Monday, August 1, 2016

சிதறல்கள்



வட மாநிலங்களில் மழை, வெள்ளத்துக்கு 100 பேர் பலி..

காஷ்மீரில் உள்ளவன் மட்டும்தான் தமிழனுக்கு சகோதரனா?, இவர்கள் எல்லாம் எதிரிகளா? எங்கே அந்த மங்கி பாய்ஸ், ஆட்டுமந்தை கூட்டம்?

இதோ காஷ்மீர் மக்களும் கடும் மழையில் பாதிக்கபட்டுள்ளனர், வள்ளுவன் கோட்டம் முன் மைக்கில் கத்தியவன், காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்போம் என சவுடால் விட்டவன் எல்லாம் எங்கே?


ஓடிவந்து உதவுங்கள் பார்ப்போம், ஒருவன் வருவான் ம்ஹூம்

நாளை அங்கே வெள்ளம் எல்லை மீறினால் உயிரை பணயம் வைத்து காக்க எமது ராணுவம் வருமே அன்றி, யார் வருவார்கள்?

இதுதான் எமது ராணுவம் அந்நிய சக்தி, தீவிரவாதம், இயற்கை இடர் என எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எமது ராணுவம்தான் அவர்களை காக்கின்றது

உணர்வாளர்களே, ஒருவேளை காஷ்மீரிய மக்களை வெள்ளத்தில் மீட்க எமது ராணுவம் இறங்கினால், இந்திய ராணுவமே வெளியேறு என ஆர்வகோளாறில் கத்திவிடாதீர்கள்,

அதன் பின் உங்கள் உண்மை நிலை உலகிற்கே தெரியவரும், தப்பி பிழைத்த காஷ்மீரிய மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்

ஆனால் நீங்கள் நிச்சயம் அப்படி செய்வீர்கள், காரணம் உங்கள் சிந்தனை அப்படிபட்டது.

அவ்வளவு சீக்கிரம் திருந்துபவர்கள் அல்ல நீங்கள்





சேணல் 4 இப்பொழுதெல்லாம் இறுதி யுத்த காட்சிகள், படங்கள் என ஒன்றையும் வெளியிடுவதில்லை, முன்பு எங்களிடம் ஏராளமான யுத்த குற்ற‌ காட்சிகள் உண்டு, ஒவ்வொன்றாய் எடுத்து போட்டு ராஜபக்சேவினை , சிங்கள ராணுவத்தை அட்லாண்டிக் கடலில் வீசாமல் ஓயமாட்டோம் என்றார்கள்.

இப்போது மகா அமைதி, இறுதி யுத்தமா? அப்படி என்றால் எது ஹிட்லர் கொல்லபட்டதா என கேட்காதது தான் பாக்கி

மீடியாக்கள் உலகம் முழுக்க ஒரு மாதிரிதான் போலும்




இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் ஒன்றாக பார்க்காதீர்கள், இரண்டும் வேறானவை : ஐரோப்பிய‌ மக்களுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை

வலிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.




 

தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.



தலைவருக்கு எது நன்றாக இயங்கினால் பிடிக்காது போல, தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்றால் எப்படி தலைவரே? தாழ்த்தபட்டவன் 30% வேலை திறமை காட்டினால் மேலாளர் ஆகிவிடலாம், உயர்சாதிகாரன் 90% திறமை காட்டினாலும் அடி ஆழத்தில் கிடக்கவேண்டும் அதுதானே

ஆக வேலையே செய்யாமல் அல்லது தெரியாமல் ஒருவன் உயரவேண்டும், எல்லா வேலையும் தெரிந்தும், நுட்பம் தெரிந்தும் அவன் வெறும் குப்பை கொட்ட வெண்டும், இதுதானே நீங்கள் சொல்ல வரும் தத்துவம்?


மனதை தொட்டு சொல்லுங்கள், இப்படி எல்லாம் செய்தால் அந்த கம்பெனி உருப்படுமா? வளருமா? 5 வருடத்தில் தமிழகத்தை போல நாசமாக சென்றுவிடாதா?

இப்படி எல்லாம் தமிழகத்தில் இட ஒதுக்கீடு புரட்சி செய்தும் அரசு நிர்வாகம் டாஸ்மாக் திறக்குமளவு சென்று ஏன் என யாரவது கேட்டால், பதில் என்ன வரும்?

சரி பன்னாட்டு நிறுவணங்களிடம் இப்படி ஒரு நிபந்தனை விதித்தால் ஓடிவிடமாட்டார்களா? எவன் இங்கு தொழில் தொடங்க வருவான்?

கட்சிநடத்த சில விஷயங்கள் சரிபட்டு வரலாம், ஆனால் கம்பெனி நடத்த சரிவருமா?, கட்சியினை சொந்த கம்பெனி போல நடத்தினால் புத்தி இப்படித்தான் யோசிக்கும்,

எல்லாம் கட்சி நடத்திய, வோட்டு வாங்கிய தோஷம், வேறு ஒன்றுமில்லை












பாகிஸ்தானில் நடக்கும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர் கூட்டத்தில், இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளகூடாது, அவரை நாட்டிற்குள் விட கூடாது , காஷ்மீரை விட்டு இந்தியா வெளியேறும் வரை, இந்தியாவிற்கு வெங்காயம் விற்க கூடாது : பாகிஸ்தான் அரசினை மிரட்டும் தீவிரவாதி ஹவிஸ் சயித்

இந்தியாவிற்கு வெங்காயம் விற்காதே என இந்த வெறுங்காயம் சொல்கிறதாம், இந்தியா 4 அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் பாகிஸ்தான் செல்லுமா?, பின் எங்கிருந்து இவர் வெங்காயம் விளைவிப்பார்?

அவர் அறிந்த பாகிஸ்தான் அவ்வளவுதான்




 

No comments:

Post a Comment