Tuesday, August 23, 2016

ஒலிம்பிக்ஸ்: தண்ணீர். தண்ணீர்.. தண்ணீர்...



ஒலிம்பிக் மராத்தானில் தண்ணீர் வழங்காத சர்ச்சையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி


அதாகபட்டது மராத்தான் என்பது நெடுந்தூர ஓட்டம், அரசியலில் கலைஞர் போல ஓடிகொண்டே இருக்கவேண்டும், வைகோ போலவோ அல்லது கிருஷ்ணசாமி போலவோ , ராமதாஸ் போலவோ ரெஸ்ட் எடுத்து ஓடமுடியாது, ஜெயா போல அமர்ந்துகொண்டு அந்த இலக்கினை என் அருகில் கொண்டு வா போதும் என சொல்லவும் முடியாது




[caption id="" align="aligncenter" width="527"]Image may contain: 1 person , selfie and close-up ஓ.பி ஜெய்ஷா[/caption]

ஒவ்வொரு 2 கிமீட்டருக்கும் ஒரு ஸ்டால் அமைத்து குளுக்கோஸ் போன்ற பானம் வழங்கவேண்டியது வீரர்களை அனுப்பும் நாட்டின் கடப்பாடு, அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டின் ஸ்டாலில் ஏதும் வாங்கமுடியாது, பாதுகாப்பு ஊக்கமருந்து உட்பட்ட சர்ச்சைகளை தவிர்க்கும் முயற்சி அது





ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு 8 கிமீட்டருக்கு ஒரு ஸ்டால் பொதுவாக அமைக்கும், அப்படி அமைத்திருந்தது

இப்பொழுது சர்ச்சை என்னவென்றால் 2 கிமீ ஒன்றாக அமைந்திருந்த இந்திய ஸ்டால் வைகோ கூடாரம் போல ஆளின்றி கிடந்தது, ஆள் இல்லாவிட்டாலும் பராவயில்லை தண்ணீர் பாட்டில்கள் கூட இல்லை

சரி இது எங்கே முடியும் என நினைக்கின்றீர்கள்?.

OP-Jaisha-Getty-380

நிச்சயம் ஒலிம்பிக் கமிட்டி பணம் ஒதுக்கியிருக்கும், இந்திய பணம் என்றால் அங்கே ஊழலும் வரவேண்டும் என்பது இந்திய நடைமுறை அல்லவா?

வலுவான எதிர்கட்சி என்றால் இதனை பெரும் சர்ச்சை ஆக்கலாம்.

விரைவில் வெடிக்கும் பாருங்கள், "ரியோ ஒலிம்பிக் ஊழல் 2016",

அடுத்த சுரேஷ் கல்மாடி ஆகபோகின்றார், தற்போதைய தலைவர் நாராயண ராமசந்திரன்.
இதற்கு பதிலளிக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உண்டு

அவனவன் ரியோ சாதனை என கொண்டாடிகொண்டிருக்கின்றான், நடத்திய பிரேசிலில் கூட ஊழல் சர்ச்சை இல்லை,

ஆனால் நாம் அதனை குடிநீருக்காக சந்திக்க போகின்றோம்,

4 தண்ணீர் பாட்டிலுக்கே இந்த ஊழல், இவர்களிடம் ஒலிம்பிக் போட்டியினை ஒப்படைத்தால், ஒலிம்பிக் கிராமம் என ராஜஸ்தான் பாலைவனத்தைதான் காட்டுவார்கள்.

பதக்கம் வெல்வது அல்ல, வீரர்களின் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காத நாம் என்ன சாதிக்கபோகின்றோமே தெரியவில்லை.

மற்ற நாடுகளை பார்த்து பெருமூச்சு விட்டுகொண்டு வேலையினை பார்க்க வேண்டியதுதான்.





No comments:

Post a Comment