Tuesday, May 23, 2017

அதிமுக அரசு ஒருவருடத்தினை கடக்கின்றது





இன்றோடு அதிமுக அரசு ஒருவருடத்தினை கடக்கின்றது, என்ன செய்திருக்கின்றது இந்த அரசு என கேட்டால் அவர்களே சிரித்துவிடுவார்கள்


அவ்வளவு காமெடிகளை ஒரு வருடத்தில் செய்திருக்கின்றது, மூன்று முதல்வர்கள் வந்திருக்கின்றார்கள், குழப்பத்தில் பெரும் குழப்பம் நடக்கின்றது


2 லட்சம் கோடி அந்நிய முதலீடு என்றார்கள், ஆனால் அரசு கடன் 4 லட்சம் கோடி இப்பொழுது இருக்கின்றது ,அந்த அந்நிய முதலீடு என்ன ஆனது?





அப்படியானால் இந்த அரசு 2 லட்சம் கோடி ஊழலா செய்திருக்கின்றது? கலைஞர் அரசு என்றால் இப்பொழுது அலங்காநல்லூர் காளையாக சீறுவார்கள், இதற்கு எல்லாம் காயடித்த மாடாக சத்தமே இல்லை

விலைவாசி கடும் உயர்வு, நீருக்கும் தட்டுபாடு, விவசாயம் அழிந்துவிட்டது, தொழில் இல்லை, கல்வி உரிமையில் மத்திய அரசிடம் காலில் விழுந்தாயிற்று இனி கல்வியும் அழியும், மொத்தத்தில் மிக வேகமாக வீழ்கின்றது தமிழகம்..

வேலைவாய்ப்புகள் இல்லை, பெரும் நிறுவணங்கள் மாநிலம் மாறுகின்றன, தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கின்றது, யாரிடம் முறையிட என தெரியாமல் மக்கள் தவியாய் தவிக்கின்றனர்

தோல்வி அடைந்த அரசு என்பார்கள், இது முழுக்க முழுக்க தோல்வியுற்ற அரசு என்பதுதான் மகா உண்மை

அவர்கள் உட்கட்சியு விளையாட்டும், குடும்ப கூத்துக்களும் , கூவத்தூர் கும்மாளமும் இது ஜனநாயக மாநிலம் என்பதை வெட்கத்தோடு சொல்ல வைத்தது

சரி ஒருவருட சாதனை என்ன?

அவர்கள் தலைவி குற்றவாளி, கட்சியின் பொதுசெயலாளர் ஊழல் சிறைவாசி, துணை பொதுசெயலாளர் நாட்டின் ஆணிவேரான தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்று சிறையில் இருகின்றார் எனும் சாதனை ஒருபக்கம்

பன்னீர், தீபா, மாதவன் எனும் பெரும் அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் தமிழகம் காக்க‌ கிளம்பியிருக்கின்றார்கள் என்பது இன்னொரு பக்கம்

எங்கும் ஊழல் , எதிலும் கையாலததனம், மக்கள் நலனினும் தெர்மாக்கோல் விளையாட்டு எனும் விளையாட்டு அமைச்சர்கள் இன்னொருபுறம்

ஆளுநரை தவிர யாருக்கும் வேலைவாய்ப்பினை இந்த அரசு கொடுக்கவே இல்லை, அவருக்கு மட்டும் கொடுத்தார்கள்

மொத்தத்தில் ஜெயாவிற்கு சமாதி கட்டிவிட்டு அடுத்து மொத்த தமிழகத்தையும் கொன்று பெட்டியில் அடைக்கும் வேலையினை இந்த அரசு செய்கின்றது

முன்பு தென் திசை உயர்ந்து வீங்கி ஒரு மாதிரி குழப்பம் ஏற்பட்டபொழுது அகத்திய முனிவர் வடக்கிருந்து வந்து தமிழகத்தை காப்பாற்றினாராம்

அப்படி யாராவது வந்து தமிழகம் சவபெட்டிக்குள் செல்லும் முன் காக்ககட்டும் , இல்லாவிடால் ஆணி அடித்து புதைத்துவிடுவார்கள்

அந்த ஆபத்தில் இருந்து யார் தமிழகத்தை காப்பாற்றபோகின்றார்களோ தெரியாது, ஆனால் காப்பாற்ற வருபவரை கையெடுத்து வணங்கலாம்




 

 



 

No comments:

Post a Comment