Wednesday, May 31, 2017

ஜெயா சசி சொத்துக்களை தமிழக அரசு எடுத்து கொள்ளும் : செய்தி





ஜெயா சசி சொத்துக்களை கையகபடுத்தபடுத்த நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு அந்த சொத்துகளை எடுத்துகொள்ளும் : செய்தி


தமிழக அரசின் சொத்துக்களை மீட்ட அரசு இது என அவர்களில் ஒரு பிரிவினரே அவர்களுக்கு வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவார்கள்


ஆனாலும் தன் கட்சியின் தலைவியின் ஊழல் சொத்தினை, தானே பெற்றுகொள்ளும் விசித்திரம் தமிழகத்தில் முதல்முறையாக நடக்கின்றது





இந்த ஜெயலலிதாவிற்குத்தான் சட்டசபையில் படம் திறக்க வேண்டுமாம்

ஏதும் சொன்னால்..

தமிழக மக்களே, அம்மையார் தன் சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கே கொடுத்துவிட்டார், தியாக திருவுருவம் பாருங்கள, இவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு தமிழக சட்டசபையில் இடம் என சிரிக்காமல் சொல்வார்கள்..




 

 



 

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்









Image may contain: 1 person, sitting









பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்., பிரதமரை சந்திக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம்


அட அந்த மனிதரே "கால் கண்டார் காலே கண்டார்" என எவ்வளவு பொறுமையாக தலை தாழ்த்தி அமர்ந்திருந்தார், இவர்களுக்கு என்ன வந்தது?


அவர் காலை அவரின் இன்னொரு கால் மீது போட்டு அமர்ந்தது தவறா? அருகில் இருந்த இன்னொருவர் மீதா போட்டுவிட்டார்?





உண்மையில் கோபபடவேண்டியது பிரியங்காவின் ரசிகர்கள், எதற்கு என்றால் ...முடிந்தால் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்




 

செய்தி சிதறல்கள்

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

பாரதிராஜா சார்.. We want more Emotion









சிவில் போர் மூளும் : மத்திய அரசுக்கு திருமா எச்சரிக்கை

சீமான் அடிக்கடி போர் நடத்துகின்றேன் என்கின்றார், ரஜினி வேறு போர் வந்தால் சந்திப்போம் என்கின்றார்,

இது பசுமீட்பு போர் என்கின்றார் எச்.ராசா


இதில் திருமா வேறு சிவில் போர் நடத்தபோகின்றாராம்

எங்கு திரும்பினாலும் போர்..ஆமாம் போர் எனும் வடிவேலு வசனமே தமிழகத்தில் எதிரொலிக்கின்றது

பாவம் தமிழர்கள், சரியான போர்களத்தில் மாட்டிகொண்டார்கள் தமிழர்கள்.












பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வரை தண்டனை கொடுப்பது பற்றியும் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை.

# கதற, கதற பால் கறந்தால், கருவுற ஊசிபோட்டு சித்திரவதை செய்தால், கழுத்தில் கயிறு கட்டினால்
என்ன தண்டனை என இந்த நீதிமன்றம் இன்னும் பரிந்துரைக்கவில்லை










விதிமுறைகளை மீறினால் என்னாகும் என்பதற்கு இலங்கை வெள்ளமும், சென்னை தி.நகர் தீவிபத்தும் சமீபத்திய சாட்சிகள்

சென்னை தி.நகர் தீ நகராகிவிட்டது என்கின்றார்கள், அந்த பகுதி ஸ்தம்பித்திருக்கின்றது, பெரும் சிக்கலை அந்த பகுதி வியாபாரிகள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்

விதிமுறைகளை கடுமையாக மீறும்பொழுது, அரசு கண்டுகொள்ளாமல் விட்டாலும் இயற்கை அதனை காட்டிகொடுத்துகொண்டுதான் இருக்கின்றது





 

 



 

 

 



 

 

 



 

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌



No automatic alt text available.மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌


பூரண இஸ்லாமிய‌ நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும்


இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம்


உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்


இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம்


இன்னும் வளமான நாடுகளாயிருந்தவற்றை தீவிர மதவெறி எப்படி எல்லாம் சீரழித்தது என்பதற்கு இலங்கையும், பர்மாவும் நம் கண்முன்னே தெரிகின்றன‌


மதசுதந்திரம் இல்லாத நாடு, அல்லது பூரண மதவிலக்கு எனும் கொள்கைக்கு வராத எந்த நாடும் உருப்படாது, அரேபிய நாடுகள் எண்ணெய் விலை குறைந்ததும் இதோ தடுமாறுகின்றன, நாளை எண்ணெய் வற்றுமானால் அவர்கள் நிலை அவ்வளவுதான்


உலக நாடுகள் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன, மதங்களை பெரும் பொருள் ஆக்காத நாடுகள் எல்லா சூழலிலும் முன்னோக்கி செல்கின்றன‌


இஸ்லாமிய நாடுகள் என தங்களை அறிவித்துகொண்ட நாடுகள் கூட, சிறுபான்மையினரின் உணவில் தலையிடுவதில்லை, அவர்கள் மிகுதியான இடங்களில் அவர்கள் விரும்பும் உணவு பன்றியாக இருந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை


ஆனால் இந்தியா மிக தீவிரமாக இவ்விஷயத்தில் இறங்குகின்றது, இதன் விளைவுகள் வேறுமாதிரி செல்லும்


முன்பு பாபர் மசூதி இடிப்பிற்கு பின் இத்தேசம் இஸ்லாமிய நாடுகளில் இழந்த வியாபார வாய்ப்பு கொஞ்சமல்ல, நரசிம்ம ராவ் அரசு பெரும் சிரமபட்டு அவற்றை சமாளித்தது


இப்பொழுது இஸ்லாமியருக்கு எதிராக நோன்புகாலத்தில் இடைஞ்சல் செய்கின்றது எனும் செய்தி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெரும் கருப்புபுள்ளி


நாளை காஷ்மீர் விவகாரத்தை உலகில் விவாதித்தால் "உன்னை பற்றி தெரியாதா? இஸ்லாமியர் மாட்டுகறி உண்பதையே தடுத்தவர்தானே நீங்கள், பின் எப்படி அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.." என முகத்தில் அடிப்பார்கள்.


ஏன் இதோ இந்தியாவில் இஸ்லாமியர் வயிற்றில் அடிக்கின்றார்கள் என தீவிரவாதிகளுக்கு காரணம் கிடைத்துவிடும், சில நாடுகள் அதனை ஆதரிக்கவும் செய்யும்


உலகின் ஒரே இந்துநாடு என்ற அந்தஸ்தில் இருந்தது நேபாளம், அங்கு கோயிலில் லட்சகணக்கான மாடுகள் பலிகொடுக்கும் திருவிழாக்கள் உண்டு


இந்திய இந்துக்களிலும் அப்பழக்கம் உண்டு, தமிழகத்தில் உண்டு, இவை எல்லாம் தடுக்க முடியுமா?


உள்நாட்டில் குழப்பத்தையும், வெளிநாட்டில் அவமானத்தையும் தேடிதரும் காரியங்களில் இந்த அரசு இறங்கியிருக்கின்றது


பல்லாயிர வருட பாரம்பரியமுள்ளது இந்துமதம், எத்தனையோ வேற்றுமத அரசுகளையும், அரசர்களையும் அது கண்டது, ஆனாலும் கடந்து வளர்ந்து நிற்கின்றது


அதனை எல்லாம் ஆர்எஸ்எஸ் செய்ததா? சங் பரிவார் செய்ததா? மோடி செய்ததா? இல்லை மாட்டினை காத்து செய்ததா?


அல்ல, இந்துக்களுக்கு தாங்கள் என்ன செய்யவேண்டும் என தெரிந்திருந்தது, செய்தார்கள். வழிவழியாக செய்தார்கள் இந்நாடு இன்றும் 80% இந்துமக்களோடு நிற்கின்றது


காலம் காலமாக இப்படி கட்டுபாடுகளை விதித்தா அம்மதம் வளர்ந்தது? ஒரு காலமும் இல்லை


உலக மதங்களில் வித்தியாசமானது இந்து மதம், அதற்கு தலமையோ, கட்டுபாடோ, இறுக்கமோ இல்லை, மிக சுதந்திரமான மதம் அது


பொதுவாக இறுக்கம் இல்லா மதம் அழியும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், யூதமும் மிக இறுக்கமான மதங்கள் அவை அப்படித்தான் வாழ்கின்றன‌


ஆனால் ஒரு கட்டுபாடும் இல்லா இந்துமதம் இதுகாலமும் வளர்ந்து ஆலமரமாக நிற்பது ஆச்சரியமே, அதனை இந்த பரிவாரங்களும், பாஜகவும் செய்யவில்லை


பாஜகவோ, அதன் பரிவாரங்களோ ஒரு நாளும் இந்துமதத்தை காத்துவிட முடியாது, அப்படி சொன்னால் அது அப்பட்டமான அரசியல். அவர்களுக்கு முன்னும் அம்மதம் வலுவாக இருந்தது , அவர்கள் காலத்திற்கு பின்னும் அது வலுவாக இருக்கும்


அப்படிபட்ட தேசத்தில் இப்படியான இம்சைகள் எதற்காக? இப்படி செய்யாவிட்டால் இந்துமதம் அழியுமா? அது நாட்டில் இல்லாமல் போய்விடுமா?


