Thursday, August 25, 2016

கண்ணனின் பக்தர்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்...




Image may contain: 1 person


பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளில் ஒரு பதிவினை இட்டால், அவரை பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? வீரமணி என்ன சொன்னார் தெரியும? என வரிந்து வருகின்றார்கள்


பெரியாரை விடுங்கள், வீரமணி எல்லாம் பட்டியலிலே வரமாட்டார்


இந்த பகுத்தறிவாளர்களுக்கு பாரதம் ஒரு சிக்கல், காரணம் பிராமணன் சதி என சொல்லமுடியாது, காரணம் கண்ணன் ஒரு தாழ்த்தபட்ட சாதி, எழுதிய வியாசர் ஒரு மீணவ சாதி.





அதனால் டேய் கண்ணனுக்கு எத்தனை பொண்டாட்டி தெரியுமா?, ஒழுக்கம் கெட்டவன் , பாஞ்சாலிக்கு கணவன் எத்தனை தெரியுமா? ஏய் மோசடி புராணமே என மட்டும் பொங்குவார்கள், பார்பானிய சதி என்பது இதில் சொல்லமுடியாது.

பாரதம் மோசடி, கைபர் வழி வந்த புரட்டு என்பார்கள், அதற்கு சாட்சியே இல்லை என்பார்கள். சரி அதே கைபர் வழியாகத்தானே இஸ்லாமும் நுழைந்தது அவர்களிடம் சாட்சி கேட்பார்களா என்றால் ம்ஹூம்...

அரபிகடல் வழியாக நுழைந்தது கிறிஸ்தவம், சிலுவை எங்கே, அது எங்கே? இது எங்கே? ஆதாரம் எங்கே என கேட்பார்களா? என்றால் இல்லை.

ஆனால் கண்ணனுக்கு மட்டும் எங்கே ஆதாரம் என்பார்கள், இதுதான் பகுத்தறிவு.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், கண்ணன் பிறந்தான் என்பவர்களுக்கு அவன் பிறந்தான். நம்புபவர்களுக்கு அவன் உண்டு.

ஒருமுறை பிரபல ஆலயத்திற்கு செல்லும்பொழுது திராவிட கழக விடுதி கண்ணில் பட்டது, பெரியார் வழக்கமான வரிகளுடன் சுவரில் இருந்தார், பக்தர்கள் குவியும் இடத்தில் இவர்கள் இப்படி பகுத்தறிவு சிந்தனை செய்வார்களா? என அருகிலிருந்த பெரியவரிடம் கேட்டேன்

அவர் சொன்னார், "தெய்வத்தின் பெயரால் மக்கள் கூடும் இடமெல்லாம் அவர்களும் இருப்பார்கள், அங்கு எப்படி சம்பாதிக்க முடியுமோ அப்படி சம்பாதிப்பார்கள்,

இப்பொழுது இந்த விடுதி சம்பாதிக்க கட்டபட்டிருக்கின்றது, கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு மட்டும் அனுமதி என்றா அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்?, கொள்கைபடி அப்படித்தானே செய்யவேண்டும்? செய்ய மாட்டார்கள்.."

அவர்கள் அப்படித்தான் , ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள், கவனமாக சம்பாதிப்பார்கள், அதில் ஏமாந்தவர்கள் கூட்டம் சிக்கினால் ஆட்சியும்
கைபற்றுவார்கள்" என்றார்.

அப்படி அந்த சுயநல பகுத்தறிவாளர்கள் கிளப்பிவிட்டதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கின்றது, அய்யோ பரிதாபம்.

கிளைகளை களைவது வேறு, ஆணிவேரினை அறுப்பது வேறு

ஒரு வாதத்திற்கு அது கற்பனை என்றால் கூட, இப்படி ஒரு கற்பனை கதை எழுதமுடியுமா? அதுவும் அக்காலத்தில் சாத்தியமா?

ஒரு கற்பனை இத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் நிலைத்திருக்கமுடியுமா? இந்தியா முழுக்க ஆலயங்களோடு ஆயிரம் இடர்பாடுகளை தாண்டி நிற்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது,

இந்தியர்களின் உணர்வில் கலந்துவிட்டவன் கிருஷ்ணன், அப்படியே இருக்கும் இன்னமும் இருக்கும்.

கண்ணன் இந்திய ஞானத்தின் பெரும் அடையாளம்.

அந்த கண்ணனின் பக்தர்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

இப்படி கண்ணனை சில இடங்களில் லீலைக்காரன் என பழிக்கும், இந்த பெரியார் வழி பகுத்தறிவாளர்கள் என சொல்லிகொள்பவர்களுக்கு மனைவிகள் மட்டும் எத்தனை என சொல்லிதெரியவேண்டியதில்லை :)

கவனியுங்கள் மனைவுகள் மட்டும்

அவன் செய்தால் அது ஒழுக்ககேடான லீலை, இவர்கள் செய்தால் பகுத்தறிவு புரட்சி.















No comments:

Post a Comment