Friday, August 12, 2016

ஹிருத்திக் ரோஷனின் 'மொகஞ்சதாரோ'


ஹிருத்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ படம் நாளை வெளிவருகிறது, சர்ச்சை வெடிக்கின்றது


rt


அதாகபட்டது லகான், ஜோதா அக்பர் போன்ற படங்கள் வரிசையில் அந்த இயக்குநர் மொகஞ்சதாரோ படம் எடுக்கின்றாராம், ஆனால் கதை அதே சிந்து சமவெளி காலத்தில் நடக்கும் கதையாம் (அமலா பால் நடித்தது அல்ல) அக்காலம் இன்றளவும் பல மர்மங்களை கொண்டது


முதல் மர்மம் அது உலகின் முதல் நாகரீகமான வாழ்வு வாழ்ந்த இடம் அல்ல, நமது ஆதிச்சநல்லூர், மெசபடோமியா போன்றவையே முன்னோடி, சரஸ்வதி எனும் நதி திடீரென வற்றிவிட்டதால் மக்கள் வெளியேறி பாலைவனமான நிலம் அது என்பது ஒரு தியரி, அதிலிருந்த மக்கள் திராவிட மக்கள் எனவும் அது தமிழுக்கு மூத்த மொழி எனவும் அவர்கள் தெற்குநோக்கி நகர்ந்தார்கள் என்பதும் ஒரு தியரி


ஆனால் அங்கு கிடைத்த முத்திரைகள், சில அடையாளங்கள், இன்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஊர் பெயர்கள் எல்லாம் தமிழரோடு தொடர்பு கொண்டவை, இது தொல்பொருள் விஷயம்


சரி படத்தில் என்ன பிரச்சினை?


கதைபடி சினிமாவில் சமஸ்கிருதம் பேசுகின்றார்களாம், இந்த ஆட்சியில் விருதோ வரிவிலக்கோ வாங்க அப்படி பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் ஒரு விஷயம் சர்ச்சையாகின்றதாம்


அதாவது இந்நாள்வரை நடந்த ஆராய்சி முடிவில் அம்மக்களுக்கு குதிரை பயன்பாடு இருந்ததாக தெரியவில்லை. பசு, காளை பயன்பாட்டில் இருந்திருக்கின்றது, முத்திரைகளில் ஒற்றை கொம்புடன் ஒரு விலங்கு இருந்திருக்கின்றது


அது அப்பகுதியில் நிலவிய மத நமபிக்கையா? அல்லது கிரேக்கர்கள் சொல்வது போல ஒற்றை கொம்பு குதிரையா என்பதில் இன்றுவரை சர்ச்சை. ஆனால் குதிரைகள் சிந்துசமவெளி பகுதியில் அன்று இல்லை என்பது ஆராய்சி முடிவு


சிலருக்கு புரியும், பசு ஒரு அரசியல் என்றால் குதிரை இன்னொரு அரசியல்


அதாவது இந்தியருக்கு யானை தெரிந்த அளவு குதிரை தெரியாது, அந்த வீக்னெஸை பயன்படுத்திய ஆரியர்கள் குதிரையினை காட்டி இந்தியாவில் வந்தனர், பின்னாளில் அலெக்ஸ்காண்டர், கோரி, கஜினி, பாபர், என சகலரும் வெற்றிகொள்ள குதிரைபடையே காரணம் என்பது ஒரு ஒப்புகொள்ளபட்ட வாதம்.


ஆக சிந்துசமவெளியில் குதிரை இருப்பதாக காட்டினால், அங்கு ஆரியர் இருந்திருக்கின்றார்கள் என சொல்லிவிடலாம்.


ஆரியர் வந்தேறி அல்ல, மாறாக சிந்துசமவெளியில் நம்மோடு வசித்தவர்கள் என வரலாற்றை திரித்து கதையில் காட்டிவிடலாம்


அப்படி காட்டிவிட்டார் என்பதுதான் சர்ச்சையின் தொடக்கம்


இந்த இயக்குநர் அசுதோஷ் கவுரிகர் பாகுபலி ராஜ மவுலி போல திறமையானவர், அவரின் லகான், ஜோதா அக்பரும் மறக்கமுடியாதவை.


அதில் ஜோதா அக்பருக்கு வட இந்தியாவில் எழுந்த எதிர்ப்பு தெரியும், அந்த அற்புதமான படத்தினை தோல்விபடம் ஆக்கினார்கள், அது மத அரசியல்


இப்பொழுது இவரே வாய்ப்பு கொடுக்கின்றார் போல, எனினும் படம் வந்தபின்புதான் சொல்லமுடியும். எவ்வளவு அழகான கற்பனை, சிந்துவெளி மக்கள் இப்படி இருந்திருப்பார்கள் என்பதை கண்ணில் பார்க்கபோவதே பெரும் எதிர்பார்ப்பினை தூண்டுகின்றது


நிச்சயம் படம் பார்க்கவேண்டும், சொல்லவேண்டிய கதை, பார்க்கவேண்டிய படம்


இதனை போல கடலில் பூம்புகாரும், நெல்லை பக்கம் ஆதிச்சநல்லூரும் பெரும் வரலாற்றினை தன்னோடு கொண்டு தூங்கிகொண்டிருக்கின்றது, படமாக்குவது யார்?


அதற்கெல்லாம் இங்கே யார் வருவார்கள்? தமிழன் மதம், தமிழன் சாதி என்றெல்லாம் எடுப்பார்களே தவிர, தமிழனின் நாகரீகம் என ஒன்றையும் தேடமாட்டார்கள்


ஒருவேளை வருங்காலத்தில் யாரும் வரலாம்.


சரி மோகஞ்சதாரோ வரப்போகின்றது, குதிரையால் சர்ச்சை வரப்போகின்றது என்கிறது ஒரு செய்தி


நாட்டின் நிலை எப்படி செல்கிறது. பசுவினை தொடர்ந்து குதிரை சர்ச்சை


இனி அடுத்து என்ன விலங்கோ? அநேகமாக ஓட்டகமாக இருக்கலாம்.


அதற்கு அடுத்து பேன்கள் யார் தலையில் முதலில் இருந்தது, எது எந்த மக்கள் மூலம் இந்தியாவிற்குள் வந்தது? என அடுத்த சர்ச்சை வரலாம்.





No comments:

Post a Comment