பன்றியினை சாப்பிட்டாலும் கொழுப்பு ஏறாமல் பார்த்துகொள் என அன்னைபோல பாசமாக சொல்வதுதான் இந்துமதம், அதன் தன்மை அப்படி


மாவீரன் சிவாஜி கூட அவுரங்கசீப்பை எதிர்த்தானே அன்றி இஸ்லாமை அல்ல,


இத்தேசம் என்றுமே இந்து தேசம், அசோகர், முகலாயர், வெள்ளையர் என யார் ஆண்டபோதும் இது இந்து தேசமே, சந்தேகமே இல்லை


அதற்காக இப்படி மாட்டுகறி தடை செய்துதான் இந்துத்வாவினை காக்கும் அவசியமுமில்லை


இப்படி அழிச்சாட்டியம் செய்யாமல், கைலாச மலையினை சீனாவிடமிருந்து வாங்கி இந்துக்களுக்கு கொடுக்கும் காரியத்தை செய்யலாம், இந்நாட்டின் எல்லா இந்துக்களும் வணங்குவார்கள்


விசா இம்சை என சீனா செய்யும் தொந்தரவு மிக அதிகம், அதனை குறைக்கலாம்


பாழ்பட்டு கிடக்க்கும் இந்து ஆலயங்களை சீரமைக்கலாம், தொலைந்துவிட்ட பல பாரமப்ரியங்களை மீட்கலாம்


இந்துக்கள் உண்ணாத உணவினை யாருமே இத்தேசத்தில் உண்ண கூடாது என்பது ஏற்புடையது அல்ல, இது வெற்று அரசியல்


இது இந்திய சகோதரத்துவத்தை சீரழிக்குமே அன்றி, ஒரு நாளும் ஒற்றுமை வளர்க்காது


தவிர்க்கமுடியாத எண்ணெய் வளமுள்ள சிறிய
நாடுகளுக்கு தீவிர மதவாதம் இருக்கலாம், ஆனால் எண்ணெய் தவிர அங்கு என்ன உள்ளது? ஒன்றுமே இல்லை என்பதும் இன்னொரு விஷயம்


இந்தியா போன்ற பெரிய வளரும் நாட்டில், ஆயிரம் தேவைகள் உள்ள மிகபெரிய நாட்டில் மதவாதம் என்பது ஒருகாலமும் சரிவராது, அது பெரும் பின்னடைவையே கொடுக்கும்..


இப்படியான கட்டுபாடுகள் மூலம்தான் இந்துமதத்தின் பெருமையினை காப்போம் என்றால் அது சூரியனை பார்த்து இதோ வெளிச்சம் என தீபந்தம் காட்டும் விஷயம், கடலுக்கு உப்பு அள்ளி போடுவது போல மூடச்செயல்..


மணமிக்க மலரில் செயற்கை வாசனை அடிப்பது போன்ற அறிவற்ற செயல், இந்த பூ இந்த வாசனை திரவியம் பட்டுத்தான் மணக்கின்றது, நான் திரவியம் தெளிக்காவிட்டால் மணக்காது என்பது போன்றது


காற்றுக்கு நாங்கள் காவல் என்பது போலவும், நட்சத்திர கூட்டத்திற்கு நாங்கள் ஒளிகொடுக்கின்றோம் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்


அறம் அறிந்த, தர்மம் அறிந்த, மனித தன்மையறிந்த, நெறியுள்ள இந்துக்களே இதனை விரும்பமாட்டார்கள், வாழ்வின் எல்லா இன்பத்தையும் அனுமதிக்கும் மதம் அது,


மாட்டுகறி என்றால் கூட அது தடுப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்


இந்த அரசியலால் தேசத்தின் அமைதி குலைந்து, வெளிநாடுகளில் இந்த அரசு இஸ்லாமிய விரோத அரசு எனும் பெயர் வருமே அன்றி, இந்து மக்களுக்கோ இந்த தேசத்திற்கோ ஒரு நன்மையும் விளையபோவதில்லை





 


 

பிரியங்கா மோடி ஜெர்மனியில் சந்திப்பு




Image may contain: 2 peopleஇந்த பிரியங்கா சோப்ரா எனும் நடிகையினை பிரதமரால் இந்தியாவில் சந்திக்கவே முடியாதா?ஜெர்மனி சென்றுதான் அவரை சந்திக்க வேண்டுமா?


அம்மணிக்கு தாதா சாகிப் பால்கே விருது வேறு கொடுக்க போகின்றார்களாம்


அப்படி என்ன இந்த அம்மணி கலைதுறைக்கு செய்துவிட்டார்? என நாம் கேட்க கூடாது





பெரியார் படத்தில் மணியம்மையாக குஷ்பூ நடிக்காததையா பிரியங்கா நடித்துவிட்டார்?

குஷ்பூ பெறாத எந்த விருதும் கலைவிருதுகளே அல்ல என்பதால் இதனை நமது மன்றம் புறக்கணிக்கின்றது

Image may contain: 1 person, close-upவருங்காலத்தில் என்றாவது பிரியங்கா நடித்தார் என்றால் பின்னாளில் அவருக்கு "குஷ்பூ விருது" வழங்க வாய்ப்பு வரலாம், இப்போதைக்கு எல்லாம் இல்லை

பால்கே விருது பெற்றவர்க்கு எல்லாம் குஷ்பூ விருதுகொடுத்து அதன் பெருமையினை குறைக்க முடியாது

இப்போதைக்கு மிக சிறந்த நடிப்பினை வழங்கிகொண்டிருப்பது பிரதமர் மோடி, இன்னும் இரு வருடத்தில் அவரின் நடிப்பில் மெருகு இன்னும் ஏறலாம்

அதன் பின் அவருக்கு குஷ்பூ விருது நிச்சயம் வழங்கபடும் வாய்ப்பு இருக்கின்றது, இப்போதைக்கு மோடியின் அபார நடிப்பிற்காக அவர் பெயர் ""குஷ்பூ விருது" பரிசீலனையில் மட்டும் இருக்கின்றது.














 


 

இவர்களின் வீர, மான, இனவுணர்வு ....

இலங்கையில் பெரும் வெள்ளம், தென்னிலங்கையில் வெள்ள அழிவு என்றால், இங்கும் சிலர் கூச்சலிடுகின்றனர்


2009ல் என் இனம் அழியும் பொழுது சிங்களன் அமைதி காத்தான், 2017ல் இறைவனின் தண்டனையில் சிங்களம் அழியும் பொழுது நாங்கள் அமைதி காப்போம்" என வீரமுழக்கம் இடுகின்றனர்


இங்கு குடிக்க நீர் இல்லை என்றாலும் வீரமுழக்கம் எப்படி பார்த்தீர்களா?




தென்னிலங்கையில் தமிழர்கள் இல்லை என சொன்னது யார்? அங்கும் தமிழர்கள் உண்டு, இந்த வெள்ளத்தில் தமிழர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்


அவர்களை சாவுங்கள் என விட்டுவிடலாமா?


ஒரு மண்ணும் தெரியாது, இலங்கை அமைப்பும், மக்களின் வாழ்வும் புரியாது, சும்மா சீமான் சொன்னவுடன் கத்திவிட வேண்டும் என்பது இவர்களின் வீர, மான, இனவுணர்வு



இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று, அதுவும் மதுரை நீதிமன்ற அறிவிப்பு ஒருவித பரபரப்பினை ஏற்படுத்துகின்றது


ஒரு நீதிமன்றம் சில காரியங்களை சொல்லுமாயின் அதில் ஓரளவேனும் நியாயம் இருக்கலாம் என்பது தியரி, அப்படி மதுரை தீர்ப்பு உலகில் விவாதிக்கபடுகின்றது


கண்ணகியும், நக்கீரனும் உலவிய மண் அல்லவா? நியாயத்தினை சொல்கின்றது




அது இருக்கட்டும்


நேற்று கடும் காமெடி செய்தவர் இருவர், ஒருவர் நாஞ்சில் சம்பத் வழக்கமான காமெடி, கூடவே ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து என கொளுத்திபோட்டிருக்கின்றார்


ரஜினி வந்தால் யாருக்கு ஆபத்து? சாட்சாத் அதிமுகவிற்கு, அதனை தமிழக ஆபத்து என ஒப்பாரி வைக்கின்றார் அன்னார், கூடவே தன் சொந்த கட்சி முதல்வரையும் திட்டியிருக்கின்றார்


ஆக அன்னார் நிதானத்தில் இல்லை என்பது புரிகின்றது, இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, நாளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் கோபாசே என கூசாமல் சென்றுவிடும் ரகம்


இன்னொருவர் பாரதிராஜா, திருமுருகனை வெளியே விடு என கத்துகின்றார், எடப்பாடி மானமில்லா தமிழனாம் , இதனை கண்டுபிடிக்க இவருக்கு இத்தனை காலம் ஆகியிருக்கின்றது என்பதுதான் சோகம்


திருமுருகனை ஆதரித்து கூட்டம் போட்ட அந்த மொத்த இயக்குநர் கும்பலையும் உள்ளே தள்ளலாம், அவர்கள் என்ன தேசம் காக்கும் தளபதிகளா? இல்லை அணுவுலை விஞ்ஞானிகளா? ஒன்றுமே இல்லை, நாட்டிற்கு ஒரு பாதிப்பும் வராது


இந்த திருமுருகன் காந்தி விவகாரத்தில் குரல் கொடுத்து மாட்டியிருப்பவர் யாரென்றால் மு.க ஸ்டாலின்


அதாவது லாட்டரி புகழ் மார்ட்டின் என்றொருவர் உண்டு, மோசடி பேர்வழி, இவர் எடுத்தபடத்தில் முன்பு கலைஞர் கதை வசனம் எழுதினார், அப்பொழுதே சர்ச்சை வெடித்தது


அந்த மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் என்றொரு கட்சி நடத்தினார், திருமுருகனோடு அவரும் கைதானர், அவரை விடுவிக்க சொல்லிதான் ஸ்டாலின் குரல் கொடுத்தார் என சில பார்வைகள் திரும்புகின்றன‌


ஆக சூனியத்தை தேடி சென்று நடு சக்கரத்தில் அமர்ந்திருக்கின்றார் ஸ்டாலின், இதனை சொன்னால் அவரின் தந்திரம் உனக்கு புரியாது என்பார்கள்


இப்பொழுது மானம் ரோசம் உள்ள தமிழனை பாரதிராஜா தேடுகின்றார், எம்ஜிஆர் ஜெயா இல்லாத காலத்தில் பாரதிராஜாவிற்கு ரோசம் பொத்துவிட்டது


சிலரை சேர்த்துகொள்கின்றார், ஒரே சத்தம்


ஆக தமிழகத்தில் சினிமா இயக்குனர்களுக்கு தவிர யாருக்கும் வெட்கமில்லை என்பது அவரின் கொள்கை


திருடர்களுக்கும், தேசவிரோதிகளுக்கும், அரை பைத்தியங்களுக்கும், சுயநல வாதிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பது மானம், ரோசம் என்றால் அந்த ரோசம் பாரதிராஜா கும்பலிடம் மட்டும் இருந்துவிட்டு போகட்டும்



புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்




36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது,





Image may contain: outdoor






தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.


வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக அது திகழ்ந்தது


ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான்,


அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது, ஆம் யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக மட்டும்...


கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.


ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.


Image may contain: outdoorஅதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.


19866ல் இருந்து 1995 வரை யாழ்பாணத்தை கையில் வைத்திருந்த புலிகள் இந்த நூலகத்திற்கு செய்ததென்ன என்றால் ஒன்றுமே இல்லை, புலிகள் அப்படித்தான்.


1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது, சீரமைக்கும் ஆசை எல்லாம் புலிகளுக்கு இல்லை..


புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்


புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.


இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.


உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை,


நூலகத்தையே எரிக்கும் காட்டுமிராண்டி தேசம் என சிங்களனை தனிமை படுத்தித்தான் இந்தியா ஈழத்தில் நுழைய முடிந்தது


இந்தியா ஈழ மக்களுக்காக‌ களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.


ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று


அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல‌


வரலாற்றில் நிகழ்ந்த பெரும் அழிவுகள், கொலைகள், படுகொலைகள், தீரா மன உளைச்சல் தரும் கொடூரங்களில் இந்த அறிவு செல்வமான யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவமும் ஒன்று


காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.


அறிவார்த்த தமிழக தமிழர்கள் ஈழ தமிழருக்காக அழவேண்டிய காரியங்களில் முதல் சொட்டு கண்ணீர் நிச்சயம் இந்த நூலகத்திற்காகத்தான் இருக்க வேண்டும்


ஈழ தமிழனின் பெருமை அந்த பிரபாகரன் அல்ல, அவரொரு சைத்தான், மாறாக அழிந்துவிட்ட அந்த நூல்களும் அந்த நூலகமுமே..


அதனை எல்லாம் இங்கு எந்த உணர்வாளனும் பேசமாட்டான், அந்த நூலகத்திற்கு ஆயிரம் புத்தகம் வாங்கிகொடுத்து இன்னும் பொலிவுற செய்வோம் என்றேல்லாம் யாருக்கும் சிந்தனை வராது.


பில்லியன் டாலர் சொத்துமதிப்புள்ள புலிகளுக்கே அந்த எண்ணம் இல்லை, ஐரோப்பிய வாழ் ஈழதமிழனுக்கும் இல்லை, இருந்திருந்தால் தமிழகத்தில் ஏன் சில்லறைகள் உருவாக போகின்றன?, யாழ்பாண நூலகம் இன்னும் சிறந்திருக்கும்


அவர்களுக்கு வரும் சிந்தனை எல்லாம் பிரபாகரன், முள்ளிவாய்க்கால், கலைஞர், இந்தியா என எல்லாமே அரசியல், அந்த நாசகார சிந்தனை


படிப்பிற்கும் அறிவிற்கும் பெரும் பெயர் பெற்றிருந்த யாழ்பாணம், இந்த நூலக எரிப்பிற்கு பின் நாசமாயிற்று, இன்று அதன் நிலை மகா பின்னடைவு


யாழ்பாணா பொற்காலங்களில் அந்த நூலகம் செயலாற்றிய காலம் முக்கியமானது, இனியாவது அந்த நூலகமும் யாழ்பாணமும் தன் பழம் பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்


இந்த நூலக எரிப்பு தினத்திற்காக யார் நினைவு கூர்ந்து அழுகின்றார்களோ இல்லையோ, அந்த அரிய புத்தகங்களுக்காக நாம் அழலாம்


புத்தகங்களின் அருமை தெரிந்த யாரும் அழலாம்...





மோடி - மெர்க்கல் : இதைதான் பேசுகிறார்களோ ?




Image may contain: 2 people, people sitting"கோயில், மாட்டுகறி, மதம், இட ஒதுக்கீடு , யோகா, சமஸ்கிருதம் மதவெறி, இரும்புகரம், சாமியார்கள், ஆசிரமம் இவை எல்லாம் இல்லாமல் எப்படி உங்கள் நாட்டில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள்??


நாங்கள் கோட்சேயினை கூட மறக்கவில்லை, ஆனால் நீங்கள் இனவெறியன் ஹிட்லரை மறந்துவிட்டீர்களாமே? எப்படி??


ஆச்சரியமாக இருக்கின்றது? அவனை மறந்துவிட்டு என்ன அரசியல்???


எங்கள் நாட்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை, அப்படிபட்ட விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால் நான் பிரதராக முடியுமா? இல்லை உங்களை எல்லாம் வந்து பார்க்கத்தான் முடியுமா? என்னமோ போங்கள்.





கிழக்கு ஜெர்மனியினை ஏன் மேற்கு ஜெர்மனோடு இணைத்தீர்கள்? இணைக்காமல் இருந்தால் தானே அவர்களை எதிரியாக்கி அரசியல் செய்யலாம், சரி இணைந்த பின்னும் அவர்களை இரண்டாம் குடிமக்கள் என அரசியல் செய்யவில்லையா?

சரி, புகழ்மிக்க ஜெர்மானிய தொழிற்சாலையினை நான் ஏன் பார்க்க வேண்டும்?

என்னை ஒரு மாட்டுபண்ணைக்கு அழைத்து செல்ல சொன்னேன், அதனை விட்டுவிட்டு இங்கு சந்திப்பு என அழைத்து வந்துவிட்டீர்களே.,, என்ன நியாயம்???.."













 


 

கலைஞரின் அந்த முழு கவிதைதான் என்ன?




அந்த கImage may contain: 1 person, sittingலைஞரின் முழு கவிதை என்ன? என பலர் கேட்டார்கள், எங்கோ தேடியதில் சிக்கியது


கலைஞர் நெடுமாறனை குறித்து எழுதிய வரிகள் என இன்று சொல்லபடுவது இதுதான், கலைஞருக்கு எதிரிகள் அதிகம், அவர்கள் கல்லெறி எல்லை மீறும்பொழுதெல்லம் கலைஞரின் சொல்லெறி இப்படி நிறைய வரும்,


அப்படி நாம் வாசித்து மனதில் தங்கிய வரிகளைத்தான் முன்பு சொல்லியிருந்தோம், அது பழநெடுமாறனுக்கு மட்டுமல்ல பலருக்கு எழுதிய வரிகளின் கலவை, நினைவில் நின்ற வரிகளை கொஞ்சம் குழப்பிவிட்டேன், பொருத்தருள்வீர்





தசரதன் கதை சொன்ன நெடுமாறனுக்கு அன்று கலைஞர் ராமாயண பாத்திரங்களை வைத்தே பதிலளித்த‌ முழு வரிகள் இவைகளே

"விடுதலைப் போர் நாயகராம் விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர் விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன்
என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும் முகஸ்துதி பல செய்து

மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க குறுக்குச் சுவர் கட்டி,

தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென தவிக்க விட்டு கடல் நடுவே அவரை; தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு விதையாக்கி

விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை













 


 

உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..




Image may contain: 1 person, text


பொதுவாக பக்கத்து மாநில முதல்வர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்வார்கள், அல்லது வருத்தம், இரங்கல் என ஏதாவது சம்பிரதாயங்களை சொல்வார்கள்


முதன் முதலாக பக்கத்து மாநில முதல்வர் செவிட்டில் அடித்தாற்போல் பழனிச்சாமிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார்


இது நிச்சயமாக பெரும் அவமானம், "உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்.." என்ற ரீதியில் சொல்லபட்டிருக்கும் செய்தி





பெரியார் கேரளா சென்று போராடிய காலம் மாறி, இன்று அவர்கள் நமக்கு மானம் ஊட்ட வந்திருக்கின்றார்கள்

பச்சை தமிழன் ஆட்சியில், இன்னொரு மாநிலத்துக்காரன் பின் மண்டையில் அடித்து மானம் இருக்கின்றதா என கேட்கும் விசித்திரத்தை தமிழகம் இன்றுதான் சந்திக்கின்றது

தமிழனை தமிழனே ஆளவேண்டும், ஆனால் மானம் மட்டும் காற்றில் போக வேண்டும்













 


 

Tuesday, May 30, 2017

பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம்


அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை"


கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார்




"குன்றனைய குமரி அனந்தன்
புகழ்மறைத்த துரோகி
வரிபுலிமேல் அமர்ந்தவாறு
உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி
.....
.....என நீண்டன வரிகள்,, இறுதியாக இப்படி முடித்தார்


"நாட்டோரம், ரோட்டோரம்
ஆயிரம் கதை இருக்க‌
காதோரம் நரைத்த மயிர்கதை
சொல்ல வந்தான் மயிராண்டி"


என முடித்திருந்தார், அதன் பின் கொஞ்சநாள் பழ.நெடுமாறன் சத்தமே இல்லை


இன்று கலைஞர் இல்லாத நிலையில் அன்னார் கலைக்க வந்துவிட்டாராம்,


முரசொலிக்காரர்கள் அந்த கவிதையினை தேடி எடுத்து மறுபிரசுரம் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம்


மறுபடி கொஞ்சநாளைக்கு பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?



சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை


நாட்டின் அறிவு கோவில்களாக கருதபடுபவை அந்த ஐஐடிக்கள், அரசு அதற்கு அள்ளிகொடுக்கும் பணமும், மாணவர்களுக்கு அதன் மீதான கனவும் சாமான்யமல்ல‌


உலகளவில் மதிக்கபடும் இந்திய அறிவுநிலையங்களில் அதுவும் ஒன்று




அங்கு ஏன் அரசியல்? அங்கு ஏன் மாட்டுகறி அரசியல்?


அந்த அறிவு கோவிலில் ஐன்ஸ்டீன் வாசகர் வட்டம், நியூட்டன் வாசகர் சதுரம், ராமானுஜம் வாசகர் முக்கோணம், கெப்ளர் ஆயிலர் வாசகர் கன சதுரம் என இருந்தால் அது நல்லது, அப்படித்தான் இருக்க வேண்டும்


புனிதமான அந்த நிலையத்தில் சாதியோ, புரட்சியோ அந்த பெயரில் அரசியல் வட்டம் எதற்கு?


