அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஓபாமா அப்படி அவப்பெயரோடு விலகுவார்என்பது நடக்காது, ஒருவேளை வெற்றிபெற்றால் பின்னாளில் நிச்சயம் அந்த அவப்பெயரோடு டிரம்ப் பதவி விலகுவார் என்பது மட்டும் புரிகின்றது
மனிதர் எவ்வளவு அட்டகாசம், ஹிலாரி ஜெயலலிதாவினை பார்த்து அரசியலுக்கு வந்தார் என அதிமுக ஜால்ராக்கள் சொல்வது அபத்தமாக இருக்கலாம்,
ஆனால் திராவிட, தமிழ்தேசிய இயக்கத்தாரிடமிருந்தே டிரம்ப் அதிரடியாக பேசகற்றுகொண்டார் என்றால் அது நிச்சயம் ஏற்றுகொள்ளகூடியது
சொல்லமுடியாது மாறுவேடத்தில் தமிழகத்தில் கொஞ்சநாள் டிரம்ப் சுற்றினாலும் சுற்றி இருக்கலாம், சீமானின் பேச்சினை கேட்டிருக்கலாம் அல்லது 1960களின் திமுகவினரின் எழுத்துக்களை படித்திருக்கலாம்
அல்லது தமிழக சாதிவெறியர்கள் பேச்சினை கேட்டு மயங்கி இருக்கலாம்
சும்மா சொல்லகூடாது அப்படியே பேசுகின்றார், மொழி மட்டும்தான் வேறு. மற்றபடி அதே அரசியல்
No comments:
Post a Comment