Tuesday, August 9, 2016

சிதறல்கள்







 




கதிர்வீச்சை தடுக்க செல்போனில் சாணியை மெழுகுங்கள் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

இனி இவரை சாணியால் அப்பி கூடங்குள அணுவுலை அல்லது கல்பாக்கம் அணுவுலை அருகில் ஒரு மாமாங்கம் நிறுத்தி சோதித்து முடிவினை பெறலாம்.

என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை, பசு, ஹோமியம், சாணி தாண்டி யோசிக்க மாட்டார்கள்,


விரைவில் நாடாளுமன்றத்தில் பசுமாடுகளுக்கு இடையில் அறிக்கை வாசிக்கும் நிலை வரலாம் என்பதால் மோடி கொஞ்சம் அஞ்சுகின்றார்

சமீபத்தில் அவர் வாய்திறந்தது அதற்காகத்தான்.





பிரபாகரனை சந்திக்க செல்லும்பொழுதே கடற்படை என்னை சுட்டு கொன்றிருந்தால்.........: வை.கோ உருக்கம்

அப்படி நடந்திருந்தால், ராஜிவ் கொலை வரை புலிகளுக்கு தைரியம் வந்திருக்காது, பிரபாகரனும் 2009ல் குடும்பத்தோடு கொல்லபட்டிருக்க மாட்டார்

இப்படி உருகி என்ன அனுதாபம் தேட வருகின்றார், சரி ராணுவம் சுடவில்லை அல்லவா? நம்பிய யாரை காப்பாற்றி கிழித்துவிட்டார். திமுகவினை உடைத்தார், இவர் கட்சி இவரை மட்டும் கழற்றிவிட்டு மறுபடி அங்கே ஒட்டிகொண்டது


சரி புலிகளுக்காவது ஒரு ஆதரவு திரட்டி கொடுத்தார் என்றால் அதுவுமில்லை

ஆக ஒன்றுமே உருப்படியாக செய்யாமல் அன்றே நான் செத்திருந்தால்.. என புலம்புவது என்ன வகை அனுதாபமோ தெரியவில்லை





இலங்கை கிழக்கு மாகாணத்தில் காட்டு யானைகள் அட்டகாசம், சிலர் உயிரிழப்பு, பெரும்பான்மையான மக்கள் பாதிப்பு, அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் போராட்டம்

எங்கே ஈழ உணர்வாளர்கள்?, புலி என்றால்தான் கிளம்புவீர்களா? யானை என்றால் சத்தம்போட மாட்டீர்களா?

புறநானுற்றில் முப்பாட்டனின் வீரம் என்ன? வேல் எறிந்தே களிறினை கொன்ற வரலாறு எப்படி?, கிளம்புங்கள் அங்கிள் சைமன் தலமையில் சென்று யானையிடமிருந்து தமிழரை காப்பாற்றுங்கள்.






பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில்75 பேர் பலி


இந்தியாவின் நிம்மதியினை கெடுக்க பாகிஸ்தான் உருவாக்கிய மதவாதம் இன்று அவர்களையே கொன்றுகொண்டிருக்கின்றது, சிறிதும் பெரிதுமாக அடிக்கடி குண்டுவெடிப்புகள், அதாவது மதவாதம் ஊட்டி வளர்க்கபட்ட அந்த தீவிரவாதிகள் ஐஎஸ் போல தீவிர இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்ற போராடுகின்றார்களாம்


இந்தியா பெரும் சக்தியாகிவிட கூடாது என வலிந்து வெட்டிகொடுக்கபட்ட தேசம் அதுவே தவிர, உண்மையான மார்க்க சிந்தனையில் கிடைத்த நாடு அல்ல, ஆனால் அந்த மார்க்க சிந்தனையினை வெறிதனமாக இந்தியாவிற்கு எதிராக தூண்டிய விளைவினை அவர்கள் அனுபவிக்கின்றார்கள்





