Thursday, August 18, 2016

மலேசிய செந்தமிழ்.....

காலையில் மலேசிய தமிழர்கள் மற்றவர்களிடம் கேட்கும் விஷயம் "பசி ஆறியாச்சா?" அல்லது "பசி ஆற வாரீங்களா?"

மிக நல்ல தமிழ் வார்த்தை, இது போன்ற பல அழகான தமிழ் விஷயங்கள் அவர்களிடம் உண்டு.
மிக சிறிய குழந்தைகளை கூட "அவங்க, வாங்க போங்க" என அவர்கள் மிக மரியாதையாக அழைப்ப்பார்கள், ஓரளவு தூய தமிழ் வாழ்கின்றது,

"அய்யா" என்றுதான் தமிழில் மரியாதையாக தொடங்குவார்கள், சார் எனும் வார்த்தை எல்லாம் வராது

யாழ்பாண தமிழர்களின் சில தமிழ் கலாச்சார, பழக்க வழக்க தாக்கம் அவர்களிடம் மிக அழகாக தெரியும். ஒரு தமிழனாய் அதனை ரசித்திருக்கின்றேன்

யூஸ் செய் என்றெல்லாம் அவர்கள் தமிழ் பெரும்பாலும் கலந்து வராது, "பாவித்து கொள்" என்றே தூய தமிழில் பேசுவார்கள்.

பிரசவம் என்று கூட சொல்ல மாட்டார்கள், "புறம் தருவித்தல்" என மிக அழகான அர்த்தமுள்ள தமிழில் சொல்வார்கள்

சபதம் எனும் வார்த்தை கூட பெரும்பாலும் வராது, அது சூளூரை என்றே சொல்லபடும்,

பார்க்கிங் ஏரியா என்பது வாகன தரிப்பிடம் என்றே அழைக்கபடும், ஈழத்திற்கு அடுத்தபடியான சுத்தமான தமிழை இங்கே ரசிக்கலாம், தமிழகத்தில் அது தமிழ்தாயினை காப்போம் என்பவர்களாலே விரட்டபட்டுவிட்டது

தமிழ் அப்படி வாழ்கிறது, டீன் ஏஜ் என்பதற்கு பதின்ம வயதினர் என்பதும், பிரிந்த தாய்க்கு தனித்து வாழும் தாய்மார் என்பதும், மழை வெள்ளத்தில் திறக்கபடும் முகாம்களுக்கு "துயர் துடைப்பு மையம்" என பெயர் வைப்பதிலும், தமிழ் தனித்து வாழ்கின்றது,

இன்னும் ஏராளமான விஷயங்களை சொல்லலாம், தமிழுக்காக‌ உறுதியாக சொல்லலாம், தமிழ் தமிழ்நாட்டில் குற்றுயிராய் கிடந்தாலும் இங்கு அது இளமையாகத்தான் வாழ்கின்றது.

தினமும் வானொலியிலும், இரவு தொலைக்காட்சி செய்தியிலும் அவர்கள் தமிழ் செய்தி வாசிக்கும் அந்த உச்சரிப்பும், தமிழ் அழகும் அப்படி சிலாகிக்க கூடியவை

அதுவும் பெரும்பாலும் தொலைக்காட்சி செய்தி முடியும் போது திருக்குறள் சொல்லி, அதற்கு பொருளும் சொல்லி முடிக்கும் போது, தமிழக தனியார் தொலைகாட்சிகளும் அவை தமிழை படுத்தும் இம்சையும் கண்ணில் வந்து போகும்.

தமிழக தொலைக்காட்சி செய்தி
வாசிப்பாளர்களும், செய்தி தயாரிப்பவர்களும் ஆரம்ப பாடம் படிக்கவேண்டிய இடம் மலேசிய தமிழ் செய்தி வாசிப்பும், தயாரிப்பும்

இதனை எல்லாம் சொல்லாமல், தமிழர்களின் அரசியலை பேசபோகிறேன் என சொல்லி, நல்ல விஷயம் 95% மறைத்து வெறும் 5% கருப்பு பக்கத்தினை மட்டும் வணிக நோக்கில் காட்டியதால்தான், கபாலியினை சாட நேர்ந்தது

சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்டேன் இயக்குநர் மதனிடம் சொல்கிறார், நான் மலேசியா சென்று அவர்கள் வாழ்க்கையினை கண்டு படித்தேன்,
படமெடுத்தேன்.

இயக்குநர் மலேசியா வந்தேன், ஸ்டடி செய்தேன் என் பேட்டியில் மதனிடம் ரீல் விடலாம்,, உண்மை அது அல்ல‌

அவர் வந்து ஹோட்டல் ரூமில் தங்கி இருந்து, ரவுடிகளிடம் கதை கேட்டிருக்கவேண்டும் அதனை மட்டுமே செய்து முழு மலேசிய தமிழரையும் படித்துவிட்டேன் என அவசரமாக கபாலி படம் எடுத்திருக்கவேண்டும்

இல்லை என்றால் அப்படி ஒரு குப்பை படம் மலேசிய தமிழரை பற்றி வந்திருக்காது.

அவர்களின் உண்மை பக்கம் தமிழ் பேசும் முறை, தமிழை காக்கும் முறை என்பதில் மகத்தானது
அரசியல் மற்றும் வணிக நோக்கம் தவிர்த்த தமிழனாய் அதை ரசிக்கலாம் வரவேற்கலாம், மற்றபடி கபாலிதான் முழுதாய் பேசுகிறது என எவனாவது சொன்னால் அது முழுக்க முழுக்க அபத்தமானது, களையவேண்டியது

அப்படி நுனிப்புல் மேய்ந்து விட்டு அவசர அவசரமாக ஒரு படம் வந்திருக்கின்றது, இயக்குநர் அப்படி கலாச்சார கொலை செய்திருக்கின்றார் என்பதை எப்படி சொல்ல முடியும்

இப்படித்தான் சொல்ல முடியும்

நல்ல விஷயங்களை மறைத்து ஒரு குறிப்பிட்ட வட்டத்தினை மட்டும் எடுத்து ஒருவித வன்மத்துடன் திட்டமிட்டு எடுக்கபட்ட படம் கபாலி, என்பதை தவிர சொல்ல ஒன்றுமே இல்லை.

அதில் எவ்வித உலகளாவிய அனுபவமோ, பெருந்தன்மையோ , சுத்த தமிழ் உணர்வோ அறவே இல்லை, மகா குறுகிய மனப்பான்மை அது.

எமக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதெல்லாம் மதனுக்கு தெரியும், அவரின் உலக ஞானமும் கலாச்சார அறிவும் அப்படியானது

பேட்டியில் இந்த தமிழ் வார்த்தைகள், அவர்கள் பயன்படுத்தும் விதங்களை எல்லாம் மதன் பொதுமேடையில் கேட்டு ரஞ்சித்தின் முகத்தில் கரிபூச கொஞ்ச நொடி ஆகியிருக்காது

ஆனால் மதன் செய்யவில்லை, இதுதான் பெருந்தன்மை. மேடை நாகரீகம், பொது நாகரீகம்

சல்யூட் மதன்

No comments:

Post a Comment