தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றொரு கருத்து வந்தது, அதன் பின் ஏராளமான சர்ச்சைகள் வந்தன
பெரும் குற்றமான ராஜிவ் கொலையாளிகளை விடுவி என சிலர் பைக் ரேஸ் நடத்தினர், அதோடு விட்டார்களா? காஷ்மீரில் இந்திய ராணுவத்தை கண்டித்து கோடாரி காம்புகளாக தமிழகத்தில் விஷம் கக்க்கினர்
காவல்துறையினரின் தற்கொலைகள், கொலைகள் எல்லாம் அச்சமாக பார்க்கபட்டன, கூடவே சாதிய கொலைகள் மறுபக்கம்
உச்சமாக தமிழக எம்பி ஒருவர் எனக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என் ராஜ்யசபாவில் கதறுகின்றார்
மாநில அரசு பல விஷயங்களில் மவுனம் காக்கும் போது, திணறும் போது ஆளுநர்தான் சில கண்காணிப்புகளை செய்ய களமிறங்க வேண்டும், அதுதான் அவர் பணி
இந்த தமிழக ஆளுநர் என்றொருவர் உண்டல்லவா?, அவர் எங்கிருக்கின்றார், என்ன செய்கின்றார் என ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை
ஒரு பதவி இருந்தால் அதற்கு அதிகாரம் இருக்கவேண்டும், அல்லது அதிகாரத்திற்குட்பட்டு அதிலிருப்பவர் செயலாற்றவேண்டும்
இரண்டும் நடந்ததாக தெரியவில்லை, பின் எதற்கு ஆளுநர் அவருக்கொரு ராஜ்பவன், அவருக்கொரு சம்பள செலவுகள்
சாதாரண குடிமகன் சமையல் எரிவாயு விஷயம் வரை சிக்கனமாக இருக்க வேண்டும் என சொல்லும் அரசுதான், இம்மாதிரியான வெட்டி செலவுகளை கோடிகணக்கில் செய்கின்றது
சரி இந்த தமிழக ஆளுநர் என்னதான் செய்கின்றார்?
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி எப்படி கலக்கிகொண்டிருக்கின்றார், அவரை பார்த்தபின்புமா நமது ஆளுநர் விழிக்கவில்லை
கொஞ்ச நாள் கிரண்பேடியினை தமிழகத்திற்கும் ஆளுநராக நியமித்துபார்க்கலாம், அப்பொழுது பார்க்கலாம் அதிரடி விளையாட்டு
இரு நெருப்புக்களை மோத விட்டால் எப்படி பறக்கும் பொறி :)
எவனோ ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றான், தமிழகத்தில் யானைகள் தொடர்ந்து சாவது வயதான அரசில்வாதிக்கு நல்லதில்லையாம்
நள்ளிரவில் விழித்து ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு குப்புற படுத்துகொள்வது இதுதான்
அடேய் 1985களில் வீரப்பன் தொடர்ச்சியாக நூற்றுகணக்கான யானைகளை கொல்லும்பொழுதுதான் தலைவருக்கு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பமானது, எதிரிகள் செயலிழந்த காலம் அது, அந்த நேரத்தில் கலைஞரின் எதிரிகள் மருத்துவமனைகளில் முடங்கினார்கள்
மறுபடியும் யானை சென்டிமென்ட் என்றால் மறுபடியும் வெற்றி வாய்ப்பு அவருக்குத்தான்,
பகுத்தறிவு என்றால் பகுத்தறிவில் ஜொலிப்பார், சென்டிமெண்ட் என்றால் அதிலும் வாய்ப்பு அவருக்குத்தான் வரும், அதுதான் அவர்
# கலாய்த்தால் கலங்குர ஆளா அவர், கலைஞர்டா.....
No comments:
Post a Comment