"இந்த தமிழகத்தில் முதல் தர நடிகன் இந்த சந்திரபாபு, நெக்ஸ்ட் சிவாஜி கணேசன்

ஜெமினி நேற்று இன்று நாளை எல்லாம் ஒரே, அவன் மாற மாட்டான்
எம்ஜி ராமசந்திரன்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான், அவனெல்லாம் ஏன் நடிக்க வாரான். ஏதோ ராமவரத்துல ஒரு ஆஸ்பிட்டல் கட்டுறாங்களாம், அவன் அங்க கம்பவுண்டரா போகலாம்" : சந்திரபாபு
தமிழக சினிமா உலகிற்கு மேற்கத்திய பாணியினை புகுத்திய முதல் கலைஞன்
இன்று வரை வரும் துள்ளிசை பாடல்களுக்கும், மேற்கத்திய ஆடல்களுக்கும் அவனே முன்னோடி
இந்நாளைய பிரபுதேவாக்கள், லாரன்ஸ் இன்னும் பலர் எல்லாம் அவனையே பின்பற்றுபவர்களே, நடனத்தில் அது நன்றாக தெரியும்.
சந்திரபாபு ஒரு பெரும் கலைஞன், மகா கலைஞன்
ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, இயக்கம் , உடை என பல பரிமாணங்களுக்கு புதிய பரிணாமம் கொடுத்தவன், அன்றே தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த எண்ணிய கலைஞன்.
காலத்தை மீறி கனவு கண்ட அந்த மகா கலைஞனின் பிறந்தநாள் இன்று
No comments:
Post a Comment