு வடகொரியா, கொரிப்பதற்கு அரைபடி நெல் கூட இல்லா பரதேசி கோலம்தான். ஆனால் என்றோ சிக்கிவிட்ட அரைகுறை ஏவுகனை, அக்கால அணுகுண்டு தொழில்நுட்பத்தினை கொண்டு உலகினை மிரட்டிகொண்டிருக்கின்றது


நமது ஊர்களிலும் சில ரவுடிகளை பார்க்கலாம், ஏய் சைக்கிள் செயின் இருக்கு, பெட்ரோல் பாம் இருக்கு, பிளேடு இருக்கு எடு பணத்தினை என்றால் இவனிடம் வம்பு எதற்கு என கொடுத்துவிட்டு ஒதுங்குவோம் அல்லவா, பணம் கிடைத்ததும் ரவுடியும் குடித்துவிட்டு மல்லாக்க கிடப்பான்




அப்படி அப்பகுதிநாடுகளை மிரட்டி ஏதோ வசூல் செய்துகொண்டிருக்கிறது நாடு, ஆனால் ஒருநாள் மண்டை பிளப்பு நிச்சயம்.


அவர்களுக்கும் தென் கொரியாவிற்கும் ஆகாது, ம்ம் இந்த நொடி சண்டை வெடிக்கவில்லை, அடுத்தநொடி தெரியாது எனும் அளவிற்கு கடும் பகை. இதில் ஒலிம்பிக் வேறு வந்தால் எப்படி இருக்கும்?


வட கொரியா தன் சவாலாக தென் கொரியாவினை கருதிற்று, பயிற்சிகளை எல்லாம் கொடுத்து நீங்கள் தென் கொரியர்களை விட ஒரு அலுமினிய பதக்கம் கூடுதலாக வாங்கவேண்டும் என துப்பாக்கி முனையில் சத்தியம் வாங்கி அனுப்பி வைத்தது


தென் கொரியா அமெரிக்க புட்டிப்பாலில் வளரும் அமுல் பேபி, கொஞ்சம் ஊட்டமான பொருளாதாரம், நல்ல பயிற்சி


தென்கொரியாவிற்கு 9 தங்கம் உட்பட 21 பதக்கங்களை குவித்தது, வடகொரிய வீரர்கள் மரணபயத்தில் 2 தங்கம் உட்பட 7 பதக்கம் குவித்தனர்


உணவோ, மருந்தோ அரிதான வடகொரியாவிலிருந்து வந்து அவர்கள் இந்த 7 பெற்றதே பெரும் விஷயம், அதில் இரு தங்கம் வேறு, நமது தேசமென்றால் எப்படி கொண்டாடியிருப்போம்.


ஆனால் வடகொரிய அதிபருக்கு ஆத்திரம் வந்தது, தென் கொரியாவினை வெல்லமுடியாத நீங்கள் இனி குடிமக்களா என பொங்கி தீர்த்து ரேஷன் கார்டினை பறிமுதல் செய்தார், இனி அந்த தோற்ற‌ வீரர்கள் எல்லாம் சுரங்கத்தில் கூலிவேலை செய்யவேண்டுமாம், ஆம் இனி அவர்கள் அரசு அடிமைகள்


இது நாட்டில் அமைதியான சலசலப்பினை உண்டு பண்ணியிருக்கின்றது, இனி யார் விளையாட வருவார்? . ராணுவத்தாரோ இனி யுத்தம் என வந்து தோற்கும் நிலை வந்தால் எதிரிநாட்டு விரன் பின்னால் ஓடிவிடவேண்டும் என மனதிற்குள் உருக தொடங்கிவிட்டார்கள்.


பாவம் வடகொரியர்கள் அதிமுக எம் எல் ஏக்களை விட அவர்கள் நிலை மகா மோசம், ஆகவே அதிமுகவினரே வடகொரியரை பார்த்து ஆனந்தம் கொண்டு உங்கள் கண்களை துடைத்து கொள்ளுங்கள்.


