Friday, August 26, 2016

நீர்மூழ்கி கப்பல் விவகாரம்....


நாம் நமது நாட்டினை கண்காணிக்கின்றோமோ இல்லையோ, உலக நாடுகள் இந்தியாவின் ஒவ்வொரு அசைவினையும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அது நடக்கின்றது


இந்தியா பற்றி எல்லா தகவல்களும் நுனியில் வைத்திருப்பார்கள், எங்காவது இந்தியா தன்னை வலுப்படுத்திகொள்ளும்போது அதனை சரியாக பிரயோகபடுத்துவார்கள்


சாஸ்திரி மர்ம மரணம் முதல் அது தொடர்ந்தது, வங்கப்போரின் தொடர்ச்சியாக இந்தியா அணுகுண்டு செய்ய அது இன்னும் வலுத்து பஞ்சாபில் வெடித்தது, இந்திரா ரத்தத்தோடு அது துடைக்கபட்டது


இளமையான ராஜிவ் வேகமாக செயல்பட்டபொழுது போபர்ஸ் பீரங்கி ஊழல் எனும் வெளிநாட்டு வங்கி பரிவர்த்தனைகள் இந்தியாவில் வெளியிடபட்டன, எப்படி? யார் கொடுத்தார்? என்றெல்லாம் கேட்ககூடாது அவ்வளவுதான்.


வாஜ்பாய் அணுகுண்டு வெடித்து பெரும் பலத்தினை காட்டியபொழுது கார்கிலில் வெடித்தது யுத்தம், ஏன் என்றால் அப்படித்தான். யாருக்கோ எங்கோ பிடிக்கவில்லை. சோனியாவிற்கு சம்பந்தமே இல்லா அண்டை நாடான இலங்கை பிரச்சினையில் தமிழகத்தில் அவர் பெயரினை உருட்டுவார்கள்.


தற்பொழுது பரபரபாகும் காஷ்மீர் கலவரங்கள், மோடிக்கு உலகளவில் ஒரு சவால்.


பிரம்மோஸ் எனும் ஏவுகனையினை நாம் தயாரித்திருக்கும் வேளை, கிட்டதட்ட அதனை போலவே ஒன்றை செய்திருக்கின்றது சீனா, அதாவது நம்மை உள்நுழைந்து கவனிக்காமல் அது சாத்தியமில்லை என்கின்றார்கள்.


அடுத்து நீர்மூழ்கி கப்பல் முறை, ஒப்பந்தம் செய்திருப்பது பிரான்ஸ் நாடு. அதாகபட்டது அவர்கள் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் உருவாக்கிகொண்டிருக்கின்றோம், நுட்பான விஷயங்கள் அவர்கள் கொண்டு பொருத்துவார்கள், நாம் டிங்கரிங் வெல்டிங் போன்ற வேலைகளை பார்ப்போம்.


se


ரகசியமான விஷயங்கள் இவை


இப்பொழுது சிக்கல் என்னவென்றால், இதே பிரான்ஸ் நிறுவணம் ஆஸ்திரேலியாவிற்கு நீர்மூழ்கி செய்கிறது, பெரும் கேட்டரிங்க் கம்பெனிகள் ஜெயா வீட்டு விஷேசத்திற்கு நாங்கள் இப்படி செய்தோம், செட்டியார் வீட்டு கல்யாணத்திற்கு நாங்கள் இப்படி சமைத்தோம் என பெரும் பணக்காரர்களிடம் சாம்பிள் காட்டுவது போல, பார்த்தீர்களா? இந்தியாவிற்கு இப்படி செய்துகொண்டிருக்கின்றோம் என சொன்னதாக செய்தி


சொல்லி இருப்பது ஆஸ்திரேலிய பத்திரிகை.


அப்படியானால் நாம் செய்துகொண்டிருக்கும் ரகசிய நடவடிக்கைகளை உலகம் தெரிந்துகொண்டிருக்கின்றதா? அப்படியானால் சீனா, பாகிஸ்தான் அறிந்திருக்குமே என அலறுகின்றது இந்தியா.


