Thursday, May 25, 2017

கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார்








கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார்

நல்ல கவிஞர் அந்த ராமசந்திரன் கண்ணதாசனுடன் பிணக்கான காலங்களில் தன்னருகே வைத்துகொண்டு கண்ணதாசனுக்கெதிராக கொம்பு சீவினார், கண்ணதாசனின் இடம் வேறு என்பதால் ஒன்றுமில்லை

காமராசனின் தமிழ்பற்றை அதிமுக பற்றாக மாற்றி வைத்திருந்தார் ராமசந்திரன், நிச்சயமாக காமராசன் அபார கவிஞன் , வார்த்தைகள் விளையாடும் அதனை தனக்கு சாதகமாக திருப்பினார் ராமசந்திரன், அந்த பிடி இல்லையென்றால் இன்னும் பல அற்புத‌ பாடல்களை காமராசன் கொடுத்திருப்பார்


காமராசனில் கரைந்து போன காலங்களும் எமக்கு இருந்தன‌

பின்பு கலைஞர் முகாமில் சங்கமம் ஆனார் காமராசன், ஒரு கவியரங்கம் "கணக்கு" என பெயரிடபட்டிருந்தது, கலைஞர் நடுவர் "கழித்தல்" தலைப்பில் பாட வந்தார் காமராசன்

கலைஞர் தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்

"ம்பி காமராசன் நேற்று வரை கழித்தல் கணக்கில் இருந்தவர். இன்று நம் கூட்டல் கணக்கு ஆகியிருக்கிறார்.

குயிலென்று அவரைப் பறக்கவிட்டேன். கோட்டான்கள் கூட்டத்தில் குயில் பாட்டு எடுபடுமா? அதனால் கூப்பிட்டுக் கொண்டேன்

என் தோட்டத்திற்கே! தோட்டம் வந்த குயிலே..
என் தோளில் தொற்றும் கிளியே...
கழித்தல் கவிதை ஆற்று..
களிப்பில் எம்மை ஆழ்த்து”, இப்படி தானாக வந்த வரிகளில் அசத்தினார் கலைஞர்

காமராசனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த வரிகளும் நினைவுக்கு வரும், பெரும் காப்பியம் படைப்பேனெ என சொல்லிகொண்டிருந்தார்

ராமசந்திரன் பின்னால் போனவன் கல்லூரி கட்டலாம், கொள்ளையடிக்கலாம் , இலக்கியவாதி ஆக முடியுமா?

அப்படி செல்லாமல் இருந்திருந்தால் காமராசன் தனி காவியம் படைத்திருக்கலாம், திறமை அவருக்கு இருந்தது..

நல்ல தமிழ்கவிஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்




 

 



 

No comments:

Post a Comment