Friday, May 26, 2017

புனிதமான ரம்ஜான் மாதம்

புனிதமான ரம்ஜான் மாதம் தொடங்கும்பொழுது இம்மாதிரி "மாடுவெட்டாதே.." என்ற அறிவிப்புகள் எதற்காக? இவர்கள் செய்யும் காரியம் இத்தேசத்தின் அமைதியினை குலைப்பதாகும்


இஸ்லாமிய பெருமக்களுக்கு இது அவர்களின் புனிதமான மாதத்தில் அநீதி இளைக்கும் செயல்


இப்படி மாடு , ஓட்டகம், எருது வெட்ட கூடாது எனும் சட்டம் எருது வெட்டும் இந்து ஆலயங்கள், கிடா வெட்டும் இந்து ஆலயங்களுக்கும் பொருந்துமா?




இனி ஆலயத்தில் கோழி, கிடா வெட்ட கூடாது என மொத்தமாகவாது சொல்லி தொலையுங்கள்


அவர்கள் வெட்டலாம், இவர்கள் மாடு வெட்ட கூடாது என்பது இத்தேசத்து அமைதியினை குலைத்துவிடும்


பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினால் அவற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும், இன்னொருமுறை பரீசீலனை செய்வது நல்லது


இந்த நாட்டை அமைதியாக இருக்க விடுங்கள், இன்னொரு பெரும் கலவரத்தை நாடு தாங்காது...


அந்த சகோதரர்கள் மனம் நோக செய்யும்படியான இந்த அறிவிப்பினை மறுபரீசீலனை செய்யவேண்டும் என்பதே தேச அபிமானிகளின் பெரு விருப்பம்.....









 மாடு மட்டும்தான் இந்துக்களின் புனித விலங்கா?






பிள்ளையார் வரும் மூஞ்சூறு போன்றவை எல்லாம் அந்த வகையில் வராதா? பட்டியல் மிக பெரிது, எல்லா சாமியும் ஒரு விலங்கோடு சம்பந்தபட்டது


மாடுகளை வெட்டுவது தடுக்கபடுகின்றது , ஆனால் இந்தியாவெங்கும் கொல்லபடும் எலிகள், பள்ளி கல்லூரி, மருத்துவமனை ஆய்வகங்களில் எல்லாம் கொல்லபடும் எலிகளுக்கு விடுதலை இல்லையா?




அவைகளையும் கொல்லாமல் விட்டுவிட சொல்லுங்கள், செழித்து பெருகட்டும்


பெருமாளின் மச்சவதாரம், கூர்மாவதாரபடி இந்த கடலில் மீன்பிடிப்பதை எல்லாம் தடுக்க வேண்டாமா?


வராக அவதாரம் என சொல்லி இந்த பன்றிகளை எல்லாம் விடுவிக்க வேண்டாமா?


மாட்டுக்கு ஒரு நியாயம் மற்ற புனித விலங்குகளுக்கொரு நியாயாமா?


அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, எலி, மீன், பன்றி என எல்லா மிருகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படி அரசுக்கு ஒரு கடிதம் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சார்பாக விரைவில் மனு அனுப்பபடும்..










முத்துராமலிங்கம் என்றொரு படம் வந்திருக்கின்றது, நமது கண்ணில் இன்றுதான் பட்டது


தமிழின் மிக மோசமாக வெறுப்பேற்றும் படங்கள் 5 எடுத்தால் அதில் நிச்சயமாக இந்த படம் இடம்பெறும்


ரஞ்சித் போல சாதிக்கொரு இயக்குநர் இருக்கத்தான் செய்கின்றார்கள்...








 




No comments:

Post a Comment