அம்பேத்கரை படிப்பவர்கள் சட்டகல்லூரியில் அப்படி வட்டம் வைத்து அவரைபோல் படித்து உயர்ந்தால் சரி, பெரியார் போல உருவாக சிந்தனை போதும், ஐஐடி எதற்கு?


ஆக அம்பேத்கருக்கும், பெரியாரின் சிந்தனைகளுக்கும் ஐஐடியில் என்ன வேலை?


முதலில் கல்வி நிலையங்களில் இம்மாதிரி அரசியல் கோஷ்டிகள் ராஜாஜி, சாவர்க்கர், அம்பேத்கர், பெரியார் என யார் பெயரில் இருந்தாலும் தடை செய்ய வேண்டும்


மாட்டுகறி சுவைபார்க்க ஒரு உணவகம் போதாதா? ஐஐடி எதற்கு?????


அரசியல் அந்த அறிவுகோவிலில் இருந்து வெளியேறட்டும், மதம் அதிலிருந்து ஓடட்டும்


அறிவிலும், விஞ்ஞானத்திலும் அந்த அறிவு கோயில்கள் ஓளிவீசட்டும்


ஐன்ஸ்டீகளும், சீனிவாச ராமனுஜமும் , ஜிடி நாயுடுவும், மார்க் சுக்கர்பெர்க்கும், சர்சிவி ராமனும் அதிலிருந்து வந்தால் போதும்,


அரசியல் எதற்கு? அது உருவாக ஏராளமான இடங்கள் இருக்கின்றன‌



ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது

ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது


சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார்

அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார்




படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன‌


இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை


படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா


அளவான உயரம், குண்டு கண்கள், உதட்டில் சிரிப்பு என அவர் வரும்பொழுது எப்படி இருக்கின்றது? குறிப்பாக அவர் சிரிக்கும்பொழுது கன்னத்தை பார்த்தவுடன் அப்படித்தான் சொல்ல முடியும்


எப்படி?


தேவிகா அக்கால குஷ்பூ...






கொசுறு


தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் : பாரதிராஜா ஆவேசம்


அதாவது தேசத்திற்காக எல்லையில் பல யுத்தம் நடத்திய திருமுருகனை உள்ளே போட்டுவிட்டார்கள், அவரை வெளியிட சொல்லி இயக்குநர்கள் கூட்டமாம், அதில் அன்னார் சீறிவிட்டார், அவர் சிறை செல்லவும் தயாராம்


இவரை சிறைக்கு அனுப்ப தேவையில்லை, மாறாக மனநல மருத்துவரிடம் அனுப்புவது நல்லது




பின்னே?


திருமுருகனை உள்ளே போட்டிருப்பது அதிமுக அரசு, அதன் முதல்வர் பச்சை தமிழன் பழனிச்சாமி


அவரை ஒன்றும் சொல்லாமல் இன்னும் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என சொல்பவரை வேறு எங்கு அனுப்புவது? அங்குதான் அனுப்ப வேண்டும்.









இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌

இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள்

ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள்


பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌

நமக்கும் அருமையான சட்டங்களையும், மக்கள் இடைஞ்சலில்லாமல் வாழும் சட்ட திட்டங்களையும் தான் வெள்ளையன் கொடுத்திருந்தான், பஸ் நிலையம் ரயில் நிலையம் வரை அக்காலத்தில் இந்தியரும் சட்டத்திற்குட்பட்டுதான் நடந்திருக்கின்றார்கள்

நம் காந்தி சட்டத்தை மீறுவோம் என அழைத்தார் அல்லவா? அப்பொழுது சட்டத்தை மீறி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க தொடங்கியவர்கள் நாம், இன்னும் செய்து கொண்டே இருக்கின்றோம்

சுதந்திரம் பெற்றதெல்லாம் நமக்கு தெரியவே இல்லை, சட்டத்தை மீற காந்தி சொன்னார், செய்கின்றோம், இனி அவர் வந்து சொல்லும் வரை மீறுவோம்

இலங்கைக்கும் நல்வாழ்வு வெள்ளையன் கொடுத்திருந்தான், ஆனால் சிங்கள புத்தவாதமும் போதாகுறைக்கு பெரும் போரும் அந்நாட்டை சிக்கலில் தள்ளின‌

ஹாங்காங் அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டிய இலங்கை தீவு நாசமானது, லஞ்சமும் ஊழலும் அதிகரித்து எல்லாமே சட்டத்திற்கு புறம்பாய் நடந்து, இன்று கட்டங்கள் இடிந்து சாவும் அதிகரித்திருத்திருக்கின்றது

லஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் நாட்டில் கண்ட இடங்களில் கட்டடம் கட்டபடும், என்றாவது ஒரு நாள் அது பெரும் அழிவிற்கு காரணமாயிருக்கும் என்பதை இலங்கை மழை வெள்ளம் உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

ஆண் தெருவில் விழுந்தால் கைதூக்கிவிட ஆளிருக்காது, ஆனால் சொப்பன சுந்தரிக்கு சுளுக்கு என்றால் கூட ஆண் வர்க்கமே பொங்கும் அல்லவா?

அப்படி இலங்கை பல நாடுகளுக்கு சொப்பன சுந்தரி, அதன் அமைவிடம் அப்படி

அதனால் உலகநாடுகள் ஆளாளுக்கு ஓடிப்போய் விழுந்து விழுந்து உதவி கொண்டிருக்கின்றார்கள்..

அந்த ராகவேந்திரர் ரஜினியை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்



Image may contain: 1 person, beard, glasses and close-upதிருமுருகன் கைதான விஷயத்தில் அரண்டு போயிருக்கின்றார் சீமான், அவரோடு அவரை போல ஈழ கான சபா எல்லாம் அப்செட்


எங்கே நம்மையும் கம்பிக்குள் வெளிச்சம் பார்க்க வைத்துவிடுவார்களோ என கச்சேரிக்கு பதில் ஒப்பாரியில் இறங்கியிருக்கின்றன‌


ரஜினியினை விமர்சிக்கும் குரல்கள் சற்று ஓய்ந்தன என்றால் இதுதான் சாக்கு என விஜயகாந்த் கட்சியினர் அடுத்து கல் எறிகின்றனர்


அதாவது விஜயகாந்த் மகா நல்லவராம், ரஜினியினை விட மிக பெரும் நல்லவராம், அப்படி எல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்


விஜயகாந்த் வடலூர் வள்ளலாருக்கும் மேற்பட்டவரா இல்லையா என்ற சர்ச்சை வேறுவிஷயம், ஆனால் கவனிக்க தக்கது ஒன்று உண்டு


ரஜினியினை கண்டு முதலில் அஞ்சியவர் எம்ஜிஆர், வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இருவருக்குமான உரசலும், தன் அவரசர போலீஸ் படத்தினை ரஜினியினை வைத்து நிரப்பகூடாது என உறுமியதும், உச்சமாக என் சினிமா வாரிசு பாக்யராஜ் (எம்ஜிஆருக்கும் பாக்யராஜூக்கும் என்ன?) என சில தமாஷ்களை செய்ததும்  வரலாறெங்கும் காண கிடக்கின்றது


இருவரும் ஒரு வார்த்தை பேசிய விஷயம் கூட இல்லை, ஆனால் அதனை தாண்டி ரஜினி வளர்ந்தார்


ஆனால் ஆர்.எம் வீரப்பன் விழாவில் ரஜினி அரசியல் பேசியது சர்ச்சை தொடங்கியது, அதுவும் அரசியல் அல்ல, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடித்த சம்பவத்தை சொன்னார்


ஏற்கனவே எம்ஜிஆர் வழியில் வந்த ஜெயலலிதாவிற்கும் , எம்ஜிஆருக்கு இருந்த அதே அச்சம் இப்பொழுது அதிகரித்தது
அப்பொழுதும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை


1996ல் ஜெயாவினை வீழ்த்த ரஜினி முதலில் தானாக கிளம்பவில்லை, மாறாக சோ, மூப்பனார், எல்லோரும் சேர்ந்தே அவரை ஆதரிக்க வைத்தனர், கலைஞர் முதல்வரானார்


அதன்பின் நடந்த மர்மம்தான் இன்னும் புரியவில்லை, மூப்பனார் பிரதமராவது மறுக்கபட்டபின் தமிழக காட்சிகள் மாறின, மூப்பனார் ஜெயா பக்கமே சென்றார், ரஜினி அமைதியானார், ஏதோ கசப்பான அனுபவம் கிடைத்திருக்கின்றது


அதுபற்றி மூப்பனாரோ, ரஜினியோ, சோ, சிதம்பரம் என யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, அந்த கூட்டணி ஏன் பிரிந்தது என இன்றுவரை தெரியாது


அதன் பின் ரஜினி அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை, சில இடங்களில் ராமதாஸ் கோஷ்டி சீண்டினாலும் அவர் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை, பாபா பிரச்சினையில் கூட ரஜினி தன் முழுபலத்துடன் அவர்களோடு மோதவில்லை


இன்று கலைஞர் ஓய்ந்து, ஜெயா இல்லா நிலையில் அரசியலுக்கு வருவாரா? என்ற விவாதம் நடக்கின்றது


இந்திரா இருக்கும் வரை அவர் ஏன் வரவில்லை, எம்ஜிஆர் இருக்கும் வரை பன்னீர் ஏன் வரவில்லை என்பதெல்லாம் வெற்றுவிவாதம், அவரவர்க்கு நேரம் வரும்பொழுது யாரும் வரலாம்


பழனிச்சாமியும், பன்னீரும் முதல்வராக நேரம் வரவில்லையா அப்படித்தான்


இது ரஜினி கதை...