மோடி அரசின் சில சர்ச்சையான அமைச்சர்கள், நடிகை ரம்யாவினை வழக்கு போட்டு தாக்குபவர்கள் போன்றவர்கள் பிரதமராக இருந்து, பாகிஸ்தான் கூடுதலாக சில பதக்கம் வாங்கியிருந்தால் இந்திய வீரர்கள் நிலை சிக்கல்தான் நல்லவளையாக இரண்டும் நடக்கவில்லை


சீமான் போன்றோர் முதல்வராக இருந்து, தமிழக வீரர்கள் சிங்களினிடம் தோற்றாலும் சிக்கல், அதுவும் நடக்கவில்லை


இப்படி சில விஷயங்கள் நடக்காமல் இருக்கும் வரை நல்லது, பச்சமுத்துவிற்கு இன்னும் வராத கடும் நெஞ்சுவலி போல‌



Friday, August 26, 2016

மறுபடியும் திருமால் புராணம்...

திருமால் பற்றி சொன்னால் தேவநேய பாவணர் என்ன சொன்னார் தெரியுமா? கபாடபுரம் தெரியுமா? ஏய் இனதுரோகி திருமால் தமிழ்கடவுள், முருகன் தமிழ்கடவுள் சீமான் சொன்னது சரி என சிலர் மூக்கி சீந்திகொண்டிருக்கின்றார்கள்

கபாடபுரம் என்று நீங்கள் ஒரு கதை சொன்னால், அட்லாண்டிக் கண்டம் என கிரேக்கம் ஒரு கதை சொல்லும் அதாவது மனிதன் உருவான இடம் கடலுக்குள் கிடக்கின்றது எனும் முடிவு அது.

ஆனால் ஆதிமனிதன் ஆப்ரிக்காவில் உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு தியரி உண்டு, ஆப்ரிக்க தமிழக உறவுகள் உருவம் வரை வரக்கூடியவை, சரி அதனை விடுங்கள்


தமிழ் என்பது ஒரு மொழிகுடும்பத்தை சேர்ந்தது, தெலுங்கு,கன்னடம், மலையாளம், தமிழ் எல்லாம் ஒரு மொழியில் இருந்து பிரிந்திருக்கலாம் மாறாக தமிழிலிருந்து அவை பிரிந்திருக்கமுடியாது என்பதும் ஒரு கருத்து,

பொதுவாக புலவர்கள் பொய்யர்கள், அன்றிலிருந்தே அப்படித்தான், காசு கொடுத்தால் மன்னா உன்னை கேட்டுத்தான் சூரியன் உதிக்கும், நீ உறங்கினால் அது உறங்கும் என எழுதுவார்கள்

அப்படி ஒரு புலவன் கல்தோன்றி மண்தோன்றா என எழுதினால் அதனையே பிடித்து தொங்குவீர்களா?, தேவநேய பாவணார் என்ன நோபல் பரிசு பெற்றவரா? உலகம் முழுக்க அலசி முடிவுகண்டாரா?, சரி அது வேறு விஷயம்

கடவுளில் என்னடா தமிழ் கடவுள், அரேபிய கடவுள், ஐரோப்பா கடவுள்?

முருகன் யார்? நன்றாய் பாருங்கள், ஆசியாவெங்கும் பரவி இருந்த இந்துமத தெய்வம் அவர், இன்றும் மங்கோலியாவில் மயில்மேல் ஈட்டி ஏந்தி அமர்ந்திருக்கும் தெய்வம் உண்டு, அப்படியானால் அவர் என்ன மங்கோலிய கடவுளா?

இயமமலையிலிருந்து பழநி வந்தவர்தான் அவர் என சொல்கிறது வரலாறு. மறுக்கமுடியுமா? சொல்லபோனால் உங்கள் பாஷைபடி வந்தேறிதான்

சிவன் இருப்பது கயிலாய மலை, திருமால் இருப்பது பாற்கடல் அப்படி அவர்கள் எல்லாம் உலகிற்கே பொதுவான விஷயம் அய்யா

அவர்களை பிடித்து கு..ஞ்சி முதல் ..லை வரை உள்ள தமிழர் நிலத்தின் கடவுளாய் அடைக்கமுடியுமா? காற்றை கையில் பிடிக்க முடியுமா?

உலகிலே 5 வகை நிலம் தமிழனிடம் மட்டும்தான் உள்ளதா?

தொல்காப்பியன் எழுதிவிட்டானாம், சரி அவன் குரு அகத்தியன் யார்? இமயமலையிலிருந்து வந்த வந்தேறி அல்லவா?

