Tuesday, May 23, 2017

குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை



Image may contain: 2 people, close-up


கொஞச நாளாக குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை உலக அளவில் பரபரப்பாக விவாதிக்கபடுகின்றது, அவர் நமது இந்தியர் இப்பொழுது பாகிஸ்தானில் மரணத்தின் நிழலில் நிற்கின்றார்


அவர் மகராஷ்ட்ராக்காரர் கப்பல்படையில் பணி, அப்படித்தான் ஈரானில் இந்தியா செய்யும் சில துறைமுக பணிகளுக்காக அனுப்பட்டார் என்கின்றார்கள.


அப்படி அவரை ஈரான் பாகிஸ்தான் எல்லையில் கடத்தபட்டார் என ஈரானிய செய்திகள் சில சொல்கின்றன‌


ராணுவத்திலிருந்து அவர் விலகினார், சொந்த தொழில் செய்தார் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பலமுறை தொழில் விஷயமாக சென்றவர்தான் இம்முறை வேண்டுமென்றே பிடித்து தகறாறு செய்கிறது பாகிஸ்தான் என்கின்றது இன்னொரு செய்தி


பாகிஸ்தானோ அல்ல, அவர் ஈரானிலிருந்து பலுசிஸ்தான் வந்து இங்கு பலுசிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவினார் என குற்றம்சாட்டி, இது அவர் வந்த பாஸ்போர்ட் அது இது என சொல்லி கொன்றே தீருவோம் என அடம்பிடிக்கின்றது


அவர்களுக்கு என்ன? ஒரு ஆடு வழிதவறி அப்பக்கம் சென்றாலே விடமாட்டார்கள், முன்னாள் இந்திய வீரன் சிக்கியிருக்கின்றான், ஆட தொடங்கிவிட்டார்கள்..


பாகிஸ்தானியருடன் பேசமுடியாது, பேசி வழிக்குகொண்டுவர முடியாத நாடு அது. அதனால் இந்தியா அந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது, அதுவும் அவரின் மரண தண்டனையினை நிறுத்த சொன்னது


ஆனாலும் முன்பு உலகமே கெஞ்சியும் அவர்களின் பூட்டோவினையே தூக்கிலிட்டவர்கள், எதிரிகளை விடுவார்களா?


அதனால்தான் முன்பு பாகிஸ்தானால் கைதுசெய்யபட்ட இந்திய விமானபடை வீரர் திலீப் பரூல்கர் ராவல்பிண்டி சிறையில் இருந்து தப்பினார், அவர்கள் கண்ணில் மண்ணை தூவி டெல்லி வந்தார், அப்படி ஒன்று சாகவேண்டும் அல்லது தப்ப வேண்டும் அது ஒன்றுதான் வழி மற்றபடி மனசாட்சி எல்லாம் பாகிஸ்தானுக்கு இல்லை


(இந்த சம்பவம் தான் காற்றுவெளியிடை படத்தில் காட்சியாக வைக்கபட்டது)


இந்தியா சர்வதேசம் மூலமாக மல்லுகட்டுகின்றது, சமயம் பார்த்து இந்தியா தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கட்ட நாடு என டிரம்ப் வேறு கண்ணீர் வடிக்கின்றார்


இந்த குல்பூஷன் ஜாதவ் விவகாரம் சீரியசாக ஓடிகொண்டிருக்கும் பொழுதே இந்திய வியாபாரி ஒருவரை உளவாளி என பாகிஸ்தான் கைது செய்திருப்பதாக தகவல் கசிகின்றன‌


அவர் ரபீக் நாயக் என்கிறது இந்தியா, பாகிஸ்தானோ அந்த பெயரில் யாரும் இல்லை, ஒருவேளை போலிபெயரோ உண்மை பெயரினை சொல்லுங்கள் தகவல் தருகின்றோம் என மர்ம சிரிப்பு சிரிக்கின்றது


மொத்தத்தில் பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை வலைப்பின்னலின் சங்கிலி கண்ணிகளில் ஒன்று பாகிஸ்தான் கையில் சிக்கிவிட்டது, அதனை இந்திய அரசுக்கு எதிராக திருப்பி , பாகிஸ்தான் மக்களிடம் அரசியல் செய்கின்றது