விஜயகாந்த் கதையே வேறு, அவரை யாரும் அரசியலுக்கு அழைக்கவுமில்லை, அவர் மேல் எதிர்பார்ப்புமில்லை


அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை, திடீரென அரசியல் ஆசை வந்தது கட்சி தொடங்கினார்


கொஞ்சம் வாக்கினை பெற்றதும் அவருக்கு தலைகால் புரியவில்லை, போதாகுறைக்கு எதிர்கட்சி தலைவரானதும் சுத்தமாக தன் நிலை மறந்தார்


அந்த போதையினை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட வவ்வால்கள் இன்னும் ஏற்றி, அடுத்த முதல்வர் என காட்டி இன்று படுகுழியில் வீழ்த்திவிட்டன‌.


60 ஆண்டுகளாக அரசியல் செய்த கலைஞரிடம், 6 ஆண்டுகள் கூட அரசியல் செய்யாத விஜயகாந்த் சரிக்கு சரி என நின்றது பெரும் தவறு


இவரை அந்நாளைய கலைஞராகவும், கலைஞரை ராஜாஜியாகவும் எண்ணி இவர் மேல் நின்று பேசியதுதான் இன்று குப்புற கிடக்கின்றார்


மனிதரின் ஆசையும், எதிர்பார்ப்பும் அப்படி இருந்திருக்கின்றன‌


ரஜினி தனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பினையும் புறம் தள்ளிவிட்டு அமைதியாக தன் வழியில் சென்றவர், விஜயகாந்த் பாதை மாறி அரசியலுக்கு வந்தவர்


எல்லாவற்றிற்கும் ஆசைபடுவது விஷயம் அல்ல, கிட்டும் கிரீடம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தும் தொடாமல் செல்ல ஒரு பெரும் மனது வேண்டும்


அது ரஜினியிடம் இருக்கின்றது, தன் இமேஜ் பற்றியோ , தன் உடை பாவனை பற்றியோ கொஞ்சமும் கவலை இல்லாதவர் ரஜினி


பெரும் செல்வாக்கிருந்தும் வழுக்கை தலை, தாடி என வந்து நிற்கின்றார், எம்ஜிஆரை இப்படி பழிவாங்குகின்றாரோ என்னமோ?, அந்த எளிமை இன்றைய நிலையில் யாருக்கும் இல்லை, விஜயகாந்த் தலையில் நட்டுவைத்த முடியும், முகத்தில் ஒட்டிவைத்த மீசையும் உண்டு


ரஜினியிடம் வியப்பது அதுதான், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல கொலைகள் செய்ய துணிபவர்கள் உள்ள தமிழகத்தில் , தன் தொழிலை மட்டும் பார்த்துகொண்டு மிக அமைதியாக, எளிமையாக தன் வழியில் செல்பவர் ரஜினி


இப்பொழுதும் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என்கின்றார், இப்பொழுதுள்ள சூழலில் அவர் வரலாம்


தீபா மாதவனே கட்சி தொடங்கிய தமிழகத்தில் ரஜினிக்கு என்ன?


புழுக்களே ஊர்வலம் வரதுடிக்கும் தமிழகத்தில் அந்த பட்டத்து யானைக்கு என்ன? வரலாம், கதவு திறந்தே இருக்கின்றது


ஆக விஜயகாந்தையும் ரஜினியினையும் ஒப்பிட முடியாது, ஓடி சென்று கிரீடம் சூட்ட துடித்தவர் விஜயகாந்த்


கிடைத்த கிரீடத்தை தள்ளி வைத்துவிட்டு, நடந்து சென்றவர் ரஜினி, கிரீடம் துரத்தினாலும் அவர் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்


அவர் சொன்ன நேரம் விரைவில் வரட்டும், அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும்


ராமன் ஆண்டாலும் பரதன் ஆண்டாலும் அயோத்தி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள், அப்படி யார் ஆண்டாலும் தமிழகம் நன்றாக இருக்கவேண்டும்


அது ரஜினியாக இருந்தால்தான் என்ன? அல்லது அவர் கைகாட்டுபவராக இருந்தால்தான் என்ன?


ரஜினி தமிழகத்தை காப்பது இருக்கட்டும், முதலில் ரஜினியினை ரஞ்சித் என்பவரிடம் இருந்து காக்க வேண்டும்


கபாலி என சொல்லி அவரை என்னவெல்லாமோ செய்தவர், இப்பொழுது காலா என சொல்லி எப்படி எல்லாம் கொத்துகின்றாரோ.


ரஜினிக்கு ஜனரஞ்சகமான படங்களே பொருந்தும், டான் என்றால் கூட பாஷா வகைதான் பொருந்தும்


அவரை குப்பை தொட்டி அருகே இறுக்கமான‌ புரட்சியாளாரக அமரவைத்து ரஞ்சித் செய்யும் இம்சைகள் தாளவில்லை,


அதுவும் உடைககளை பார்த்தாலே முடியவில்லை, எல்லா படத்திலும் ரஜினி அம்மாதிரி ஒரு சில காட்சிகளில் பிளாஷ் பேக்கில் வருவார்,


ஆனால் படம் முழுக்க அப்படியே அலைய விடுவதுதான் ரஞ்சித் பாணி, அவரின் வட்டம் அப்படியான குறுகிய ஒரே நோக்கம் கொண்டது, பின்பு ரஜினி நிச்சயம் வருந்தலாம்


அந்த ராகவேந்திரர் அவரை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்













 












செய்தி அவியல் ....







வள்ளுவன் புலால் மறுத்தல் எழுதியிருக்கின்றான், பின்னும் ஏன் தமிழர் மாட்டுகறி பற்றி பேசுவது என சில பாஜக தரப்பு கிளம்புகின்றது


நல்ல அரசும், நல்ல துறவியும் எப்படி இருக்க வேண்டும் என்று கூடத்தான் வள்ளுவன் சொல்லியிருக்கின்றான்


அதனை நீங்கள் பின்பற்றி காட்டுங்கள்.




ராமர் , யோகா பற்றி எல்லாம் வள்ளுவன் சொல்லவே இல்லை ஆக அதனையும் விட்டுவிட்டு புலால் மறுத்தல் பேச வாருங்கள்







பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சாயத்து உத்தரவு


எப்படி பட்ட அறிவார்ந்த நாடாக பாகிஸ்தான் ஆகிவிட்டது?, மேற்படி சம்பவம் வர்சிஸ்தானில் நடந்தாலும் பழங்குடி என சொல்லலாம், ஆனால் நடந்திருப்பது பாகிஸ்தான் பஞ்சாபில்


இப்படி ஒரு நாடா? என சொல்லிவிடும் முன் அடுத்த கேள்வி எழுகின்றது




அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறிய அந்த நாடு இப்படித்தான் செய்யும், ஆனால் இன்னும் கொஞ்சநாளில் மாட்டுகறி, மனுநீதி என பழமைவாதம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் நமது நாட்டிலும் இப்படி விபரீதம் நடக்கலாமோ?


மாட்டுகொம்பை காட்டி கற்பழித்த ஒருவனுக்கு, மனுநீதிபடி அவளை கட்டிவைத்துவிட்ட செய்திகள் பிற்காலத்தில் நடக்கலாம்


இதில் நாம் பாகிஸ்தானை பார்த்து பரிதாபபட என்ன இருக்கின்றது??











மோடியின் மூன்றாண்டு சாதனையை பற்றி தமிழக மக்கள் பேசாதது ஏன்? : தமிழிசை


மூன்றாண்டு கடப்பது எல்லாம் சாதனையா அம்மணி, ரோட்டில் ஓட்டை டவுண்பஸ் கூட 30 ஆண்டுகளாக ஓடிகொண்டிருக்கும்


மூன்றாண்டில் என்ன சாதனை என முதலில் சொல்லுங்கள், முடியாதல்லவா?





நீங்களும், எச்.ராஜாவும் பேசுவதை எல்லாம் சாதனை என்றா எடுத்துகொள்ள முடியும்??? அது இம்சை அல்லவா?

உங்கள் பேட்டிகளை கண்டபின்னும் தமிழகம் அமைதியாக இருக்கின்றது என்றால், மக்களுக்கு வந்த‌ அந்த "சகிப்பு தன்மைதான்" மோடி அரசின் சாதனையாக இருக்கமுடியும்.

இதனையும் மீறி சாதனை என்ன என தெரியவேண்டுமென்றால் , மாட்டு தொழுவம் பக்கம் சென்று கேளுங்கள்...

மாட்டிடம் கேட்க வேண்டிய கேள்வியினை மனிதரிடம் கேட்டால் எப்படி பதில் வரும் மேடம்??

தமிழக மக்கள் மாடுகளா என்ன?









சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசன் வெளிவந்துவிட்டாராம்,

அதனாலென்ன குஷ்பூவினையே அந்த இளவரசியாக்கி படத்தை தொடரலாம், படம் பாகுபலி வரலாற்றை நிச்சயம் உடைக்கும்

ஆனால் ஆணாதிக்க சுந்தர்.சி அதனை செய்ய யோசிக்கின்றார்..




 சுவாதி கொலை திரைப்படமானது டிரெயிலர் வெளியிடபட்டதுஎங்கே? "அப்பல்லோ மிஷன்" என அந்த மருத்துவமனை சம்பவத்தை எவனாவது படமாக எடுக்கட்டும் பார்க்கலாம்..

ஏழை சொல் சபையேறாது, ஆனால் ஏழை வீட்டு சம்பவம் சினிமா வரை ஏறும்..






 சவுதி அமெரிக்க அடிமைகளில் ஒன்று, சமீபத்தில் அங்கு சென்ற டிரம்ப் பெரும் தொகைக்கு ஆயுதங்களை விற்றிருக்கின்றார்

அவை எல்லாம் ஈரானை தாக்க என்பது எல்லோருக்குமே தெரியும் பொழுது ஈரானுக்கு தெரியாதா?

ஈரானிய அதிபர் சாடியிருக்கின்றார், எப்படி?


"அமெரிக்கர்கள் பசுவிடம் பால் கறப்பது போல சவுதியிடம் கறப்பார்கள், பால் ஒய்ந்ததும்
வெட்டி கறியாக்கிவிடுவார்கள்.."

ஒருவேளை மோடியினை ஈரானிய அதிபர் லேசாக சீண்டியிருப்பாரோ?

என்ன செய்திகளோ? உள்ளூரில் மாட்டு சர்ச்சை என்றால், உலக செய்திகளும் அப்படி மாட்டுகறியாகவே இருக்கின்றன‌.




