Friday, August 12, 2016

சிதறல்கள்

அனுமதியின்றி கடத்தபட்ட 30 டன் தாது மணல் கைபற்றபட்டதது : செய்தி

எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் எனும் சாதாரண அரசியல் தத்துவம் தெரியாதவரா முதல்வர்.

ஏதோ தமிழக அரசியலை புரட்டிபோடும் ரகசியம் என்னிடம் உள்ளது என சொன்ன சசிகலா புஷ்பா இனி வாய்திறப்பார்?

நாடார் சமூகம் எனக்கு பாதுகாப்பளிக்கும் என சசிகலா புஷ்பா சொன்ன மறுநிமிடம் பல சங்கங்கள் மறுப்பு தெரிவித்தபொழுதே, கண்ணி எங்கோ போடபட்டது தெரிந்தது.

அதுவும் சசிகலா புஷ்பா சொன்னதற்காக அவசரமாக கூடி மறுப்பு அறிக்கை விட்டதுதான் பெரும் விறுவிறுப்பு. யாருக்கோ முகத்தில் "மண்" அள்ளி போட்டிருக்கின்றார்கள். தாதுமணல் அல்ல, சாதாரண மணல்

சங்கங்கள் அப்படித்தான் அரசினை எதிர்க்கமாட்டார்கள், புறம்போக்கு நிலத்தில் சங்க கட்டடம் உள்ளது என வழக்கு பாய எவ்வளவு நேரமாகும். சங்கமும் இருக்காது, கட்டடமும் இருக்காது

ஆக நன்கு திட்டமிட்டு காய்கள் நகர்த்தபடுகின்றன,

மன்னாதி "மண்"ணவனுக்கு சோதனை காலம்.




 

30 ரூபாய் லஞ்சத்தால் 10 மாத குழந்தை இறந்த அவலம்: உ.பியில் லஞ்ச கொடூரம்

அக்குழந்தைக்கு 10 மாதமாம், காய்சலுக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். குறைந்தபட்சம் 30 கூட இல்லாமல் நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளி அனுமதிக்கவில்லையாம். நோய் தாமதிக்குமா? குழந்தை போனது

லஞ்சம் ஒரு புறம் இருக்கட்டும், மனிதாபிமானம் அறவே செத்துவிட்ட தேசமிது


ஆனல் 30 ரூபாய் இல்லாமல் அக்குழந்தையினை சாகவிடும் அளவிற்கு வறுமை தாண்டவமாடுகின்றது, 30 ரூபாய் லஞ்சம் கேட்கும் அளவிற்கு அவர்கள் நிலமையும் இருந்திருக்கின்றது

இந்த உ.பியில்தான் பல்லாயிரம் கோடியில் ராமர் ஆலயம் கட்டுவார்களாம்

அக்காலத்தில் இருந்தே அறியாமையும், வறுமையும் புரையோடிய மாநிலம் அது. அவர்களுக்கு தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை

ஆனால் அன்றே கோஷம் எழுப்பினார்கள் அல்லவா? "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என அவர்களை சொல்லவேண்டும், எல்லாம் பொய்

வடக்கு வாழும் நிலைக்கு வரவே இன்னும் பல காலம் ஆகும்.

No comments:

Post a Comment