புஷ்பா விவகாராம் எங்கோ திரும்புகிறது, தென்னகத்து அம்பானியின் அதிமுக ஆதரவாளர்கள் நெல்லை பக்கம் கட்சியிலிருந்தே விரட்டபடுகின்றார்கள், அதுவும் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டவர்கள் எல்லாம் ஓட விரட்டபடுவது சாதாரண விஷயமாக இருக்காது
தாதுமணலில் அரசு ஒரு முடிவுக்கு வந்தவுடன், அண்ணாச்சியும் ஒரு முடிவிற்கு வந்து ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றார் என்கிறது சில செய்திகள், ஆனால் உறுதிபடுத்தபடவில்லை
இன்னும் சில நிகழ்வுகள் நடந்தால் சாட்சாத் தமிழக அம்பானி களமிறங்கிவிட்டார் என்பது உறுதிபடுத்தபட்டு விடும்
சில நிகழ்வுகள் என்பது வேறு ஒன்றுமல்ல, "அண்ணாச்சி நல்லவர் வல்லவர், தாது மணல் 1 லட்சம் மக்களுக்கு சோறு போடும் தொழில், நாங்கள் ஸ்பூன் வைத்து கடற்கரையில் லேசாக மணல் அள்ளிதான் தொழில் செய்வோம்
பெரும் எந்திரங்கள் எல்லாம் வெளிநாட்டுகாரனை ஏமாற்றவே அன்றி, மணல் அல்ல அள்ள " என ஒரு கோஷத்துடன் பலர் கிளம்புவார்கள்
நாடாண்ட நாடார் இனத்தின் தவப்புதல்வியின் கண்ணீருக்கு காரணம் யார்? என பல "சங்கத்து" தலைவர்கள் களமிறங்குவார்கள்
இப்படி சில நிகழ்வுகள் நடைபெறும், சுருக்கமாக சொன்னால் கூடங்குள போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்த வீரியம் போல சில விஷயம் நடக்கும், அங்கிள் சைமனும் கும்பலோடு கும்பலாக கத்த வாய்ப்பு உண்டு, அப்படி நடந்தால் அவர் களமிறங்கிவிட்டார் என பொருள்
இந்த இடத்தில் தமிழக மக்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்
முதன் முதலில் அண்ணாச்சியினை பகிரங்கமாக கண்டித்தவர் வியஜகாந்த், தூத்துகுடியிலே சவால் விட்டார், அதன் பின் அங்கிள் சைமன் வந்தேறி கோஷம் எழுப்பி விஜயகாந்தினை குறிவைத்து சாடியதும், வைகோவின் நாடகங்களும் நடந்து விஜயகாந்த் கட்சி கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டதும் தெரியும், அப்பொழுது சீமானின் ஆட்டங்கள் கொஞ்சமல்ல
விஜயகாந்த தோற்றவுடன், சீமானும் மகா அமைதி. இப்பொழுதெல்லாம் வந்தேரி, தெலுங்கர் , போர் போன்ற வார்த்தைகள் அவரிடம் இல்லை
இப்பொழுது ஜெயாவிற்கும் வைகுண்டராஜனுக்கும் அவ்வளவாக பொருந்தவில்லை, இனி என்ன நடக்கும் என்பது இனிதான் தெரியும், ஆனால் ஆளுநர் உரையில் தாதுமணல் தொழிலை அரசு ஏற்கும் என்பது யாரும் எதிர்பாரா விஷயம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்.
மூப்பனார் ஒரு காலத்தில் ஜெயாவினை எதிர்த்து கட்சி நடத்தி கலைஞருடன் உறவாடிவிட்டு, பின் ஜெயா எவ்வளவோ பரவாயில்லை என சென்றது போல, ஒருவேளை விஜயகாந்த பரவாயில்லை என அம்மா முடிவெடுத்துவிட்டால்?
அதன் பின் காட்சிகள் மாற ஆரம்பித்தால், காரணம் அரசியலில் நிரந்தர உறவோ, பகையோ கிடையாது. காலத்திற்கேற்ப மாறுவார்கள், அப்படி மாறினால்?
அண்ணாச்சியினை விடுங்கள், அவருக்கு எல்லா கட்சியிலும் தொடர்பு உண்டு. ஏதாவது செய்து இழுத்துகொண்டே இருப்பார். ஜெகஜால கில்லாடி
ஆனால் அங்கிள் சைமனின் நிலை?
விஜயகாந்த், ஜெயா எல்லாம் ஓரணிக்கு வரவேண்டும் என்பது கூட இல்லை,
கட்சிக்குள் அண்ணாச்சி அடிமைகள் களையெடுக்கபடுகின்றனர், இது தமிழகத்திற்குள் நடந்தால்?
அண்ணாச்சியின் அல்லக்கைகள் அரசால் களையெடுக்கபடுகின்றன எனும் நிலை வந்தால் என்ன ஆகும்? வரலாம் வாய்பிருக்கின்றது.
அங்கிள் சைமன் நிலை இனி ஆப்பசைத்த குரங்கு, அவரின் அடிப்பொடிகள் நிலை என்ன ஆகும்?
என்னவெல்லாம் பேசினார்கள் அவர்கள், இனி பேசட்டும் பார்க்கலாம்? ஹிட்லர் முதல் பிரபாகரன் வரை கொடிபிடிக்கட்டும் பார்க்கலாம்
இனி தெரியும் இந்தியா என்றால் என்னவென்று, அரசு நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்குமென்று,
அப்பொழுதும் கோபாலபுரம் மீது கல் எறிந்துவிட்டு யாராவது திமுககாரனை பிடித்து அடித்து தப்பிக்க பார்ப்பார்கள், எல்லாம் சசிகலா புஷ்பா காட்டிய வழி, இவர்களாக என்று யோசித்தார்கள்.
எதற்காக கல் எறிவார்கள்?, "ஏன் வீணாக தோற்றீர் கலைஞரே, உம்மை நம்பித்தானே அரசியலில் இறங்கினோம்..இப்படி ஏமாற்றி விட்டீரே அய்யா.."
No comments:
Post a Comment