 


ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது




Image may contain: 1 person, sitting and babyஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்..


இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை


குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது





தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌

அதாவது இங்கு ஜிகா வைரஸ் இருப்பது தெரிந்தால், அந்நாட்டு மக்களை அவர்கள் எச்சரிக்கை செய்யவேண்டுமல்லவா? அதற்காக‌

இந்திய அரசு இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் என்னமோ சொல்லிவிட்டு நழுவியது

சர்வதேச விவகாரமாக இந்த பிரச்சினை உருவெடுக்கின்றது, இந்தியாவிற்கு தலைகுனிவு

இந்நிலையில் மாட்டுகறி சர்ச்சை ஏன் கிளம்பியது என்ற சிந்தனை இப்பொழுது உங்களுக்கு வரகூடாது, ஆம் வரவே கூடாது, அதெல்லாம் பசுவினை காக்கும் நடவடிக்கை

ஜிகா வைரஸ் கொடூரமமானது, பரவுகின்றது ஆனால் அரசு என்ன திட்டம் வைத்திருக்கின்றது என்றே தெரியவில்லை, ஒருவிதமான பரிதாப நிலை இது

மருந்து கண்டிபிடிக்காத , பிஞ்சுகளை, கருக்களை அழித்துவிட கூடிய ஒரு பெரும் நோய் பரவிகொண்டிருக்கும் வேளையில் இத்தேசம் மாட்டை கட்டி அழுகின்றது

அப்படி எந்த மாடு பாராளுமன்றத்து ஆராய்ச்சி மணியினை அடித்தது எனவும் தெரியவில்லை

ஆனால் வெளிநாடுகள் அபாய மணி அடிக்கின்றன, பொறுப்பில்லா இந்திய அரசு எனும் அளவிற்கு சில கருத்துக்கள் வருகின்றன‌

பிரதமர் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார், ஜிகா வைரஸ் பறக்குமா?

இது தாக்கினால் சிலருக்கு மரணம், கர்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மண்டையோடு பாதிக்கபட்டு, மூளை பாதிக்கபட்டு அகோரமாக குழந்தை பிறக்கும், அது வாழ்வதும் சந்தேகம்...

தலையினை குறிவைத்து தாக்கும் வைரஸ் இது

வட இந்தியாவில் இப்பொழுது இந்நோய் பரவுகின்றதாம், தெற்கே இன்னும் நிலை தெரியவில்லை, தமிழகத்தில் சும்மாவே அமைச்சர் வரை மூளை காலி, இதில் சிகா வந்து அவர்களை என்ன செய்ய??

இந்நோய் கருவுற்ற பெண்ணின் சிசுக்களையே பெரிதும் பாதிக்கும் என்பதால், இந்திய கர்பிணிகள் பரந்தாமன் கண்ணனை வேண்டிகொள்வது நல்லது

அவர்தான் பாரதபோரில் அர்ஜூனன் மனைவி வயிற்றின் சிசுவினை காப்பாற்றினாராம்













 










 








இந்தியாவின் நாட்டுபற்று மிக்க பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்




Image may contain: 1 person, hat, beard and close-upஇந்தியாவின் நாட்டுபற்று மிக்க, பிரிவினை வாதிகளை எல்லாம் ஒடுக்கவேண்டிய வழியில் ஒடுக்கிய அந்த பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்


ஒரு இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன அந்த கன்வார் பால் சிங் இனி இல்லை, கடந்த 26ம் தேதி இறந்திருக்கின்றார்


மிக உறுதியான இந்தியர் அவர், அசாமில் கலவரங்களை ஒடுக்கியது அவரின் காவல்துறை வாழ்வில் பொறுப்பான துவக்கம்





அக்காலங்கள் கடுமையானவை, சும்மவே மனதில் பொறுமிகொண்டிருந்த சீக்கியர்களுக்கு அந்த இந்தி திணிப்பும் இன்னும் சில புறக்கணிப்பும் பெரும் சீற்றத்தை கொடுத்த்தன‌

பிந்த்ரன் வாலே அவர்களின் பிதாமகன் ஆனார், பல நாடுகள் அவனை வளர்த்துவிட்டன, அந்த சீக்கியர் பொற்கோயில் கலவரமும் தொடர்ந்த இந்திரா படுகொலையும் இந்தியாவின் ரணங்கள்

கில் ஒரு சீக்கியரானாலும் இந்தியராய் நின்றார், பொற்கோவில் படுகொலைகளை தொடர்ந்தும் அங்கு தீவிரவாதிகள் மறைந்திருந்தனர், கில்லின் அணுகுமுறையில் அவர்கள் வெளியேற்றபட்டனர்

பின்பும் தன் கடுமையான அணுகுமுறையாலும், திறமையாலும் நாட்டுபற்றாலும் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேரறுத்தார் கில்

சொந்த இனத்தை விட நாடே முக்கியம் என நின்ற அந்த வீரசிங்கத்தின் தியாகத்திற்கு எதுவும் ஈடாகாது

இன்று பஞ்சாப் அரசு அந்த பெருமகனின் மரணத்தை சாதாரணமாக, ஆம் வயதானால் சாவார்கள் என சொல்லியிருப்பதே அதற்கு சான்று

அரசியல் அப்படித்தான்

பஞ்சாபில் அவர் தீவிரவாதத்தை வேறோடு அறுத்தார், பெரும் சாதனை அது, ஒரு சீக்கியன் சீக்கிய பூமியில் இந்தியனாய் நின்ற பெரும் சாதனை அது

அந்த கில்லின் வழிப்படி தமிழகத்திலும் ஒருவர் இருந்தார், அவர் மோகன் தாஸ், எம்ஜிஆரின் அரசியலில் அவருக்கு பங்கு உண்டு, எம்ஜிஆர் எப்படி அரசியலுக்கு கொண்டுவரபட்டார் என்பதை முழுக்க அறிந்தவர் அவர்

எம்ஜிஆர் ஆட்சியில் அவர்தான் இங்கு டிஜிபி, அப்பொழுதுதான் ஈழபோராளிகளுக்கு இங்கு பயிற்சி நடந்தது, புலிகளை எம்ஜிஆர் வளர்த்த காலம்

ஈழபிரச்சினையில் நாம் இப்படி செய்தால், காஷ்மீரிலும் பஞ்சாபிலும் தலையிடும் பாகிஸ்தானை கண்டிக்கும் உரிமையினை நாம் இழப்போம், கில் போன்றோர்
செய்த தியாகம் எல்லாம் வீணாகும் என எச்சரித்தது அந்த மோகன் தாஸ்.

தமிழகத்தில் ஈழபோராளிகளை கட்டுபடுத்தியதும், பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்ததும் அவர்தான், அது பிடிக்காமல்தான் ஓடினான் பிரபாகரன்

அவர் எச்சரித்ததுதான் பின்னர் நடந்தது, அவசரமாக ராஜிவ் அந்த தவறை சரி செய்ய முயன்று உயிரையும் விட்டார்

அப்படி காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லாம் நாட்டுபற்றிலும், கடமை உணர்விலும் வழிகாட்டியாய் நின்ற அந்த பெருமகன் கேபிஎஸ் கில்லுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் பெருமை அடைகின்றோம்

இத்தேசத்தில் பிரிவினைவாதிகள் குதிக்கும் பொழுதெல்லாம், அவர்களை அடக்க காவல்துறை களத்தில் இறங்கும்பொழுதெல்லாம் கில் நினைவுக்கு வருவார், எக்காலமும் வருவார்

அவரை போல ஆயிரம் கில் வரட்டும், இத்தேசம் பிரிவினைவாதிகளை போட்டு சாத்தி அடக்கட்டும், நாடு நிலைபெறட்டும்

அந்த வீர சிங்கத்திற்கு ஆழந்த அஞ்சலியோடு, இத்தேசத்திற்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கண்ணீரோடு அனுப்பி வைக்கின்றோம்

வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்













 

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு, அப்படி மெரீனா சம்பவம் கூடுதலான ஒரு வழக்கு


பல வழக்குகள் பாயும் ஒருவன் குண்டர் சட்டத்தில் அடைபடுவது நடைமுறை, அதுதான் நடந்தது


இது தெரிந்தும் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் இந்த பிரிவினைவாதிகளை ஆதரிக்க தொடங்கியாயிற்று




இனி திமுக புலிகள் உறவு எந்த அளவு இருந்தது? எந்த எல்லை வரை இருந்தது? ஏன் திமுகவினை உணர்வாளர்கள் துரோகி என சொன்னார்கள்???


இப்படி பல விஷயங்கள் உண்டு, கலைஞரின் பெயர் அடிபடும் என்ற காரணத்திற்காக அவைகளை பட்டும் படாமலும் விமர்சித்ததுண்டு


ஸ்டாலின் இந்த அளவு சென்றுவிட்ட பின், இனி திமுக என்பது அந்த கும்பலில் முன்னாளைய ஒன்று என சொல்ல ஏகபட்ட விஷயங்கள் உண்டு


நாம் சொல்லாவிட்டாலும் இன்னொருவர் சொல்வர், அதனால் அவ்வப்போது எடுத்து விடலாம்.


கலைஞர் செய்ய யோசித்ததை எல்லாம் ஸ்டாலின் தயக்கமின்றி செய்ய தொடங்கிவிட்டார்..


ஆச்சரியமாக அதிமுக அரசு அதிரடி மூலம் தன் தேசபற்றை காட்டி, செய்ய வேண்டிய விஷயங்களை செய்கின்றது


அல்லது அவர்களை செய்ய வைத்து மத்திய அரசு விரிக்கும் வலையில் கொஞ்சமும் யோசனையின்றி சிக்கிவிட்டார் ஸ்டாலின்...


சீ..ச்சீ.. இவரெல்லாம் என சொல்ல தொடங்கிற்று தமிழகம்..


இன்றே இப்படி பல்டி அடிக்கும் நபர் , நாளை புலிகள் உத்தமர்கள் என கொடிபிடிக்க எவ்வளவு நேரமாகும்?


சீமானோடு கூட்டணி வைக்க எவ்வளவு நேரமாகும்???


அப்படியானால் நடிப்பின் மொத்த உருவமா இவர்கள்???


