Tuesday, August 9, 2016

கவிஞர் கவிஞரே, ஞானி ஞானியே

நண்பர்கள் எனும் முகமூடிகளை , அவர்களின் துரோகத்தை ஒரு மனிதனால் இதனை விட அழுத்தமாக சொல்லமுடியாது என்பதற்கு கண்ணதாசனின் போய் வருகிறேன் எனும் கட்டுரையே சாட்சி


"அவன் நட்பு என அணைத்த தோள்களில் எல்லாம் கத்தை கதையாக முட்கள் இருந்தன, அவை அவன் கைகளை கிழித்தன" எனும் வசனமாகட்டும்


"உங்களை எல்லாம் மகிழ்ச்சியாக வைப்பதனை அன்றி அவனுக்கு என்ன எண்ணம் இருந்தது.." எனும் வரி ஆகட்டும்




"மனதிற்குள் இத்தனை வஞ்சம் வைத்தா அவன் முன் சிரித்தீர்கள், முதுகுக்கு பின்னால் கத்தி வைத்துவிட்டா அவன் கன்னத்தை வருடினீர்கள்.." எனும் அழுகை ஆகட்டும்


""ஒன்றாக உண்டீர்கள், ஒன்றாக விளையாடினீர்கள், அவை எல்லாம் அவனை கொல்லும் ஒத்திகையா..." என கலங்கியதாகட்டும்


"உங்கள் மனசாட்சிக்கு தெரியாததையா, அடுத்தவன் சாட்சியில் நம்பிவிட்டீர்கள்.." பரிதாபமாகட்டும்


போகிறேன்.. என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன், அன்று அவன் கண்ணீர் அவன் மாறவில்லை எனும் அவன் சுத்தமான உள்ளத்தை காட்டும்" என கடைசி பஞ்ச் வைத்ததாகட்டும்


கவிஞர் கவிஞரே, ஞானி ஞானியே


காயம்பட்ட மனதிற்கு அதனை விட பெரும் ஆறுதல் வரிகள் இருக்கமுடியாது, நிச்சயம் அவன் காலத்தை வென்றவன்



No comments:

Post a Comment