மானிட நேயத்தில்தான் அவன் இங்கு வந்து தமிழ் வளர்த்திருக்கின்றான், தொல்காப்பியனுக்கு கற்பித்திருக்கின்றான்

அவன் உயரம் குள்ளம், ஆனால் பெரும் விலாசமான மனது

உங்களுக்கோ மனது மிக குறுகிய மனது, எல்லாம் தமிழ் , தமிழன் என பார்க்கும் குறுகிய வட்டம். நிச்சயம் அகத்தியன் ஆவி இதற்காக சிவனிடம் அழுது புலம்பி இருக்கும்

கடவுள் எனும் சக்தி மனிதனை கடந்து, பிரபஞ்சத்தை கடந்தது

அதனை தமிழ் கடவுள், ஆங்கில கடவுள் என பிரித்து பார்ப்பீர்களானால் என்ன சொல்ல‌

சீமான் அப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம், காரணம் அவரின் பிறண்ட மனநிலை அப்படி.

நீங்களும் அப்படியே தொடர்வீர்களானால் உங்களையும் உலகம் அந்த பட்டியலில்தான் வைக்கும்

தமிழ்கடவுள் சொர்க்கத்தில் உண்டோ இல்லையோ தமிழகத்தை நரகமாக்கும் பொறுப்பினை மட்டும் நீங்கள் ஏற்றிருக்கின்றீர்கள்.

ஆனால் பீஸ்போன பல்புகள் ஒளிர்வதில்லை. இங்கோ மெயின் பவர் வரை புடுங்கியாகிவிட்டது

கடவுளுக்கு ஏதடா மொழியும் இனமும்.

கொந்தளிப்பு... திருட்டு ... ஏமாற்று... ஆவேசம்....

தேசிய கொடி எரித்தவரும், சுவாதி கொலையில் ஆதாரமில்லாமல் காவல்துறையினரை விமர்சித்து வந்த திலீபன் மகேந்திரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் தமிழச்சி என்பர் கடுமையாக கொந்தளித்திருக்கின்றார்





உலகத் தமிழர்களே! இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அவர் சொன்னபடி உலக தமிழராகிய நாங்கள், சமீபகாலமாக தீவிரவாதத்தால் பாதிக்கபட்டுவரும் பிரான்ஸ் நாட்டில் , கடும் நடவடிக்கை எடுத்துவரும் பிரான்ஸ் காவல்துறையினரிடம் அதே கோரிக்கையினை வைக்கின்றோம்

பிரான்ஸ் போலிசாரே, நீங்கள் ஏதாவது செய்யுங்கள் அல்லது தமிழ்நாட்டிற்கு பார்சல் பண்ணுங்கள்

போதுமா தமிழச்சி





"இலங்கை தமிழர்கள் செய்யும் திருட்டு சிடியால் பெரும் இழப்பு ஏற்படுகிறது , இவர்களுக்கு நாங்கள் எவ்வளவு குரல் எழுப்பினோம், அதை நினைத்தால் அருவெருப்பாக உள்ளது" : இயக்குநர் சேரன்


ஓஓஓ.. அவர்களுக்காக நீங்கள் திரையுலகினர் குரல் எழுப்புவீர்கள், அவர்கள் உங்கள் படங்களை ஐரோப்பாவில் ஓடவைத்து உங்களுக்கு சம்பாதித்து கொடுத்தால் சத்தமில்லை, தொடர்ந்து ஆதரிப்பீர்கள்


ஆனால் அவர்கள் திருட்டு விசிடி செய்து உங்கள் பிழைப்பினை கெடுத்தால் மண் அள்ளிபோடுவீர்கள்




மொத்தத்தில் இந்த தேசத்திற்கு எது சரி, யாரை ஆதரிக்கவேண்டும், யாரை ஆதரிக்க கூடாது என்பதல்ல உங்கள் நோக்கம், இந்த தேசம் எதிர்கொண்ட சவால் அல்ல உங்கள் நோக்கம், ஈழத்தில் இறந்த 1500 இந்திய வீரர்களை எல்லாம் நினைவுக்கு வராது அப்படித்தானே


இந்த அருவருப்பு அப்பொழுது அல்லவா வந்திருக்கவேண்டும், இப்பொழுது அந்த அருவருப்பு எங்களுக்கல்லவா வந்து தொலைகிறது


பணம் வந்தால் பொங்குவீர்கள், பொழப்பு கெட்டால் அது அருவருப்பு


தேசிய கீதம் என படமெடுத்தவர் தானே நீங்கள், இதுதானா அது? அதே தான் எங்களுக்கும் வருகின்றது,


அருவருப்பு











எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க மதன் என்பவர் பணம் வசூலித்த வழக்கில் பாரிவேந்தர் கைது

இந்த புதியதலைமுறை செய்தியில் கைது செய்தி வருமா என்று தெரியவில்லை, மற்ற டிவிக்களில் வரலாம். எனினும் ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியில் இனி இன்றைய செய்தி எல்லாம் இதுதான். மனிதருக்கு ஏக சந்தோஷம்.

