Sunday, May 28, 2017

ஆசான் பா ராகவனின் ருசியியல்...

ஆசான் Pa Raghavan ருசியியல் எனும் மிக மிக ரசனையான தொடரை எழுதுகின்றார், அதனை படித்த உடனே சொத்துக்களை விற்று அந்த உணவு கிடைகும் இடத்தை அடைய துடிக்கின்றது மனம்


ஆனால் ஒரு வருத்தம்


அவர் சைவ பட்சி, மாபெரும் கடலை படைத்து அதனை உப்பாக்கி வைத்த இறைவன், மாமன்னன் சாலமோனை யூதனாக குறுக்கிய இறைவன் இவரையும் சைவமாக்கிவிட்டான்




இல்லையென்றால் நெத்திலி முதல் மாட்டுகறி வரை, புழு முதல் பாம்பு வரை அழகான சமையலை எல்லாம் உலகிற்கு சொல்லியிருப்பார்


அந்த இறைவன் தான் எவ்வளவு கொடியவன், போகட்டும். இவர் காட்டும் சைவ உணவு ருசியினையாவது தெரிந்துகொள்ள வாயிருப்பது வரை சந்தொஷம்


அவர் பால், தயிர், பனீர், காய்கறி என அலையும் ஜாதி, நாமோ மீன் பின்னால் நீந்திகொண்டே இருக்கும் ரகம்


மீனை தேடி அப்படி ஒடியிருக்கின்றேன், முதலில் சூப்பர் மார்க்கெட்டில் தேடினேன், பின் புத்தம் புது எனப்படும் பிரஷ் மார்க்கெட்டில் தேடினேன் ஒன்றும் சரியில்லை


பின் ஓடினேன் ஓடினேன், கடல்மீன்கள் வந்திறங்கும் மொத்த மார்கட்டுக்கு ஓடினேன், அங்கு சில்லறையில் வாங்க முடியாது, லாரி நிறைய மட்டும்தான் வாங்கமுடியும்


ஆனாலும் என்ன? ஆப்ரிக்காவில் இருந்து மீன் உண்ணவே மலேசியா வந்தவர் நம்மோடு இணைந்து கொண்டார், மனிதர் நம் ரகம், சுவையான மீன்களை அடையாளம் காட்ட என்னை விட்டால் யாருமில்லை என்பது அவரின் நம்பிக்கை,


இது நல்ல மீன் என்றால் உடனே கட்டப்பா போல பாய்ந்துவிடுகின்றார், அவ்வளவு நம்பிக்கை என் மேல்


அவரையும் இன்னும் சிலரையும் பிடித்துகொண்டு கூட்டமாய் சென்று ராஜ தந்திரத்தில் வென்றுவிட்டேன், இந்த மீன்கள் கொஞ்சம் பரவாயில்லை,


மீன்குழம்பிற்காகவே பொத்தி பாதுகாக்கும் மண்பானையில் அதனை ஆக்கினால் அப்படி ஒரு ஆனந்தமான சுவை


இனி கடற்கரைக்கு செல்லவும் முடிந்தால் படகு வாங்கி கடலிலே சென்று நானே பிடிக்கவும் திட்டமிட்டிருக்கின்றேன்..


கலைஞர் என்றோ எழுதியது இன்று படித்தாலும் மெய் சிலிருக்கின்றது, என்றொ யாரோ எழுதிய ஓவியமும், சிற்பமும் இன்றும் மகிழ்ச்சி கொடுப்பவை


அப்படி நேற்று வைத்த மீன்குழம்பும்
இன்று அதிருசியினை கொடுக்கின்றது,


அதுவும் அதில் சம்பா அரிசி சோறும் கலந்துவிட்டால் கண்ணதாசனின் அழகான வர்ணனை பாடல்களுடன் குஷ்பூ முகத்தை பார்ப்பது போல அப்படி ஒரு ஆனந்தம்.


பழைய மீன்குழம்பும் , பழைய குஷ்பூ படம் போன்றே அமிர்தமான சுவை கொடுக்கின்றது



No comments:

Post a Comment