Monday, May 29, 2017

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது





கலைஞர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது


முன்பு மும்பையில் திரவிய நாடார் என்றொரு குட்டி தாதா இருந்தார் என்பார்கள், வரதராஜ முதலியார் போல பெரும் தாதா அல்ல, ஒரு ஏரியா தாதா


இந்த திரவிய நாடார் கதையினைத்தான் காலா என எடுக்கின்றார்களாம், போதா குறைக்கு ரஞ்சித்தே ஒப்புகொண்ட நெல்லை பகுதி கதை என்பதும் அழகாக பொருந்துகின்றது





இப்பொழுது நம்மிடம் எழும் கேள்வி ஒன்றுதான், இந்த மும்பை தாதா கதையில், மராட்டியம் மராட்டியருக்கே என சொன்ன பால் தாக்கரே பாத்திரம் வருமா? இல்லை சும்மா கோட் போட்டு, புரட்சி பேசும் சவுடால் மட்டும் உண்டா என்பது தான்

மும்பையில் தமிழ் கடத்தல், ரவுடிகள் எல்லாம் பெரும் தியாகிகளும் போராளிகளுமானது அந்த பால் தாக்கரே புண்ணியத்தில்தான்..

இல்லாவிட்டால் அந்த பிம்பம் அவர்களுக்கு கிடைத்திருக்காது,

அப்படி உண்மையினை எடுத்தால் மும்பை மராட்டியர் சும்மா இருக்க மாட்டார்கள்...

எப்படியோ ஒரு நாடாரின் கதையினை எடுக்க ரஜினி கிளம்பிவிட்டார் என செய்திகள் கசிகின்றன,

மும்பை சென்றுதான் நாடார் தாதாக்கள் கதையினை எடுக்க வேண்டுமா? இங்கே கதைகளே இல்லையா?

ராஜபாளையம் பஸ் நிலையத்தில் கூட பிரபல நாடார் ரவுடி சுற்றிகொண்டிருக்கின்றார் என்பதற்கு நானே சாட்சி..




 

 



 

No comments:

Post a Comment