சரி ஒருவன் மருத்துவ கல்லூரியியில் இடமளிப்பதாக ஆசை காட்டி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார், பிடித்து போட்டாகிவிட்டது வாழ்த்துக்கள்.


இயேசுவினை காட்டுகிறேன், சிவனை காட்டுகிறேன் என வசூலிப்பவனை எப்போ அரெஸ்ட் பண்ண போறேள்ள்....

ஈழம் வாங்கிதாரேன்னு ஒருத்தன் ஐரோப்பாவுல கலெக்சன் பண்ணிட்டு சென்னை விருகம்பாக்கத்துல முருகன், திருமால் மீட்புண்ணு சுத்துறானே அவனை எப்போ அரெஸ்ட் பண்ண போறேள்....













தர்மதுரை படத்தின் டைட்டிலில் ராதிகா பெயரினை உரிய‌ மரியாதையாக போடாததால் சரத்குமார் ஆவேசம் சீனு ராமசாமி மீது குற்றசாட்டினார் என சர்ச்சை


சினிமா முதல் அரசியல் வரை எவ்வளவு நடந்தது, பாஜகவில் சேர்ந்த விஷயம் பத்திரிகைகளுக்கு செல்லும் முன்பே மறுபடி ஓடிவந்து கார்டனில் விழுந்ததென்ன?


திருச்செந்தூர் தேர்தலில் எப்படி மரியாதை கிடைத்தது, என்றாவது ராதிகா இதற்கெல்லாம் ஆவேசபட்டாரா அல்லது அதற்கு காரணமானவர்கள் மீது குற்றம் சாட்டினாரா?





ராதிகா கிரேட்



ஸ்ரீ கிருஷ்ணன் தமிழனா?

"மால் என்றால் கருப்பு, திரு என்றால் பெரிய என பொருள் எனவே விஷ்ணு பெரியகருப்பன். விஷ்ணு, பெரிய கருப்பன், கருப்பசாமி, மாலன்,மாயன் , மாயாண்டி என எல்லோரும் ஒரே கடவுள், தமிழ் கடவுள்.."


இப்படி ஒரு பேட்டி அளித்து தன் மூதாதை மாயோன் எனும் கொடிக்கு விளக்கம் அளித்திருக்கின்றார் அங்கிள் சைமன்.


மால் என்றால் கருப்பு என இவர் எங்கு படித்தார் என தெரியவில்லை, மா என்றால் பெரிய என பொருள், தமிழ் இலக்கண‌ சில விதிகள்படி மால் என்றானது, திரு+மால் என்றால் பெரிய‌ கடவுள் என பொருள்வரும்படி அமைந்தது அது என்பது ஒரு வாதம்.


மால் முருகன் என முருகப்பெருமானை அழைப்பதும் அப்படியே,


மால் என்றால் மீன் என்றும் பொருள், அதாவது விஷ்ணு எடுத்த அவதாரத்தில் மச்சாவதாரம் முதன்மையானது., அதனால் அவரை திருமால் என்றும் அழைப்பார்கள் என்பது இன்னொரு வாதம்.


ஆக அங்கிள் சைமன் சொல்லவருவது, திருமாலின் அவதாரமான கிருஷ்ணன் தமிழன் என்பதா? அல்லது திருமாலே தமிழன் என்பதா என்பது அவர் ஈழ பயணம் போலவே மர்மமானது குழப்பமானது.


பொதுவாக தமிழில் பெருமாள் என விஷ்ணுவினை அழைப்பார்கள், அப்படியே விஷ்ணுதான் நரகாசுரனை அழித்தார் என்பது தீபாவளி. ஆனால் அன்னார் நரகாசுரனுக்கும் அஞ்சலி செலுத்தினார் என்பது கடந்த ஆண்டு பார்த்தது.