இதற்கு பேசாமல் சீனாவிடமே செய்ய சொல்லி இருக்கலாமோ என அதிருப்தியில் இருக்கின்றது கடற்படை.


பிரான்ஸ் கம்பெனிதான் இதற்கு பொறுப்பு என்றாலும், இந்தியாவின் பங்கினையும் இல்லை என சொல்லிவிட முடியாது. எப்படி கசிந்தது என இருவரும் மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள்.


இது கிட்டதட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தின் 2 மடங்கு பட்ஜெட். பெரும் போட்டிக்கு இடையில்தான் பிரான்ஸ் கைபற்றியது. போட்டி கம்பெனி வேலையோ என அது சந்தேகிக்கின்றது.


எப்படியோ இது சாதாரண விஷயம் அல்ல, நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தை அசைத்துபார்க்கும் விஷயம் என்பதால் மகா சீரியஸ்.


பொதுவாக எதிர்கட்சி கூர்மையாக இருந்தால் இம்மாதிரி விஷ்யங்கள் கடும் பரபரப்பினை கொடுக்கும். ராஜிவ் காலத்திற்கு பின் காங்கிரஸ் அதனை இழந்து ஒரு அமைதி நிலைக்கு சென்றுவிட்டது, இதனால் இது உலக அளவில் கொடுத்திருக்கும் பரபரப்பினை விட நாட்டுக்க்குள் குறைவு.


காங்கிரஸ் இப்பொழுதெல்லாம் மகா அமைதி, ஏன் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு காங்கிரசுக்கே இன்னும் தலைவரில்லை


பாஜ மட்டும் எதிர்கட்சியாக இருந்தால் இந்நேரம் அத்வானியும், சுஷ்மாவும், ராஜ்நாத்சிங்கும் பொங்கி பொங்கி தீர்த்திருப்பார்கள். கட்டாரி எல்லாம் நீர்மூழ்கியில் ஏறி அழிச்சாட்டியம் செய்திருப்பார்


ஆனால் ஆட்சியில் இருக்கும்போது மகா அமைதி, இதுதான் அரசியல், வாய்வீச்சு அரசியல்.


இந்நிலையில் இன்னும் அந்த நீர்மூழ்கி தகவல்களை வெளியிடுவோம் என எச்சரிக்கின்றது ஆஸ்திரேலிய பத்திரிகை, காங்கிரசாரே விழித்துகொள்வீர்


அது இருக்கட்டும், ஏன் இந்த சர்ச்சைகள்?


சொந்தமாக நீர்மூழ்கி கட்டும் வித்தை நமக்கு தெரியாததால் சிக்கல், எத்தனை ஆயிரம் கோடிகளில் சினிமா, கிரிக்கெட் , தேர்தல் என எவ்வளவு செலவழிக்கின்றது இந்த தேசம்?


சினிமாக்காரன், கிரிக்கெட் காரன் சம்பளம் என்ன? ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு குவிந்திருக்கும் செல்வம் என்ன?


மதம் எனும் பெயரில் திருட்டு சாமிகளிடமும், தொழில் எனும் பெயரில் மல்லையாக்களிடமும் குவிந்திருக்கும் பணம் என்ன?


அவற்றை கொண்டு தரமான மரைன் பொறியாளர்களை நாம் உருவாக்க முடியதா? உலகெல்லாம் இருந்து விற்பனர்களை கொண்டுவந்து பாடமும் பயிற்சியும் கொடுத்தால் முடிந்தது விஷயம்.


எத்தனை நாள் மீன் பிடித்து தா என அவனிடமே பணம் கொடுப்பது, நாமே படகு கட்டி செய்தால் என்ன?


120 கோடி மக்களும், ஏராளமான கோடீஸ்வரர்களும், புத்திசாலி மாணவர்கள் இருந்தும் இன்னும் தவிக்கின்றோம் என்றால் தவறு இந்த தேசத்திடமே இருக்கின்றது.





No comments:

Post a Comment