இந்தியாவில் பாகிஸ்தான் உளவாளியும், பாகிஸ்தானில் இந்திய உளவாளிகளும் இருப்பது பெரும் ரகசியம் அல்ல, உங்கள் பக்கத்து வீட்டில் கூட பாகிஸ்தான் உளவாளி பதுங்கியிருக்கலாம்


இந்தியாவிற்கு தெரியுமா என்றால் தெரியும், ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள் என்றால் அதுதான் தந்திரம், சிலரை விட்டுவைப்பதிலும் அர்த்தம் இருக்கும்


முன்பு சப்ரஜித் சிங்கினை பாகிஸ்தான் தூக்கிலிட்டு நம்மை சீண்டிபார்த்தது, அதன் அர்த்தம் எங்காவது பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவில் சிக்குகின்றார்களா என்பது


ஆனால் இந்தியா சிறையில் இருந்த பாகிஸ்தான் உளவாளி கதையினை முடித்தது


மற்றபடி நாட்டில் சிக்கவில்லை என்பதால்
பாகிஸ்தான் உளவாளிகள் கெட்டிக்காரர்கள், ஆனால் இந்தியர்கள் நம்மிடம் அறிவின்றி மாட்டிகொள்கின்றார்கள் என அது காலரை தூக்கிவிட்டது


உண்மை அப்படி அல்ல, விட்டு வைத்து மொத்தமாக சாத்தும் திட்டம் அல்லது பாகிஸ்தானிய உளவாளிகளை குழப்பிவிடும் தந்திரம் இந்தியாவிடம் உண்டு, ஒருவன் உளவாளி என தெரிந்தால் அவனை பிடிக்காமல் விட்டுவைத்து காரியம் சாதிக்கும் வித்தைகள் சில உளவுதுறையிடம் உண்டு, அதாவது ஏமாற்றும் தவறான தகவலை கொண்டு செல்ல அவனை விடால் யார் இருக்கின்றார்கள்?


குல்பூஷன், ரபீக் நாயக் விவகாரம் பற்றி எரிகின்றது, இந்தியா எம்மாதிரி பதிலடி கொடுக்கும் என உலகநாடுகள் ஆர்வமாய் கண்காணிக்கின்றன‌


என்ன யழவு பாகிஸ்தானோ, கொலைகாரன் தாவுத் இப்ராஹிமை பிடித்து கொடுங்கள், தீவிரவாதி மசூத்தினை கொடுங்கள் என கேட்டால்


குல்பூஷன், நாயக் என இந்தியர்களை பிடித்து கொல்வோம் என கிளம்புகின்றது பாகிஸ்தான், ஒரு மாதிரியான அரைவேக்காடு நாடு


"பிரிவினையில் பெறும் சுதந்திரத்தை விட, ஒற்றுமையாக கொஞ்சகாலம் அடிமையாக இருப்போம், ஒற்றுமை வந்தபின் சுதந்திரம் கேட்கலாம்.." என அன்று காந்திக்கு சொன்ன சில யோசனைகளிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது


ஒற்றுமையாய் இருந்தபொழுது நமக்கு சுதந்திரமில்லை ஆனால் அமைதியும் அன்பும் இருந்தது, இந்த சுதந்திரம் பிரிவினை எனும் கொடுமையில் அனுதினமும் நம்மை நிம்மதியின்றி அழவைத்து கொண்டிருக்கின்றது


வரலாறுகளை படிக்கும் தலைமுறை பின்னொரு காலத்தில் கரம்கோர்த்து ஒன்றாகட்டும், இத்தேசம் அமைதிபெறட்டும்


அது ஒன்றே இத்தேசத்தின் எல்லையில் அமைதி திரும்ப வழி, எல்லைகள் ஒழியாமல் அங்கு நிரந்தர அமைதி திரும்பாது..


குல்பூஷன் ஜாதவும், ரபீக் நாயக்கும் நல்ல முறையில் திரும்பிவர இத்தேசம் ஒரே குரலாய் பிரார்த்திக்கின்றது,













 


 

No comments:

Post a Comment