விஷ்ணுவின் இன்னொரு அவதாரம் ராமர், ஆனால் அன்னார் ராவணன் இலங்கை தமிழ்மன்னன் என அவருக்கும் வீரவணக்கம் செலுத்தியதும் நடந்தது.


கிருஷ்ணன் தமிழனா, அல்லது விஷ்ணு தமிழனா என அன்னார் என்ன சொல்கிறார் என தெரியவில்லை, ஆனால் திருமாலை பெரிய கருப்பன் என மொழிபெயர்த்துவிட்டார்.


இனி பெருமாள் கோயில் எல்லாம் பெரிய கருப்பன் கோயிலாகும். கருப்பசாமி, கருப்பண்ண சாமி பூசாரி எல்லாம் தங்களை பெருமாள் கோயில் பூசாரி என்பார்கள் என்பது அங்கிளின் சமதர்ம கனவு.


இதோடு விட்டாரா என்றால், அதன் பின்புதான் அதிர்ச்சிகொடுக்கின்றார், இனி இந்திரவிழா, பாலை நிலத்து துர்க்கா விழாவினை கொண்டாட போகின்றாராம்.


நாளைக்கு ஒரு விழா ஒரு கொடி பிடிக்கும் தீர்மானத்திற்கு அவர் வந்தபின் தினமும் ஒன்றை கொண்டாடுவார் ஆனால் இந்திரவிழா கொஞ்சம் வித்தியாசமானது, கொற்றவை விழா இன்னும் கூடுதல்


எங்குதான் இருக்கிறது சிக்கல்???


அதவாது இந்திரவிழாவும், துர்க்கை விழாவும் மிக சரியாக இந்தியா முழுக்க கொண்டாடபடும் விஜயத்சமி காலத்தில் வரும், மைசூரிலும், தமிழகத்து குலசேகரபட்டிணத்திலும் அது விமரிசையாக கொண்டடபடும்.


தெலுங்கு பேசும் மக்களுக்கு அது மிகபெரும் விழா, அவர்கள் கொண்டாடும் அளவு நாம் நெருங்கமுடியாது.


அன்னாரின் ராஜதந்திரம் இங்குதான் தொடங்கும், வரலாற்றினையும் திருவிழாக்களையும் கண்டமேனிக்கு திரிக்கும் அங்கிளுக்கு அந்த விழாக்களையும் திரிக்க வெகுநேரம் ஆகாது


அன்னார் அங்குதான், அவர்கள் கொண்டாடிகொண்டிருக்கும் போதுதான் "ஹிஹிஹி நானும் உங்களோடு சேர்ந்து கொண்டாட வாரேன், மனசுல ஒன்னும் வச்சிக்காதீங்க, நாயக்கர்கள்னா முக்கியம்மனவங்கன்னு அர்த்தம்


தசரனா என்ன? தசம்னா 10, 10 இனம் சேர்ந்துகொண்டாடுறதுதான் தசரா, தமிழன், தெலுங்கன், மலையாளி, ஒரியன் அப்படி 10 பேர் சேரணும், நான் சேர்ந்துட்டேன், மறக்காம வோட்டு போட்ருங்க ஹ்ஹிஹிஹி"


என கூசாமல் தலை சொறிந்து நிற்பார், அவர் அறிவிப்பின் அர்த்தம் இதுதான், அவர்கள் அந்த சொறிந்த தலையில் என்ன செய்யவேண்டுமோ அதனை அவர்கள் செய்வார்கள்


சொல்லமுடியாது குலசேகர பட்டின தசரா பக்தர் போல வேஷமிட்டு அன்னார் மாறுவேடத்தில் அங்கு சென்று இப்படி பகீர் கிளப்பலாம், வாய்ப்பு இருக்கின்றது


நேரம் ஒரு வேஷம் போடுபவருக்கு அந்த வேஷம் போடுவதா சிரமம்? போடு பரமசிவன் வேடத்தை, கிளம்பு தசராவிற்கு வசூலும் பார்த்துவிடலாம் அவ்வளவுதான்


ஆனாலும் பெருமாளை பெரிய கருப்பனாக்கிய கயவாளித்தனம் அங்கிளை தவிர யாருக்கு சாத்தியம்


மால் என்ற வார்த்தையினை கொண்டு அங்கிளின் "கோல் மால்" மகா பிரமாதம்.