Saturday, May 27, 2017

தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி




Image may contain: 1 person, close-up


தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம், விசாரணை முடிவில் நிரூபிக்கபட்டால் அது தடை செய்யபடும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


தனியார் பால் என்ன நேற்று நள்ளிரவில் வந்ததா? இல்லை இவர்கள் இன்று காலைதான் அமைச்சர் பொறுப்பு ஏற்றார்களா?


நல்ல அரசு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?, விசாரணை முடிவு வரும் வரை இந்த பாலை தடை செய்கின்றோம் என சொல்ல வேண்டாமா?





இது ஆபத்தான பால், ஆனால் முடிவு வரும் வரை குடியுங்கள் என எந்த முட்டாள் அரசாவது சொல்லுமா? இவர்கள் சொல்கின்றார்கள்

முதலில் அமைச்சர்களுக்கு இந்த பாலை விசாரணை முடிவு வரும் வரை கொடுக்க சொல்ல வேண்டும், ஆம், "பாலூற்ற" வேண்டும்..

முன்பு ஜெயலலிதாவிற்கே கோபம் வருமளவு ஆவின் பாலில் நீர் கலந்த விஷயம் வெளிவந்தது, அரசுபால் லட்சனம் அப்படி

இப்பொழுது தனியார் பாலும் விஷம் என அரசே சொல்கின்றது

ஏம்ப்பா பாஜக குரூப்ஸ், தமிழகத்து நாக அம்மன் கொவிலில் கலப்பட பால் ஊற்றி பாம்பினை கொல்ல பார்க்கின்றார்களாம், கொஞ்சம் மேலிடத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்க கூடாதா?

போகிற போக்கில் இனி அரேபியாவிலிருந்து ஒட்டகப்பாலையும் பெட்ரோலுடன் இறக்குமதி செய்யவேண்டியிருக்கும் போல....

ஆக தமிழர்களே, தமிழக தனியார் பால் விஷம் தான், ஆனால் ஆய்வு முடிவு வரும் வரைக்கும் சந்தோஷமாக குடியுங்கள் என அமைச்சர் சொல்கின்றார்

குடித்து சாவுங்கள், ஏற்கனவே டாஸ்மாக் குடித்து செத்து கொண்டிருக்கின்றீர்கள், இனி கலப்பட பால் குடித்தும் சாவுங்கள்

பொன்மனசெம்மல் எம்ஜிஆர் வாழ்க‌
புரட்ட்சி தலைவி வாழ்க
சின்னம்மா வாழ்க...













 


 

No comments:

Post a Comment