Thursday, August 25, 2016

ஆயர்குலத்தலைவா போற்றி




Image may contain: one or more people


முருகன் முப்பாட்டன், தமிழர் அடையாளம் என கொஞ்சநாளாக அழிச்சாட்டியம், அதன் பின் நரகாசுரன் தமிழன் என ஒரு வாழ்த்து, கொஞ்சநாளில் ராவணன் தமிழன் சொல்லி அவனுக்கு வீரவணக்கம்.


முருகன், ராவணன் சுற்று முடிந்து அடுத்த சுற்று, இப்பொழுது சிக்கி இருப்பவர் கிருஷ்ணன்


இவர் மூதாதையராம், மருத நிலம் எனும் விவசாய நிலத்தில் வாழ்ந்த மூதாதையாம், சரி அப்படியானால் முருகன் முப்பாட்டன் மலைவாசி, தமிழன் நாட்டிலிருந்து காட்டிற்கு சென்றிருக்கின்றான் என்பது இவர்கள் ஆராய்சி.





முருகன் முப்பாட்டன், நரகாசுரனும் பாட்டன், சூரனும் பாட்டன், ராவணன் பாட்டன் எனும் வழியில் அடுத்தது என்ன வரும் என்பது அனுமானிக்க கூடியது

அதே தான் கம்சனும் தமிழன், கிருஷ்ணனால் கொல்லபட்ட காளிங்கன், சிசுபாலன் என எல்லோரும் முப்பாட்டன்

அதாவது கொன்றவனும் முப்பாட்டன், கொல்லபட்டவனும் முப்பாட்டன்

ஆசியா முழுக்க தமிழர், உலகமே தமிழர், எல்லோரும் தமிழர்

ஒரே நாளில் காலையில் சூர சம்ஹாரம் என முருகனை ஹீரோ என கொண்டாடலாம், மாலை சூரனுக்கு வீரவணக்கம் செலுத்தலாம்

காலை விஷ்ணுவிற்கு வெற்றிவிழா கொண்டாடலாம், மாலை நரகாசுரனுக்கு அழுது புரளலாம்

கிருஷ்ண ஜெயந்தி காலையில் கொண்டாடலாம், மாலையில் எல்லாவற்றையும் வாந்தி எடுத்து கம்சனை அழித்த கண்ணா உன்னை விடமாட்டோம் என முழங்கலாம்

இனி பிரம்மன் மட்டும் பாக்கி, அவனுக்கு என்ன பங்கு வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

சிங்கள இனவெறியன் பிரேமதாசா அமைதிபடை காலத்தில் புலிகளுக்கு உதவியதால் அவனுக்கு காலையில் ஒரு புகழ்வணக்கம், பின் அவன் புலிகளால் கொல்லபடதால் அப்படியே மாலையில் ஒரு துரோகி பட்டம்

உங்களுக்கு இது விசித்திரமாக படலாம், ஆனால் 2004ல் இருந்து சீமானிய அழிச்சாட்டியத்தை கவனித்துவருபவர்களுக்கு இது அதிசயமாக தெரியாது

காரணம் அன்னார் அன்று ஒரு நாள் பசும்பொன் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தி முழங்கினார், அவர் புகழ்பாடினார், அடுத்த மாதமே இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து "ஏய் இனமான தமிழனே, உன்னை கொன்ற சமூகத்தை விடவே மாட்டேன்.." என சீறினார்.

ஆக அங்கிள் சைமன் மனநிலை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகின்றதே தவிர, திருந்தியதாக தெரியவில்லை, நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு அவர் திருந்தவே மாட்டார்

அநேகமாக அடுத்த முப்பாட்டன் வரிசை இந்திரன், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியர் லெவலுக்கு செல்லலாம்.

முப்பது முக்கோடி தேவர்கள் உண்டல்லவா, ஒரு ரவுண்ட் நிச்சயம் வருவார்கள்.















No comments:

Post a Comment