Thursday, May 25, 2017

காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு









Image may contain: text








காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு


கரிகாலன் என்பதை சுருக்கி காலா என வைத்தாயிற்றாம்,


என்னது கரிகாலனா? போதாதா , இப்பொழுது பொங்குவார்கள் பாருங்கள், கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை காய்ந்துகிடக்கும்பொழுது கன்னடன் படத்துக்கு கரிகாலன் பெயரா?





அது கூட பரவாயில்லை, எதையுமே செய்யதெரியாத பிரபாகரன் ஒருமுறை வெடிகுண்டு செய்யும்பொழுது அது காலில் விழுந்து கால் கொஞ்சம் மூளை போலவே கருகிற்றாம், உடனிருந்த அலப்பறைகள் நீ "இரண்டாம் கரிகாலன்" என ஏற்றிவிட்டுருக்கின்றன‌

பிரபாகரனுக்கும் அப்படி ஒரு பெயர் உண்டு, அதனால் அங்கிள் கோஷ்டி விடாது ,

பிரபாகரன் என்ற பெயர் மட்டுமல்ல அவரின் கரிகாலன், ஹரிகரன், சூரிய தேவன், பைத்தியம், தலைகணம், பங்கர் பாண்டி என எல்லா பட்ட பெயர்களுக்கும் சீமான் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கின்றார்

கூட்டி கழித்துபார்த்தால் காலா எனும் பெயருக்காக இப்பொழுது காலரா வந்ததுபோல வருவார்கள் பாருங்கள்

ஆம், காலரா என பெயர் வைத்திருக்கலாம்

அதாவது காலா என்றால் இந்தியில் கருப்பு , இப்பொழுது ராமசந்திரன் போல ரஜினிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் நேரம்

அதனால் காலா ராமசந்திரன் என ரஜினியினை, கருப்பு ராமசந்திரன் என சொல்லாலாம்

சுருக்கினால் காலா.ரா

அதனால் இப்படத்தை காலரா என வைத்துவிட்டால் சிக்கல் இல்லை, காலா என்றாலோ கரிகாலன் என்றாலோ தொலைத்துவிடுவார்கள்

ஆக ரஞ்சித் இயக்க போகும் புதிய படத்தின் பெயர் கால.ரா என்றால் ரஜினிக்கு சிக்கல் இல்லை என்ற ஆலோசனையினை மட்டும் இப்போதைக்கு குஷ்பூ மன்றத்தின் மூலம் சொல்ல முடியும்

திருந்தாவிட்டால் அவர்கள் பாடு...









அதே இருட்டு, ரஜினிக்கு அதே தாடி, அதே ரஜினி வாய்.. கபாலிக்கு பதிலாக காலா, பார்த்தாலே உருப்படாது என தெரிகின்றது

இந்த சீமான், வீரலட்சுமி இன்னபிற கும்பல்கள்எல்லாம் வீணாக கத்தவேண்டும், ரஜினியினை சுத்தமாக முடிக்கும் வேலையில் பா.ரஞ்சித் இறங்கியிருக்கின்றார்

எனக்கென்னவோ இந்த ரஞ்சித் சீமான், ராமதாஸ் கோஷ்டியின் சிலீப்பர் செல்லாக இருக்கலாம் என தோன்றுகின்றது


மகாத்மாவினை கோட்சே வணங்கிதான் சுட்டான், இந்திராவினை ஸ்வாந்த்சிங் கும்பிட்டுத்தான் சுட்டான், ராஜிவின் பாதம் வரை வணங்கி வெடித்தாள் தனு

கும்பிடுபோட்டு ரஞ்சித்தும் ரஜினிக்கு அந்த வேலையினைத்தான் செய்கின்றார்





 

No comments:

Post a Comment