Thursday, May 25, 2017

தாமரைக்கு என்ன நீதி?



Image may contain: 2 people, beard


தியாகுவின் தொலைகாட்சி பேட்டிகளை பற்றி எழுதியபின் , சிலர் தியாகு ஊருக்கு உழைத்த உத்தமன், அவசரபட்டு மணமுடித்தது தாமரை, கிணற்றுக்குள் குதித்தது அவர்தான், இன்னொருத்தி கணவனை இவள் ஏன் மணந்தார் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தனர்


குற்றசாட்டு தன் மீது திரும்புவதை கண்ட கவிஞர் தாமரை சில விஷயங்களை சொன்னார்


முதலாவது விஷயம் தான் இன்னொருத்தி கணவரை பறிக்கவில்லை,, தன் மனைவியினை விவாகரத்து செய்த தியாகு தன்னை திருமணம் செய்துகொள்ள கடிதம் எழுதினார் என்பது, ஆக தாமரை திருமணம் செய்யும்பொழுது அவர் முதல் மனைவி அவரோடு இல்லை


இரண்டாவது விஷயம் மகா முக்கியமானது, தாமரையினை திருமணம் செய்ய தன்னோடு தமிழுக்கு பாடுபடும் எல்லா பொதுநல உணர்வாளர்களிடம் கூடிபேசிவிட்டுத்தான் முடிவெடுத்திருப்பதாக சொன்னாராம் தியாகு, அந்த கடிதம் தன்னோடு இருக்கின்றது என்கின்றார்


அதாவது தமிழுணர்வு மிஞ்சி , தமிழ் தேசிய போராளி எனும் ஒற்றை தகுதியில்தான் தியாகுவினை தாமரை மணமுடிக்க அந்த தலைவர்கள் ஆலோசனையில் ஒப்புகொண்டிருக்கின்றார்


தியாகுவின் நண்பர்கள் அதுவும் ஈழ அபிமானிகள் யாரென சொல்லி தெரியவேண்டியதில்லை, ஈழம் பிரபாகரன் என கோஷம் போடுபவரில் ஏராளமானவர்கள் அவர்கள்தான்


ஆக இந்த ஈழஉணர்வாளர்கள் எல்லாம் கூடி , இன உணர்விலும் தமிழுணர்விலும் உயர்ந்து தமிழுக்காய் உழைக்க மிக தயராக இருந்த தாமரையினை இந்த தியாகுவிற்கு கட்டி வைத்திருக்கின்றார்கள்


அதன் பின் தியாகு போக்கில் மாறுதல் வந்து, தாமரை வேண்டாம் என உதறிவிட்டு போயிருக்கின்றார், அது தாமரையின் தமிழ் மீதான சந்தேகமாக இருக்கமுடியாது, அவரை விட மிக உயர்ந்த தமிழ் அபிமானியினை பார்த்துவிட்டாரோ என்னமோ?


இந்த சிக்கலில்தான் தான் யாரோடெல்லாம் ஆலோசித்து அவர்கள் ஒப்புதல் பெற்று தாமரையினை மணந்ததாக சொன்னாரோ அந்த நல்லவர்கள், ஈழத்து தமிழ்பெண்களுக்காக கவலைபட்டு கண்ணீர் விட்ட அந்த தலைவர்களை எல்லாம் சந்தித்து நீதி கேட்கின்றார் கவிஞர்


ஈழத்து பெண்களுக்கு மட்டும்தான் நீதிசொல்வோம் என கதவடைத்துவிட்டனர் அவர்கள், தனிமரமானார் தாமரை, தன் மகனோடு தனித்து வாழும் தாயாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்"


இதில் சிந்திக்க வேண்டியது ஒன்றுதான்


ஒரு பெரும் கவிஞர் அவர், தமிழுணர்வும் தமிழறிவும் மிக்கவர் தமிழை நேசித்தவர், அவரின் அந்த பலவீனத்தை தெரிந்து தியாகு நெருங்கியிருகின்றார், பின் பையன் பிறந்தபின் வேண்டாம் என்றிருக்கின்றார்


இந்த ஈழ தலைவர்களும் இவர்களின் திருமணத்தை ஆலோசித்து முடித்து வைத்திருக்கின்றனர், தியாகு பிரிந்த பின் நடையினை கட்டியிருக்கின்றனர்


தமிழகத்தில் ஊரறிந்த ஒரு பெண்ணை, தமிழச்சியினை கண்டு கொள்ளாத இவர்கள்தான், ஈழத்து பெண்களுக்கு நியாயம் கேட்கின்றார்களாம்


தன் காலடியில் தமிழச்சி ஒருவர் , என் வாழ்வு போயிற்று நியாயம்மாரே பதில்சொல்வீர் என கலங்கி நிற்கும்பொழுது, இவர்கள் ராமேஸ்வரத்தில் நின்று சிங்களனே, சோனியாவே, அமெரிக்காவே என கடல் அலைகளுடன் கத்திகொண்டிருக்கின்றனர்


இவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதற்கு தாமரையின் கண்ணீர் சாட்சி


அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஈழத்தில் யாராவது சாக வேண்டும், அந்த கொதிப்பினை இங்கு எரியவைத்து அதில் கொஞ்சபேரை சாகடிக்க வேண்டும், பலரை கொன்றார்கள், பலர் ராஜிவ் வழக்கில் சிக்கி வாழ்வினை தொலைத்தார்கள்


இவர்களின் அடுத்த இன்னிங்க்ஸ் 2009ல் தொடங்கியது, முத்துகுமாரை கொன்றார்கள், இன்னும் பலரை உணர்ச்சியூட்டி சாக வைத்தார்கள், அவர்கள் செத்தபின் இவர்கள் பிணத்தோடு ஊர்வலம் போனார்கள், எவ்வளவு கொடூரம்


ராஜிவ் கொலை கைதிகள் விடுதலை வாய்ப்பே இல்லை என தெரிந்தும் கொதிநிலை உண்டாக்கி செங்கொடி போன்றவர்களை சாகவிட்டார்கள், செங்கொடி செத்ததால் அந்த கொலையாளிகள் வெளிவந்தாயிற்றா?


அந்த செங்கொடி போலவே இவர்களால் மனதால் கொல்லபட்டவர்தான் தாமரை, செங்கொடி 1 நிமிடத்தில் கரியாணாள், தாமரை அணுஅணுவாக துடித்துகொண்டிருக்கின்றார்


இந்த பச்சை பொய்யர்களை, துரோகிகளை, யாரையும் பற்றி கவலை இன்றி எந்த பொய்யினையும் சொல்லி கலவரத்தை தூண்டிவிடுபவர்களை பற்றி தமிழகத்தார் எச்சரிக்கையாய் இருப்பது நலம்


இல்லாவிட்டால் முத்துகுமார், செங்கொடி வரிசை அல்லது கவிஞர் தாமரை வரிசை


இப்படி எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வினை கெடுத்துவிட்ட தியாகுதான், பெரும் தியாகி போல தமிழகத்திற்கு உபதேசம் செய்கின்றாராம்


இவரே இப்படி என்றால், இவரை அமரவைத்து கேள்வி கேட்கும் ஊடகங்கள் எப்படி இருக்கும்???


தாமரைக்கு என்ன நீதி?













 


 

No comments:

Post a Comment