கேவலம் அரசியலுக்காக தேசவிரோத சக்திகளை ஆதரித்து திமுகவினை ஸ்டாலின் நாசமாக்கினார் என வரலாறு நாளை எழுதும்...


அது நடக்கத்தான் போகின்றது..



இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்


கலைஞருக்கு நியாபக மறதி ஏற்பட்டது என செய்தி வந்தது, திமுக அதனை மறுத்தது, உடல்நலம் சரியில்லை என்றது, அப்படியே விட்டிருக்கலாம்


கலைஞர் தன் சுண்டுவிரலை அசைக்க முடிந்தாலும் எழுதும் ரகம், அவரது எழுத்து வரவில்லை என்றால் சகாப்தம் முடிந்தது விஷயம் என்பதுதான் அர்த்தம், இது எல்லோருக்கும் புரியும்




ஆனால் அப்படி அல்ல என மறுத்துவிட்டு, விழா எடுத்து, பின் கலைஞருக்கு அழைப்பு எல்லாம் கொடுத்து அழிச்சாட்டியம் செய்தார்கள்


இப்பொழுது நேற்றுதான் கலைஞர் பேசினார் என்கின்றார்கள், அதாவது சுய‌ நினைவு இருக்கின்றதா என மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு கலைஞர் 3 பதில் சொன்னாராம் , உடனே அண்ணாவிற்கு அடுத்து கலைஞர் நேசிப்பது துரைமுருகன் என ஒரே அழுகை


கலைஞருக்கு நினைவு தப்பி இருந்தது இப்பொழுது பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அவர் இன்னும் குணமாகவில்லை என்பதும் புரிகின்றது


இப்படிபட்ட செய்திகளை எல்லாம் திமுக ஏன் அனுமதிக்கின்றது? அந்த மனிதனின் உடல்நலம் சரியில்லை என சொல்லிவிட்டு நகர்ந்தால்தான் என்ன?


ஏன் இப்படி நாடகம் ஆடவேண்டும்?


திமுக எப்பொழுதுமே திறந்த புத்தகம், அண்ணா நோயுற்ற காலமுதல் அது எதையுமே மறைத்ததில்லை, கலைஞர் அப்படித்தான் கட்சியினை கொண்டு சென்றார்


உறுதியாக சொல்லலாம், ஸ்டாலின் செய்வது ஜெயலலிதா பாணி அரசியல், இது எப்படி பலனளிக்கும் என்பதை காலம் சொல்லும்


அருகில் இருந்த துரைமுருகனை கலைஞர் அடையாள கண்டுகொண்டாராம், அது ஒரு செய்தியாம், ஏன் கலைஞருக்கு துரைமுருகனை முன்பு தெரியவே தெரியாதா?


ஏன்? தமிழிசை போட்டோவை காட்டியிருந்தால் கூடத்தான் இது தமிழிசை என சொல்லியிருக்க மாட்டாரா?


அதற்காக அவர் எப்பொழுதும் பாஜக நினைவாக இருக்கின்றார் என சொல்ல முடியுமா?


திமுகவினை இனி அவர்கள் நம்பாத கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..



திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்


இந்த திமுக மீது இருக்கும் கோபம் இதுதான், இம்மாதிரி நபர்களை முழுக்க விலக்கவும் மாட்டார்கள், சேர்க்கவும் மாட்டார்கள்


ஒரு கேவலமான அரசியல் இது, மிஸ்டர் ஸ்டாலின் 2009ல் உங்கள் தந்தை சீமானை பிடித்து உள்ளே போட்டார் அல்லவா? அதன் அர்த்தம் என்ன?




அவரையும் கண்டிக்கின்றீர்களா?


அவன் திமுகவினை எப்படி எல்லாம் பேசினான்? இந்த நாட்டை எப்படி எல்லாம் வசைபாடினான்? ஆனால் இன்று ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கின்றாராம்


ஆக திருமுருகன் சொன்னது எல்லாம் சரி என்ற அளவிலா கிளம்புகின்றீர்கள்?? சீ ..சீ....என்ன அரசியல் இது த்தூ.....


இவர் என்ன நினைத்து கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை, அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கின்றது, ஆனால் இப்படி அல்ல‌


ஒருவனை நாட்டு பாதுகாப்பு வழக்கில் உள்ளே குண்டர் சண்டத்தில் வைக்கும்பொழுது, எதிர்கட்சி கண்டித்தால் என்ன அர்த்தம்?


எங்களையும் தடை செய்யுங்கள் என்பது போன்ற அர்த்தம்


திமுக 1960ல் நெருப்பாறை கடந்தது, தடை எனும் கண்டத்தை கடந்துதான் வந்தது


அண்ணாவும், கலைஞரும் அந்த திமுகவினை தேசிய நீரோட்டத்துடன் இணைந்துதான் கொண்டு சென்றார்கள், அதுதான் யதார்த்தம்


இன்று மாட்டுகறியினை விட கொடுமையானது அன்றைய மிசா, அன்று கூட கலைஞர் பிரிவினை பற்றி நினைத்தே பார்க்கவில்லை


மாட்டுகறி அரசியலுக்கெல்லாம் திருமுருகனை ஆதரித்தால் , ஸ்டாலின் திமுகவில் மண் அள்ளி போடுகின்றார் என்பது நிஜம்


சரி, விரைவில் வெளிவந்த திருமுருகன் என்ன பேசுவான்?


ஈழதமிழரை கொன்றது "இனதுரோகி திமுக"


ஸ்டாலின் இம்மாதிரி எல்லாம் அரசியல் செய்தால் பெரும் சிக்கலில் சிக்குவது உறுதி


பாஜகவினை எதிர்க்க தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்கின்றோம் என்பது சரி, அதில் இம்மாதிரி விஷங்களுக்கு ஆதரவு என கிளம்புவது அபத்தம்


அது சயனைடு கடிப்பதற்கு சமம், ஸ்டாலின் அதனை கடிக்க விரும்புகின்றார் என்றால் கடிக்கட்டும்


மிஸ்டர் ஸ்டாலின், நாளை சீமானை கைது செய்தால் கூட இப்படி அவரை ஆதரித்துத்தான் அரசியல் செய்வீர்களா?


திமுக எனும் இயக்கத்தின் மீது எப்படி எல்லாம் அபாண்டமாக இந்த திருமுருகன் போன்றவர்கள் பழி போட்டார்கள்


அதனை மறுத்து பேசியவன், எழுதியவன் , திமுகவின் நியாயத்தை சொன்னவன் எல்லாம் கேணையனா?


நீங்கள் மட்டும் அறிவாளியா?


நாளை இப்படி வைகோவினையும் ஆதரித்து கொள்வீர்களா?


உங்கள் அரசியல் இப்படி கீழ்தரமாக செல்லுமானால், இந்த அல்லக்கை கும்பலின் வரிசையில் ஓரு ஓரத்தில் திமுக தன் வலுவிழந்து, பொலிவிழந்து அமர்ந்திருக்கும்


அதற்குத்தான் நீங்கள் ஆசைபடுகின்றீர்களா தோழர் ஸ்டாலின்??



Monday, May 29, 2017

நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல...

மாட்டுகறி சர்ச்சை வலுக்கின்றது,


அதிமுக, பாஜக தவிர‌ எல்லோரும் குரலெழுப்புகின்றார்கள்


முன்பொரு காலத்தில் மாட்டுகறி தின்னும் பாப்பாத்தி என ஜெயா மீது சர்ச்சை வந்தது, முதலில் மறுத்தாலும் பின் அப்படித்தான் நான் என்பது போல நடந்துகொண்டார் ஜெயா, பெரிதான எதிர்ப்பு ஏதும் பின்னாளில் இல்லை, உலகமும் அப்படி நம்பிகொண்டது





ஜெயாவிற்கு மாட்டுகறி உண்ணும் பழக்கம் உண்டு என்பது பின் சாதரண விஷயமாயிற்று

அதெல்லாம் இப்பொழுது அக்கட்சினர் நினைவுக்கு வராது, அவர்கள் அப்படித்தான் நன்றி கெட்டவர்கள்

கூவத்தூரில் மாட்டுசூப் குடித்ததை கூட மறைத்துவிட்டார்கள்

ஆனால் அம்மா தீபா, நீங்கள் அவரது ரத்த உறவு, நன்றி மறக்கலாமா?

நீங்களாவது என் அத்தை அன்றே மாட்டுகறியினை ஆதரித்தார் என கிளம்ப கூடாதா?

மிஸ்டர் மாதவன், (நடிகர் மாதவன் அல்ல தீபா மாதவன்), நீங்களாவது என் பெரியம்மா ஜெயலலிதாவே மாட்டுகறி உண்டவர், ஆதரித்தவர் என சொல்ல கூடாதா?

நாலு வோட்டு கிடைக்க வழி சொன்னால் கேளுங்கள்..








Image may contain: 3 people


சோறு போட்ட விளை நிலத்தை பிளாட் போட்டு விற்றவன், உடன் வாழும் இந்நாட்டின் சகோதரர்களை எல்லாம் மதத்தின் பெயரால் பிரித்து பார்த்து வெறுப்பவன் எல்லாம் குஷ்பூவினை கண்டிக்கின்றானாம்


இந்துக்களின் விரோதியா? அப்படி அவர் என்றாவது நடந்துகொண்டாரா? ஒருகாலும் இல்லை..


தேசமே பொங்கி கொண்டிருக்கின்றது, கேரள முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கின்றார், நாடெங்கும் தடையினை மீறி மாட்டுகறி உண்ணுகின்றார்கள்




விவகாரம் எல்லோரும் எதிர்ப்பது, மொத்த இந்திய சகோதரர்களும் எதிர்க்கும் விஷயத்தைத்தான் குஷ்பூவும் எதிர்க்கின்றார்


அதற்குள் அவரை கண்டிப்பார்களாம், அடக்குவார்களாம்


கேரளாவில், வட மாநிலங்களில் இன்னும் ஏராளமான இடங்களில் பொங்கிகொண்டிருக்கும் சகோதரர்களை அடக்கிவிட்டு அதன் பின் குஷ்பூவினை மிரட்ட இவர்கள் வரலாம்


இப்படி மிரட்டினால் எங்கள் தங்க மித்ரா அஞ்சிவிடுவாரா?


