Tuesday, August 9, 2016

ஒரு மறைமுக போர் நடத்துகின்றது இஸ்ரேல்

உலகமெல்லாம் எது இயங்குகின்றதோ இல்லையோ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடுத்து தவறாமல் இயங்கிகொண்டிருப்பது உளவு துறைகள், எப்படித்தான் ஊடுருவார்களோ தெரியாது ஆனால் சரியாக சாதிப்பார்கள்


இப்பொழுது மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருப்பவை இரு முரட்டு நாடுகள். ஒன்று வடகொரியா, இன்னொன்று ஈரான்


இதில் வடகொரியா வித்தியாசமான நாடு, கொடுக்கவேண்டியதை கொடுத்தால் அமைதியாவார்கள், மகா ஏழ்மை. ஆனாலும் அரசு இரும்பு, அவ்வப்போது மேற்கத்திய உளவாளிகள் அகப்படுவார்கள், அதிபரும் எப்படி எமது சாமர்த்தியம், பிடித்துவிட்டோமா? இதோ ராக்கெட் , இதோ அணுகுண்டு எல்லாம் உனக்குத்தான் என்பார்கள்




அரசுகள் மேஜைக்கு அடியில் பேசிமுடித்து உளவாளியினை விடுவிக்கும், அரசும் கொஞ்சநாள் அமைதி ஆகும்.


ஆனால் ஈரான் அப்படி அல்ல, முரட்டு நாடு. இன்னொன்று அதன் குறி இஸ்ரேல், இன்னொன்று இன்றுவரை அரேபியாவில் அரேபியர்களால் ஆளபடும் நாடு ஈரான் மட்டுமே, இன்னொன்று சிரியா, வேறு எல்லாம் கைபாவைகள்


எப்படியாவது ஈரானை அணுகுண்டு செய்யாமல் தடுக்கவேண்டும் , வழி இல்லை என்றால் போர் நடத்தவேண்டும் என வெறியோடு அலையும் நாடு இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானிடம் மட்டும் அணுகுண்டு உண்டு என்றாலும் அது அமெரிக்க அடிமை.


ஆனால் ஈரான் அணுஆயுதம் பெற்றுவிட்டால் அதுதான் அரேபிய தாதா அல்லது நாட்டாமை. இஸ்ரேலுக்கு ஒரு நிரந்தர எதிரி தயாராகிவிடும்.


ஒரு மறைமுக போர் நடத்துகின்றது இஸ்ரேல்


இதில் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் மர்மமாக உயிரிழந்தனர், ஒருவருக்கு காய்சல், ஒருவருக்கு கார் வெடித்தது, இன்னொருவருக்கு குடும்ப பிரச்சினை என ஆளாளுக்கு ஓடினார்கள்


ஒருவர் வித்தியாசமாக ஹஜ் பயணம் செல்லும்போது காணாமல் போனார், கொஞ்சநாள் கழித்து ஈரான் திரும்பி தான் தப்பி வந்ததாக பேட்டியளித்து புகழடைந்தார், மொசார்ட்டையே ஏமாற்றிய ஈரானியனர் என்றேல்லாம் பட்டம் குவிந்தது


ஆனால் ஈரானிய அரசு வித்தியாசமாக சிந்தித்து, விசாரித்து அன்னார் கடத்தபடவில்லை, மொசார்த்துடன் கைகோர்த்து அணு ரகசியங்களை சொல்லிவிட்டு வந்துவிட்டார் என கைது செய்து நேற்று தூக்கிலும் போட்டுவிட்டது


இவரை கடத்தியவர் யார்? என்ன வாங்கினார்கள் என இதுவரை தகவல் இல்லை, இதுதான் உளவு உலகம்.


முன்பு புலிகளும் இப்படியான விளையாட்டுக்களை சந்தித்தனர், வேலூர் சிறையில் தப்பிய புலிகள், இப்படித்தான் அமைப்பிற்குள் ஊடுருவினர், ஆனால் பின்னாளில் புலிகள் தூக்கினர்.


இதனால்தான் அந்நியரால் கடத்தபட்ட அல்லது சந்தித்த எந்த நபர்களும் மறுபடி அரசுக்குள் எடுக்கமாட்டார்கள், மகாபாரதத்திலும் ராமயணத்திலும் இந்த காட்சிகள் அழகாக தெரியும்


துரியோதனனும், ராவணனும் அதில் பெரும் விழிப்பாய் இருந்தார்கள்.


அவை ராஜ தந்திரத்தில் உச்சம் பெற்ற இதிகாசங்கள், புராணம் என ஒதுக்கமுடியாதவை.


மொசார்ட் என்ன மொசாட், ராஜ தந்திரத்தில் அவர்களுக்கு பெரும் முன்னோடி பகவான் கிருஷ்ணனே, அந்த மாய வேலையினை தான் இன்று மொசாத் செய்துகொண்டிருக்கின்றது



No comments:

Post a Comment