இதோ கலவரம் மூண்டு பாகிஸ்தான் அரசு துப்பாக்கி சூட்டில் இறங்கி இருக்கின்றது, அடிக்கடி அங்கு இது இப்பொழுது எல்லாம் சாதாரணம், கராச்சி எனும் பிரிட்டிஷ் இந்தியாவின் பெருமை மிகு நகரம் இன்று ஆசியாவின் பயங்கரமான நகரங்களில் ஒன்று

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், இதோ அறுவடை செய்கின்றார்கள்

இப்படி ஒரு தேசத்தில் இருந்துதான் நவாஸ் இந்தியாவினை காஷ்மீருக்காக கண்டிக்கின்றாராம்.





570 கோடியுடன் சிக்கிய கண்டெய்னர் போலி பதிவெண் கொண்டது, சிபிஐ விசாரணையில் முதல் கட்ட தகவல்


முதலில் தெரியாது என்றார்கள், பின் வங்கி எமது பணம் என்றது, ஆனால் எடுத்துகொள்ளவில்லை, ஏன் என்றால் தெரியாது? 570 கோடியினை அம்போ என விட்டுவிடும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிட்டதா? அல்லது வெறும் 570 கோடியினை வைத்துகொண்டு உப்பு கூட வாங்க முடியாதே என்ற ஜிம்பாப்வே நிலை வந்துவிட்டதா? அந்த வங்கிக்கே வெளிச்சம்.


இப்பொழுது சிபிஐ விசாரணையில் கண்டெய்னர் பதிவே போலி என்கின்றார்கள், நல்லவேளையாக பணம் போலி கள்ளநோட்டு எனும் தகவல் இதுவரை வரவில்லை





ஒருவேளை விஜய் மல்லையா வங்கிக்கு பயந்து கண்டெய்னரில் கடத்தியிருப்பாரோ? மனிதருக்கு தெரிந்தால் என் பணம் தான், வங்கி எடுத்துகொள்ளட்டும் என்பார், அவர் வியாபாரி அல்லவா? அப்படி யோசிப்பார்

ச‌ரி மறுத்து இது என்பணம் என சொல்ல யார் வருவார்கள்?

ஆனாலும் இந்தியாவினை நினைத்து நான் பெருமைபடுகின்றேன், இம்மக்கள் எவ்வளவு உயர்வானவர்கள் மூன்று கண்டெய்னர் நிறைய பணம் இருந்தும் இன்னும் யாரும் உரிமை கொண்டாடவில்லை, இது அல்லவோ நாடு, இவர்கள் அல்லவோ மக்கள், எவ்வளவு செழிப்பான நாடாக மாறிவிட்டது

எப்படியும் போகட்டும், கண்டெய்னர் சிக்கல் வந்த பின் சசிகலா புஷ்பா சர்ச்சை வந்தது, இல்லாவிட்டால் இந்நேரம் 570 கோடி சசிகலா புஷ்பா பணமா? என்றொரு பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கும் :)





கோவை ஈசா யோகா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்தமேலும் ஒரு பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


ஆக இந்த யோகா மையம் எனும் பெயரில் பெரும் குழந்தை கடத்தல் தொழில் நடந்திருக்கின்றது, கதறிகொண்டிருக்கும் பெற்றோரின் நிலை அதனைத்தான் சொல்கிறது


அது என்னவோ தெரியவில்லை கோவை மலையடிவாரத்தில்தான் யோகா தியானம் எல்லாம் செய்யமுடியுமாம், கர்தராகிய தேவன் அங்கே தான் கல்லூரி கட்டி கல்விபணியாற்றவும் ஒருவரிடம் காருண்யமாக சொன்னாராம்




இருக்கட்டும், இந்த குழந்தை கடத்தல் பற்றி அரசாங்கம் ஏன் இன்னமும் களமிறங்கவில்லை என்பதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.



No comments:

Post a Comment