இந்த பதர்களை போல பல்லாயிரம் பதர்களை பார்த்து தாண்டி வந்தவர் குஷ்பூ


அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார்?


மாடு வெட்டவேண்டாம் என்றால் காலில் செருப்பு போடமாட்டீர்களா என்றார்


மாடு என்றுதான் சொன்னாரே தவிர, பசு, காளை, எருது என அவர் சொல்லவில்லை, மாடு என்றார்


இவர்களாக அது பசுமாடு என பொங்கி தீர்க்கின்றார்கள், அப்படி பசுவினை நேசிப்பவர்கள், ஓய்வுபெரும் பால் மாடுகளை இவ்வளவு நாளும் என்ன செய்தார்கள்?


கேரளாவிற்கு அடிமாடாய் அனுப்புவதை பார்த்துகொண்டிருந்தார்கள், இனி அந்த மாடுகள் சாலையில் அனாதையாய் அலையும் பொழுது இவர்கள் செய்ததென்ன?


ஒன்றுமேயில்லை


என்னவோ புதிதாக குதிப்பார்களாம், அதுவும் அவர் என்ன சொன்னார் என தெரியாமலே குதிப்பார்களாம்


ஒரு இந்திய குடிமகள் அவள் கருத்தை சொன்னால், மிரட்ட இவர்கள் யார்? அப்படியும் இந்தியா முழுக்க மிரட்டி விட்டு இங்கு வரட்டும்..


பசு என குஷ்பூ சொன்னாரா? இவர்கள் காளை மாட்டிலும் பால் கறக்கும் கூட்டம் போல..


இப்படி மிரட்டுவதை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது, இவர்களை குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக கண்டிக்கின்றோம்


இந்த மிரட்டல்களுக்காக அவருக்கு தகுந்த காவல்துறை ஏற்பாடுகள் செய்யபட வேண்டும் என சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகின்றோம்.


நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல, வீணாக அவரை சீண்ட வேண்டாம்.


மொத்த இந்தியாவும் சீறும் பொழுது குஷ்பூவினை மட்டும் மிரட்டுவது எப்படி?


எதிர்ப்புகளை தாண்டியே வளர்ந்தவர் அவர், பெரும் புயலிலும் நிலைத்தவர், கடும் அலையிலும், நெருப்பாற்றிலும் நீந்தியவர்


இந்த மிரட்டல்கள் அல்லாம் அவர் வளர்ச்சிக்கே அன்றி, வேறெதுவும் அவரை செய்துவிட முடியாது










கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா?

 

இதோ திருமுருகன் எனும் தேசவிரோதியினை பச்சை தமிழன் பழனிச்சாமி அரசு உள்ளே தள்ளியிருக்கின்றது


எங்கிருந்தாவது இந்த அரசு ஒழியட்டும், இது தமிழர் துரோகம் , சிறை உடைப்போம் என சத்தம் வருகின்றதா?


வைகோ, நெடுமாறன்,சீமான், வேல் முருகன், திருமா என யாராவது ஒரு கண்டனம் , ஒரு சத்தம் போடுகின்றார்களா?




இன்னமும் கேட்டால் தமிழனை தமிழ் முதல்வர் கைது செய்யாமல், அடுத்த மாநிலத்து முதல்வனா கைது செய்வான்? என சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்


இதே காங்கிரசும், கலைஞரும் என்றால் இப்பொழுது கேட்கவா வேண்டும்??


உங்களை தேசபக்தர்கள் எச்சரிக்கின்றோம்


மானமுள்ள உணவாளர்கள் என்றால் பச்சை தமிழன் பழனிச்சாமியினை கண்டியுங்கள் பார்க்கலாம்...


கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா? விடமாட்டோம்,


ஒழுங்காக வந்து இந்த அரசை கண்டித்து அழிச்சாட்டியம் செய்யுங்கள், இல்லையென்றால் இழுத்து வந்து உங்களை ரோட்டில் விட்டு கத்த சொல்ல வேண்டியிருக்கும்..


அதனால் ஏதாவது செய்து அந்த திருமுருகனோடு உள்ளே சென்று உங்கள் இன உணர்வை நிரூபியுங்கள்....


வெளிவரவே வேண்டாம்...




ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது





சிரியாவினையும் ஈராக்கையும் அழிக்கும் ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது


பிலிப்பைன்ஸ் என்பது தீவுகள் நாடு, அப்படி ஒரு தீவு மவாரி, பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவர்கள் போல இஸ்லாமியரும் அதிகம், இத்தீவு இஸ்லாமிய மக்கள் பகுதி


புரூனே, இந்தோனேசியாவினை அண்டிய பகுதி என்பதால் அங்கும் இஸ்லாமியர் அதிகம்





அங்குதான் இந்த படுபாதகம் நடைபெற்றிருக்கின்றது, ஒரு மசூதியில் அந்த தீவிரவாதபடை ஐஎஸ் கொடியினை ஏற்றியிருக்கின்றது, அதனை தொடர்ந்து சண்டை மனித கேடயம் என பயங்கர அட்டகாசம்

இதுவரை 103 மக்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

புனிதமான ரமலான் மாதத்தில் அந்த இஸ்லாமிய மக்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லபட்டிருப்பது பெரும் ரணம், எல்லோர் மனதையும் பாதிக்கும் செய்தி

உலகெல்லாம் இஸ்லாமிய கொடி பறக்கவேண்டும் என்ற வெறியாட்டத்தில் இவர்கள் செய்யும் இந்த காட்டுமிராண்டிதனம் வரலாற்றில் பெரும் கருப்பு அடையாளம்

ஏற்கனவே அத்தீவுகளில் குழுமியிருந்த தீவிரவாதிகளை துடைத்தொழிக்கும் பணியில் ராணுவம் இறங்கியிருந்தது, ஆனால் அவர்கள் ஐ.எஸ் கொடி ஏற்றியிருப்பதுதான் அதிர்ச்சி

அவர்களை முறியடிக்கும் போராட்டம் தொடர்கின்றது,

ஆனாலும் ஒரு நெருடல்

ஈராக், சிரியா, ஈரான் என அமெரிக்க எதிரி நாடுகளையே குறி வைக்கின்றது ஐ.எஸ். இஸ்ரேலையோ அல்லது அதன் நட்பு நாடுகள் பக்கமே அது செல்வதில்லை

பிலிப்பன்ஸில் அமெரிக்க தளம் உண்டு, ஆனால் திடீரென‌ சீனாவுடன் பிலிப்பனிஸ் அரசு நெருக்கமானது, அமெரிக்காவினை விரட்டும் அளவு நிலமை சென்றது

இப்பொழுது பிலிப்பைன்ஸ்லிலும் நிலமை தலைகீழ், இனி அமெரிக்க தளம் இப்போதைக்கு வெளியேறாது, சந்தடி சாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பிலிப்பைன்சுக்கு உதவி என அமெரிக்க குதிக்கின்றது

கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்சம் அரசியல், மிகுந்த மதவெறியில் இத்துயரம் நிகழ்ந்திருக்கின்றது

மனதில் பெரும் துயரமும், ஆற்றாமையும், கண்ணீரும் குடிகொள்ளும் நேரமிது, கடந்து செல்ல முடியவில்லை

இவர்கள் எல்லாம் ஹிட்லர் பரவாயில்லை என்று வரலாற்றில் மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பது மட்டும் புரிகின்றது




 

 



 

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது





மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது


இப்பொழுதெல்லாம் மிக சரியான விஷயங்கள் நடக்கின்றன, வைகோ உள்ளே போனது, இந்த பெரும் பொய்யனான திருமுருகனை உள்ளே போட்டது எல்லாம் வரவேற்க தக்க விஷயங்கள்


இப்படி நடக்கும் என்று அங்கிள் சைமனுக்கு முன்பே தெரிந்ததால் கன்னடன், ரஜினி, என் இனம், எளிய பிள்ளை என பாட்டை மாற்றிபாடி தந்திரமாக தப்பித்ததாக நினைத்து கொள்கின்றார்





இந்த களைகளை, பதர்களை விஷ வித்துக்களை பிடித்து உள்ளே போட்ட அரசினை பாராட்டுகின்றோம்

ஆக தமிழின உணர்வாளர்களே, நன்றாக கவனியுங்கள்

கலைஞர் அரசும், காங்கிரஸ் அரசும் உங்களை விட்டுத்தான் வைத்திருக்கின்றது , ஆனால் பச்சை தமிழன் பழனிச்சாமி அரசும், மோடி அரசும்தான் உங்களை உள்ளே தள்ளுகின்றன‌

அதாவது 2009ல் நீங்கள் எல்லாம்யாரை ஆதரித்தீர்களோ அவர்கள்தான் உங்களை இப்பொழுது பிடித்து நசுக்குகின்றார்கள்

இனியாவது திருந்துங்கள் , இல்லையென்றால் விளைவுகள் மோசமாயிருக்கும்

அது இருக்கட்டும்

இந்த சீமான் பிரபாகரன் எனும் அந்நிய தீவிரவாதி கொடி பிடிக்கின்றார், காஷ்மீரிய யாசின் மாலிக்கோடு எல்லாம் போஸ் கொடுத்தார், அவரை எப்பொழுது பிடிச்சி உள்ளே போட போறேள்...

திருமுருகனுக்கே இப்படி என்றால், சீமானை எப்படி விடலாம்?

அவரையும் கொஞ்ச நாள் வைகோ செல்லில் வைக்காமல் இது நீதியான நடைமுறை என யாரும் ஏற்கமாட்டார்கள்

முன்பு பல இடங்களில் சிறை என்னை செதுக்கும், நான் எண்ண படித்ததே கம்பி எண்ணத்தான் என முழங்கியவர் அங்கிள் சைமன்

ஆதலால் அவர் சிறைக்கு அஞ்சமாட்டார், பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் அவர் சிறைக்கு சென்று வரட்டும்,

அப்பொழுதுதான் தமிழக வந்தேறிகள், காங்கிரசார் எல்லாம் அவரை எப்படி விட்டு வைத்திருந்தார்கள் என்பது புரியும்..