Saturday, May 20, 2017

தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினோம் - ஓ.பி.எஸ்

தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினோம் - ஓ.பி.எஸ்


மிஸ்டர் ஓபிஎஸ், அம்மா சாவில் விசாரணைக்கு வலியுறுத்தினோம், கவர்ணர் இல்லா தமிழகம் பற்றி வலியுறுத்தினோம் என்றெல்லாம் நம்பும்படியான பொய்களை சொல்ல கூடாதா?


நீங்கள் தமிழகத்திற்கு நிதி கேட்டீர்களா? அப்படி அவர் கொடுத்தாலும் எடப்பாடிக்குத்தானே கொடுப்பார். அது நல்லாட்சியாகுமே,




அதுவா உங்கள் ஆசை? அதற்கா சென்றீர்கள்?


எடப்பாடி அரசுக்கு பாடுபடும் அளவிற்கு நல்லவரா நீங்கள்?


பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல கூடாதா பன்னீர்? ஒரு பொய்யினை கூட ஒழுங்காக சொல்ல தெரியாத நீங்களெல்லாம் கட்சி தொடங்கி, நடத்தி ... என்னமோ போங்கள்


பாஜக பக்கம் சேர்ந்தபின் பன்னீருக்கு பொய் சொல்ல கூட தெரியவில்லை பாவம், தமிழிசை எல்லாம் இருக்குமிடம் அப்படித்தான் இருக்கும் போல...



No comments:

Post a Comment