Monday, August 8, 2016

இலங்கையின் வளர்ச்சிப் பாதை....




விலாங்கு மீன் பாம்புக்கு தலையினையும், மீனுக்கு வாலையும் காட்டுமாம், வான்கோழி கோழிக்கு முகத்தையும் மயிலுக்கு தோகையினையும் காட்டுமாம், டைனோசர் காலமென்றால் ஓணான் அதற்கு தலையினையும் உடும்பிற்கு வாலினையும் காட்டியிருக்கும்,

அப்படி உலக நாடுகளில் ஒரு தந்திரக்கார நாடுகள் உண்டென்றால் அதில் இலங்கையும் ஒன்று, அது ராவணன் ஆண்ட நாடோ அல்லது ராமன் காலபட்ட நாடோ, சில விஷயங்கள் அதற்கு அனுகூலமானது, இயற்கை செழிப்பினை விட முக்கியமானது அதன் துறைமுகங்கள்

கொழும்பு, ஹம்ம்பாத்தோட்டா, திரிகோணமல, காலே, காங்கேசன் துறை என அட்டகாசமான இலக்குகளை தன் கைவசம் வைத்திருக்கும் நாடு, முக்கியமான கடல்வழி வேறா, நயன் தாரா பின்னால் தெலுங்கு, தமிழகம், மலையாள சினிமா உலகம் கால்ஷீட்டுக்கு அலைவது போல் எல்லா நாட்டினரும் அதனை சுற்றுவார்கள்

இலங்கை ஹம்பாத்தோட்டை துறைமுகத்தை தனது நகரங்களில் ஒன்றாகவே சீனா கருததொடங்கியாயிற்று

கொழும்பினை கட்டுபடுத்துவதில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு போட்டி நிலை வந்துவிட்டது, திரிகோணமலையின் முக்கிய பகுதிகளை கைபற்ற சிங்கப்பூரும், ஜப்பானும் மல்லுகட்டுகின்றன‌.

சில எண்ணெய் குடோன்களை அமைக்க ரஷ்யாவிற்கும், ஈரானுக்கும் கடும் விருப்பம். போரில் அவை இலங்கையினை ஆதரிக்க அதுதான் விஷயம்

புலிகள் இல்லா இலங்கையினை கையாள்வது இந்தியாவிற்கு கடினம், அதனால்தான் அமைதிபடை பின்வாங்கலும், ராஜிவ் கொலைக்கு பின் இந்தியா காத்த அமைதியும்

புலிகள் முற்றிலும் அழிவதை இந்தியா விரும்பியதும் இல்லை, காரணம் அது அரசியல். ராஜிவ் கொலைக்கு பின்னும் புலிகளுக்கும் "ரா"விற்கும் தொடர்பு இல்லை என நினைப்பீர்களானால் அது உங்கள் நம்பிக்கை இருந்துவிட்டு போகட்டும்.

சில விளையாட்டுக்களில் அது இறங்கி பார்த்தாலும் அங்கிள் சைமன் போன்றவர்களின் பெர்பாமன்ஸ் சரி இல்லாததால் அதற்கு சறுக்கல்

ஆனாலும் தென்னிலங்கையில் பின் வாங்கும் இந்தியா வட இலங்கையில் பிடியினை இறுக்குகின்றது, திரிகோணமலை குறிப்ப்பிட்ட பகுதி, சம்பூர் அணல் மின் நிலையம், பலாலி விமான நிலையம் என பிடித்திருக்கும் இந்தியா புதிதாக காங்கேசன் துறைமுகம் என கண் வைக்கின்றது

எனினும் கொழும்பில் சமீபகபாலமாக இந்தியாவின் கை ஓங்கவில்லை, சீனாவும் அமெரிக்காவும் கடும் மருட்டல். இத்தனைக்கும் இந்திய சரக்குகள் அதிகம் கையாளபடுவது கொழும்பில்தான்.

திட்டமிட்ட இந்தியா கன்னியாகுமரியில் இணையம் பெரும் துறைமுகத்தை நிர்ணயிகின்றது, அது உருவாகும் பட்சத்தில் கொழும்பிற்கு இந்தியா செல்ல வேண்டிய அவசியமில்லை, நிச்சயம் அது சிங்களருக்கொரு அடி.

இந்தியா மிக தீவிரமாக காய்களை நகர்த்துகின்றது,

புலிகள் இருக்கும் வரை அவர்களுக்கு ஆதரவான சிங்கப்பூர், புலிகளின் தளபதிகளுக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் இப்பொழுது நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடிக்கின்றது, காரணம் சில பாதுகாப்புகளை அவர்கள் பலபடுத்துகின்றார்கள், அங்கே இருந்து கொண்டு புரட்சி, தமிழர் என கொடிபிடித்தால் அது இன்னொருவன் கொடிபிடிக்க வழிவகுக்கும் அல்லவா?

கூடவே திரிகோணமலை மீது ஜப்பானுடன் சேர்ந்து போட்டியிடும் சிங்கப்பூர் அதன் பக்கமே சரியும்

இலங்கை நிலவரங்களை பார்க்கும் பொழுது எல்லா நாடுகளும் அதனை சூழ்கின்றன, அதுவும் தந்திரமாக கொழும்பு உனக்கு, ஹாம்பாந்தோட்டை உனக்கு, காங்கேசன் துறை உனக்கு, திரிகோணமலை ரேட் ஜாஸ்தி என அதே விலாங்குமீன், வான்கோழி, ஓணான் தந்திரங்களை காட்டி தப்பிகொண்டிருக்கின்றது

சந்தடிசாக்காக வட இலங்கையில் பெரும் வாழைபழ உற்பத்தி கம்பெனிகள் படையெடுத்துவிட்டது என்கின்றார்கள், தென் அமெரிக்க நாடுகளில் அவர்கள் வைத்ததுதான் வாழை உற்பத்தி, இப்போது இலங்கைக்கும் வந்தாயிற்று, இவை இந்திய கம்பெனி அல்ல‌

ஆக இனியும் யாராவது "இந்தியாவின் முற்றுகையில் இலங்கை" என பொய் சொல்லி புத்தகம் எழுதினாலோ, சிடி வெளியிட்டாலோ அல்லது நூல்நிலையமே திறந்தாலோ, எது உண்மை என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.




No comments:

Post a Comment