Thursday, August 11, 2016

நாடாளுமன்றத்தில் நம் மக்கள்....



பார்லிமெண்ட்ல காஷ்மீர் பற்றிய விவாதத்தில் "காஷ்மீர்...பியூட்டிஃபுல் காஷ்மீர்னு.." பாடினார், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்.


பெரும் கொடுமை என்னவென்றால் இவர் வழக்க‌றிஞர், அதுவும் முன்னாள் அட்வகேட் ஜெனரல். இந்நாட்டின் சட்டம் படித்த வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சி சேர்மனாக கூட இருந்தவர், நீதிபதியாகும் ஆசையும் இருந்தது


(எதற்கு குற்றவாளிகளை பார்த்து, ஒன்றே குலமென்று பாடுவோம் என பாடுவதற்கா? )


ஆனால் மிக மிக சீரியசான, பற்றி எரியும் காஷ்மீரை பற்றி விவாதம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் மன்றம் கூடியபொழுது காஷ்மீர் பிரச்சினையில் எப்படி பாட்டு படித்திருக்கின்றார் பார்த்தீர்களா?


சொல்லவேண்டியதை நீங்களே சொல்லுங்கள்,


சரி உரையினைத்தான் பாடலோடு தொடங்கினார் என்றால் உருப்படியாக ஒன்றுமே இல்லை, சோறு, குங்குமபூ என சொல்லிவிட்டு அம்மக்களை கடவுள் காப்பாற்றட்டும் என சொல்லி அமர்ந்தாயிற்று


அவர்களின் தங்க தலைவன் அணிந்த காஷ்மீர் தொப்பி பற்றி மட்டும் சொல்ல மறந்துவிட்டார், அதலானென்ன அடுத்த முறை சொல்லிவிடுவார்.



இன்னொரு நாடு என்றால் சட்டபடிப்பு முதல் எல்கேஜி படிப்புவரை படித்ததை ரத்து செய்துவிட்டு பால்வாடி பள்ளிக்கு அட்மிஷனுக்கு அனுப்பி இருப்பார்கள்.


நல்ல வேளையாக 33% இடஒதுக்கீடு பற்றி கேட்கவில்லை கேட்டால், "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள" என அடுத்த பாடல் பாடியிருப்பார்


ஏதும் சர்வதேச தீவிரவாதம் பற்றி கேட்டால் "உலகம் அழகு கலைகளின் சுரங்கம்" என ஒரு பாடல் வந்திருக்கும், விவசாயிகள் பிரச்சினை கேட்டால் "கடவுள் எனும் முதலாளி" எனும் பாடல் வந்திருக்கும், மீணவர் பிரச்சினை கேட்டால் "தரைமேல் பிறக்கவைத்தான்" எனும் பாடல் ஒலியேறியிருக்கும்


எங்கு போய் முட்டிகொள்வது என தெரியவில்லை, முன்பெல்லாம் களை கூத்தாடிகள்தான் இப்படி தெருக்களில் பாடி பிச்சையெடுப்பார்கள், இப்பொழுது வோட்டு கூத்தாடிகள் பார்லிமெண்டில் பாடுகின்றார்கள்


ஏன் வேண்டும் திராவிடம் என அண்ணாவும், இந்நாடு எங்கு செல்கிறது என முழங்கிய பசும்பொன் தேவரும், ஈழபிரச்சினையில் இந்திய நிலைப்பாடு என்ன என இந்திராவிடம் மல்லுகட்டிய வைகோவும், ஓரளவு இந்திய தொழில்துறையினை மாற்றிய முரசொலி மாறனும் முழங்கிய இடத்தில்


மொத்த உலகமும் மதிப்போடு பார்க்கும் தமிழன் ப.சிதம்பரமும் வலம் வரும் பார்லிமெண்டில்


சசிகலா புஷ்பா, இதோ இந்த எம்ஜிஆர் பாடல்காரர், என கடும் காமெடிகளை வலம் வரவிட்டால் என்ன ஆகும்?


பின் எப்படி காவேரி வரும்? எப்படி மீணவன் நிம்மதியாவான்? எப்படி மீத்தேன் தடுக்கபடும்? அணுவுலை ஏன் திறக்கபட மாட்டாது?


தமிழனை யார் மதிப்பார்கள்? மிதிக்காமல் விட்டதே பெரிய விஷயம்.


கட்சி கூட்டத்திற்கும் , நாட்டின் நலன் கூட்டத்திற்கும் வித்தியாசம் தெரிய இவர்களை என்ன செய்ய?


அன்றே சொன்னான் ஹிட்லர், "பெரும் சுதந்திரமான மக்களாட்சியின் அவலத்தை ஒரு நாள் காண்பீர்கள் அன்று மக்களாட்சி மன்றங்கள் எல்லாம் வெறும் பட்டிமன்றமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறும், அவைகளால் ஒன்றையும் மாற்றிவிட முடியாது"


மாற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, நாட்டின் மானத்தை வாங்காமல் இருக்கலாம் அல்லவா, நவாஸ் ஷெரீப் இதனை கேட்டால் தலையில் அடித்து சிரிக்கமாட்டாரா? ராஜபக்சே கேட்டால் சத்தம் போட்டு கைதட்டமாட்டாரா?


எவ்வளவு பேசலாம், ஈழ மக்களுக்காக அநாளைய காஷ்மீர் சிங்கம் பருக் அப்துல்லா ஓடிவந்ததை சொல்லலாம், காஷ்மீரில் பலியான தமிழக வீரர்கள் பற்றி சொல்லலாம், பாகிஸ்தானை கண்டிக்கலாம், சந்தடி சாக்கில் இலங்கையினை போட்டு தாக்கலாம், இதனை போலவே ராமேஸ்வர மீணவன் சிக்குகின்றான் என சொல்லலாம்


எடுத்து எறிய எத்தனை வாதங்கள் உண்டு, கிடைத்த வாய்ப்பினில் பின்னி இருக்கலாம், சர்ச்சைகள் இருந்தாலும் வை.கோ போன்றவர்கள் இதில் அரங்கத்தை அதிரவைத்திருப்பார்கள்.


நீர் பாடுமய்யா, ஆனால் எங்களுக்கு நினைவுக்கு வருவதெல்லாம் "கடவுள் ஏன் கல்லானான்.." எனும் வரிதான்







No comments:

Post a Comment