Sunday, May 28, 2017

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி.. இன்னும் பிற....

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி , வருங்காலத்தில் ஒருமாதிரியான இம்சை தமிழகத்தில் வரும் , அது குரைக்கும் என தெரிந்தே எழுதி வைத்த அழகான வரிகள் இதோ..


"முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்




மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டுவிட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்


வனத்திலே விடுவதற்கு
வால் மட்டும் இல்லையடா...."


இது யாருக்கு பொருந்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை






இப்பொழுதெல்லாம் அந்த நக்மா அடிக்கடி தமிழகத்தில் சுற்றுகின்றார், எங்கள் தங்கமித்ரா சங்கமித்ராவில் பிசியாகியிருப்பதால் அந்த இடைவெளியில் புகுந்து கொள்ள நினைக்கின்றார் நக்மா


தங்கத்தின் இடத்தை தகரம் பிடிக்க முடியாது


தலைவி தங்கமித்ரா எப்பொழுது வந்தாலும் அவருக்கான இடம் காலியாகவே இருக்கும் என்பதை நக்மா உணர்ந்துகொள்வது நல்லது.




வான்கோழி மயிலாகாது, நக்மா குஷ்பூ ஆக முடியாது


கடையோரத்து பொம்மையொன்று ஆலயத்தின் பொற்சிலை ஆகவே முடியாது












இலங்கையில் கனமழை ஏராளமானோர் பலி, உதவி பொருட்களுடன் கப்பலை அனுப்பியது இந்தியா

இப்பொழுது பொங்குவார்கள் பாருங்கள், ஈழபோரில் உதவாத இந்தியா , சிங்களனுக்கு கப்பல் அனுப்புவது ஏன் என கத்துவார்கள்.

இதே இந்தியா ராஜிவ் காலத்தில் உணவு வீசி, ஈழதமிழரை காக்கத்தான் செய்தது, புலிகள் அவர் கொலைவரை சென்றபின்புதான் ஒதுங்கியது


இறுதிபோரில் நாம் உதவிபொருள் அனுப்பினாலும் அது புலிகளுக்த்தான் செல்லும் அப்பாவி மக்களுக்கு செல்லாது என்பது இந்தியா அறியாததல்ல, இறுதி போரில் ரத்தம் முதல் மருந்து வரை உதவிபொருள் என இந்த இன உணர்வு கும்பல் அனுப்ப துடித்ததும் புலிகளுக்கே, மக்களுக்கு அல்ல‌

இந்தியா மவுனமானது அதனால்தான்

இது என்றுமே தவிக்கும் மக்களுக்கு உதவும் நாடு, மலையக தமிழருக்கு உதவியது, இப்பொழுது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி என இந்தியா மனிதாபிமானமோடு
உதவுகின்றது

இந்த வெள்ளத்தில் சிங்களவர்களோடு தமிழரும் உண்டு, அவர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது

இந்தியாவின் இந்த மனிதாபமான உதவியினை நாம் வரவேற்கின்றோம், மனிதநேயம் வளரட்டும்









 

 



 


No comments:

Post a Comment