Saturday, May 27, 2017

ரஜினியினை பார்த்து பயப்படுவது யார்?

இந்த டூப்ளிகேட் தமிழ் இன உணவாளர்களை சொன்னால், சில முட்டாள் அப்பாவி மூடர்கள் வந்து, ஏய் நீ தமிழன் இல்லையா என பொங்குகின்றார்கள், மிரட்டுகின்றார்களாம்


உண்மையில் ரஜினியினை பார்த்து பயப்படுவது யார் என்றால் அதிமுகவும் அதன் ஜால்ராக்களும், சும்மாவே அதிமுக கோட்டை கீறி கிடக்கின்றது, கதவினை உடைத்து பாஜக ஆடுகின்றது


இதில் ரஜினி எனும் யானை கோட்டையினை இடித்துவிட்டால் என்னாகும்? உள்ள மானமும் பொகும்.




அதனால்தான் இந்த அதிமுக தன் ரகசிய வேட்டை நாய்களை குரைக்க‌ விட்டிருக்கின்றது , அவர்களும் மிக ஆக்ரோஷமாக குரைக்கின்றார்கள்


ஜெயா இல்லையே தவிர, ஜெயாவினை இயக்கியவர்கள் எல்லோரும் இன்றும் உண்டு என்பதால் அதே ஆட்டங்கள்


ஏன் ரஜினியினை பார்த்து அஞ்ச வேண்டும், அந்த பயத்தை கொடுத்தவர் விஜயகாந்த்


ஆம் ரஜினி அளவிற்கு செல்வாக்கு இல்லை எனினும் களம் கண்டார் விஜயகாந்த், ஓரளவு வாக்கும் பெற்றார். அந்த வாக்கு யாருடைய வாக்கு


அதிமுகவின் வாக்கு, அதிமுகவினர் அப்படித்தான் அவர்கள் நடிகன், நடிகையர் கட்சி அல்லவா? அதனால் ஒரு கோஷ்டி பிரிந்தது


பின் விஜயகாந்தினை சேர்த்தும் , பின் வைகோ மூலம் கலைஞரோடு சேராமல் தடுத்தும் ஆட்சிக்கு வந்தது அதிமுக‌


விஜயகாந்திற்கே இந்த பாடென்றால் ரஜினி வந்தால் தாங்குமா? இனி அக்கட்சி இருக்குமா என்பது அவர்களுக்கே சந்தேகம், ரஜினி வந்துவிட்டால் அதிமுகவினை மியூசியத்தில்தான் தேடவேண்டும், உண்மை அதுதான்


ஆம் அவர்களி கட்சி நடிகர்கள் கட்சி, அதனால் அஞ்சுகின்றார்கள்


ஆனால் திமுக அப்படி அல்ல, அது இன்னும் கொள்கை ரீதியான தொண்டர்களை கொண்ட கட்சி, எந்த சினிமா முகமும் அதன் வோட்டுக்களை பாதிக்க முடியாது,


அதன் வாக்கு வங்கி அதிமுகவினை விட கொஞ்சம் குறைவு என்றாலும் அசைக்க முடியாத வாக்கு வங்கி, அதன் தொண்டர் பலம் அப்படி...


அதனால்தான் மு.க. ஸ்டாலினால் ரஜினி அரசியலுக்கு வருவது "மகிழ்ச்சி" என தில்லாக புன்னகை பூக்க சொல்ல முடிந்தது


ஆனால் அதிமுக அஞ்சுகின்றது, இந்த சீமான், பாரதிராஜா குரல்கள் எல்லாம் அதிமுகவின் ரகசிய குரல்கள்


அது அதிமுக எதிரிகளை எல்லாம் சாடும், கலைஞரை சாடும், விஜயகாந்தினை சாடும், இப்பொழுது ரஜினியினை சாடுகின்றது


இதுதான் இவர்களின் இன உணர்வே தவிர, வேறு ஒன்றுமே அல்ல‌


இவர்கள் எல்லாம் போயஸ் கார்டனின் காவல் நாய்களே அன்றி வேறு வகையில் வரவே மாட்டார்கள்..


அதனால் இந்த கும்பல் என்னை மிரட்டுவதை விட்டுவிட்டு அவர்களின் சட்டையினை பிடித்து கேள்வி கேட்பது நல்லது...


மூடர் கூட்டம்



No comments:

Post a Comment