Tuesday, May 23, 2017

படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான்




Image may contain: one or more people and outdoor


படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான்


இஸ்ரேலிய ஜெருசலேமில் பழைய சாலமோன் ஆலய சுவர் உண்டு, யூதர்களின் பெரும் அடையாளமான அது அழிக்கபட்டு ஒரு சுவர்தான் மிஞ்சியிருக்கின்றது, யூதர்கள் எல்லாம் அதனை தொட்டு அழுவார்கள்


மற்றவர்கள் சென்று அழவும் யூதர்கள் தடுப்பதில்லை





அப்படி நேற்று ஜெருசலேம் சென்ற டிரம்ப் அந்த சுவரில் யூதமுறைபடி தொப்பி வைத்து அழுதிருக்கின்றார்

எல்லோரும் எதற்கு அழுவார்களோ தெரியாது, டிரம்ப் இப்படி அழுதிருக்கலாம்

"இந்த வறுமைபட்ட‌ வடகொரியாவினை அடிக்க முடியவில்லை, சிரியாவினை பிடிக்க‌ , ஈரானை அடக்க முடியவில்லை

எவ்வளவு மிரட்டியும் வடகொரியா ராக்கெட் விட்டு இது எப்படி இருக்கு? என கடுப்பேற்றுகின்றது, அதனை அடிக்க ஒரு பயலும் வரமாட்டான் போல, எவ்வளவு அவமானம்?

மோடி கூட இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை...

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றமுடியவில்லை,

அந்த புஷ் குடும்பம் சதாமினை ஒழித்தது, ஒபாமா ஒசாமாவை ஒழித்தார், நான் ஒருவரை கூட ஒழிக்கமுடியவில்லை, நான் மட்டும் ஏன் இப்படி ஆகிவிட்டேன், ஒரு ம..யும் புடுங்க முடியாத இந்த பதவி எதற்கு?"

இப்படி நினைத்து முட்டி முட்டி அழுதிருக்கலாம்

உலகத்தை புரட்டி போட கிளம்பிய ஒரு புயல் இப்படி பரிதாபமாக ஜெருசலேம் சுவரில் முட்டி கொண்டிருக்கின்றது...

மோடியும் விரைவில் இஸ்ரேல் செல்வார் என்கின்றார்கள், அந்த சுவர் முன்பு நிற்கும் பொழுது தமிழிசை, எச்,ராஜா நினைவு வந்துவிட்டால் போதும், மோடி முட்டி முட்டி அழுவார் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?













 


 

No comments:

Post a Comment