Friday, August 5, 2016

சிதறல்கள்

மாணவி நவீனா கொலை: ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் : காடுவெட்டி குரு

எத்தனை மாணவிகளும் பெண்களும் இதனைபோல உயிரிழந்தனர், அப்பொழுதெல்லாம் போகாத ஐகோர்ட்டுக்கு இப்பொழுது ஓடியே போவாரம்.

இதற்கு மேலும் பாமக சாதி வாரி கட்சி இல்லை என்பார்கள் அல்லவா அப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்


நீண்ட நாளைக்கு பின் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு, எப்படி விடுவார்கள்?, இனி இதனை வைத்துதானே அடுத்த தேர்தல் வரை கட்சி நடத்தவேண்டும்





பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று புகழ வேண்டாம் என சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி பேசினார்.

ரொம்ப சரி, அப்படியே இந்த கோட்சே தியாகி, இந்திரா கொலையாளி தியாகி, வேலூர் சிறையில் இருக்கும் 7 பேர் தியாகி என சொல்பவன்

புதிதாக புர்ஹான் வானி தியாகி, அசார் மசூத் தியாகி என சொல்ல ஆரம்பித்து இருப்பன் என எல்லோரையும் பிடித்து உள்ளேபோடுங்கள் அய்யா




குழாயடி சண்டை போடவா சட்டப்பேரவை? : ராமதாஸ் கண்டனம்

# வெட்டி நடுரோட்டில் போடவா சாலையோர மரங்கள்?




 

No comments:

Post a Comment